LETTERBOX மொத்தம் ஒன்பது லெட்டர்ஸ் என்று கணக்குப் பண்ணி, முன் மொழிந்த மிடில்கிளாஸ் மாதவிக்கும், வழி(மொழி)ந்த மற்ற எல்லோருக்கும் பாராட்டுகள்.
இந்த வாரக் கேள்வி:
மிஸ்டர் எக்ஸ், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சமயம், அதாகப்பட்டது, கூகிள் மாப், அலைபேசி, தொலைபேசி, இத்யாதிகள் இல்லாத நாட்கள். நடை பயணம் சென்றார்.
அவர் X என்னும் ஊரிலிருந்து R என்னும் ஊருக்கு செல்லவேண்டியிருந்தது. திசைகாட்டிகளை நம்பி, பயணம் தொடங்கியிருந்தார்.
அவருடைய ஊரிலிருந்து, சற்றேறக்குறைய பத்து காத தூரம் சென்றால், ஒரு நாற்சந்தி வரும். அந்த நாற்சந்தியின் மத்தியில் ஒரு நால் வழிகாட்டி இருக்கிறது, அதன்படி சென்றால் R ஊரை அடையலாம் என்று சென்றார்.
ஆனால், அங்கு சென்றவுடன் அவர் கண்ட காட்சி, அவரை திகைப்பில் ஆழ்த்தியது.
அந்த வழிகாட்டி சமீபத்திய புயலில், வேரோடு விழுந்து உடைந்து கிடந்தது.
அந்த சுற்றுப்பக்கம் பதினெட்டுப் பட்டி தூரத்திற்கு ஆளரவமே இல்லை.
மிஸ்டர் எக்ஸ், அவர் செல்ல நினைத்த R என்ற ஊருக்குப் போய்ச்சேர உங்களால் உதவ இயலுமா?