காலம் காலமாக
சொல்வதுதான்...
நேற்று நீ சொன்னதைத்தான்
இன்று நான் சொல்கிறேன்...
நீ காதல் என்கிறாய்
நான் கவிதை என்கிறேன்..
பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...
சொல்வதுதான்...
நேற்று நீ சொன்னதைத்தான்
இன்று நான் சொல்கிறேன்...
நீ காதல் என்கிறாய்
நான் கவிதை என்கிறேன்..
பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...
**********************************************************
காற்று
காதலைப் போலவே வீசுகிறது
ஊடல் கொண்ட
மதியங்களின் கோப தருணங்களில் வெப்பமாக,
இரவுகளின் இனிமையில் சுகமாக..
காதலைப் போலவே வீசுகிறது
ஊடல் கொண்ட
மதியங்களின் கோப தருணங்களில் வெப்பமாக,
இரவுகளின் இனிமையில் சுகமாக..
****************************************************************
காற்றில் கலந்த
காதலின் வாசம்
பூமியெங்கும்
நேசப் பிரவாகம்
காதலின் வாசம்
பூமியெங்கும்
நேசப் பிரவாகம்
********************************************************************
நிலவில்
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது!
நீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது!
பொய்யையும் நிலவையும் மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குமன வரிகள் அருமை.
பதிலளிநீக்குநீரில் நிலவு அட்டகாசம்:)!
காற்றின் வாசத்தில் காதலி
பதிலளிநீக்குகாதில் சொன்ன பொய்யதால்
ஊடல் மிகவாகவே நிலவும்
ஊறும்கண் நீரினில் தோன்றியதோ?....
அத்தனையும் அருமை!
ஒவ்வொன்றையும் மிகவே ரசித்தேன் சகோ!
வாழ்த்துக்கள்!...
பொய்க்குதான் எத்தனை பெயர்கள்...//
பதிலளிநீக்குஉண்மைதான்
காதலுக்குப் பொய்யழகு.
பதிலளிநீக்குநீரில் தெரியும் நிலா பிரமாதம். எத்தனை அழகு. பிம்பமாக இருந்தாலும்
அசையாத,ஒளிவீசும் கடவுள்.
வாழ்த்துகள் ஸ்ரீராம்..
எல்லாமே அருமையான கவிதைகள். முக்கியமாய்க் காற்று என்னைக் கவர்ந்தது.
பதிலளிநீக்கு(குளத்து)நீரில்
பதிலளிநீக்குஇருக்கும் நிலவு அழகு ..!
பதிலளிநீக்குமற்ற கவிதைகளை விட நிலவு கவிதை அருமை! இயற்கையாக ரசிக்கும்படி இருக்கிறது.
நிலவில் நீர் இருகிறதா, யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா குளத்து நீரிலும் நிலவு இருப்பது நிஜம்!
கவிதை முயற்சி......
பதிலளிநீக்குநன்றாகவே இருக்கிறது கவிதைகள். தொடருங்களேன்.....
///நிலவில்
பதிலளிநீக்குநீரிருக்கிறதோ இல்லையோ
(குளத்து)
நீரில்
நிலவு இருக்கிறது! ///
சூப்பர்ர்ர்.. இங்கு ஒரு கவிதை நினைவுக்கு வருது...
ஆற்றில் தெரியும் நிலவின்
விம்பம் பார்த்து
தானும் வானத்தில்
இருப்பதாய் மகிழ்கிறதாம்
ஆற்றங்கரை மரத்து
வெளவால்ல்