கோதுமை, எனக்குத் தெரிந்து இரண்டு வகைப்படும்.
ஒன்று சம்பா கோதுமை.
மற்றது சாதாரண (பஞ்சாப்) கோதுமை.
சம்பா கோதுமை என்று கேட்டு, (கிடைத்தால்) கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். (பெங்களூரில் கிடைப்பதில்லை.)
சம்பா கோதுமையை மிக்சியில் போட்டு விப்பரில் ஒன்று அரையாக உடைத்துக் கொள்ளவேண்டும். மாவாக செய்துவிடாதீர்கள். பத்து செகண்டுகளுக்குள் ஒன்று அரையாக உடைத்துக் கொண்டால் போதும்.
பிறகு அரிசிச் சாதம் தயார் செய்வது போலவே கோதுமைச் சாதத்தை சமைக்க வேண்டியதுதான். திட்டமாக நீர்விட்டு, (கஞ்சி வடிக்கின்ற நிலை வேண்டாம்) நீர் சுண்டி, கோதுமை நன்றாக வெந்ததும் இறக்கி வைத்துவிட வேண்டும்.
கோதுமைச் சாதம் நல்ல சத்துணவு. நோய்வாய்ப்பட்டு உடல் தேற வேண்டியவர்களுக்கும், நீரழிவு நோயாளிகளுக்கும், இரத்த அழுத்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் கோதுமைச் சாதம் மிகச் சிறந்த உணவாகும்.