குங்குமம் வெட்டி அரட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குங்குமம் வெட்டி அரட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.10.16

குமுதம், குங்குமம், விகடன் ஒரு பார்வை



     எங்கள் பேப்பர்க்காரர் பேப்பரைத் தூக்கித் தூக்கித் தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்ததாலும், சில வார இதழ்களை போடாமல் விட்டு விட்டு, காசு வாங்கும்போது நான் போட்டேன் என்று சொன்னதாலும் நிறுத்தி விட்டேன்.  



Image result for paper boy 

     இரண்டு மாதங்களாகிறது.  இவையெல்லாம் வாங்காதது
பெரிய நஷ்டமாய்த் தெரியவில்லை.  இணையத்தில் பார்த்து விட முடிகிறது என்பதும் ஒரு காரணம்.  சினிமா விகடன், கல்கி, துக்ளக் வாங்கி கொண்டிருந்தேன்.  தினமணி, இந்து வாங்கி கொண்டிருந்தேன்.  இப்போது தினசரிகளை இணையத்தில் பார்த்து விடுகிறேன்.   மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!






     இரண்டு மாதங்களாகி விட்டதால், சிகரெட்டை நிறுத்தியவன் மறுபடியும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்பானே..   அது போல ஒருநாள் கடைக்குச் சென்று இந்து, தினமணி, தினமலர் பேப்பர் வாங்கி கொண்டு, குமுதம், குங்குமம், ஆனந்த விகடன், துக்ளக் வாங்கி கொண்டு வந்தேன்.


     குமுதம் வாங்கியதற்கு வேறொரு காரணமும் இருந்தது.  என் தங்கையின் இரண்டாவது பெண்ணின் புகைப்படம், சிறு பேட்டி அதில் வந்திருந்தது.


     பழைய முத்து காமிக்ஸ் புத்தகம் வாங்குவோம் பாருங்கள் அந்த சைஸில் இருக்கின்றன குமுதமும், குங்குமமும்!  பாக்கெட் நாவல் கூட கொஞ்சம் பெரிய சைஸாய் காட்சியளிக்கும்!  குமுதம் 20 ரூபாய்.   குங்குமம் 12 ரூபாய்.  விகடன் 25 ரூபாய்.


     குமுதத்தில் தீபாவளி சிறப்பிதழ் என்று 3  புத்தகங்களாம்.


 


 
     ஒரு குமுதத்தின் அட்டையில் "இதனுடன் இணைப்பு மெகா சைஸ்" என்று  அறிவிப்பு.  மெகா சைஸ் என்றால் என்ன?  ரெகுலர் ஆனந்த விகடன் அளவு!  அப்படியானால் குமுதம் சைஸ் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  
     சினிமாவையே பெரிதும் நம்பியிருக்கின்றன இவை மூன்றுமே.. குமுதத்தில் சாரு நிவேதிதா எழுத்து கண்ணில் பட்டது.   குங்குமத்தில் ஜெமோ!  



 
     குங்குமம், மற்றும் குமுதம் அட்டையாவது உள்புறம் மடிந்து படிப்பதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.  விகடன் அட்டை வெளிப்புறமாக மூன்றாகப் பிரிந்து கடுப்பேற்றுகிறது.  கிழித்து எறிந்து விட்டுத்தான் படிக்க வேண்டும்!



 
     விதி விலக்கில்லாமல் எல்லாப் பத்திரிகைகளும் வலைப் பக்கத்தை நம்பியிருக்கின்றன.  வண்டியும் ஒருநாள் ஓடத்தில்..... ! 




     ஒரு ஆச்சர்யம்!   அயன்புரம் த. சத்தியநாராயணன் இன்னும் சளைக்கவில்லை!  



 
     குமுதத்தில் இன்னும் அரசு பதில்கள் வருகிறது.  அரசு வுக்கு இப்போது என்ன விளக்கமோ!
     ஆனந்த விகடனில் இந்தப் பக்கங்களை நான் படிப்பதே இல்லை.







     ஆனந்த விகடனை ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் வாங்கி விட்டார் என்று ஒரு வதந்தி இருந்தது.  மறுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

     ஆனந்த விகடன் நான் வாங்கிய நேரம் தமயந்தியின் கதை வெளியாகி இருக்கிறது!  அவர் கதைகளில் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்.  ஒரு கதையைப் படித்து, இங்கு பகிர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மிக யதேச்சையாக அவர் கண்ணிலேயே அது பட்டு அவர் இங்கு வந்து நன்றியும் சொல்லியிருந்தார் என்று நினைவு.

     பஞ்சு அருணாச்சலம் மறைந்து விட்டார்.  அவர் சொல்லிய விஷயங்கள் தொடராக இன்னும்... 





     குமுதத்தில் எம்ஜிஆர், சிவாஜி பற்றிய தொடர்கள்,  பகோபி தொடர்கதை, சுரேஷ் கண்ணனின் உலக சினிமா, கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா, பாலகுமாரனின் புதிய தொடர்.... இவற்றுடன் சரிதா நாயரின் சுயசரிதை வருகிறது.


     இந்த "மெகா சைஸ்" குமுதம்  சற்று சுவாரஸ்யம்தான்.
 






     குங்குமம் இதழில் ராஜேஷ்குமார் தொடர்கதை, ஈரோடு கதிர் தொடர்...



     கல்கி 15 ரூபாய்.  ஆனால் அது கிடைக்கவில்லை.    இந்தப் பத்திரிகைகளோடு ஒப்பிடுகையில் அது நிச்சயம் பெட்டர் பத்திரிக்கை.
     மறுபடியும் சொல்கிறேன்,  மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!


     பொதுவாக இந்தப் புத்தகங்களுக்கு அவைகளின் பழைய கவர்ச்சி போய்விட்டது.