புதன், 5 செப்டம்பர், 2012

ஆஜர்

          
நாகை:       
ஒன்று : திருமதி பங்காரு டீச்சர் - 'அ ' எழுதச் சொல்லிக் கொடுத்தார்.  
          
இரண்டு : லில்லி புஷ்பம் டீச்சர் - எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்க மிகவும் முயன்றார்.  
               
மூன்று : சண்முகம் சார், சந்திரசேகர் சார்.  எனக்கு ஏதோ ஒரு பாடத்தில் (சமூக பாடம்?) நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் போட்டவர்! 
             
நான்கு: விஸ்வநாதன் சார். இவருடைய வகுப்பில், நானும் என் நண்பன் முத்துவும், சட்டைப் பையில் காய்ந்த நார்த்தங்காய் ஸ்டாக் வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக விண்டு, வாயில் போட்டுக் கொண்டு உலகையே மறந்து இருந்த நாட்கள் ஞாபகம் வருகின்றது. ("சீசீ கர்மம், கர்மம் - எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வாங்கடா!") 
            
ஐந்து: சண்முகசுந்தரம் சார். ஒவ்வொரு வாரமும் நீதி போதனை வகுப்பில் அதே கதையைச் சொல்லி, அதே ஈசாப் கதைப் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்து, (யாருடனும் அந்தப் புத்தகத்தை மாற்றிக் கொள்ளகூடாது என்று கண்டிப்பு வேறு!) அந்த நாட்களில் மிகவும் போர் அடிக்க வைத்தவர். 
           
ஆறு: வைத்தியநாதன் சார். மற்ற வகுப்புப் பையன்கள் அதாவது ஆறாம் வகுப்பு பி பிரிவு, சி பிரிவு .... எல்லோரும் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பதாகப் பொருமிக்கொண்டே இருப்பார். (நாங்க ஏ பிரிவு) 
          
நஞ்சநாடு ஊட்டி. 
ஏழு: அட்டிபாயில் நஞ்சன் சார். பாடம் நடத்துவதில் மன்னர். கதை போல அவர் சொல்லும் விஷயங்கள் இரசனையாக, மனதில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். 
          
மீண்டும் நாகை  
எட்டு: லக்ஷ்மணன் சார். ஆங்கிலம், விஞ்ஞானப் பாடங்கள் - மிக அருமையாக சொல்லிக் கொடுத்தவர். நகைச்சுவை உணர்வும் அதிகம். எப்பொழுதாவது வரும் கோபம் தப்பு செய்த மாணவன் மீது புயலாக வீசும். 
              
ஒன்பது: இராமமூர்த்தி சார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜே டி எஸ் பள்ளியில், முப்பது பேர்களுக்கும் பெரிய அண்ணன் போல ஒரு ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, பாடம் நடத்தியவர். 
           
பத்து: மகாதேவன் சார். இராமமூர்த்தி சார் மாற்றல் பெற்றுச் சென்றதும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த ஆசிரியர். எனக்கு எப்பொழுதும் பௌதிக, இரசாயன பாடங்களில் முதல் மார்க் போட்டவர். 
              
பதினொன்று  தேவதாஸ் சார். கிணற்றுக்குள் விழுந்துவிட்ட என்னுடைய கணித அறிவை தோண்டி எடுத்து, புளி போட்டுத் தேய்த்து, பிரகாசமாக்கியவர். அப்புறம் அது மீண்டும் மங்கிப் போய்விட்டது என்பது வேறு விஷயம்! 
              
பாலிடெக்னிக் : வாஞ்சிநாதன் (பிசிக்ஸ்), சம்பத் & கணபதி (கணிதம்), குமரேசன்(இஞ்சினீரிங்), ராமநாதன்(ஹீட்  எஞ்சின்ஸ்), கோவிந்த ராஜுலு (இண்டஸ்ட்ரியல் எஞ்சினீரிங்)   
             .
சென்னை:  
ஏ எம் ஐ ஈ - சோசியல் சயின்ஸ் கிளாஸ் எடுத்த வி சுந்தரம் (பி எஸ் வீரப்பாவின் பையர்  என்று ஞாபகம்), ராகவன், ஸ்ரீனிவாசன். 
     
இவர்கள் எல்லோரையும் ஆசிரியர் தினத்தில் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளேன். 
                           

8 கருத்துகள்:

  1. ஆ'சிரி'யர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு வலையுலகம் சொல்லிகொடுத்த 'ஆசிரியர்' யாரோ ?

    பதிலளிநீக்கு
  3. பி எஸ் வீரப்பாவின் பையர் என்று ஞாபகம்)//

    பையர்???? ஹிஹிஹி,

    எனக்கும் எங்க ஆ"சிரி"யர்களெல்லாம் நினைப்பில் வந்தாங்க.

    பதிலளிநீக்கு
  4. தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை வகுப்பு வாரியாக நினைவு கூர்ந்து சிறப்பித்த உமக்கு பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியர் தினத்திற்கு அருமையான சமர்ப்பணம்!!

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து இன்றைய தினத்தில் பதிவு செய்தது நன்று...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!