(அரைத்து விட்ட) மசாலா தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
(அரைத்து விட்ட) மசாலா தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.11.16

"திங்க"க்கிழமை 161024 :: (அரைத்து விட்ட) மசாலா தோசை!



     காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கப் பொறுமை இல்லாத, அல்லது அதைவிட வித்தியாசத்தை எதிர்பார்த்த ஒரு நாள்!

     என்ன செய்யலாம்?

     எடுத்தேன் ஆறு பெரிய வெங்காயம், எட்டு சின்ன வெங்காயம், இரண்டு பெங்களூரு தக்காளி, எட்டு பச்சை மிளகாய், 

     ஐந்தாறு காய்ந்த மிளகாய், இரண்டு குடைமிளகாய், இதற்குத் தேவையான அளவு உப்பு,  கொஞ்சம் கொத்துமல்லி...  

     எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்தேன்.

     தோசை மாவில் கலந்தேன்.  


     நன்றாகக் கலக்கி தோசை வார்த்து எடுத்து...

     சாப்பிட்டோம்!   தொட்டுக்கொள்ள எது....... வும் தேவை இல்லை!

     குடைமிளகாயை மட்டுமாவது பொடியாக நறுக்கி, அரைவதக்கல் வதக்கி, தோசையில் தூவிச் சாப்பிடலாம் என்று நினைத்தாலும், நறுக்கும்  நேரம்,பொறுமை  இல்லாத காரணத்தால் அதையும் அரைத்துச் சேர்த்து விட்டேன்.
     அப்புறமும் காரம் எங்களுக்குப் போதாத காரணத்தால் பமி, காமி முன்னரே போட்டிருந்தும் மாவில் இன்னும் காரப்பொடி சேர்த்தோம்.

      இதன் பிறகும் இதில் மறுபடியும் வெங்காயம் பூப்பூவாக நறுக்கி மேலே தூவிக் கூடச் சாப்பிடலாம்!  அதே போல கேரட் போன்றவையும்!