சனி, 15 செப்டம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 9/9/12 To 15/9/12



(முகப் புத்தகத்திலிருந்து)
                  
ஈரோட்டைச் சேர்ந்த ஆனைக்கல்பாளயத்தைச் சேர்ந்த கண்பார்வை இல்லாத முதியவர் பழனிச்சாமி 50 ஆண்டுகளாக மாடு மேய்த்து, நம்பிக்கையாகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.    
================
                      
நெருக்கடி மிகுந்த உ.பி மாநிலம் வாரணாசி பகுதியில் சிறிய அறை கொண்ட வீட்டில் வசித்தவர் கோவிந்த் ஜெயிஸ்வால். இவரின் அப்பா ஒரு ரிக்ஷா  ஓட்டுனர். வீட்டைச் சுற்றி தொழிற்சாலைகளின் புகை, பதினாலு மணி நேர மின்வெட்டு எல்லாவற்றையும் வென்று ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.(தினமலர்)           
===========
                   
சமீபத்திய கலவர பூமி அசாம் மாநிலத்தில் அங்குள்ள கோல்பரா மாவட்டத்தில் மட்டும் அமைதி மற்றும் பாசிட்டிவ் நியூஸ்! அந்த மாவட்டத்தில் உள்ள ஜெய்பும் கிராமத்தில் உள்ள காமாக்யா இந்துக் கோவிலை எந்த வித சேதாரமும் இல்லாமல் பாதுகாத்தது வருவது அங்கு பெருமளவில் உள்ள முஸ்லிம் மக்கள். அந்தக் கோவிலின் புரோகிதர் முகுந்த் பர்மன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் உள்ள ஒரே இந்துக் குடும்பம் அவர்கள்தானாம்.              
==================
                
தவிர்க்க முடியாமல் ஒரு வெளிநாட்டு நியூஸ்: தற்கொலை செய்ய முயன்று ரயில் தண்டவாளத்தில் குடித்து விட்டுப் போய்ப் படுத்துக் கொண்ட எஜமானனை அவன் வளர்த்த நாய் தூரத்தில் ரயில் வருவதைக் கவனித்து விட்டு, கவ்வி இழுத்து ஓரமாகத் தள்ளிக் காப்பாற்றி, தான் நகரமுடியாமல் ரயிலால் மோதப் பட்டு,  உயிரிழந்தது. (தினமலர்)   
=====================
135 மணி நேரம் தொடர்ந்து தமிழ்ப்பாடல்களைப் பாடி சாதனை செய்துள்ளார் திரைத்துறையில் ஆர்வமுடைய, சென்னையை அடுத்த செஞ்சியில் விஸ்வம் கம்யூநிகேஷனில் டிப்ளமா படித்த திரு பி ரஹிமான். உலக அளவில் அதிக நேரம் தொடர்ந்து பாடியுள்ளதால் அசிசிஸ்ட், யுனிக் மற்றும் லிம்கா சாதனைகள் அவரை உடனடியாக அங்கீகரித்துள்ளன.    
==========================
                 
ஜனவரி முதல் சென்னை - பெங்களுரு டபிள் டெக்கர் ரயில். இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ரயில் கொல்கத்தா மாநிலம் ஹௌரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் இடையே கடந்த 2011 ல் தொடங்கப் பட்டது. சதாப்தி ரயிலை விட பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகமாக இருக்கும். சதாப்தியில் 510 ரூபாய் கட்டணம், பிருந்தாவன் சேர் காரில் 386 ரூபாய்க் கட்டணம். இதில் 370 ரூபாய்க் கட்டணமாக தற்சமயத்துக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம்.    
=====================
                    
சென்ற வாரம் நம் நாட்டுக்கு வந்த Boeing 787 விமானம் சென்னை, டெல்லி, மற்றும் சென்னை பெங்களுரு வழி தடங்களில் பறக்கப் போகிறது !    
=================== 


பிச்சைக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் உமா: நானும், என் கணவரும், 10 வயதிலிருந்தே நண்பர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம், சின்ன வயதில் இருந்தே எங்கள் இருவருக்கும் உண்டு. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும் அது தொடர, தொண்டு அமைப்பை துவங்கி, அதன் மூலம் உதவி செய்யலாமே என, நண்பர்கள் கூறினர். அப்படி, 13 ஆண்டுகளுக்கு முன் உருவானது தான், "சுயம்' தொண்டு அமைப்பு. ஒரு கட்டத்தில் வாழ்க்கையிலும், இணைந்து விட்டோம்.கல்வி மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை, ஏழை மக்களுக்கு ஏற்படுத்துவது தான் முதல் கடமையாக எடுத்து செயல்பட்டோம். நூற்றுக்கணக்கான பேருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் பெற வழிவகை செய்தோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி கொடுக்கிறோம். சிந்தாதரிப்பேட்டை அரசுப் பள்ளியில், 57 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், எங்கள் பயிற்சிக்குப் பின், 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.   
                         
முத்துராம்: கீழ்ப்பாக்கம், பிளாட்பார பகுதியில் உள்ள, பிச்சைக்கார குடும்பங்களின் வாழ்க்கையை, "நடைபாதை பூக்கள்' எனும் பெயரில், குறும்படமாக எடுத்தோம். கல்வி கிடைக்காததால், குழந்தைகள் பிச்சை எடுக்கும் அவலத்தை சுட்டிக் காட்டினோம். பலரிடம் இருந்து, நிதி உதவி கிடைத்தது. அதைக் கொண்டு, 20 குழந்தைகளை படிக்க வைத்தோம். ஆனால், தினமும் பள்ளி முடிந்ததும், அவர்கள் பிச்சை எடுக்கத்தான், செய்தனர். உண்டு, உறைவிடப் பள்ளியைத் துவங்கினால்தான், முழுமையாக மாற்ற முடியும் என தீர்மானித்து, பெரும் போராட்டத்திற்குப் பின், 2003ம் ஆண்டு, 30 குழந்தைகளுடன், "சிறகு மாண்டிசோரி' பள்ளி ஆரம்பமானது.தற்போது, 20 ஆசிரியர்களுடன், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிச்சைக்காரர்களின் குழந்தைகள். இனி, பிச்சைக்காரர்களின் குழந்தைகளும், டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆவர்.            
                                   

13 கருத்துகள்:

  1. அத்தனையும் பாசிட்டிவ்...

    டபுள் டெக்கர் - எங்க ஊர்ல இருந்து ஜெய்ப்பூர் போகும் டபுள் டெக்கர் சமீபத்தில் துவங்கப்பட்டது...

    உமா- முத்துராம் - நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

    தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு
  2. முதல் செய்தியும் (படம்), முடிவு செய்தியும் மிகவும் சிறப்பானவை... போற்றப்பட வேண்டியவர்கள்...

    பதிலளிநீக்கு
  3. ரயிலிலிருந்து எஜமானனைக் காப்பாற்ற உயிர் நீத்த நாயும். உமா-முத்துராம் தம்பதியினர் பற்றிப் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடரட்டும் நல்ல விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
  4. முதல் செய்தி நான் எடுத்து வைத்திருந்தேன் நீங்கள் முந்தி கொண்டீர்கள் முடிந்தால் அவரிடம் போனில் பேசி விட்டு அந்த தகவல்களை எழுத முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வுகள்...
    எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே தெரிந்த செய்திகள் என்றாலும் தொகுப்பு அருமை. நாய் குறித்த செய்தியும், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் குறித்த செய்தியும் மனதைத் தொட்டது. உங்க பதிவெல்லாம் அப்டேட்டே ஆகலை. நானாக வந்தேன். :)))))

    பதிலளிநீக்கு
  7. மிகவும் பாராட்டப்பட வேண்டிய செய்திகள்! சிலது அறிந்தது! பல அறியாதவை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    பதிலளிநீக்கு
  8. வெளிநாட்டு செய்தி வியப்பும் வருத்தமும். மற்ற அனைத்தும் பாராட்டுக்குரியவை. அதிலும் உமா,முத்துராம் ஆகியோரின் சேவை போற்றுதலுக்குரியதாக.

    பதிலளிநீக்கு
  9. அத்தனையும் நல்ல செய்திகள். முதலும் கடைசியும் மிகவும் நல்ல செய்திகள்.

    பதிலளிநீக்கு
  10. உமா,முத்துராம் அவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும்.நாயார் எந்த நாட்டிலும் நன்றியுள்ளவராகவே வாழ்கிறார்.அத்தனை செய்திகளும் அலட்சியப்படுத்தமுடியாதைவைகளே !

    பதிலளிநீக்கு
  11. //சதாப்தியில் 510 ரூபாய் கட்டணம், பிருந்தாவன் சேர் காரில் 386 ரூபாய்க் கட்டணம். இதில் 370 ரூபாய்க் கட்டணமாக தற்சமயத்துக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம்//

    நான் இருக்கும் எடிசன், நியூ ஜெர்சியில் இருந்து நியூயார்க் சிட்டி வெறும் நாற்பது மைல் தான்.

    ஆனால், ஒரு முறை சென்று வர 24.5 US $.... இன்றைய கணக்கு படி 1,347/- இந்திய ரூபாய் !!

    இதை ஒப்பிடும் போது, நம் நாடு தேவலை. இருந்தும்...அமெரிக்காவில் நிறைய சாமான்கள் கம்மியாக இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!