வாங்க எல்லோரும் வரிசையாய்.
உங்களுக்கு கடலை வடை போடக் கற்றுத் தருகின்றேன்
கடைக்குச் சென்று, இதெல்லாம் வாங்கிகிட்டு வாங்க:
பொட்டுக்கடலை : (Fried gram) : கால் கிலோ.
பச்சை மிளகாய் : ஐந்து.
பெரிய வெங்காயம் : மூன்று.
முந்திரிப்பருப்பு : பத்து.
கச முசா ஓ சாரி --- கச கசா (poppy seeds) ஒரு மேசைக் கரண்டி. (சின்ன பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு மே க அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்)
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு.
பொடி உப்பு :தோராயமாக இரண்டு மேசைக்கரண்டி. (சுவைக்கேற்ப மாறலாம்)
ஒரு தேங்காய் மூடி.
கொஞ்சம் கொத்தமல்லித் தழை.
நல்லெண்ணெய் : கால் லிட்டர்.
பொட்டுக்கடலையை மிக்சியில் இட்டு, தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றை பொடிப்பொடியாய் அரிந்து கடலைப்பொடியில் போடவும். முந்திரிப்பருப்பு, கசகசா, தேங்காய்த்துருவல் இவற்றையும் மிக்சியில் அரைத்து, கடலைமாவில் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து, வடை மாவு பிசைந்துகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், வடைகளை ஒவ்வொன்றாகத் தட்டி, எண்ணெயில் இட்டு, இருபுறமும் திருப்பி, பொன்னிறமாகப் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
(இது கூகிளில் சுட்ட வடை)
கடலை வடை தயார்.
============================================================சொல்லாதே யாரும் கேட்டால் ... 1/7
பெங்களூரு.
ஒரு பொன்மாலைப் பொழுது.
பார்க்கில் அதிகக் கூட்டம் இல்லை.
முகநூல், ட்விட்டர், ப்ளாக் என்று பல்வேறு சிந்தனைகள் பின்தொடர, பார்க்கில் சுற்றி வந்துகொண்டிருந்தேன்.
பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருவர், என்னைப் பார்த்து முறுவலித்த மாதிரித் தோன்றியது.
(இது அவர் படம் இல்லை)
(தொடரும்)