செவ்வாய், 28 ஜூன், 2011

வாசகர்களுக்கு எங்கள் வணக்கங்கள்!

        

இன்று ஜூன் இருபத்தெட்டு.

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
   
எங்கள் ப்ளாக் பிறந்தது, இதே நேரத்தில் (காலை மணி ஏழு இருபத்திரண்டு) இதே தேதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2009 ஆம் ஆண்டு). இட்லி வடை வலைப்பூவைப் பார்த்து, படித்து, பெரிதும் கவரப்பட்டு,  தொடங்கப் பட்டது, இந்த 'எங்கள் ப்ளாக்' என்று முன்பே எங்கேயோ தெரிவித்திருக்கிறோம் என்று ஞாபகம். ஆனால், நாங்கள் (தீவிர) அரசியல் எழுதுவதில்லை என்று முடிவு எடுத்து, அதன்படி இருந்து வருகிறோம்.
     
இது எங்களுடைய எழுநூற்று எழுபத்து ஒன்பதாவது பதிவு. 'ஒரு நாளைக்கு ஒரு பதிவு' என்பதை இயன்றவரையிலும் கடைப்பிடித்து வருகிறோம். சற்றேறக் குறைய, மூன்று நாட்களுக்கு ஒரு உறுப்பினர், எங்கள் ரசிகர் மன்றத்தில் ரசிகராக (follower) சேர்ந்து வருகிறார்.
    
எங்கள் ப்ளாக் பதிவுகளை, இ-மெயில் மூலமாகப் பெற்று படிப்பவர்கள் முன்னூற்றைம்பது பேர். Google buzz மூலமாகப் படிப்பவர்கள் (அல்லது படிக்க வாய்ப்பு இருப்பவர்கள்) எழுநூறுக்கு மேல். Engal Blog facebook நண்பர்கள் இன்றைய நிலையில் எழுநூற்று ஐந்து பேர்.
     

ஆக மொத்தம் ஆயிரக் கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கும் வலைப்பூ எங்கள் ப்ளாக் என்றும், உங்கள் அமோக ஆதரவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று இன்னும் தொடர்ந்து பல பதிவுகள் இட்டு, வலை உலகை  மேன்மேலும் கலக்குவோம் என்றும், உறுதி கூறுகிறோம்.
     
உங்கள் ஆதரவை, தொடர்ந்து இன்ட்லி வோட்டு, கருத்துரைத்தல், ரியாக்ஷன் பெட்டியில் டிக் அடித்தல் போன்று பல வழிகளிலும், எங்களுக்குத் தெரிவியுங்கள்.
   
எங்கள் முகநூல் (facebook) நண்பர்கள், ஒவ்வொரு பதிவிற்கும் கீழே, காணப்படும் like பட்டனை அமுக்குவதின் மூலம் தங்களுடைய முக நூல் நண்பர்களுக்கு, எங்கள் ப்ளாக் பதிவுகளைப் பரிந்துரைக்க இயலும். உங்கள் முகநூல் பக்கத்தில் நீங்கள் எங்கள் ப்ளாக் பதிவை விரும்புகின்ற விவரம் வெளியாவதால், உங்கள் மற்ற நண்பர்களின் கவனத்திற்கும், எங்கள் ப்ளாக் வலை பற்றி தெரிய வரும்.
  
இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமாக, எங்கள் ப்ளாக் வலையில், உங்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன, இன்னும் என்ன வகைப் பதிவுகளை எதிர்பார்க்கின்றீர்கள், என்பது போன்ற விவரங்களை, தயங்காமல் பதிவு செய்யுங்கள். வாசகர்களின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்!

என்றும் உங்கள் ஆதரவை நாடும்,

எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள்.
       

36 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாகீரதி (எல்.கே!)

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ப்ளாகிற்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்:)!

    ஆசிரியர்கள்

    ஸ்ரீராம்
    Kasu Sobhana
    kggouthaman
    kg
    raman

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி முத்துச்சரம் (ராமலக்ஷ்மி)

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ப்ளாக்க்கு வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி தமிழ் உதயம்!

    பதிலளிநீக்கு
  7. கடக லக்னம், பூர நட்சத்திரம் சிம்ம ராசியில் அவதரித்து பல வெற்றிகளை கண்டு மென்மேலும் காணப்போகும் 'எங்களுக்கு' வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டைக் குறும்பன்28 ஜூன், 2011 அன்று 10:34 AM

    உங்களை - இல்லை எங்களை - ஹய்யோ engal6 ஐ ட்விட்டரில் ஃபாலோ செய்யும் என் போன்றவர்களுக்கு நன்றி கிடையாதா?

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள்!
    தொடர்ந்து பதிவு எழுதுவது என்பது மிகப்பெரிய விஷயம்.
    பதிவுகள் interactiveவாக இருப்பது உங்கள் ப்ளஸ்.

    பதிலளிநீக்கு
  10. HVL உங்கள் பாராட்டுக்கு எங்கள் நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். இயன்ற வரையிலும், வாசகர்களை அவர்கள் கருத்துரைக்க சில பாயிண்டுகளை ஆங்காங்கே தூவி வைப்பது எங்கள் வழக்கம்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி விஜய் சார். போற போக்கைப் பார்த்தால் எங்கள் பெயருக்கு, உங்கள் வீட்டு அருகே உள்ள கோவிலில் அர்ச்சனை செய்து, பிரசாதம் அனுப்பி வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது! ரொம்ப ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்! வெல் டன்! :))

    பதிலளிநீக்கு
  12. கு கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி! ட்விட்டரில் எங்களைப் பின் தொடரும் முக்கால் சதம் நண்பர்களுக்கும் engal6 இன் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. எங்களை நாங்களே வாழ்த்தணுமா? தற்புகழ்ச்சி எனக்குப் பிடிக்காது!! ;-D

    பதிலளிநீக்கு
  14. சரி..
    இப்ப நான் என்ன சொல்லணும் ?

    பதிலளிநீக்கு
  15. ஹுஸைனம்மா - எங்களை வாழ்த்தச் சொல்லவில்லை - எங்கள் பதிவுகளில் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன? எந்த வகைப் பதிவுகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை சொன்னீர்கள் என்றால், எதிர்காலத்திற்குப் பயன்படும் என்றுதான் கேட்டுக் கொண்டோம். ஆனாலும் நீங்க வாழ்த்தியிருப்பது தெரிகிறது! நன்றி!!

    பதிலளிநீக்கு
  16. மாதவன் - மேலே சொல்லி இருக்கிறோம், நீங்க என்ன சொல்லணும் என்பதை! மறக்காம சொல்லிடுங்க! நன்றி.

    பதிலளிநீக்கு
  17. எங்கள் பிளாக் கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வித்தியாசமான எளிய அணுகுமுறை ஒவ்வோரு பதிவிலும் மிளிர்கிறது... பலப்பல நூற்றாண்டுகள் கொண்டாட வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  18. உங்கள் பெயரைச் சொல்லும்போதே "எங்கள்" என்று வருவதால் "உங்களுக்கு" பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லும்போது அது "எங்களுக்கு" அமைந்துவிடுகிறது. உங்களுக்கு இதற்கு மேல் இதுபோல் எழுதினால் எங்களுக்கு விசுத்தனமாக இருக்கிறது என்பார்கள். 'உங்களு'க்கு 'எங்கள்' பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;-))

    பதிலளிநீக்கு
  19. Congratulations Engal blog. You are almost like a family member.
    So Happy Birthday solvathi rombave makizhcchi.
    likes thaan Niraiya. Dislikes illave illai.:)

    பதிலளிநீக்கு
  20. ஓ! பிறந்தநாளா? வாழ்த்துக்கள்.

    (நீங்களும் விசயம் இல்லாம rvs மாதிரி சுய.. rvsனா சொன்னேன்? சே சே.. இந்தக் keyboardல ஏதோ கோளாறுனு அப்பவே நெனச்சேன்...)

    இன்னும் ஆயிரம் பதிவுகள் காண்க. (அப்படியே கேயைத் தேடிக் கண்டுபிடிச்சு கொணாந்துறுங்க)

    பதிலளிநீக்கு
  21. நன்றி பத்மநாபன். வித்தியாசமான பாராட்டுக்கு!

    நன்றி வானம்பாடிகள்.

    ஆர்? வி(சு) எஸ்ஸா! நன்றி விசுமத்தனமான வாழ்த்திற்கு!

    வல்லிசிம்ஹன் - பாராட்டுகளுக்கு நன்றி.

    அப்பாதுரை யாரையோ கால் வாருகிறீர்கள் என்று தெரிகிறது. எங்களை இருக்காது என்றும் தோன்றுகிறது. ஆர் வி எஸ் ரியாக்ட் செய்கிறாரா என்று பார்க்கிறோம்.
    'கே'யைத்தேடி பதிவாசிரியர் உங்களுடைய கால் படம் அனுப்பச் சொல்லி கேட்கிறார். கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டுமாம்! 'கே'யைத் தேடி - தொடரை நீங்க மட்டும்தான் நினைவு வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். மற்றவர்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. குறைந்தது ஆறேழு வாசகர்கள் கேட்டால்தான் 'கே யைத்தேடி' தொடரும் என்கிறார் அந்தப் பதிவாசிரியர்.

    பதிலளிநீக்கு
  22. மிக்க மகிழ்ச்சி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்! உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு எது பிடிக்கும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த எங்கள் விருப்பத்தையும் அப்பப்போ நிறைவேற்றுங்கள். :)

    பதிலளிநீக்கு
  23. 'கேயை' கண்டுபிடியுங்கள்! அவரும் எவ்வளவு நாள்தான் ஒளிஞ்சிண்டு இருப்பார், பாவம். சட்டுபுட்டுன்னு கண்டுபிடியுங்க.

    பதிலளிநீக்கு
  24. நன்றி மீனாக்ஷி - உங்களைப் போன்ற நிரந்தர ரசிகர்கள் எங்களுக்கு எப்பொழுதும் சந்தோஷம் அளிக்கின்ற விஷயம்.

    கே யைத் தேடி பதிவாசிரியர் முகம் இன்னும் கொஞ்சம் மலர்ந்துவிட்டது. இன்னும் யாராவது ஒருவர் கேட்டுவிட்டால் போதும் நாங்கள் மீதியுள்ள நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து, ஆறேழு ஆட்கள் கேட்டாச்சு - பதிவைத் தொடரு - என்று சொல்லிவிடுவோம்!

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்

    அனைவருக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  26. நன்றி சாய்ராம்!

    பதிலளிநீக்கு
  27. எங்கள் பிளாக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!ஆர்.டி பர்மனின் பிறந்த நாளை நினைவு படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. நம்ம ப்ளாக்கிற்கு
    எங்களுடைய வாழ்த்துக்கள்
    கலக்குங்க .....
    அசத்துறிங்க
    அமர்க்களப்படுத்துரிங்க

    பதிலளிநீக்கு
  29. இரண்டாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் அன்பான சில ஆலோசனைகள்.

    இவ்வளவு வாசகர்களைக் கொண்டிருக்கும் நீங்கள்
    'இனி செய்ய வேண்டுவன என்ன?' என்பதான சில அடுத்த கட்ட முடிவுகளை ஆக்க பூர்வமாக எடுக்கலாம்.

    இதுவரை செய்தவற்றைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து ஏதாவது புதுமாதிரியாக செய்யலாமா என்று யோசியுங்கள்.

    அப்படிப்பட்ட முடிவுகள் 'எங்கள் ப்ளாக்'கின் மேன்மைக்கு நிச்சயம் உதவும்.

    பதிலளிநீக்கு
  30. மனம் நிறைந்த வாழ்த்துகள் எங்கள் புளொக் ஆசிரியர்களுக்கு !

    பதிலளிநீக்கு
  31. எங்கள் ப்ளாகிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி, மாரிமுத்து, ஏ ஆர் ராஜகோபாலன், ஜீவி, ஹேமா மற்றும் கீதா சந்தானம்.

    பதிலளிநீக்கு
  33. வாழ்த்துக்கள் ஸ்ரீராம் மற்றும் நண்பர்களே! ஒரு செய்தி நீங்கள் துவக்கிய தினத்திற்கு மறுநாள் வானவில் மனிதன் துவங்கப் பெற்றது. எங்களுக்கு நாளைக்கு ஹேப்பி பர்த்டே !

    பதிலளிநீக்கு
  34. நன்றி மோகன்ஜி, உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. வாழ்த்துக்கள் எங்கள் blog!

    புத்தகம், வாழ்வனுபவம் சார்ந்த பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!