என்னவோ இந்தியா அணுகுண்டு செய்யத் தெரிந்த நாடு, நிலவுக்கு கால் டாக்ஸி அனுப்பி வைத்தது என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டு திரியும் நமக்கு ஒரு எருமை ஹெலிகாப்டர் காணாமல் போய் அதைக்கண்டு பிடிக்க முடியாமல் திணறுவது ஒரு பாடமாக இருக்கிறது. ஐயாயிரம் பேர்கள், நூற்றுக்கணக்கான விமானங்கள் தேடுகின்றன தேடிக்கொண்டே இருக்கின்றன.
ஆந்திர முதல்வருக்கு என்ன ஆகி இருக்கும்? கடத்தல், விபத்து எதுவானாலும் கொடுமைதான். விபத்தாக இருந்தால் தெரிந்திருக்கும் என்று வேறு சொல்கிறார்கள். அட கடவுளே!
முன் அறிவிப்பு இன்றி கிராம நிர்வாகத்தை சோதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படிப் போவது அவரது வழக்கமாம். நல்ல எண்ணத்துடன் செயல் பட்ட திறனாளர் நலமாக வர வேண்டுவோம்.
சமீபத்திய தகவல்கள் நம்பிக்கை தரக் கூடியதாக இல்லை. இந்த வேகத்தை இவர்கள் நக்ஸலைட்களையும் இன்ன பிற பயங்கரவாதிகளையும் தேடுவதிலும் காட்டுவார்களா?
பதிலளிநீக்குதினமும் கம்பி மேல் நடந்து கத்தியை விழுங்கிக்காட்டும் மாய வித்தைக்காரர் ஒரு நாள் சற்று தாமதமாக இரவு உணவு உண்ணச் சென்றார். விடுதிக் காரர் அவரை சற்றுக் கூர்ந்து பார்த்த பின், "நேரமாகி விட்டதால் எல்லாவற்றையும் கழுவி மூடி விட்டோம். ஆனால் உங்களுக்கு உணவு அளிப்பதில் எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை" என்று கூறி விட்டுப் போய் ஒரு தட்டில் என்னவோ வைத்து எடுத்து வந்தார். தட்டில் இருந்தது ... இரண்டு ஃப்யூஸ் ஆன பல்பும் நான்கு உடைந்த கத்திகளும்!
பதிலளிநீக்குஅது மாதிரி ஒரு உடைந்த ஹெலிகாப்டரின் பாகங்களை மழை, காடு, இவற்றுடன் ஒரு விரோதமான வரவேற்பும் இருக்கக் கூடும் என்கிற நிலையில் அல்லது செய்தியை பல் வேறு காரணங்களால் ஒத்திப் போட்டே ஆகவேண்டும் ......என்றிருந்தால் .......