பள்ளிக்கூட நாட்களிலோ அல்லது கல்லூரி நாட்களிலோ நீங்கள், சிம்பிள் பெண்டுலம் பரிசோதனை நடத்தி இருப்பீர்கள். அல்லது உங்கள் பௌதிக ஆசிரியர் (வாஞ்சிநாதனோ அல்லது வரதராஜனோ அல்லது ராமமூர்த்தியோ) உங்களுக்கு ஊசல் பெண்டுலம் பற்றிய பரிசோதனையையும், L / T * T = K என்பதையோ நிரூபித்துக் காட்டி இருக்கலாம். ஒரு ஜி (2G இல்லை) கண்டுபிடிக்கக் கூட அந்தப் பரிசோதனையை நீங்கள் செய்திருப்பீர்கள்!
இந்தப் பரிசோதனையில், ஊசல்களைக் கணக்கெடுக்கும் பொழுது, குண்டு, மேலே காட்டப் பட்டிருக்கின்ற, நடு நிலையான B என்னும் நிலையில் ஆரம்பித்து, மீண்டும், அதே நிலைக்கு, அதே திசையில் பயணிக்கும் நிலை வரும்பொழுது, ஒன்று என்று (B > C + C > B + B > A + A > B = 1) ஆரம்பித்து, பிறகு இதே வகையில், தொடர்ந்து கணக்கீடு செய்வார்கள்.
கணக்கீடு செய்வதற்கு, 'A' நிலையையோ அல்லது 'C' நிலையையோ ஏன் எடுத்துக் கொள்வதில்லை?
கணக்கீடு செய்ய 'B' யை தொடக்க / முடிவு நிலையாக வைத்துக் கொள்வதற்கும், வருடத்தின் முதல் நாளாக சித்திரை முதல் தேதியை வைத்துக் கொள்வதற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அது என்ன?