'எங்கேடா போயிட்டே? ஆளையே பார்க்க முடியலை?' என்று கேட்டான் அலைபேசியில் நண்பன்.
'3g வந்தாச்சு வீடியோ கால் போட்டாய் என்றால் பார்க்கலாமே!' என்றேன் நான்.
'எனக்கு ஒரு ஜி சேவையே போதும் - இதுக்கே நான் யாருக்காவது கால் போடும்பொழுதெல்லாம், எனக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்துகொண்டு நான் பேசுவதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ப உதட்டை சுழித்து அல்லது சிரித்து அல்லது கோபமாகப் பார்த்து, பேசி முடிக்கும் பொழுது, 'ஐந்து ரூபாய் வேஸ்ட் / பத்து ரூபாய் வேஸ்ட்' என்று எல்லாம் உடனே ஜட்ஜ்மெண்ட் அளிக்கின்ற மனைவி வெளிநாடு போயிருக்கின்றாள்.'
' அட! தனிக்காட்டு ராஜாவா?'
'தனிக்காட்டு கூஜா!'
'சரி போகட்டும். இப்போ எதுக்குக் கூப்பிட்டே?'
'நேற்றைக்குக் காலையில எட்டு மணிக்கு நீ எங்கே போயிருந்தே?'
'வழக்கம் போல ஜி-மெயில் ஒப்பன் பண்ணி, கம்பியூட்டருக்கு முன்பு உட்கார்ந்து, இங்கேதான் இருந்தேன்.'
'நானும் அதே நேரத்தில் ஜி-மெயில் தான். ஆனா - நீ ஆன் லைன்ல இருந்ததா தெரியலையே?'
'ஓ! அதுவா? (உன் போன்ற) சில அறுவைகளிடமிருந்துத் தப்பிப்பதற்காக, இன்விசிபிள் ஆக இருந்தேன்!'
'விசிபிள் ஆகச் சொல்லி ஒரு கீச்சுக் கொடுத்தேனே - பார்க்கலையா?'
'என்னுடைய ட்விட்டரில் நான் நூற்றுக் கணக்கானவர்களைப் பின் தொடர்வதால், கீச்சுக் கீசென்று வரும் கீச்சுகளை (tweets) அரை மணி அல்லது ஒருமணி நேர இடைவெளிகளில், மட்டுமே பார்த்து, படித்து, உடனுக்குடன் அவைகளை அலைபேசியின் நினைவறையிலிருந்து அகற்றிவிடுவேன். சரி நான் விசிபிள் ஆக இல்லை என்றவுடன் என்ன செய்தாய்?'
'ஆர்க்குட்டுக்குச் சென்றேன்!'
'அங்கே நான் இருந்தேனா?'
'இல்லை'
'அப்புறம் என்ன செய்தாய்?'
'நெட் லாக் சென்றேன்.'
'அதனால்தான் நான் ஆர்க்குட்டுக்கு வரும்பொழுது நீ இல்லையா?'
'ஓஹோ - சரிதான் நான் ஜி மெயில், ஜி சாட் ஆர்க்குட், நெட்லாக் என்று ஒவ்வொன்றாகப் போகும்பொழுதும் என் பின்னாடியே நீ ஒவ்வொரு இடத்திற்கும் வந்திருக்கிறாய்! ஆனால் என்ன - நான் ஒவ்வொரு வீட்டையும் காலி செய்துகொண்டு போன பின் அங்கு வந்திருக்கின்றாய்!'
'அதற்குப்பின் கூகிள் பஸ்?'
'ஆமாம்!'
'அதற்குப் பிறகு முகநூல் சென்றாயா?'
'ஆமாம் - கரெக்ட்!'
'பிறகு மனம் வெறுத்துப் போய்தான் - அ யம் க்விட்டிங் தி சர்ச் (search) ஆப்பரேஷன்' என்று கீச்சு (ட்வீட்) அனுப்பினாயா?'
'அட அதைப் பார்த்தாயா?'
'ஆமாம் - அதை மட்டும்தான் பார்த்தேன்!'
'அப்போ ஏன் நீ உடனே என்னைக் கால் செய்யவில்லை?'
'ஹி ஹி - காணாமல் போன அருணாச்சல் முதன் மந்திரியின் ஹெலிகாப்டரைத் தேடிச் சென்ற யாரோ ஒருவர் அனுப்பிய கீச்சு என்று நினைத்தேன்.'
'அப்போ, அபோட்டோபாட் கீச்சு உடனுக்குடன் உனக்குக் கிடைத்ததா?'
'ஒசாமா வசித்த இடத்திலிருந்து ஒருவர் அனுப்பிய கீச்சு?'
'நான் அந்த ஒருவரின் பின்தொடர்பாளராக (follower) ஆக இருந்தால் மட்டும்தான் அந்த கீச்சு எனக்குக் கிடைத்திருக்கும். அதையும் தவிர, இரவு பத்து மணி முதல், காலை ஐந்து வரையிலும் - எந்தக் கீச்சும் என்னைத் தொந்தரவு செய்தல் ஆகாது என்று என்னுடைய ட்விட்டர் அக்கௌண்டில் செட் செய்துள்ளேன். அதனால் அந்தக் கீச்சு எனக்குக் கிடைத்திருக்காது!'
'போடா தூங்கு மூஞ்சி! '
'என்னையா தூங்கு மூஞ்சி என்கிறாய்? இப்பவே ஒரு கீச்சு, எங்கள் (engal6 followers) ஃபாலோயர்ஸ் எல்லோருக்கும் உன்னைப் பற்றி அனுப்புகிறேன் பார்!'
'சரி சரி எலெக்ஷன் ரிசல்ட்ஸ் பற்றி எலெக்டிரானிக் சாமியார் கணித்துக் கொடுத்ததை எப்போ வலையிடப் போகின்றாய்?'
'ஏண்டா - நாங்க சந்தோஷமா இருக்கறது உனக்குக் கண்ணு உறுத்துதா?'
'அப்போ அவருடைய கணிப்புகளை வெளியிட்டால் - உங்க முதுகு பழுத்துடுமா?'
'ஆமாம்'
'அப்படி என்றால் அவருடைய கணிப்புகளை எங்கே, எப்படி வெளியிடுவீர்கள்?'
'இன்னும் ஒரு வாரத்திற்குள், engal6 twitter followers எல்லோருக்கும் பகுதி பகுதியாக ட்வீட்டுகளாக வெளியிடலாம் என்று ஒரு எண்ணம். பார்ப்போம்!'
'அப்படி ட்வீட்டுகள் செய்வதாக இருந்தால் - ஆங்கிலத்தில் மட்டும் கீச்சுகள் அனுப்பு. என்னுடைய மொபைலில் தமிழ் கீச்சுக்கள் தெரிவதில்லை!'
ட்விட்டர் கணக்கு எப்படி ஆரம்பிப்பது, யாரை எப்படித் தேர்ந்தெடுத்து பின் தொடர்வது என்பது பற்றி அறிய ஆர்வம் இருப்பவர்கள், எங்களைத் தொடர்பு கொண்டு (engalblog@gmail.com) மின்னஞ்சல் மூலமாக உங்கள் சந்தேகங்களை கேட்டால், எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழு, உங்களுக்கு உதவத் தயார்.