டிர்ரிங் ....டிர்ரிங்........
"ஹலோ இந்தப் பக்கம் ..... பால் கொண்ட பரந்தாமன். அந்தப் பக்கம் யாரு?"
"என்ன? பால் கொண்ட பரந்தாமனா? யாருடா உனக்கு அந்தப் பட்டம் கொடுத்தது?"
"பட்டம் எல்லாம் யாராவது கொடுப்பார்களா? நம்பதான் ஒரு கையால கொடுத்து, இன்னொரு கையில வாங்கிக்கணும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்துக்கொள்ளவேண்டும். எல்லா நாளும் அரசியல்வாதிங்களுக்கு நடுவே ஜல்லி அடிச்சுகிட்டு இருக்கற உனக்குத் தெரியாதா?"
"சரி, என்ன ஆச்சு எண்காலி? வந்துடுச்சா?"
"அது வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. நீ வந்து கலெக்ட் பண்ணிக்கிறயா அல்லது டோர் டெலிவரியா?"
"எவ்வளவு செலவு ஆச்சு?"
"செலவா? அது ஆச்சு ஒன்றரைக் கோடி. பில் அனுப்புகிறேன்."
"பில் எல்லாம் எனக்கு அனுப்பாதே. பில் அமவுண்டை நீ சம்பாதிக்க ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஐடியா வெச்சி நாம்ப செலவு பண்ணியதற்கு மேலாக சம்பாதிச்சிடலாம். ஆமாம் அது ஒரிஜினல் பால் தானே? டூப்ளிகேட் இல்லையே?"
"ஏண்டா போலி சான்றிதழ், போலி டாக்டர், போலி சாமியார், போலி மருந்து போல இதுலயும் போலி இருக்கும்னு நெனக்கிறியா? ஆனா போலி இல்லை ஒரிஜினல்தான் என்று வந்தவுடனேயே அதுக்கு ஒரு டெஸ்ட் வெச்சி தெரிஞ்சுகிட்டேன்."
"அட! என்ன டெஸ்ட் வெச்சே?"
"இன்றைக்கு நடக்கற வாய்ச் சண்டையில் யார் ஜெயிப்பாங்க என் மனைவியா அல்லது அம்மாவா என்று தெரிந்துகொள்ள, இரண்டு பேருங்க பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி, ஆக்டோபஸ் இருக்கின்ற புட்டியில் போட்டேன். அது என் மனைவி பெயர் கொண்ட சீட்டை, பவ்யமாக எடுத்து என்னிடம் எடுத்துக் கொடுத்தது."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? அம்மா வாய்ச்சண்டையில் தோற்று, பக்கத்துத் தெருவில் இருக்கின்ற என் தங்கை வீட்டுக்குப் போய்விட்டார்கள்"
"அட! அப்போ உன்னிடம் இருப்பது ஒரிஜினல் பால்தான்!"
"இந்த ஆக்டோபஸ்சை வெச்சிகிட்டு, நான் எப்படி ஒன்றரைக் கோடிக்கு மேல் சம்பாதிப்பது? அதைச் சொல்லு முதலில்."
"இரு. அமைச்சர், பி ஏ வோட வெளிநாடு டூர் போயிருக்காரு, நான் உன் வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கேன். ஒரு விளம்பரம் தயார் பண்ணியிருக்கேன். அதை எல்லா தினசரிப் பத்திரிகைகளிலும், ஒரு வாரம் தொடர்ந்து வெளியிடுவோம். பிறகு பாரு நமக்கு வருமானம் எப்படி வருகிறது என்று."
இருவரும் சேர்ந்து விவாதம் பண்ணி, பிறகு தயார் செய்த விளம்பரம் இது:
(தொடரும்)