வெள்ளி, 15 ஜனவரி, 2021

வெள்ளி வீடியோ :  நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை நானாக கூடாதோ தொட்டு தழுவ

 1954 ல் வெளியான படம் பொன்வயல்.  நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம்.  படமே காணாமல் போய்விட்டதாம்.  தியேட்டரிலிருந்து மட்டுமல்ல, படச்சுருளே காணோமாம்.  கல்கி எழுதி கல்கியில் தொடராக வந்த பொய்மான் கரடு கதையைத்தான் டி ஆர் ராமச்சந்திரன் படமாக எடுத்து நடித்தார்.  கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலிதேவி.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

மறக்கவியலாத சிறுகதை - சீட்டு  - அப்பாதுரை

   சீட்டு

     சித்திரை மாதம் முதல் நாள். அதிகாலை ஆறு மணி இருக்கும். “விடிஞ்சா சித்திரை டோய்.. விசால நித்திரை டோய்” என்று ஏதோ முணுத்தபடி நல்லசிவம் பெரிய மரப்பெட்டியை எடுத்து ஒற்றை மாட்டு வண்டியில் வைக்க முயன்றார். பின்னால் ஓடி வந்த நரசிம்மன் பெட்டியின் பூட்டை அசைத்துப் பார்த்து “பூட்டியிருக்கு” என்றார். “ஆமாய்யா, என்னை நம்பலியா?” என்று சிரித்த நல்லசிவம் மறுபடி பெட்டியைத் தூக்கினார். “ஆச்சுயா, இதான் கடைசி பெட்டி..” என்று வண்டியில் இருந்த மற்ற நான்கு வரிசைகளைக் காட்டினார். வரிசைக்கு ஆறு என்று இருபத்து நாலு சிறிய பெட்டிகளைச் சுட்டினார்.