அசோக் லேலண்டில் அடியேன் பணிபுரிந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் , சற்றேறக் குறைய, பதினாறு ஆண்டுகள் என்னுடைய பாஸ் ஆக இருந்தவர் திரு பி அப்பலராஜு. அவர் கையால் நான் மூன்று பிரமோஷன்கள் வாங்கினேன்.
அவர், நேற்று (11-06-2012 திங்கட்கிழமையன்று ) சென்னை வேளச்சேரியில், காலமானார் என்னும் துயரச் செய்தியை, என்னுடைய நண்பர் தேவதாஸ் அலைபேசியில் அழைத்து, சொன்னார்.
திரு அப்பலராஜு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவருடைய மேலதிகாரிகள் இட்ட பணிகள் எதையும் மிகுந்த ஈடுபாட்டுடன், செய்து முடிப்பார். நான், அவருடைய குழுவில் பல கடினமான பிராஜக்டுகள் செய்ததுண்டு. அது பற்றிய விவரங்கள் பிறிதொரு சமயம் எழுதுகின்றேன். அவர் அசோக் லேலண்டில், DGM - Quality Control பதவியில் இருந்து, இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு பல மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில், பெரிய பதவிகள் வகித்தார். ஆசான் மேனேஜ்மெண்ட் கல்லூரி டீன் ஆக இருந்தார் என்று இணையம் விவரம் தருகின்றது.
அவருடைய ஆன்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கௌதமன்.