செவ்வாய், 21 ஜூன், 2011

உள் பெட்டியிலிருந்து... 2011 06


சந்திப்பு

நான் நடந்த தூரம் அதிகம்
நடக்க வேண்டியது இன்னும்
அதிகம் இருக்கலாம்...
கவலை இல்லை.
ஏனென்றால்
பயணம் முடியும் முன்னேயே
உன்னைச்
சந்தித்து விட்டேன்..

                                    
    
இனி
தூரமும் பொருட்டல்ல
துயரமும் பொருட்டல்ல...

திருமண வியாபாரம்.

பார்ட்டியில் சந்திக்கும் அழகிய பெண்ணிடம் நேராகச் சென்று
"என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு மனமிருந்தால்
மணமுடிக்கலாம் என்றால் அது நேரடி வியாபாரம்.
    
                                                   

அதுவே உடனிருக்கும் நண்பர்களை அனுப்பி, 'அதோ பார் என்
நண்பன். நல்ல வசதி மிக்கவன். உன் தேவைகளை நிறைவேற்றுவான்.
மணம் செய்ய சம்மதமா' என்று கேட்க வைத்தால் அது விளம்பர
வியாபாரம்.
                                                    
   
அந்தப் பெண் நேராக வந்து, 'நீ பணக்காரன் என்று அறிவேன், என்னை
மணம் புரிவாயா?' என்று கேட்டால் அது பிராண்ட் ரெகக்னிஷன்.
      
                                                            
                               
அந்தப் பெண்ணிடம் சென்று நேரடியாக மணம் புரியும் விருப்பத்தைச்
சொல்லும் வேளையில், கன்னத்தில் அறை வாங்கினால் அது கஸ்டமர் ஃபீட் பேக்!
                                         
                                          
வாழ்க்கை

போராடி
வாழ்வின் நம்பிக்கையை
நான் பெற்றபோது
வாய்ப்பு கடந்து
போயிருந்தது...

போராடி
இழந்து விடுவோம்
என்று
நினைத்த போது
ஜெயிக்கும் வாய்ப்பு
வந்தது.

மனிதர்கள் தேவை
என்று
நினைத்த போது
அவர்கள்
என்னை விட்டுச்
சென்றனர்.

வெற்றிகரமாய்
வெறுக்கக் கற்றுக் கொண்டபோது
யாரோ
என்னை விரும்பத்
தொடங்கியிருந்தனர்.

கண்ணீரைக் காய
வைக்கப்
பழகிய தருணத்தில்
சாய்ந்து அழ
ஒரு தோள்
கிடைத்தது.

விரும்பாத நேரத்தில்
விரும்பியது
கிடைத்ததும்
விலக நினைத்த
நேரத்தில்
ஒட்டும்
உறவும்...

                                 

ம்.....வாழ்க்கை!

வியாதி...

என்
முடிவுரைக்கான
முன்னுரை.
                

14 கருத்துகள்:

  1. சந்தித்து திருமணம் முடித்து வாழ்ந்து முடித்த கவிதை..

    பதிலளிநீக்கு
  2. //கன்னத்தில் அறை வாங்கினால் அது கஸ்டமர் ஃபீட் பேக்! //

    :))

    பதிலளிநீக்கு
  3. எல்லாக் கவிதைகளும் அருமை!

    பதிலளிநீக்கு
  4. //அந்தப் பெண்ணிடம் சென்று நேரடியாக மணம் புரியும் விருப்பத்தைச்
    சொல்லும் வேளையில், கன்னத்தில் அறை வாங்கினால் அது கஸ்டமர் ஃபீட் பேக்! //

    வாய்விட்டுச் சிரித்தேன்.

    //ம்.....வாழ்க்கை!
    வியாதி...
    என் முடிவுரைக்கான முன்னுரை.//

    Superb.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கஸ்டமர் பீட்பேக்தான் அற்புதம் ;-))

    பதிலளிநீக்கு
  6. ரைட்டு..

    திருமண விஷயம் . -- எனது உள் பெட்டியுளும் வந்திருக்கிறது.. சில வருடங்களுக்கு முன்னர்..

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே நன்றாக இருக்கின்றன. கஷ்டமர் பீட்பாக்
    ரொம்பப் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கை கவிதை உண்மை சொல்கிறது !

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே ரசிக்க முடிகிறது. 'நடந்த தூரம் அதிகம்' கொஞ்சம் கிறங்க வைத்தது. இந்த டயலாக் எல்லாம் சரியான டைத்தில் தோணல பாருங்க!

    பதிலளிநீக்கு
  10. அற்புதம்
    மனம் லயித்து
    ரசித்த கவிதைகள்
    அனைத்துமே
    அமர்க்களம்

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே அருமை. 'சந்திப்பு' இன்னும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. //கன்னத்தில் அறை வாங்கினால் அது கஸ்டமர் ஃபீட் பேக்! //

    Super.

    நான் அதற்கு முன்பே ஓடிவிடும் உத்தமன் !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!