=======================================================================
எம் ஜி ஆர் தான் நடிப்பதற்காக தெரிவு செய்து வைத்திருந்த தலைப்பு விடிவெள்ளி. மு. கருணாநிதியுடன் இணைந்து எடுக்கப்பட இருந்த படம் கருணாநிதியின் கல்லக்குடி போராட்ட கைதால் தடைப்பட, சிவாஜி கணேசன் தனது சிறிய கம்பெனியான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில் (பெரிய கம்பெனி சிவாஜி பிலிம்ஸ்) தயாரித்து நடிக்க, ஸ்ரீதர் இயக்கத்தில் 1960 இல் வெளிவந்த ஒரு த்ரில்லர் வகைப் படம்.