இன்றைய தனிப்பாடலை எழுதியவர் திரு எழில்மணி. இசை D B ராமச்சந்திரன்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
நாகேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
29.3.24
வெள்ளி வீடியோ : கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெணணைத் தரவில்லை
கே சோமு இயற்றிய பாடலுக்கு இசை கீரவாணி. இது இப்போது பிரபலமாய் இருக்கும் கீரவாணியா, வேறு ஒருவரா என்று தெரியவில்லை. அமைதியான இந்தப் பாடல் நெஞ்சை அள்ளும் சுசீலாம்மா பாடல்களில் ஒன்று.
28.1.22
வெள்ளி வீடியோ : ஜூலையில் பிறந்தவன் ஜாதகம்.. காதலில் அது ரொம்ப சாதகம்
இன்றைய நேயர் விருப்பப் பாடல் ஒன்று. பானு அக்கா என்னை அறிந்தால் படத்திலிருந்து ஒரு பாடல் கேட்டிருந்தார்.
31.7.20
வெள்ளி வீடியோ : ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து...
1970 இல் வெளிவந்த கல்யாண ஊர்வலம் படத்தின் நாயகன் நாகேஷ். பெயருக்கு கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய சோகமும் கலந்த படம்.
3.1.20
வெள்ளி வீடியோ : தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
==============================================================================================
நேயர் விருப்பம் :
17.4.13
சினி பிட்ஸ் - ரசிக்க, சுவைக்க.
எம் ஜி ஆருடன் ஜெமினி இணைந்து நடித்த ஒரே படம் முகராசி.
கர்ணனில் முதலில் எம் ஜி ஆர் தான் நடிப்பதாக இருந்தது.
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்'
என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் '64
வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர்'
என்று குறிப்பிட்டு
சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!
எம்.ஜி.ஆரை
'மிஸ்டர் எம்.ஜி. ஆர்.'
என்று அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு
இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலை படவும் இல்லை!
எம்.ஜி.ஆரை
'ராமச்சந்திரா'
என்றும், சிவாஜியை
'கணேசா'
என்றும் அழைப்பார் எம் ஆர் ராதா..
மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!
எழுந்தாளர்
ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர் சந்திரபாபு. இருவரும் மணிக்கணக்கில்
பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான்
'எனக்காக அழு',
ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!
ஷீலா என்ற
பெண்ணைத் திருமணம் செய்தார் சந்திரபாபு. முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை
அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை
அனுப்பிவைத்துவிட்டார்!
ப்ளைமெளத்,
அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார் MR ராதா. இம்பாலாவில்
ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப்
பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
'நமக்குப்
பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட்
அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?'
என்று கேட்டார்!
தினமும் ஒரு
பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம்
கொடுப்பார்.
'அவன்
உங்களை ஏமாற்றுக்கிறான்'
என்று வீட்டில்
உள்ளவர்கள் சொல்லவே,
'அவன்
ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே
சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே'
என்பாராம்!
'திருவிளையாடல்’
படத்தின் காட்சிகளை
ரஷ் பார்த்த சிவாஜி,
`நாகேஷின்
நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’
என்று டைரக்டர்
ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
முறைப்படி
யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும்
இல்லை. ஆனால், நடனத்தில்
`நாகேஷ்
பாணி’
என்கிற தனி
முத்திரையைக் கொண்டுவந்தார்!
`பஞ்சதந்திரம்’
ஷீட்டிங், உணவு
இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார்.
அருகில் இருந்த நாகேஷ் கேட்டார்,
`கோழி
இன்னும் சாகலையாப்பா?' 30
ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய
அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!
மிகப்
பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல்
நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
ஜெய் சங்கர் ஹீரோவாகக் கோலோச்சிய காலங்களில் பி பி ஸ்ரீநிவாஸ் அவருக்குக் குரல் கொடுத்ததில்லை. (பின்னாளில் ஊமை விழிகள்)
கமலும் விவேக்கும் இணைந்து நடித்ததில்லை.
(பெரும்பாலான விவரங்கள் 'நெட்'டில் 'லக்ஷ்மன்-சுருதி' பக்கத்திலிருந்து எடுத்தது)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)