அடுத்ததாக பூவரசன்குப்பம் நோக்கி சென்றோம்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
கோவில் சுற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.10.24
26.8.13
ஆஞ்சநேயா....
அரசாங்கம் கையகப் படுத்திய ஆஞ்சநேயரை ( ! ) குடும்பத்துடன் தரிசனம் செய்தோம்!
மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம் புலம்பி விட்டு வந்தோம்! ஆஞ்ஜி புன்னகையுடன் கை கூப்பியவண்ணம் எங்களைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்! உண்டியல் வைத்திருப்பது புதிதாக இருந்தது என்று நினைக்கிறேன். பணத்தை உண்டியலில் போடவும் படிக்கும்போதே 'உண்டியலில்' என்ற வார்த்தையில் அழுத்தம் தொனித்தது!

கோதண்டராமர்
சன்னதியில் இருந்த பட்டர் ஏதோ பூஜை செய்வது போலவே ஆயத்தங்கள் செய்கிறாரே
என்று நின்ற கூட்டத்துடன் நாங்களும் நின்றோம். வெளியில் ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்த பட்டாச்சாரியார் நிலைமையை
உணர்ந்து உடனே உள் சன்னதியிலிருந்து வெளி சன்னதிக்கு வந்து ஓரமாக சும்மா
நின்று,'தான் எதுவும் செய்யப் போவதில்லை' என்று குறிப்பால் உணர்த்தினார்!
நகர்ந்தோம். இந்த பட்டர்கள் எல்லாம் நியூ அப்பாய்ண்ட்மெண்ட்டா, பழைய
ஆட்களேதானா என்று கோவிலின் ரெகுலர் பக்தர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆஞ்ஜி உம்மாச்சி பிரம்மாண்டமாய் நின்று அருள் பாலித்துக் கொண்டிருந்தார். வலதுபக்கத் தூணில் பெரிய ஆஞ்ஜி உம்மாச்சி படம் மாட்டப் பட்டிருந்தது. அதில் பக்தர்கள் தங்கள் கையால் துளசி வைத்து பயனடைந்தார்கள். சுமார் ஒரு 23 வயது பச்சை சுடிதார் பெண்ணொருத்தி கண்களில் நீர் வடிய பரபரப்பாக சன்னிதியைச் சுற்றிக் கொண்டிருந்ததை இளையவன் சுட்டிக் காட்டினான்.
"அவள் துன்பத்துக்கு அவளேதான் காரணமாக இருக்கும். ஆனால் அதை அறியாமல் சுற்றுகிறாள்" என்றேன்.
"எப்படிச் சொல்றே?"
"படபடப்பாக இருக்கிறாள். பொறுமையாகப் பிரகாரத்தைச் சுற்றாமல் அவசரமாக ஒன் பாத்ரூம் வந்ததும் ஓடுவது போல வேகமாகச் சுற்றுகிறாள். அவள் வாய் அசைவதைப் பார்த்தால் மந்திரம் சொல்வது போல இல்லை.."
"அது எப்படிச் சொல்றே?"
"ஒரு யூகம்தான்.."
"சாமியைப் பாருங்க... " என்று அ(இ)டித்து விட்டு 'அடிப்ரதட்சணம்' செய்தாள் சகதர்மிணி!
வேணுகோபால ஸ்வாமி சன்னதியில் தூரத்தில் கற்பூரத் தட்டு வைக்கப் பட்டிருந்தது. தட்டில் சில்லறைகள் தென்பட்டன. இங்கும் பட்டர் செல்ஃப் சர்வீஸ் கவுண்டரில் நிற்கும் சேல்ஸ்மேன் போல ஓரமாக. அசுவாரஸ்யமாக நின்று கொண்டிருந்தார்.

அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னும் பொங்கல் அதே
தரத்தில் இருந்தது ஆச்சர்யம். புளியோதரை இன்னும் நன்றாக இருக்குமாம்.
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சக பக்தர் சொன்னார்.
கோவில் காவலர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு 'யார் என்ன தப்பு செய்கிறார்கள்' என்று ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செருப்பு வைக்குமிடம் காணாமல் போயிருந்தது. அதேபோல பொங்கல் சாப்பிட்டு கைகழுவ, பக்கவாட்டில், கோவிலைச் சேர்ந்த திருமண மண்டபம் தாண்டி நடக்க வைத்திருக்கிறார்கள்.

அங்கு ஒரு வெளியாள் கைகழுவக்
காத்திருந்தவர்களை லட்சியம் செய்யாமல் நான்கு 2 லிட்டர் பாட்டில்களில்
தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
எதிர்த்த கடையில் வாழைக்காய் காரச் சிப்ஸும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வாங்கிக் கொண்டு திரும்பினோம்.

[ முகநூலில் பகிர்ந்தது ]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)