ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

இப்படி எல்லாம் நடந்தால்...


தீவிரவாதம் பெருகி விட்ட இந்நாளில் நாடு முழுக்க எல்லா வீடுகளும் கட்டிடங்களும் See thro வாக - ஒன்றிரண்டு அறைகளைத் தவிர - மாறி விட்டால்...
தெரு முழுக்க, ஊர் முழுக்க Traffic. வாகனங்கள் அதிகமாவதால்தான் நெருக்கடி, எல்லோரும் அரசாங்க வண்டியிலேயே வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாள் இது...வீட்டிலுருந்து இறங்கி தெருவில் நடந்து பிரதான சாலையை அடைகிறோம். அந்தப் பிரதான சாலை நகரும் சாலை. இடது பக்கம் மெதுவாக நகரும் சாலையில் ஏறி, வேகமாக செல்ல பக்கத்துக்கு பகுதிக்கு மாறி நின்றால் நகரும் சாலையான அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாற வேண்டிய இடத்தில் மெதுவாக செல்லும் பகுதிக்கு மாறி இறங்கி அடுத்த வளைவு சாலையில் ஏறலாம், அல்லது இறங்க வேண்டிய இடம் என்றால் தெருவுக்கு மாறி செல்லுமிடம் செல்லலாம். எதிர் திசையில் செல்ல வேண்டுமானால் எதிர்ப் பக்க ரோடுக்கு மாறி ஏறி நின்று செல்லலாம்!
Cell to cell, cell to computer, என்று Blue Tooth வசதியில் தகவல்களையோ, பாடல்களையோ, எதை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் காலம் இது. அது போல "Tooth" வசதி! உங்கள் மூளையில் உள்ள சரக்கு எல்லாம் என் போன்றவர்களின் Empty மூளைக்கு Transfer ஆகிற வசதி...உங்கள் அனுமதியுடன்தான்...நீங்கள் OK கொடுத்தால்தான், நீங்கள் அனுமதி கொடுக்கும் விஷயங்கள்தான் Transfer ஆகும்! எவ்வளவு படித்து, புரிந்து, தெரிந்து வைத்திருக்கிறோம்...குறுக்கு வழியா என்று திட்டாதீர்கள்...! ஒரு Technology தானே...
அடுத்து இந்த வசதி ஏற்கெனவே இருப்பதாக நினைவு... அடிக்கடி Medical check-up செய்து கொள்பவர்கள் உடலில் அவர்களைப் பற்றி சகல விவரங்களும் அடங்கிய Chip பொருத்தி விடுவார்களாம். மறுபடி மறுபடி Previous History கேட்க வேண்டாம் பாருங்கள்.Old Files தூக்கிக் கொண்டு அலையவும் வேண்டாம்.இதில் அந்த சிப் கூடுதல் வசதியாக நம் உடம்பில் சர்க்கரை, இரத்தக் கொதிப்பு அளவுகள் குறையும்போது அல்லது ஏதாவது மாறுதல்களின் போது ஒரு Alert தர வேண்டும்.
நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்றார் வள்ளுவர். மனித மனதுக்கு சாத்தியமா? இரண்டு மனம் வேண்டும், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று என்றார் நம் கவிஞர். கஷ்டம் தெரிந்தவர்! பாடகர் போல ஒரு கவசத்தை மண்டையில் மாட்டிக் கொண்டு, கணினியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தேவை இல்லாத நினைவுகளை Delete செய்யும் வசதி இருந்தால்...
புத்தக சுமையைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார்கள். எதற்கு இதெல்லாம்... Universal ஆக ஒரு பாடத் திட்டம். அது கணினி வலைத் தொடர்பு மூலமாக...வீட்டிலேயே...ஒரு தனி அறையில். மேலும் கூடுதல் வசதியாக Hologram ஒளிக் கற்றைகள் மூலம் ஒரு முப்பரிமாண உருவத்தை உண்டாக்க முடியும் எனும்போது அதையேவோ, அல்லது நான்கு பரிமாண உருவத்தையே கொண்டுவர முடியும் என்றால் அதை வான்வெளி வலையில் upload செய்து சம்பந்தப் பட்டவர் அருகிலேயே ஒரு குறிப்பிட்ட அறைக்குள் உருவமாக கிளர்ந்தெழ செய்ய முடிந்தால்...
cell phone இல வலைத் தொடர்பு ஏற்படுத்திய பிறகு அதை ஒரு கட்டிடத்தின் மீதோ காய்கறி, பழங்கள் என எந்தப் பொருளின் மீது வைத்து காமரா மூலம் Focus செய்தால் அந்தப் பொருள் பற்றிய சகல விவரமும், Wikipedia விவரங்களும் வருமாம். கூடுதலாக Dictionary வசதியும் உண்டாம் என்று இன்று வந்த ஒரு மின் அஞ்சல் செப்புகிறது. சரி...நாட்டு மக்கள் அனைவரையும் இந்த விவரங்களுக்குள் அடக்கி Vote போடப் போடப் போகும்போதோ அல்லது வேறு தேவை ஏற்படும் போதோ அவர்கள் மேல் இந்த Cell Camera வை Focus செய்தால் அவர்கள் பற்றி சகல விவரங்களும் அதில் வந்து விடும் . கள்ள வோட்டு , இரண்டு மூன்று ID பிரச்னைகளை சமாளிக்கலாமே...

3 கருத்துகள்:

  1. /புத்தக சுமையை....

    இன்னும் ஐம்பது வருடங்களில் சாத்தியம். வளர்ந்து வரும் நாடுகளில் அதற்கு முன்னரே சாத்தியம்.
    ஆன்லைன் கல்விக்கான தொழில் நுட்பம் இப்போதே இருக்கிறது. ஆன்லைன் கல்விக்கு முதல் தட்டு அங்கீகாரம் இன்னும் கிடைக்காததால் இந்தப் பாடு. படித்த இளைய சமுதாயத்துக்கு இது சுயமாகத் தொழிலில் இறங்க இது ஒரு அருமையான வாய்ப்பு. தென் கிழக்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஆன்லைன் கல்வி கற்பிக்கும் முயற்சியில் இந்தியாவின் ஐ.டி நிறுவனங்கள் அடுத்து இறங்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பட்டனைத் தட்டி விட்டா - தட்டுல இட்டிலியும் - பக்கெட்டுல(!) சாம்பாரும் வந்திடணும்!
    :: சாப்பாட்டு ராமன் ::

    பதிலளிநீக்கு
  3. in th sixties when i started wearing specs i used to wonder if it has a provisison for wiper it would take care of the rain drops or sweat. someone developed one such actually. so whatever we desire or thing impossible one day it materialises

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!