திங்கள், 19 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ... 007


அரை + இரண்டு + கடை.
பாடம் ஏழு : சுய மதிப்பீடு கணக்கு. நீங்க விலை மதிப்பிடமுடியாதவர். உங்களைப் போன்றே சிந்திப்பதற்கு, செயல் படுவதற்கு யாராலும் முடியாது. உங்களைப் போலவே சிந்திக்க, செயல்பட - ஒரு கம்பியூட்டர் உருவாக்க வேண்டும் என்றால் - அதற்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் தேவைப் படும். அப்பவும் - உங்க சிந்தனை + செயல் திறனில் அதற்கு, பாதி அளவு கூட இருக்காது.
இந்தக் கணக்கின் விடை உங்களுக்கு மட்டும்தான். உங்களுடைய கடந்த ஆண்டு வருமானம், (உங்க வருமான வரி படிவத்தில் உள்ள Gross salary - அந்த படிவத்தில் காணப் படும் பெரிய தொகை அதுவாகத்தான் இருக்கும்!) ஒரு வெள்ளைத் தாளில் மேலே எழுதிக் கொள்ளுங்கள். வேறு வகை வருமானம் - நில, புலன்களிலிருந்து வருவது உண்டு என்றால் அதையும் எழுதிக் கொள்ளுங்கள். உங்க எல்லா வருமானங்களையும் ஆண்டுக் கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் (இந்திய ரூபாய் மதிப்பில்). இந்த ஆண்டு வருமானத்தை, 360 ஆல் வகுத்துக் கொள்ளவேண்டும். கஷ்டமா இருந்தா, பத்தால் வகுத்து, பிறகு நாலால் வகுத்து பிறகு ஒன்பதால் வகுத்துக் கொள்ளுங்க. இப்போ வர்ற விடையில் பாதியை, ஏழால் வகுங்கள் - கடைசியாக வருகின்ற விடை உங்கள் ஒரு நிமிட வருமானம் - பைசாவில். 
உதாரணம் : வலையாபதியின் வலை நண்பர் ஒருவர் (நேற்று சாட்டில் கூறிய தகவல் அடிப்படையில்) அவருடைய ஆண்டு வருமானம் - எல்லாவற்றையும் சேர்த்து, மூன்று இலட்சத்து அறுபத்தாறாயிரத்து எண்பது ரூபாய். 
3,66,080 / 10 = 36608
36,608 / 4 = 9152
9152 / 9 = 1017
1017 / 2 = 508
508 / 7 = 72. 
எனவே அந்த நண்பரின் ஒரு நிமிட வருமானம் எழுபத்து இரண்டு பைசாக்கள் (சென்ற ஆண்டு).
(தொடரும்)

4 கருத்துகள்:

  1. எனக்கு ஒரு சித்தப்பா இருக்கார்.
    ஒவ்வொரு நாளுமே வீட்டுச் செலவை எழுது வச்சு மாதக் கடைசியில் கணக்குப் பார்ப்பார்.
    இதிலும் என்னவோ வாழ்க்கையில் முன்னேற விஷயம் இருக்காம் !

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக விஷயம் இருக்கு. நானும் ஒத்துக் கொள்கிறேன்...ஏன்னா என்கிட்டயும் அந்தப் பழக்கம் இருக்கு. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  3. நேத்து, 'நீயா நானா?' நிகழ்ச்சியில சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு நாகப்பன் அவர்கள் கூட - அவருடைய அன்னையார் அந்தக் காலத்தில் எழுதிய மாதச் செலவு கணக்கைப் படித்துக் காட்டினார் - அஞ்சு கிலோ சர்க்கரை பதினேழு ரூபாய் ஐம்பது காசுகள் என்று அவர் படித்தது - இப்பொழுதும் இனிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. சல்லிக்கு கணக்கு பார்ப்பது சில்லி இல்லை நீங்கள் கில்லி. சில சமயம் bully.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!