கீழே உள்ள வரிகள் அந்தந்தப் பாடலின் இடையே வரும் வரிகள்தான்.
'அருஞ்சொற்பொருளி'ல் ( ! )இருக்கும் அந்த வரிகளை மீட்டெடுப்பதோடு, அந்தப்
பாடலின் ஆரம்ப வரிகளையும் சொல்ல வேண்டும்!
முடிந்தவரை பாடல் புரியக்கூடிய அளவில், சரியாகக் கொடுத்திருக்கிறேன்.
ஈசிதான். புதிய பாடல்கள் எதுவுமில்லை.
'ஜூட்'டா....
1) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்டா இவன் வர்றான் எவன்
நமக்கு உதவுவான்னு கிருஷ்ணனையும், கந்தவேளையும் சந்தேகப் படறாளாம் பொண்ணு!
எழுதறதுல்லாம் தப்பாக ஆறது விதியான்னும் சந்தேகம்! ஆரம்பிக்கறதை முடிக்கவும்
தெரியலை!
2) வேண்டி, வேண்டி உங்களை வேண்டச் சொல்லிக் கேட்டும் நீங்கள் வேண்டவில்லை
என்றால் என்னை நம்பாமல் இருந்தால் துளியாவது நஷ்டம் எனக்கு உண்டா ஐயா? நான்
பார்த்ததைத்தானே சொல்கிறேன்? உங்கள் விஷயம்தான் ஐயா...
3) முதிர்ச்சியை இன்னும் எட்டவே எட்டாத அந்த முகத்தின் பிரகாசம், எப்படி
உரையாடுவது என்ற கலை, மென்மையான நடை இவற்றையெல்லாம் காணோமே என்று கவலைப்
படுகிறேன்... அமைதியாக நீ தூங்குகிறாயே....
4) அண்ணிக்கி லவ்வு 'டிராப்' 'ட்ராப்'பா சொட்டற கண்ணோட நீ என்னிய லுக்கு
விட்டியே... சொம்மா சொகமாத்தான் இருந்திச்சி போ.. ஒன்னோட கண்ணுலயும்
கையிலயும் விழுந்துட்டேன். பார்த்தது போதும்மா! நீ கேட்டது வேணுமா வேணாமா?
5) "தாவணி போட்ட உன்னைத் தொடும்போது இதயம் தண்ணி அடிச்சாப்போல ஆயிடுதுமே... "
"வேற பார்வை பாக்காத மச்சான்...ஆறா வேர்க்குது..புடைவையத் தொடறத்துக்கு முன்னாடி கழுத்துல மாலைய போட்டு மாறன் சொன்னதைச் சொல்லு..."
6) நிலவு போல மூஞ்சி! சிவப்பா வாயி! வெள்ளைப் பூ போல சிரிப்போட மகன்.. தளர் நடைல மனசு குளிர்றா மாதிரி உம்மா கொடுப்பான் அவன்.
7) வேகமா விரல்களால, கண்ணால பேசி , 'வீணை உடம்பை' வாசிச்சேன்னா பூமிக்கு
அந்த வானம் வந்தது மாதிரியும் ஆறு ஒண்ணு இதயத்துள்ள பாஞ்சு ஓடற மாதிரி புது
அனுபவம்தான்!
8) கவலைங்கற கடனை என் வாழ்க்கைல கொடுத்துருக்கற கடன்காரக் கடவுள்!
கவலையெல்லாம் சரியாப் போனாத்தான் கடன் அடையும். சொல்லப்போனா வறிய மக்கள்
ஜீவிதத்துல தண்ணியடிச்சுட்டு விளையாடற மாதிரி ஆடறான் கடவுள்.
9) நீலமா தெரியும் அந்த மேகம் போலத்தான் நானும் காதல்ங்கற ஆகாசத்துல
பறக்கறேன். தண்ணியில பூ தத்தளிப்பது போல இதயம் மயங்கறேன். மீனே
ஜாடையாவாவது பேசேன். மலர் மேனியைப் பார்த்ததும் மன்மதனின் கணை
பாய்ந்து சூடாகும் என்னைத் தணிவிக்கும் ஜில்லுனு இருக்கும் ஓடத் தண்ணி
நீதான் வா....!
10) வளர்ந்த பொண்ணு, கொழந்த மனசு ரெண்டும் ஒண்ணாயிருக்கற அதிசயம்
நீதான்பா...ஆனால் உன் எண்ணங்கள் மட்டும் தீயைப் போல சுடும் பாவம்தான் என்ன?
சூரியன் உதிக்காம இருக்காது. அதுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்!
** ஹி ஹி ! படங்களுக்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தப்பித் தவறி ஏதாவது சம்பந்தம் இருந்தால் அது தற்செயலாக நிகழ்ந்ததாகக் கொள்க!
* இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்கள் மட்டறுக்கப் (என்ன வார்த்தைடா இது!) படுகின்றன! கிர்ர்ர் மேடம் பல பதிவுகளில் விடுத்த வேண்டுகோளை மதித்து.
பதிலளிநீக்குஇங்கே எல்லா மாலுக்கும், ஸ்டாலுக்கும், துஷாத்லே எல்லா விதமான பாட்டுக்கும் டான்ஸ் ஆடிப்போய்
ஒய்ந்து போனப்புறம், வீட்டுக்கு வந்து, நேற்று 200 மைல் தூரம் வரை பிரயாணம் செய்து
இரண்டு மூணு தர்ம சம்பந்தமான தயானந்தா ஸ்வாமி குரு டெம்பிள்,பென்சில்வேனியா விலே மெடிடேஷன் செண்டர், சாரதாம்பா ஷ்ருங்க்கேரி கோவில், அதுக்கப்பறம் சீரடி சாயி பாபா கோவில் ஒண்ணு எடிசன்லே எல்லாம் பார்த்துட்டு, எல்லா தர்ம மோக்ஷ சித்திக்கான கார்யத்துக்கெல்லாம் சங்கல்பம் பண்ணிண்டு வந்தா இங்கே ,
பழையபடி, என்னை ஸ்கொயர் நம்பர் ஒண்ணுக்கே அனுப்பிக்கும் வகையிலே ஒரு போட்டி இருக்கு. உங்க் ப்ளாக்லே. கலந்துக்கணும் அப்படின்னு ஆசை தான். அப்படி ஒண்ணும் டிஃபிகல்ட் கொஸ்சினும் இல்லை.
இருந்தாலும் இன்னும் இரண்டு நாளைக்கு காயத்ரி ஜெபத்திலே இருக்கேன். முடிஞ்சப்பறம் வரேன்.
முதல்லே அறத்தான் வருவதே இன்பம்.
அதுக்கப்பறம் தான் அத்தான் வருவதே இன்பம்.
ஆர் வைஸி வர்சா.
சுப்பு தாத்தா.
பாடல்கள் தெரிந்த மாதிரியும் இருக்கு.தெரியவும் இல்லை.:(
பதிலளிநீக்குகந்தனுக்கும் கண்ணனுக்கும் பேதம் இல்லை தோழி. அவன்கன்னம் வைத்துத் திருடிவந்த கதைகள் பலகோடி?(முதல் பாட்டு)
பதிலளிநீக்குபத்தாவது பாட்டு
பதிலளிநீக்குஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ?
பார்வையிலே குமரியம்மா. பழக்கத்திலே குழந்தையம்மா.......
வல்லிம்மா இரண்டு பதில்களுமே தவறு என்கிறார் பதிவாசிரியர்.
பதிலளிநீக்கு1. அங்கும் இங்கும் பாதை உண்டு
பதிலளிநீக்கு10. கனா காணும் கண்கள் மெல்ல
ஒரு பாட்டுன்னா.. ஒரு பாட்டு.... ஒரு பாட்டுக்கூட தெரியலை!!!! :(((((
பதிலளிநீக்குஎந்த வேலைக்கு வேணும்னாலும் போங்க ஆனா கோனார் நோட்ஸ் மட்டும்... நீங்க வேணாம்... எழுதுற வேலை வேணாமே? அங்கயும் இங்கயும் பாத்து கண்டதையும் சொல்றீங்களே?
பதிலளிநீக்குகனாக்காணும் கண்கள் மெல்ல
பதிலளிநீக்குபதில்கள் காண பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்கு//கிர்ர்ர் மேடம் பல பதிவுகளில் விடுத்த வேண்டுகோளை மதித்து. //
பதிலளிநீக்குயாராக்கும் அது?? :))))
மறுபடி வரேன். இப்போ தலை சுத்தல்!!!!!!!!!!!!!!!! :))))வல்லி, ரா.ல. போன்றவர்களே முழிக்கிறாங்கன்னா நானெல்லாம் ஜுஜுபி! :))))))
பதிலளிநீக்குமட்டறுக்கப் (என்ன வார்த்தைடா இது!) படுகின்றன! =மட்டுறுத்தப் படுகின்றன.
பதிலளிநீக்குஇம்பொசிஷன் எழுதுங்க பத்து லக்ஷம் தரம்.
அட??? அப்பாதுரைக்குமா தெரியலை!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு1.அங்கும் இங்கும் பாதை உண்டு – அவர்கள்
பதிலளிநீக்கு2.கண்டதைச் சொல்லுகிறேன் – சில நேரங்களில் சில மனிதர்கள்
6.என் ராஜாவின் ரோஜா முகம் – சிவகாமியின் செல்வன்
10.கனா காணும் கண்கள் மெல்ல – அக்னி சாட்சி
இவை சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற பாடல்கள்... ம்ஹூம்... விடையறிய காத்திருக்கிறேன்.
மெதுவா வாங்க சூரி ஸார்!
பதிலளிநீக்குவல்லிம்மா... நான் நினைத்த மாதிரியே அந்தப் பாடலுக்குக் குழப்பம், இந்தப் பாடலுடன் ஏற்பட்டது சதோஷம்! ஹிஹி......
அநன்யா... ரங்ஸ் கிட்ட கேட்டுப் பார்ப்பீங்களே....
அட அப்பாதுரை... ரைட்டு!
ராமலக்ஷ்மி... சினிமாப் பாடல்களில் விருப்பம் இல்லையோ....!
கீதா மேடம்... நீங்க ரெண்டு பாட்டு உடனே சொல்லிடுவீங்கன்னு நினைச்சேன்.
பொதுவாகச் சொல்லணும்னா வி ஆர் மிஸ்ஸிங் மீனாக்ஷி...!
@ கீத மஞ்சரி...
பதிலளிநீக்குமூன்று சரியான விடைகள்!
@ மோகன் குமார்...
ரெண்டும் ரைட்டு!
அவ்வ்வ்வ்வ்!! இப்படியெல்லாம்கூட புதிர் போடலாமா? ம்ஹூம்.. நம்ம ஏரியா இல்லை! நேரடியா வரிகளைச் சொன்னாலே கிழிச்சுடுவேன்... :-))))
பதிலளிநீக்கு3. மூன்றாம்பிறையில் கண்ணே, கலைமானே பாட்டா?
பதிலளிநீக்குஇல்லை கீதா மேடம்.... இன்னும் பழசு!
பதிலளிநீக்குகிர்ர்ர் மேடம்.. நானும் நினைச்சேன் என்ன இது புதுப் பட்டமா இருக்குதேனு.
பதிலளிநீக்குமட்டறுத்த மட்டறுக்க.. சத்தியமா ரெண்டும் ஒண்ணுதான்னு நெனச்சேங்க.. இதை யாரு கண்டுபிடிச்சாங்க?
பதிலளிநீக்குபின்நவீனத்துவம்னு ஒரு வார்த்தை. நான் அது ஏதோ தகாத வார்த்தைனு நினைச்சேன் முதல்ல..
பதிலளிநீக்கு10. குழந்தை உள்ளம் ,குமரி ருவம்...கைகொடுத்த தெய்வமா?
பதிலளிநீக்கு@ அப்பாதுரை....பின் நவீனத்துவம் என்றால் என்ன? கிர்ர்ர் மேடம் யாருன்னு தெரியாதவங்க பதிவுலகில் கிடையாது!!!!!
பதிலளிநீக்கு@ வல்லிம்மா..... ஊஹூம்.... அதுவும் இல்லை! (10)
இதை கண்டு பிடிக்கக் கூடிய ஒரே ஆள் திண்டுக்கல் தனபாலன்தான்.அவர் பின்னூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஹையா!ஏழாவதுபாட்டு கண்டு பிடிச்சிட்டேன்.
பதிலளிநீக்குராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ.. இது முதல் வரி
வீணை எனும் மேனியிலே கண்வீனை மீட்டும். கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம். வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும், ஜீவா நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும மோதும். புதிய அனுபவம்
இன்னொன்னும் கண்டு பிடிச்சிட்டேன். 10 வது பாடல் கனாக் காணும் கண்கள் மெல்ல
பதிலளிநீக்குகுமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன?
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
TN முரளிதரன்.... DD இந்தப் பக்கம் இன்னும் வரவில்லை!
பதிலளிநீக்குஅப்புறம் உங்க கண்டுபிடிப்பு கரெக்டுங்க!
அட, TNM.... அதுவும் கரெக்டுங்க....! (10)
பதிலளிநீக்குகடைசி பாடல்'ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ, உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ, பார்வையிலே குமரி அம்மா, பழக்கத்திலே குழந்தை அம்மா, ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ....'
பதிலளிநீக்குமூன்றாவது பாடல்
பதிலளிநீக்குபாலும் பழமும் கைகளில் ஏந்தி
@ ரஞ்சனி நாராயணன்..... மூன்றாவதற்கான விடை சரி!
பதிலளிநீக்குஐந்தாவது பாடல்:
பதிலளிநீக்குபாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
ஆறாவது பாடல்
பூப்போல பூப்போல பிறக்கும் / கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
@ ரஞ்சனி நாராயணன்..... இல்லை, ஐந்தும் ஆறும் நீங்கள் சொல்லியிருப்பது இல்லை! :)))
பதிலளிநீக்கு4.கற்பனையோ...சுகமோ சுகம்...பாடலில் வரும் வரிகள் - அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை சுகமோ சுகம்... பார்த்தது போதுமா, கேட்டது வேணுமா
பதிலளிநீக்கு6.என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும், செவ்வாயில் பால் மணக்கும்..
8. நாளை முதல் குடிக்க மாட்டேன்...பாடலில் கடவுள் என் வாழ்வில் கடங்காரன், கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும். ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்
9. கடலோடு நதிக்கென்ன கோபம்..பாடலில் நீலவான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன், நீரில் ஆடும் மீனைப் போல ... ஓடை மீனே ஜாடை பேசு..
10. கனாக்காணும் கண்கள் மெல்ல. பாடலில் குமரி உருவம் குழந்தை வடிவம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ...கிழக்கு வெளுக்காமல் இருக்காது மானே....
இரசிப்பதுண்டு. ஆனால் இந்த அளவுக்கு ஞானம் இல்லை:)!
பதிலளிநீக்குநிறைய சரியான விடைகள் வந்தாச்சு போலயே. முடிவுக்குக் காத்திருக்கிறேன்.
@ middleclassmadhavi ... 4, 8,9,10 ... மிகச்சரி! 6 மட்டும் தவறு.
பதிலளிநீக்கு//நிறைய சரியான விடைகள் வந்தாச்சு போலயே.//
ஆம். நன்றி ராமலக்ஷ்மி.
4,8,9 கண்டுபிடிச்சாங்களா middleclassmadhavi? கில்லாடி!
பதிலளிநீக்குAppadurai sir, 70% credit goes to my husband!!
பதிலளிநீக்குகுடுக்குறதோ குடுக்குறீங்க, 100% க்ரெடிட் குடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க? :)
பதிலளிநீக்குNyaathukke kaalam illai!
பதிலளிநீக்குUnmaiyaagave 70%thaan! Ithule unga commentukku 'keep it up' vera sonnar en Rangs!
தவறான பாடல் ஆறாவது பாடல் என்று நினைக்கிறேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டேதான் தட்டச்சுகிறேன். செல்லக்கிளியே மெல்லப்பேசு...
பதிலளிநீக்குஎன்றைக்கு ரிசல்ட்?
பதிலளிநீக்குகீதமஞ்சரி...... ஆறாவது பாடல்.... கரெக்ட்!
பதிலளிநீக்குரஞ்சனிம்மா.... ரிசல்ட் வெகு விரைவில்!
விடையை வெளியிடுங்க. அருஞ்சொற்பொருளெல்லாம் சரியாத்தான் இருக்குதான்னு வேண்ணா செக் செய்யறேன் :-))))
பதிலளிநீக்கு5th song?
பதிலளிநீக்குபாடல்களை கஷ்டப்படாமல் விடைப்பார்த்து தெரிந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குஓ... 5 இன்னும் சொல்லப் படவில்லையா?
பதிலளிநீக்கு"நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவளொரு தாவணி மேகம்.. இதயம் அமுதில் நனையும் தொடுகையில்..."
"பார்வை வேறானது.... இங்கு வேர்வை ஆறானது...சேலை தொடு... மாலையிடு... மன்மதச் சேதி கொடு..பாடு.."
[சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகைதானே]
இவைதான் விடைகளா?
பதிலளிநீக்குகொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஒன்று இரண்டு என்று போட்டு எழுதுங்களேன் ப்ளீஸ்! நேயர் விருப்பம்!
அப்படியே ஆடியோ போடுங்க. பாட்டு கேட்டுக்கொண்டே பதிவு எழுத சௌகரியம்...ஹி...ஹி...
1,2, என்று போட்டு பதில்களா? ரொம்ப நீளமா இருக்குமே... தனிப் பதிவாப் போட்டுடவா?! :)))))
பதிலளிநீக்கு1) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்டா இவன் வர்றான் எவன் நமக்கு உதவுவான்னு கிருஷ்ணனையும், கந்தவேளையும் சந்தேகப் படராளாம் பொண்ணு! எழுதறதுல்லாம் தப்பாறது விதியான்னும் சந்தேகம்! ஆரம்பிக்கறதை முடிக்கவும் தெரியலை!
பதிலளிநீக்கு"கண்ணா என்றாள்.. முருகன் வந்தான்... முருகா என்றால் கண்ணன் வந்தான்... எந்தத் தெய்வம் சொந்தம் என்று பூவை பூஜை செய்வாள்? அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே கெடுத்ததம்மா.... கதை எழுதத் தொடங்கி விட்டால்.. முடிக்க மட்டும் தெரியவில்லை..." [அங்கும் இங்கும் பாதை உண்டு]
2) வேண்டி, வேண்டி உங்களை வேண்டச் சொல்லிக் கேட்டும் நீங்கள் வேண்டவில்லை என்றால் என்னை நம்பாமல் இருந்தால் துளியாவது நஷ்டம் எனக்கு உண்டா ஐயா? நான் பார்த்ததைத்தானே சொல்கிறேன்? உங்கள் விஷயம்தான் ஐயா...
"கும்பிடச் சொல்லுகிறேன்... உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன்.. எனை நம்பவும் நம்பி நம்பிக்கையில் தோய நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ... கண்டதைச் சொல்லுகிறேன்... உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.." [கண்டதைச் சொல்லுகிறேன்]
3) முதிர்ச்சியை இன்னும் எட்டவே எட்டாத அந்த முகத்தின் பிரகாசம், எப்படி உரையாடுவது என்ற கலை, மென்மையான நடை இவற்றையெல்லாம் காணோமே என்று கவலைப் படுகிறேன்...அமைதியாக நீ தூங்குகிறாயே....
"பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே.. பேசிப் பழகும் மொழி மறந்தாயே.. அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே... அன்னக்கொடியே அமைதி கொள்வாயே..." [பாலும் பழமும் கைகளில் ஏந்தி]
4) அண்ணிக்கி லவ்வு டிராப் ட்ராப்பா சொட்டற கண்ணோட நீ என்னிய லுக்கு விட்டியே... சொம்மா சொகமாத்தான் இருந்திச்சி போ.. ஒன்னோட கண்ணுலயும் கையிலயும் விழுந்துட்டேன். பார்த்தது போதும்மா! நீ கேட்டது வேணுமா வேணாமா?
"அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று பசியாருதோ என்ன சுகமோ சுகம்..... உந்தன் கண்ணில் விழுந்தேனோ கன்னித் தமிழே.. இல்லைக் கையில் விழுந்தேனோ பிள்ளைத் தமிழே... [கற்பனையோ கை வந்ததோ]
5) "தாவணி போட்ட உன்னைத் தொடும்போது இதயம் தண்ணி அடிச்சாப்போல ஆயிடுதுமே... "
"வேற பார்வை பாக்காத மச்சான்...ஆறா வேர்க்குது..புடைவையத் தொடறத்துக்கு முன்னாடி கழுத்துல மாலைய போட்டு மாறன் சொன்னதைச் சொல்லு..."
"நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவளொரு தாவணி மேகம்.. இதயம் அமுதில் நனையும் தொடுகையில்... பார்வை வேறானதே.. இங்கு வேர்வை ஆறானதே... சேலை தொடு மாலை இடு..மன்மதச் சேதி கொடு.." [சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை]
6) நிலவு போல மூஞ்சி! சிவப்பா வாயி! வெள்ளைப் பூ போல சிரிப்போட மகன்.. தளர் நடைல மனசு குளிர்றா மாதிரி உம்மா கொடுப்பான் அவன்.
பதிலளிநீக்கு"திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர்ச்சிரிப்பில் கண்ணன் வருவான்.. தத்தும் நடை நடக்க தண்டைக் குரல் கொடுக்க சித்தம் குளிர வந்து முத்தம் கொடுப்பான்.." [செல்லக் கிளியே மெல்லப் பேசு]
7) வேகமா விரல்களால, கண்ணால பேசி , 'வீணை உடம்பை' வாசிச்சேன்னா பூமிக்கு அந்த வானம் வந்தது மாதிரியும் ஆறு ஒண்ணு இதயத்துள்ள பாஞ்சு ஓடற மாதிரி புது அனுபவம்தான்!
"வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் கைவிரலில் ஒரு வேகம்.. கண்ணசைவில் ஒரு பாவம்.. வானுலகே பூமியிலே வந்தது போல் தோன்றும்.. ஜீவா நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்.." [ராத்திரியில் பூத்திருக்கும்]
8) கவலைங்கற கடனை என் வாழ்க்கைல கொடுத்துருக்கற கடன்காரக் கடவுள்! கவலையெல்லாம் சரியாப் போனாத்தான் கடன் அடையும். சொல்லப்போனா வறிய மக்கள் ஜீவிதத்துல தண்ணியடிச்சுட்டு விளையாடற மாதிரி ஆடறான் கடவுள்.
"கடவுள் என் வாழ்வில் கடன்காரன்... கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்... ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்." {நாளை முதல் குடிக்க மாட்டேன்]
9) நீலமா தெரியும் அந்த மேகம் போலத்தான் நானும் காதல்ங்கற ஆகாசத்துல பறக்கறேன். தண்ணியில பூ தத்தளிப்பது போல இதயம் மயங்கறேன். மீனே ஜாடையாவாவது பேசேன். மலர் மேனியைப் பார்த்ததும் மன்மதனின் கணை பாய்ந்து சூடாகும் என்னைத் தணிவிக்கும் ஜில்லுனு இருக்கும் ஓடத் தண்ணி நீதான் வா....!
"நீல வான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்.. நீரில் ஆடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்...ஓடை மீனே... ஜாடை பேசு..மதன் மீட்டிடும் கணை பாயுது.. மலர்மேனியும் துதி பாடுது குளிர் ஓடை போலே நீ வா..." [கடலோடு நதிக்கென்ன கோபம்]
10) வளர்ந்த பொண்ணு கொழந்த மனசு ரெண்டும் ஒண்ணாயிருக்கற அதிசயம் நீதான்பா...ஆனால் உன் எண்ணங்கள் மட்டும் தீயைப் போல சுடும் பாவம்தான் என்ன? சூரியன் உதிக்காம இருக்காது. அதுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்!
"குமரி உருவம்.. குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ? நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன? கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்... விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்..." [கனாக் காணும் கண்கள் மெல்ல]
சே, ஸ்கூல் பாடம் கூட இப்படிப் படிச்சிருக்க மாட்டீங்கனு நம்பறேன். :))))) இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்யலைங்கோ, பாடல்களில் சில அடிக்கடி கேட்டிருந்தாலும் நினைவில் வரலை என்பதே நிஜம். அசத்திட்டீங்க போங்க! :)))))
பதிலளிநீக்குஸாரி ஸ்ரீராம்!
பதிலளிநீக்குநான் பாட்டுக்கு 1,2 போட்டு பதில் போடுங்களேன் என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போயிட்டேன். இன்னிக்கு இங்க வந்து பார்த்தால்....!
பாவம், ரொம்ப மெனக்கெட்டு விட்டீர்கள்!
கீதா சொல்லியிருப்பது போல பாடல்கள் கேட்டிருந்தாலும் உங்கள் க்ளூ படித்துவிட்டு நினைவுக்கு வரவில்லை.
ரொம்ப ரொம்ப ஸாரி!