நீதி மன்றத்தில், சாட்சிக் கூண்டில் குழப்பக் குப்பன்!
எதிர் தரப்பு வக்கீல் - குறுக்குக் கேள்விகள் கேட்கிறார்.
கு குப்பன், 'இப்படியும் இருக்கலாம் - அப்படியும் இருக்கலாம்' வகை பதில்கள் கொடுத்த வண்ணம் உள்ளார்.
உதாரணத்திற்கு ஒன்று:
எ த வக்கீல்: "நீங்கள் குறிப்பிடும் வீடு அஞ்சாவது மெய்ன் ரோட்டில் - எந்தப் பக்கம் அமைந்துள்ளது?"
கு கு : ஐயா அந்த வீடு ஐந்தாவது மெய்ன் ரோடின் இரண்டு பக்கத்திலும் உள்ளது.
நீதிபதி குறுக்கிட்டு - "அது எப்படி சாத்தியம்?"
கு கு - "ஐயா - நீங்க சுந்தரவல்லி ஸ்கூல் பக்கத்துலேருந்து பக்கு வீட்டுப் பக்கம் போகும்போது அந்த வீடு வலது பக்கம் வரும்; ஆனா பக்கு வீட்டுப் பக்கத்துலேருந்து சுந்தரவல்லி ஸ்கூல் பக்கம் போகும்போது அந்த வீடு இடது பக்கம் வரும் .....!!"
இதனால் மிகவும் பாதிப்படைந்த எ த வக்கீல் - மிகவும் எரிச்சலடைந்து குப்பனிடம் மோகன்லால் பாணியில் சொல்கிறார்:
"நான் கேக்கற கேள்விக்கு பைனரில பதில் சொல்லு - ஆமாம் அல்லது இல்லை - ரெண்டுல ஒண்ணுதான் சொல்லணும் சரியா?."
கு கு : "அது முடியாதே சார்!"
எ த வக்கீல் : " ஏன் முடியாது?"
கு கு : " சார் நீங்க பாட்டுக்க - குப்பா, உனக்கு முந்தி பைத்தியம் பிடித்திருந்ததே - இப்போ அது சரியாயிடுச்சா அல்லது இல்லியான்னு கேட்பீங்க .....அப்போ நான் ஆமாம்னு சொன்னாலும் - இல்லேன்னு சொன்னாலும் - என்னைப் பத்தி நீதிபதி அய்யா என்ன நினைப்பாரு?"
good one! best wishes!
பதிலளிநீக்குThank you Max
பதிலளிநீக்கு