புதன், 16 நவம்பர், 2011

உள் பெட்டியிலிருந்து 11 11

                   
புத்தி(யி)சம்
   
எது விஷம்?

வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம்...!  

----------------------------------------------------
ஒழுக்கமான பொண்ணு...

கவனமின்றி நெரிசல் மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையைக் கடந்தாள் ஒரு எல் கே ஜி சிறுமி.. 

டிராஃபிக் போலீஸ், " நான் கை காமிச்சும் விசிலடிச்சியும் ஏன் பாப்பா கண்டுக்கவே இல்லை?"  

"நான் அந்த மாதிரிப் பொண்ணு இல்லை.."   
           
---------------------------------------------
இஸ் இட்?

உன் இளவயது உழைப்பின் ஒவ்வொரு வியர்வைத் துளியும் உன் பத்து துளி முதுமைக் கண்ணீரைத் தடுக்கும்.
   
-------------------------------------------
வார்த்தைகள்...

மனதுக்கு நெருங்கியவர்களிடமிருந்து விஷ வார்த்தைகள்.."யார் நீ?"

பகையாய் நினைப்பவர்களிடமிருந்து எதிர்பாரா இன்பச் சாரல்..."எப்படி இருக்கீங்க..?"
               
------------------------------------------------
மாத்தி யோசி...
              
பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."
           
மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"
             
அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.
                 
மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது..."
                       
----------------------------------------------------  
அன்னை தெரசாவின் கேள்வி...

"எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?"

-------------------------------------------------     
யார் சொன்னது..
                 
இந்தியா பெண்களை மதிப்பதில்லை என்று யார் சொன்னது? 
                    
தெற்கில் அம்மாவும், அக்கா (தீதி) மேற்கு வங்கத்திலும், சகோதரி (பெஹன்ஜி) யு பியிலும், அத்தை தலைநகரிலும், மொத்தமாக சர்வசக்தியாக மேடம் இந்தியாவையும், ஒவ்வொரு வீட்டிலும் மனைவியும் ஆட்சி செய்யும்போது...?!!
                    
-------------------------------------------  
என்னைச் சுற்றி...
                    
எப்போதும் என்னைப் பற்றி தவறாக நான் எதுவும் பேசுவதில்லை. நான் சுத்தம் யோக்கியன் என்பதாலல்ல ... அதைப் பற்றிப் பேச என்னைச் சுற்றி போதுமான ஆட்கள் இருப்பதால்...!
                  
----------------------------------------
ஒப்புமை
              
பாகிஸ்தானில் யாருக்குமே பாதுகாப்பில்லை... ஒசாமா பின் லேடன் உட்பட...
                 
இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்... அஜ்மல் கசாப் உட்பட...
                      
----------------------------------------------
அன்பில் மலர்ந்த நல் ரோஜா...

தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர் "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"

"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."

"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"

"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."
   
--------------------------------------------------
மொழிகளிலே .. 


பல மொழிகள் தெரிந்தவராம் வினோபாஜி. ஒருமுறை நிருபர்கள் கூட்டத்த்தில் அவர், நிருபர்களை நோக்கி, 'எந்த மொழியில் நேர்காணல் நடத்த விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். நிருபர்கள், 'நீங்கள் எந்த மொழியில் சொல்கிறீர்களோ அந்த மொழியில்' என்றார்கள். வினோபாஜி மௌன மொழியில் என்று கூறி விட்டு ரூமுக்குள் சென்று விட்டாராம்!

-------------------------------------------------
கற்க, கற்க !


குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:  

1) எப்போதும் பிசியாக இருப்பது

2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
  
-----------------------------------------------

புதிர்

செய்பவன் விரும்புவதில்லை. வாங்குபவன் உபயோகிப்பதில்லை. உபயோகிப்பவன் அதை பார்ப்பதில்லை. என்ன அது?

-----------------------------------------------   
                      

17 கருத்துகள்:

  1. குரோம்பேட்டைக் குறும்பன்16 நவம்பர், 2011 அன்று 4:31 PM

    பெண்களை மதிக்கும் இந்தியா பற்றிய பகுதியில், ஐஸ்வர்யா பச்சனுக்குப் பிறந்த பெண் குழந்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்16 நவம்பர், 2011 அன்று 4:46 PM

    கு கு - இந்த ஜோக் உங்களுக்காக:

    பிரசவ அறையிலிருந்து ஒவ்வொரு நர்சாக வெளியே வருகிறார்கள். தான்தான் முதலில் செய்தி சொல்லவேண்டும் என்கிற துடிப்பில், பொறுமை இன்றி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அமிதாபிடம் சென்று,
    நர்ஸ் 1 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 2 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 3 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 4 : சார் கு....
    அமிதாப் பொறுமை இழந்தவராய் .."அதெல்லாம் சரி. நான் தாத்தாவா அல்லது பாட்டியா? அதைச் சொல்லுங்க முதலில்!"

    பதிலளிநீக்கு
  3. // செய்பவன் விரும்புவதில்லை. வாங்குபவன் உபயோகிப்பதில்லை. உபயோகிப்பவன் அதை பார்ப்பதில்லை. என்ன அது? //

    சவப்பெட்டி

    பதிலளிநீக்கு
  4. // எங்கள் ப்ளாக் said...

    கு கு - இந்த ஜோக் உங்களுக்காக:

    பிரசவ அறையிலிருந்து ஒவ்வொரு நர்சாக வெளியே வருகிறார்கள். தான்தான் முதலில் செய்தி சொல்லவேண்டும் என்கிற துடிப்பில், பொறுமை இன்றி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அமிதாபிடம் சென்று,
    நர்ஸ் 1 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 2 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 3 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 4 : சார் கு....
    அமிதாப் பொறுமை இழந்தவராய் .."அதெல்லாம் சரி. நான் தாத்தாவா அல்லது பாட்டியா? அதைச் சொல்லுங்க முதலில்!" //

    நர்ஸ் 1 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 2 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 3 : சார் குழந்தை பிறந்துடுச்சு.
    நர்ஸ் 4 : சார் கு....

    அமிதாப் பெருமை பெற்றவராய் "அப்ப நா, நாலு தாத்தாவா ?"

    பதிலளிநீக்கு
  5. அன்னை தெரசாவின் கேள்வியின் - எத்தனை நிஜங்கள் புதைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  6. அத்தனையும் அருமை . அதிலும் வார்த்தைகள் , ஒப்புமை. அன்னை தெரசா
    -- இவை மிகவும் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  7. வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம்...!

    அமுதான மொழி அல்லவா!
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. ஆரம்பம் முதல் எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
    உள்பெட்டியிலிருந்தாலும் எப்போதுமே புதியது !

    பதிலளிநீக்கு
  9. உள் பெட்டியிலிருந்து எடுத்துக் காண்பித்த எல்லாமே நன்று. அன்னை தெரசாவின் வார்த்தைகள் அற்புதம்.

    சர்வ சக்தி பற்றிய பகிர்வைச் சுற்றி ஒரே புகை மயம்...உங்கள் காதுகளிலிருந்து குபுகுபுவென வெளியேறியதுதான்:))!

    பதிலளிநீக்கு
  10. உள் பெட்டி, உள்ளபடி சொல்லப்போனால், உள்ளத்தைத் தொடும் விஷயங்களும் தருகிறது, கள்ளமில்லாமல் சிரிக்கவும் செய்கிறது, சிந்திக்கத்தக்கனவையும் அள்ளித் தருகிறது. வெரிகுட். கீப்பிட்டப். உள் பெட்டி அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரமாகத் திகழட்டும்...நாகை வை. ராமஸ்வாமி

    பதிலளிநீக்கு
  11. செய்பவன் (தனக்குப் பயன்படுத்தப்படுவதை) விரும்புவதில்லை. வாங்குபவன் (தனக்காக அதை) உபயோகிப்பதில்லை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
    (பின்பாதிவிடை இடுகையின் தலைப்பில்)

    பதிலளிநீக்கு
  12. வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம் --நல்ல அறிவிரை. இதை கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் ஆரோக்கியம், மகிழ்ச்சி இரண்டும் கியாரண்டியாய் கிடைக்கும்.
    குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய விஷயம்: சின்ன விஷயத்துக்குக்கூட அதிகம் சந்தோஷம் கொள்வது; வருத்தத்தை (கோவம்) எளிதில் மறப்பது.

    பதிலளிநீக்கு
  13. என் இன்பாக்ஸிலும் இவ்வளவு முத்துகள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.@ மாதவன் எப்படி கண்டுபிடித்தீர்கள்.!!!

    பதிலளிநீக்கு
  14. ஒப்புமைக்கு ஒப்புமையாக இன்னொன்றைச் சொல்ல முடியாத அளவுக்கு அது தனித்து ஜொலிக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!