"குன்றத்திலே பதிவாசிரியருக்குத் திண்டாட்டம்!
அங்கே குவிந்தனர் அம்மா வாசகர் எல்லாம் செண்டாட்டம், செண்டாட்டம்! " என்று பாடியபடி, அவ்வையார் வருகிறார்.
(கே யைத் தேடி) பதிவாசிரியரைப் பார்க்கிறார்.
"டேய் பதிவாசிரியா... "
பதி: "ஏய் கிழவீ ... மரியாத, மரியாத!"
அவ்: "அப்பனே, நான் என் அப்பன் முருகனையே அவன் இவன் என்றுதான் கூப்பிடுவேன். நீ ஏ பி நாகராஜன் படம் எதுவும் பார்த்ததில்லையா? உனக்கு எல்லாம் என்ன மரியாதை?"
பதி: "அப்பவே நெனச்சேன் - கொடுமுடிக் கோகிலம் போல இருக்கியே, நீ ஒருவேளை அவ்வையாரோ என்று. ஆனாலும் நீதான் அவ்வையா என்று நான் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்."
அவ்: "அப்புறம் ஏன் தயக்கம்? கேள்விகளைக் கேள்"
பதி: இரு பாட்டீ - நான் சின்ன வயசுல சாயிஸ் ல விட்ட செய்யுள் எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வரணும் இல்லே?"
அவ்: "அது சரி. கேள்வியில ஏதேனும் தப்பு இருந்தது என்றால், உன்னை இங்கேயே சரபேஸ்வரர் சந்நிதியில் முட்டிக் கால் போட்டு நில்லு என்று சொல்லிவிடுவேன்."
பதி: "ஒன்னாரைத்...."
அவ்: "தேறேல்."
பதி: "ஓரம்..."
அவ்: சொல்லேல்."
பதி: "அட - டஃப் கேள்விக்குக் கூட சரியா பதில் சொல்றீங்களே! நீங்க அவ்வைதான்! ஹூம், இதை, நான் ஆரம்பப் பள்ளியில் படித்த நாட்களிலேயே நீங்க சொல்லியிருந்தால், நான் அனாவசியமா பெஞ்சு மேலே ஒரு பீரியட் முழுவதும் நிற்காமல் இருந்திருப்பேன்."
அவ்: "போடா மரமண்டை - நீ அந்த ரெண்டு செய்யுளுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சதாலத்தான் உன்னை பெஞ்சு மேலே நிக்க வெச்சாங்க உன்னுடைய தமிழ் டீச்சர்."
பதி: "அட முக்காலமும் உணர்ந்த மூதாட்டி!"
அவ்: "அது போகட்டும்; நீ ஏன் வாசகர்களிடம் கோபித்துக் கொண்டு, இந்த குமரன் குன்றத்திற்கு வந்தாய்? திரிசூலத்திலிருந்து இங்கே டைரெக்ட் பஸ் இருக்குதா?"
பதி: "மற்ற மொக்கைப் பதிவுகளுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டும், கமெண்டும் போடும் வாசகர்கள் என்னுடைய கே யைத் தேடி பதிவுகளுக்கு மட்டும் அதிக அளவில் போடுவதில்லை. ஓட்டும் கமெண்டும் வாசகர்களிடமிருந்து பெற அருகதை இல்லையா எனக்கு?"
அவ்: (பாடுகிறார்)
"பதிவு நீ அப்பா!
மொக்கைப் பதிவு நீ அப்பா!
தமிழ் வலை உலக பதிவு நீ அப்பா!
ப்ளாக் தன்னில்,
எங்கள் ப்ளாக் தன்னில் -
வலை மேய்ந்து சுவைப்போர்க்கு
ப்ளேட் போடும் பதிவு நீ அப்பா ஆ ஆ !
பதி: "ஒளவையே நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நான் அந்தப் பதிவைத் தொடருவதாக இல்லை!"
அவ்: "சரி நீ இங்கே இருந்து ஒரு நாடகம் நடத்த விரும்பினால் அதைத் தடுக்க யாரால் இயலும்? அப்படி ஏதாவது நாடகம் நடத்துவதாக இருந்தால், கேட் கலெக்ஷன் காண்டிராக்டை எனக்குக் கொடு."
பதி: "அப்படியே ஆகட்டும் ஒளவையே! ஞாயிற்றுக் கிழமை, இங்கே குரோம்பேட்டைக் குறும்பன் வருவதாகக் கூறியுள்ளார். அவர் சொல்லும் சமாதானம் ஏதாவது என் மனசுக்குப் பிடிச்சிருந்தா, நான் வந்து, பதிவைத் தொடர்கின்றேன்."
அவ்: "சரி போ! ஆனால் அந்தக் 'கே' யாரு என்பதை மட்டும் நீ எனக்குக் காதோடு சொல்லிவிடு."
பதி: "நீங்கதான் முக்காலமும் உணர்ந்த மூதாட்டி ஆயிற்றே? கண்டுபிடிங்க பார்ப்போம்!"
அவ்: பதிவாசிரியரின் காதில் இரகசியமாக (.... ----- .....) என்று சொல்லி, "என்ன சரியா?"
பதிவாசிரியரின் முகம் வலைப்பூவாக மலருகிறதுபதி: ஒளவையே! நன்றி, நன்றி. யாரு 'கே' என்பது பற்றி எனக்கே குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்து வைத்த ஒளவையே! உன்னை உளமாரப் புகழ்கின்றேன்! எங்கள் ப்ளாகைப் புகழ்ந்து ஏதேனும் பாடு!"
அவ்: (பாடுகிறார்)
" பாதி பாதி என பாதித்த பதிவின்று, ஊ ஊ ...
ஷோபனா, ஷோபனா என சுற்ற விடுகின்றதே! ஏ ஏ ...
சாமியாரும் சோணகிரியும் ரங்கனும் சேர்ந்து
கே யைத் தேடிக் கொணருவரே! "
இந்தப் பாடலை, நீலாம்பரி ராகத்தில் அவ்வை பாடியதால், பதிவாசிரியர் கண்கள் சொக்கி, அப்படியே குமரன் குன்றம் மரத்தடியில், படுத்து உறங்கிவிட்டார்!
அவர் படுத்து இருக்கற இடத்தில்ல டைம் பாம் இருக்குன்னு சொல்லுங்க. அலறி அடிச்சு வந்திருவார்
பதிலளிநீக்குகுமரன் குன்றம் -- குரோம்பேட்டை டு ஹஸ்தினாபுரம் தடத்தில் வரும் ஒரு 'பேருந்து நிறுத்தம்தான' ?
பதிலளிநீக்குவந்தது அவ்வையா? அவ்வையின் ஆவியா?
பதிலளிநீக்குஎல்லாம் கனவு தானே?!!
பதிலளிநீக்குVoted. 3 to 4 in INDLI.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையாக இருக்குது இந்தப்பதிவு. பாராட்டுக்கள்.
எதுக்கு வம்பு....நானும் கே யை தேட ஆரம்பிச்சுட்டேன்...
பதிலளிநீக்குஅவ்வை பாடுற பாட்டு ஒண்ணும் சரியாப் படலிங்களே.. ஆட்டோ அனுப்ப வேண்டியது தான் போலிருக்கே?
பதிலளிநீக்குஒளவைப்பாட்டி பெருமையே பெருமை.நல்ல சிரிப்புத்தான் !
பதிலளிநீக்குநினைத்து நினைத்து சிரிக்கின்றேன்
பதிலளிநீக்கு