கோவை அருகே கிணத்துக்கடவில் இயங்கும் 'சரணாலயம்' என்ற அமைப்பை நடத்தும் வனிதா
கல்லூரிப் பேராசிரியையாக இருந்தவர். குழந்தையிலிருந்து முதியவர் வரை
எய்ட்சால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். அரசே கூட
நிதியுதவி செய்து நோயாளிகளையும் இங்கு செல்லச் சொல்லிப்
பரிந்துரைக்கிரதாம். சரணாலயத்துக்குள்ளேயே கிராமச் சூழ்நிலையில் ஒரு
வீட்டில் வசிக்கிறாராம் வனிதா. தீபாவளி போன்ற முக்கிய நாட்களில் நல் இதயம்
கொண்டோரின் நன்கொடைகள் பெரிய அளவில் உதவுகின்றனவாம். நல்மனம் படைத்த
மக்களும் அந்நாட்களில் வந்து குழந்தைகளைப் பார்த்து இருந்து திரும்புகின்றனராம். (தினமலர் ஞாயிறு)
====================
நகர்ப்புறக் கழிவிலிருந்து 1700 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது 2.3 சதவிகிதம்தான் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறதாம். சென்னைக் கருத்தரங்கில் தகவல்.(தினமணி-திங்கள்)
======================
6,000 லிட்டர் 400 ரூபாய் என்று நல்ல குடிதண்ணீரை விற்கிறது சென்னைக் குடிநீர் வாரியம். ஃபோன் செய்தால் போதும் வீடுதேடி வந்து விடும் என்று கூறி பகுதிவாரியாக எந்தெந்த ஏரியாவுக்கு எந்தெந்த எண்களில் தொடர்புகொள்ள வேண்டும் என்று தொலைபேசி எண்களும் தந்திருக்கிறது குடிநீர்வாரியம். தரமற்ற குடிநீரை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.(தினமலர்)

மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சந்தோஷ் என்ற வாலிபர்
வெறும் 4 கிலோ மட்டுமே எடை கொண்ட பைக் ஒன்றை வடிவமைத்து அதில் ஒரு ரவுன்ட்
வந்தும் அசத்தியிருக்கிறார். 'மூஷிகா' என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்த
பைக் 12 இன்ச் அகலமும், 18 இன்ச் உயரமும் கொண்டதாம். மணிக்கு 12 முதல் 15
கிமீ வரை செல்லக் கூடியது. 4 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 70 கிலோ எடை
கொண்டவர் அமர்ந்து ஒட்ட முடியுமாம். யூடியூபில் இதன் வீடியோ இருக்கிறதாம்.
லிம்கா சாதனைப் புத்தகத்திலும், இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்
புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறதாம். (முகப் புத்தகம்)
==========================
கோவை பீளமேடு பகுதியிலிருந்து ஒருவருடத்துக்கு முன்னர் காணாமல் போன பதினாறு வயது ஆதித்யா என்னும் சிறுவன் Facebook உதவியுடன் மீட்கப் பட்டிருக்கிறார். தந்தை உமாபதி கட்டிடப் பொறியாளர். தாய் செந்தாமரை சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். ஒருவருடத்துக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்று விட்ட அந்தப் பையன் முகப் புத்தகத்தில் தன்னுடைய நண்பர்களோடு தொடர்பில் இருந்தது அவன் நண்பர்களை விசாரித்தபோது தெரியவர, போலீசார் முகப்புத்தகத்தின் அமெரிக்க தலைமை அலுவலகத்திலும், அயர்லாந்து துணை அலுவலகத்திலும் தொடர்புகொண்டு உதவி பெற்று, ஆதித்யாவின் மும்பை இருப்பிடம் தெரிந்து அங்கு சென்று பேசி அழைத்து வந்துள்ளனர். (தினமலர், தினமணி...)
======================
அரசு விரைவுப் பேருந்துகளில் முப்பது நாட்களுக்குமுன் முன்பதிவு செய்யலாம் என்றிருந்த நிலையை மாற்றி 60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஏறுமிடமும் தங்கள் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொள்ளலாம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. தீபாவளிக்கு முன்பதிவு செய்பவர்கள் நாளை - செப்டம்பர் 9 ம் தேதி - முன்பதிவு செய்யலாம். (தினமணி)
====================
விரைவு ரயில்கள், வண்டி எண் 16854 திருச்சி-சென்னை எழும்பூர், செப்டம்பர் ஐந்து முதல் அக்டோபர் ஆறுவரை,
ரயில் எண் 16853 சென்னை எழும்பூர்-திருச்சி ரயிலில் செப்டம்பர் எட்டு முதல் அக்டோபர் ஏழு வரை,
ரயில் எண் 16107 சென்னை எழும்பூர்-மங்களூர் ரயிலில் செப்டம்பர் ஐந்து முதல் அக்டோபர் நான்கு வரையிலும்,
ரயில் எண் 16108 மங்களூர்-சென்னை ரயிலில் செப்டம்பர் ஏழு முதல் அக்டோபர் ஆறு வரையிலும்
முன்பதிவு செய்த பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்கப் படுகின்றன. (தினமணி)
=======================
சென்னையில் ராயப்பேட்டை ஐயாப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த நூர்ஜஹான் என்ற பெண்மணி ஒரு பையில் வைத்திருந்த, 5.50 லட்சம் மதிப்புள்ள, 25 பவுன் நகையைத் தனது ஆட்டோவிலேயே விட்டு விட்டுச் சென்றதை அறிந்த ர. செந்தில் என்ற முப்பத்தி நாலு வயது ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பையை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.(தினமணி)
==================
1937 இல் தொடங்கப் பட்ட பஞ்சாப் அசோசியேஷன் ஏழைகளுக்காகக் குறைந்த கட்டணத்தில் பள்ளிகள் தொடங்க திட்டமிட்டுள்ளது. சங்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் சங்கச் செயலர் ரமேஷ் லம்பா இதை அறிவித்து விட்டு, ஏற்கெனவே நடைபெற்றுவரும் ஐந்து மெட்ரிக் பள்ளிகள், ஆறு சுகாதார மையங்கள், ஒரு கல்லூரி விடுதி, ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு டெய்லரிங், நோட்புக் தயாரித்தல், போன்ற தொழிற்பயிற்சி வழங்கப் படுவது போன்ற சேவைகளையும் நினைவுகூர்ந்து பேசினார்.
====================
மதுரையில் நடந்த, தென்மண்டல அளவிலான யோகா போட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்கள் 9 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பதஞ்சலி யோகா, மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தரணீதரன், அபகீதா, கார்த்திகா, கார்த்திகேஷ், காவியா, நிஷா லட்சுமி, விஜயசாரதி, கீர்த்திகா, ஹரிஹரன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றவர்கள். (தினமலர்)
=====================
இந்தியாவின் 100 வது ராக்கெட் நாளைக் காலை 9.51 க்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப் படுகிறது. 1975, ஏப்ரல் 19 முதல் விண்வெளிப் பயணம். 62 செயற்கைக்கோள்கள், 37 (பிறநாடுகளின் செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும்) ராக்கெட்டுகள் இதுவரைச் சாதனை. (தொலைகாட்சி, மற்றும் செய்தித்தாள்கள்)
===================
இன்றைய T20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கேன்சரை எதிர்த்துப் போராடிய 'தன்னம்பிக்கை யுவராஜ்' களமிறங்குகிறார்.
===================
தர்மபுரி: மருத்துவ துறையில், சேவை மனப்பான்மை குறைந்து வரும் நிலையில், தர்மபுரியில், தனியார் கண் மருத்துவர், ஏழைகளுக்கு, இலவச கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் கண் மருத்துவர் பாரிக்குமார், 45. திருப்பத்தூரில் பள்ளி படிப்பையும், செங்கல்பட்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பும், சென்னையில் கண் மருத்துவத்துக்கான உயர் படிப்பையும் படித்துள்ளார். படிக்கும் போதே சேவை மனப்பான்மை கொண்ட பாரிக்குமார், 2000ம் ஆண்டு கண் மருத்துவர்கள் குறைவாக இருந்த தர்மபுரியில், கண் மருத்துவமனை தொடங்கி ஏழைகளுக்கு தொடர்ந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறார். தர்மபுரி கண்தான மையத்தினருடன் இணைந்து இறந்தவர்களின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் செய்து, கண் இல்லாதவர்களுக்கு கண் ஒளி கொடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது வரை, இறந்த, 240 பேரின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் மூலம் தானமாக பெற்று, பெங்களூரு மற்றும் கோவை கண் மருத்துவ மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், கண் அலர்ஜி மற்றும் பிறவி குறைபாடு, கிருமிகளால் கண் பார்வை பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, கண் பரிசோதனை, அறுவை சிக்சைகளை, 12 ஆண்டாக இலவசமாக செய்து வருகிறார். இவர் இது வரை, 15 ஆயிரம் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில், 7,000 சிகிச்சை இலவசமாக செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட, 300 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்திருப்பது குறிப்பிடதக்கது. இவரது மருத்துவமனையில், 2008ம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு மட்டும் முழு நேர இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
மனித நேயத்துடன் மருத்துவ பணிக்கு பெருமை சேர்க்கும் கண் மருத்துவர் பாரிக்குமார், கண் தான தினத்தில், கண் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என வலியுறுத்தி கூறியதாவது: மனிதனுக்கு, கண் மிகவும் முக்கியமான உறுப்பு. இதை மனிதர்கள் தங்கள் இருக்கும் வரை பாதுகாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை செய்து கண்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மதுவினால் கண்பார்வை பாதிக்கும் நிலையுள்ளதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு, கண்கள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் கண்தானம் வழங்க முன் வர வேண்டும். இதன் மூலம் நாம் மண்ணை விட்டு மறைந்தாலும், நம் கண்கள் பார்வையற்ற பலருக்கு ஒளியாய் அமையும், மண்ணில் தொடர்ந்து வாழும். இவ்வாறு அவர் கூறினார்.
=======================
ஜெர்மனியின் எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிக் குண்டு வீச்சிலும் தப்பிய, லட்சக் கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண்டிருக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று.
==============================
மரபணு நோயால் பதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு நடிகர் கார்த்தி - நடிகர் சிவகுமாரின் இளைய மகன் - 17.5 லட்சம்
ரூபாய் வழங்கினார்.
=============================

சென்னைப் பல்கலைக் கழகக் கண்டுபிடிப்பான ஆளில்லா விமானம் 'நட்ஷா' முதல் ஆய்வைத் தொடங்கியது. இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க 25 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. 1.8 கிலோ எடையுள்ள இந்த விமானம் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் பறந்து படங்களை எடுத்து அனுப்பும் திறனுள்ளது. மனிதனால் செய்யப் படும் ஆய்வுகளுக்குப் பலமணிநேரம் செலவு செய்ய வேண்டிய நிலையில் ஆளில்லா விமானத்தில் உள்ள கேமிராவில் பதிவாகும் காட்சிகளில் எத்தனை கற்கள் உள்ளன, அதன் பரப்பளவு போன்றவற்றைத் துல்லியமாக அறிய முடியும் என்கின்றனர். மேலும் இதில் சில நுண்ணிய ஜி பி எஸ் கருவிகளைப் பொருத்தி விமானத்தைப் பறக்கவிட்டு தரைக்கு அடியில் என்னென்ன உள்ளன என்பதையும் கண்டறிய முடியும் என்கின்றனர் வல்லுனர்கள். (தினமணி)
==============
சென்னை குளிர்ந்து.... மழையில் குளித்தது...! நேற்றிரவு முதல் விடா மழை!
=================
கொச்சி: சிவகாசி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச
ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, முதலிப்பட்டியில், தனியாருக்கு
சொந்தமான, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 38 பேர்
பலியாகினர்; 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், பல்வேறு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி
விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு,
பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர்
மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ்' என்ற நிறுவனத்தின்
சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து' என்ற, மருத்துவ சிகிச்சை
இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.
சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், நேற்று முன்தினம் இரவு, சிவகாசி
சென்றடைந்தன. இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர்
மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி
கூறுகையில், "நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை.
இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த
வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்
என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்,'' என்றார்.
======================
======================
அறியத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவிடா மழை போல் மக்கள் மனம் குளிர பாஸிடிவ் விஷயங்கள் தொடர்ந்து நிகழட்டும்.
இந்த வாரம் பாசிடிவ் ஜாஸ்தி இருக்கு நல்லது
பதிலளிநீக்குநேர்மறையான செய்திகள் நம்பிக்கையைத் தருகின்றன..
பதிலளிநீக்குதகவல்கள் - நன்றி
பதிலளிநீக்குபஸிடிவ் செய்திகளை படிக்க படிக்க பரவசமாக உள்ளது.தொடருங்கள்.சமூகத்தில் இதே பொல்ல் நிறைய நிகழ வாழ்த்துகக்ளுடன்...
பதிலளிநீக்குஅருமை. இதை விடாது தொடருங்கள். சில விஷயங்கள் மிக நெகிழ்த்துவதாய் உள்ளது
பதிலளிநீக்குதொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்....
பதிலளிநீக்குமுதல் செய்தி - மிக்க மகிழ்ச்சி. அடுத்த முறை கோவை சென்றால் சென்று வரவேண்டும் என குறித்துக் கொண்டேன்...
Facebook உதவியுடன் மீட்கப் பட்ட சிறுவன்... கழிவு - மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது... 60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு... நடிகர் கார்த்தி 17.5 லட்சம் வழங்கியது... என பல செய்திகள் மகிழ்ச்சியை தருகிறது... நன்றி...
பதிலளிநீக்குபாஸிட்டிவ் அனைத்தும் அருமை. தொடருங்கள் ஐயா.
பதிலளிநீக்குசிறப்பான தொகுப்பு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
சிவகுமார் பழம்பெரும் நடிகரா!?
பதிலளிநீக்குசரி பணம் பெறும் நடிகர் என்றுதான் வைத்துக் கொள்வோமே !
பதிலளிநீக்கு// இன்றைய T20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கேன்சரை எதிர்த்துப் போராடிய 'தன்னம்பிக்கை யுவராஜ்' களமிறங்குகிறார். //
பதிலளிநீக்குபோராடி வெற்றி கண்ட
அனைத்தும் அருமை!
பதிலளிநீக்கு'சரணாலயம்' நடத்தும் வனிதா, கண் மருத்துவர் பாரிக்குமார் மனதை நெகிழச்செய்கிறார்கள்.
இளைஞர்கள் அசத்துகிறார்கள்! செந்திலின் நேர்மையும் சந்தோஷின் திறமையும் மனதை நிறைவடையச் செய்கிறது!!!
நான் வாசிச்ச செய்திகளில் எத்தனை இதில் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டேன். எனக்கும் எத்தனை நல்ல விஷயம் தெரிஞ்சிருக்குன்னு பார்க்கணும்ல!! :-)))
பதிலளிநீக்குஇம்முறை 18-ல் ஆறு மட்டுமே.
“நட்ஷா”வா, ”தக்ஷா”வா? சரி.. சரி.. பெயரில் என்ன இருக்கு.... :-))))
அத்த்னை செய்திகளும் அருமை. இது போலச் ச்செய்திகள் பெருகட்டும்.
பதிலளிநீக்குநம் எண்ணங்களும் தெளிவடையும்.