market mania லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
market mania லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.7.09

Stock exchanges

உலகம் முழுவதும் கிடுகிடுவென்று பரவிவிட்ட
ஒரு நோய்க்கு மெக்சிகன் ப்ளூ ஸ்பானிஷ் ப்ளூ
என்று பெயர் இடப்படுவது போல இப்படி நீங்கள்
என் டி டி வி யின் பெயரை மட்டும் உபயோகித்
திருப்பது விந்தையாக உள்ளது.

எங்கள் ஊரில் மார்கெட்டோ மேனியா என்ற
பெயரில் பாங்க் பாலன்ஸ் இருப்பவர் இல்லாதவர்
ஸ்டாக் மார்கெட் பற்றி அறிந்தவர் அறியாதவர்
எல்லோரையும் அவர்களிடம் நேரமும், தொலை
தொடர்பு சாதனங்களும் இருக்கும் ஒரே
காரணத்தால் கொடூரமாகத் தாக்கியிருக்கிறது
இது.

இதற்கு முதல் வைத்தியம்:

நோய் கண்டவர் வீட்டில் தொலைக்காட்சியை
இயங்காமல் செய்வது, மற்ற தொலை மற்றும் வலை
தொடர் சாதனங்களை நோயாளியிடமிருந்து
குறைந்தது 6 மீட்டர் தூரத்தில் வைப்பது
போன்ற சில முறைகளில் முன்னர் சொல்லப்
பட்ட தொலைக்காட்சி நிறுத்தத்துக்கு தமிழ்
மின் துறை அமைசசரின் அமோக ஆதரவு
அனைவரும் அறிந்ததே.

இந்த நோய் பற்றி மருத்துவர் மாற்று பூதம்
குறிப்பிடுகையில், நாம் எல்லோரும் சிறு
பிராயம் முதலே இட்மிருந்து வலம் படிப்பவர்கள்
அதனால் வலமிருந்து பார்வை இடம் பெயரும்
போது வேகமாகத் திரும்பியே பழக்கம். டிக்கர்
வலமிருந்து இடம் நகரும்போது நாம் நம்
வேகத்தை சற்றுக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்த
வேண்டியுள்ளது. போதாதற்கு, டெய்சி செயின்
போல வேறு நம் கண்களை நகர்த்த வேண்டும்.

ரீ டிப் . காம் இல் ஸ்டாக்ஸ் லைவ் போன்ற
ஒரு கம்பெனியின் விவரங்களை நிலையாகத்
தரும் முறையில் நாம் தீர்வு முறைகளைத்
தீர்மானிக்கலாம்.