இது சாரமதியில் எம் கே டி பாவகத்ர், ச்சே...பாட்டு போட்டாலே ஸ்லிப் ஆஃப் தி டங் வந்துடுது......பாகவதர் பாடிய பாடல். காட்சியோடு கிடைக்காதது என் குற்றமல்ல...!
இது சிந்துபைரவியில் கே ஜே யேசுதாஸ் அதே ராகத்தில் பாடும் பாடல். இளையராஜா இதில் செய்திருக்கும் புதுமை 'மரி மரி நின்னே' என்கிற இந்தப் பாடல் ஒரிஜினலாக வேறு ராகம். அதை இளையராஜா சாரமதியில் போட்டிருக்கிறார்.
தெலுங்கில் வெளிவந்த ஏக் துஜே கேலியே.....கமல் இளமையில் இந்தப் பாடலில் எப்படி இருக்கிறார்...? சரிதாவுக்கு இதுதான் முதல் படம் என்று நினைவு! சிவரஞ்சனி ராக பேஸ்!
இது ஹிந்தியில் வெளிவந்த மரோ சரித்ரா....அதே காட்சி. அதே நடிகர். மத்தியவயது கமல்! சரிதாவின் இடத்தில் ரத்தி அக்னிஹோத்ரி. அதே சிவரஞ்சனி ராக அடிப்படையில்...
டிஸ்கோ டான்சர் படத்தில் கேமி கேமி பாடல் தெரிவு செய்தேன். காட்சியில் அதன் தமிழ்ப் பாடல் கிடைக்காததால் கிடைத்ததைப் பகிர இந்தப் பாடல்! ஹிந்தியில் மித்துன்...
தமிழில் ஆனந்த் பாபு...நாகேஷ் மகன்...