- இன்றைய செய்தித் தாளை மேய்ந்து கொண்டிருந்த போது படித்த இரண்டு விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. முதலாவது, மேட்டூரில் மாநகராட்சி சரியாக குடி நீர் சப்ளை வழங்கவில்லை என்று கோபப் பட்ட மக்கள் போராடிய பிறகு ஊழியர்கள் அடைப்பு ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்த போது, புங்கன் மரம் குடிநீர் சப்ளை செய்யும் குழாயில் நேரடியாகப் புகுந்து நீரை உறிஞ்சியதைக்.கண்டு பிடித்தார்களாம்.. பின்னர் அந்தப் பன்னிரண்டு அடி வேரை வெட்டி எடுத்தார்களாம்.
- இரண்டு, ஓசோன் லேயரில் ஓட்டை. அதனால் புவி வெப்பம்...துருவப்ரதேசங்கள் உருகி நீர் மட்டங்கள் உயர்ந்து நிலப் பரப்பு சுருங்கி, மொத்தத்தில் புவி வெப்பமாகி.....என்று போகும் ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. இதைப் பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே....
- முதலாவது புங்கன் மர விஷயம்...
- எந்த மரத்தின் வேரும் ஈரப்பதம் உள்ள இடங்களை நோக்கி நீண்டு வளர்ந்து ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்டது. தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தென்னை மரத்தின் வேர் நீண்டு பக்கத்து வீடுகளின் கிணறுகளை நாடுவதைப் பார்த்துள்ளோம். வேப்ப மரத்தின் வேர்கள் நம் கட்டிட அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்ப்பதையும் பார்த்துள்ளோம். கோவில் கோபுரங்கள் மீது பறவைகள் சாப்பிட்டு எச்சமிட்ட பழ விதைகள் காரணமாக ஆல, அரச வேம்பு மரக் கிளைகள் வளரத் தொடங்கி விரிசல் விட்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம்.
- மரங்களின் இயல்பு அது. அந்தக் குழாய் எப்போதோ விரிசல் விட்டிருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட 'பொறுப்பான' நபர்கள் இதை கவனிக்காமலோ சோம்பேறித்தனத்தினாலோ விட்டிருக்க வேண்டும்.
- புங்கனுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. நோய்த்தொற்றுக் கிருமிகளை எதிர்த்து அழித்து நோய்களிருந்து காக்க வல்லது அது என்று சொல்வார்கள். சிலபல வருடங்களுக்கு முன்னால் உடை அணியாக் குழந்தைகள் அரையில் புங்கைக்காய் தடுப்பு (மறைப்பு) அணிந்திருப்பதை பார்த்த ஞாபகம் இருக்கும்! இன்னொரு உபயோகமும் புங்கைக்கு உண்டு என்று சொல்வார்கள்...'பேய் விரட்டும்' சக்தி இந்த மரத்துக்கு உண்டு என்பதுதான் அது... எனவே,
- அந்த கிராம மக்கள் மீது கருணை கொண்ட இந்த மரம் நோய்களை தடுக்கவும், பேய்களை விரட்டவும் மக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரில் கலக்க முடிவு செய்து இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்....!
- இரண்டாவது, ஓசோன் மேட்டர்.
- ஓசோன் லேயர் ஓட்டை ஏன் உஷ்ணப் பிரதேசங்களை விட்டு விட்டு துருவங்களில் மட்டும் விழுகிறது? பூமியின் காந்த புலன்களுக்கும் அதற்கும் ஏதும் தொடர்பு உண்டா?
- துருவங்களில் உறைபனி என்பது பூமியுடன் புதைந்து வேரூன்றி உள்ளதா அல்லது மிதக்கிறதா?
- ஏன் இந்தக் கேள்வி என்று புரிகிறதா? மண்ணில் ஆழ்ந்துள்ளதோ, மிதக்கிறதோ, அதனது கன பரிமாணம், எடை ஆகியவை ஏற்கெனவே கடல் நீரில் ஏற்கப் பட்டுள்ளது. எனவே அது உருகிய பிறகு அது பரவ அதிகப் படியான இடம் தேவை இல்லை.
- அது மண்ணில் ஆழ்ந்துள்ளதாக கொள்வோம். அதனது கன பரிமாணம் காரணமாக ஏற்கெனவே கடல் நீர் கரையை மீறி வழிந்திருக்கும். சுற்று சூழ் ஆர்வலர்கள் முன்மொழிவது போல காலநிலை மாற்றத்தால்தான் அது நடக்கும் என்பது சரி அல்ல. மக்களுக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமானால் கடற்கரைகளில் கடந்த பல வருடங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களை கவனித்திருப்பார்கள். (திருவல்லிக்கேணி, ராமேஸ்வர வாசிகள் இந்த விஷயத்தில் இன்னும் நிறையப் பேச முடியும்..)
- இதை எளிதாகக் கணிக்க ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொள்வோம். குளிர் சாதனப் பெட்டியிலிருந்து ஐஸ் கட்டிகள் எடுத்து அந்தக் குவளையில் இட்டு அதை ஒரு குச்சியால் அதை அடியிலேயே பிடித்துக் கொள்வோம். தண்ணீர் அளவை அப்போதும் ஐஸ் கரைந்த பிறகும் கவனித்துப் பார்ப்போம்
- ஆதி காலத்தில் பூமியில் நிலப் பரப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்து படிப்படியாகக் குறைந்து கொண்டே வருவதை கணக்கீடுகளில் அறிகிறோம். இந்த சுருங்குதலினால் பூமிக்கடியில் உள்ள 'டெக்டானிக்' தட்டுகள் இடம் மாறுவதில் ஏற்படும் அழுத்தத்தில் எரிமலைகள் தோன்றுகின்றன.
- பல்வேறு தாதுக்களை தோண்டி எடுத்து உலோகங்களை பூமியில் பயன்படுத்தும் போது அதன் ஆக்சைடுகள் அதிகமாகி பூமியில் புதைக்கப் படும்போது நிலப் பரப்பு இன்னும் அதிகமாகும் சாத்தியக் கூறுதான் அதிகம்..
- உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம்...எந்தெந்த காரணங்களினால் அழியக் கூடிய சாத்தியங்கள்...?
- ஒரு மகாப் பிரளயம் வந்தால் அழியும் என்றால் மேற்சொன்ன காரணங்களினால் பூமி முழுகும் சாத்தியம் குறைகிறது.
- வெப்பம் அதிகமாகும்போது காற்றில் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்றால் அதிகமாகும் வெப்பத்தின் காரணமாக கடல் நீரும் ஆவியாக உறிஞ்சப் படத்தானே வேண்டும்? அப்போது அதன் அளவும் குறையுமே...
- சுற்றிக் கொண்டிருக்கும் பூமி நிற்க வேண்டும் என்றால்.........
- கட்டிடங்களையும் மனிதர்கள், மற்றும் உயிரினங்களையும் பூமி விழுங்க வேண்டும் என்றால்.....!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Ozone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ozone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7.12.09
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)