ஏழுநாள் தொடரின் முடிவை யூகிக்காதவர்கள் எல்லோரும், இங்கே இருக்கின்ற ஸ்கூட்டர் படம், என்ன பிராண்ட், என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்.
சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7
முதன் முதலாக முன்பின் தெரியாத முகநூல் நண்பரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது, என்ன பேசுவது, என்னைப் பற்றி முழுவதும் என் பதிவுகள் மூலம் அவருக்குத் தெரிந்திருக்கும்.
அவர் என் நண்பர்கள் கூட்டத்தில் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லையே!
சற்றுக் குழம்பியவனாக அவரருகே சென்று ...... " நீங்க ...... ஃபேஸ் புக்குல .... வந்து ...... நீங்க ...... இங்கே ....எப்படி .... " என்று பேச ஆரம்பித்தேன்.
அவர் உடனே, " ஆஹா! ஆமாம் ஃபேஸ்புக் தான்! கரெக்ட். முதலில் நீங்க என்னைப் பார்த்துச் சிரித்தவுடனேயே தெரிந்துகொண்டுவிட்டேன், என்னை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்று."
"இல்லை, நான் வந்து ..... அதாவது ..... உங்களை ...... "
"ஆமாம், ஆமாம் நீங்க என்னை இங்கே எதிர்பார்க்கலை இல்லியா! ஒரே ஒரு ரிக்வெஸ்ட். நீங்க என்னை இங்கே பார்த்ததாக யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சநாளைக்கு யார் தொந்தரவும் இல்லாம இருக்கலாம் என்று வந்திருக்கேன். ப்ளீஸ் ....... " என்று சொல்லியவாறு வேகமாக பார்க்கை விட்டு வெளியேறினார்!
(ஹி ஹி அம்புட்டுதான்)