குடும்பத் தலைவிகளுக்கு ரெண்டு விஷயம் தினப்படி தலைவலி! ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது. இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது... இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு! அதாவது இந்தக் கால அம்மாக்களுக்கு!