தெற்கு இத்தாலி. பாலெர்மோ சிசிலி என்கிற இடம்.
இங்கு இருக்கிறது தனிமுகமூடி அணிந்த ஒருவகைத் துறவுக் குழுவினரின் நிலவறைக் கல்லறை.
உலகிலேயே மிக அழகான மம்மி என்று சொல்லப்படும் ரோசாலியோ லோம்பார்டோ என்கிற 12 வயதுச் சிறுமியின் உடல் இங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு வைக்கப் பட்டிருக்கும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மம்மிகளில் இதுதான் அழகு மட்டுமல்ல, அப்படியே தூங்குவது போலவும் இருக்கிறதாம்.
இவர்தான் Alfredo Salafia.
அரிதான இந்த வழியைக் கண்டுபிடித்தவர். முதலில் விலங்குகள் மீதும் பின்னர் மனிதர்கள் உடல் மீதும் சோதனை நிகழ்த்தியிருக்கிறார். தனது தந்தையின் உடலைக்கூட அவர் இப்படி பாடம் செய்து வைத்திருந்திருக்கிறார்.
யு எஸ் வந்து தனது கண்டுபிடிப்பை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார். அப்புறம் என்ன காரணத்தினாலோ தனது நாட்டுக்கே திரும்பி விட்டார். அவர் சாகும்வரை தந்து கண்டுபிடிப்பின் தயாரிப்பு ரகசியத்தை வெளியிடவில்லை.

சலாஃபியாவால் இறந்த உடம்பைப் பாடம் செய்யப் பயன்படுத்தப்பட்ட முறை சமீபத்தில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளது. அவர் அந்தப்பெண்ணின் ரத்தத்தை எடுத்துவிட்டு பார்மலின் கலந்த திரவத்தை உள்ளே செலுத்தியுள்ளார். அது பாக்டீரியாவை அழிக்க வல்லது. மேலும் ஆல்கஹால், கிளிசரின், சாலிசிலிக் ஆஸிட் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தி உள்ளார்.
தலைமுடியில் கட்டப்பட்ட ரிப்பனுடன் இரண்டு வயதுக்கு குழந்தை போலக் காட்சியளிக்கும் இந்தப் பெண்ணின் மம்மியில் ஆச்சர்யம் என்னவென்றால் குறிப்பிட்ட இடைவெளியில் அது கண்ணைத் திறந்து பார்க்கிறதாம்.
தொடர் படமெடுக்கும் முறையில் படம் எடுத்தபோது இது தெரிந்ததாம். சில வருடங்களுக்கு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கி, கேள்விக்குறிகளை எழுப்பியது இந்தத் தகவல்.
ஆனாலும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதற்கு ஒரு பதிலை வைத்திருக்கிறார்களாம்.
அந்த ஹாலில் இருக்கும் ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சத்தால் ஏற்படும் காட்சிப்பிழை என்று சொல்லியிருக்கிறார்கள்.ரோசாலியாவின் உடலை அங்கிருந்து நகர்த்தி வேறு இடத்தில் வைத்து, அவள் கண்ணிமைகளை நன்றாகக் பார்க்கும் வகையில் வைத்தபோது இது தெரியவில்லை.
300 வருடங்களுக்குப் பின் இந்தச் சிறுமி கண்திறந்து பார்த்தாள் என்று சமீபத்தில் கூட ஒரு பரபரப்பு தோன்றியது. அதுவும் இது போன்ற ஒரு காட்சிப் பிழையாகத்தான் இருக்க வேண்டும்!