புதன், 3 ஜூலை, 2013

ஆதார் கார்ட் - ஒரு ஆதார சந்தேகம்!


                                              
                                                       
இரண்டு வருடங்களுக்கு முன்னாலா, அதற்கு அப்புறமா என்று சரியாக ஞாபகமில்லை. ஆதார் கார்ட் இல்லாமல் உயிர் வாழவே முடியாது, இந்தியனாகவே இருக்க முடியாது, (பாகிஸ்தானுக்குத் துரத்தி விடுவோம்) என்று சொல்லாத குறையாக விளம்பரப் 'படுத்தி' மக்களை ஆதார் அட்டை வாங்கச் சொன்னபோதே பலபேர் வாங்கவில்லை. அல்லது வாங்க முடியவில்லை. ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள். 

                                                 

நடுவில் ஆதார் கார்ட் வழங்கிக் கொண்டிருந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணத்தைத் தரவில்லை, அந்நிறுவனம் முறையான அனுமதி வாங்கவில்லை என்ற வதந்திகளுக்கு நடுவே அந்த வேலை நடுவழியில் நிறுத்தப் பட்டது. இந்நிறுவனம் திரட்டிய விவரங்களை வெளிநாடுகளுக்கோ (என்ன செய்வார்களோ இதை வாங்கி!) வேறு வணிக ஜாம்பவான்களுக்கோ கொடுக்கக் கூடும் என்ற பேச்சும் இருந்தது. தமிழ்நாட்டில் அம்மா தமிழக மக்களுக்கு ரேஷன் குடும்ப அட்டைகளே ஆதார் கார்ட் அடிப்படையில் வழங்கப் படும் என்று அறிவித்திருந்தார். வழக்கம்போல அறிவிப்போடு சரி! இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் மத்திய அரசு 'எதைச் சொன்னால் மக்கள் விரைந்து செயல்படுவார்கள்' என்ற சிதம்பர ரகசியத்தைக் கண்டறிந்து,  மக்களுக்கு ஒரு மிரட்டல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

                                                           

ஜீவி அவர்கள் கேட்கும் சந்தேகம் நிறையப் பேருக்கு இருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே வாங்கியவர்கள் 'அதுதான் வாங்கி விட்டோமே' என்று சும்மா இருப்பதா,  இல்லை இப்போது புதிதாக ஒன்று வாங்க வேண்டுமா என்ற சந்தேகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

கீழே உள்ள கட்டுரை தினமணியில் செய்திக் கட்டுரையாக வெளிவந்தது. (முகநூலில் கூடப் பகிர்ந்திருந்தேன். யாரும் படித்ததாகவே தெரியவில்லை!)
இதுவும் ஒரு பார்வை. முந்தைய எங்கள் ஆதார் கார்ட் பதிவில் வினோத் குமார் ஏகப்பட்ட விவரங்கள் கொடுத்திருந்தார். கூட இப்போது இது!

                                                         

 
முதல் இல்லாமலே மூலதனம் - தினமணி 10/6/2013

மக்களின் அன்றாடத் தேவையாக சமையல் கேஸ் சிலிண்டர் ஆகி விட்டது. இதன் வி
லையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே அல்லது உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் முதல் சமையல் கேஸ் சிலிண்டருக்கு 'நேரடி மான்யம்' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது மத்திய அரசு ஏதோ நன்மையைச் செய்வதுபோலத் தோன்றும் இந்தத் திட்டம் முதல் இல்லாமலே அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் கோடிக் கணக்கில் மூலதனத்தைத் திரட்டித் தரும் திட்டமாகும். 'மக்களைச் சுரண்டி மற்றவர்களை வாழவைக்கும்' கற்பகத் திட்டமாகும்.


ஆதார் எண் அடிப்படையில், அதிகாரிகள் கொடுத்த கணக்கின்படி 14 கோடிப்பேர் மா
னியப்பயன் பெறுவதாகவும் 32 கோடிப் பேர் ஆதார் எண் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது 46 கோடிப் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.ஆண்டுக்கு ரூபாய் 4,000 வரை ஒருவர் கணக்கில் வங்கியில் மானியம் செலுத்தப்படும். ஒரு வருடத்துக்கு மொத்தம் 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும். அதற்கும் மேல் போனால் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.

ஆதார் எண் பெற வங்கியில் கணக்குத் துவக்கப் பட வேண்டும். அந்த வங்கிக் கணக்குக்குத் தொடர்புள்ள ஆதார் எண்படி மானியம் செலுத்தப்படும். சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுச் சிலிண்டரின் விற்பனை விலை ரூபாய் 894.50. இப்படி 9 சிலிண்டருக்குத் தோராயமாக ரூ.
8050.50 செலுத்தப்பட வேண்டும். இப்படி 46 கோடிப்பேர் செலுத்துவர். இந்தத் தொகை நாடு முழுவதும் சுமார் 3,70,323 கோடி. (ஸ்பெக்ட்ரம் வருவாய் இழப்பு அளவை விட இரு மடங்கு!).  இந்தத் தொகை முழுவதும் எண்ணெய் நிறுவனங்களின் கணக்குக்குச் செல்கிறது.

100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி என்று கணக்கிட்டால் கூட, 3,70,323 கோடிக்கு சுமார் ரூ. 1.851.6 கோடியாகிறது. இதில் பாதிய
வுதான் நமக்கு மானியமாகக் கிடைக்கும். 'மக்களுடைய தலையைத் தடவி மக்களுக்கு திரும்பத் தரும் மகத்தான திட்டம்' இது! அத்துடன் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் மூலதனம் தன்னைப்போல வந்து கொட்டப் போகிறது. எந்த வட்டியும் பெறாமல் மக்களிடம் பணம் பெறப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தரப்படப் போகிறது.

'அதிக மக்களுக்கு நன்மை தரும் கொள்கைகளை வகுப்பதுதான் அரசு' என்றார் அரிஸ்டாட்டில். 'அதிக மக்களிடம் பணம் பறித்து சிலரை மட்டும் வாழ வைப்பதுதான் சிறந்த அரசு' என்கிறது "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2" அரசு!


இது போக, ஆதார் எண் பெற, வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் புதிதாகத் தொடங்க வேண்டும். வங்கிக் கணக்குத் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 500 தரவேண்டும். வங்கிக் கணக்கில் எப்போதும் இந்த இருப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 46 கோடிப் பேரில் கணிசமானவர்கள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்தான். வங்கிகள் வாடிக்கையாளர்களைத் தேடி அலையாமல் வாடிக்கையாளர்களே வங்கிகளைத் தேடிச் செல்ல உதவும் நல்ல திட்டம் இது!
 
இதைப் படிக்கும் வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

21 கருத்துகள்:

  1. மக்களை முட்டாளாக்கும் மகத்தான செயலை இதன் மூலமும் அரசாங்கமே செய்யத்தொடங்கி விட்டது

    பதிலளிநீக்கு
  2. இந்தியனாக இருக்கு முடியாது என்று சொன்னதினால் ஓடிப்போய் நான்கு நாள் நாயாட்டம் அலைஞ்சு என் குடிம்பத்தினர் அனைவருக்கும் ஆதார் அட்டை வாங்கி வைத்திருக்கிறேன். மற்றபடி இந்த மானியம் அப்படி இப்படிங்கறதெல்லாம் என் பேங்க் கணக்கிற்கு வருமா?

    46 கோடிப்பேர்களின் கணக்குகளை பார்த்து இந்த மானியத்தை பேங்க் கணக்குகளில் போட எவ்வளவு பெரிய டிபார்ட்மென்ட் வேண்டும்?

    நாம கட்டின இன்கம்டாக்ஸ் பணத்தில ரீபண்ட் கொடுக்க மாட்டேங்கறான். சர்க்கா, பணத்துல நமக்கு மானியம் வரப்போகுதாக்கும்?

    மானியம் வரலேன்னா எந்தக் குட்டிச்சுவத்தில போயி முட்டிக்கிறது? அதுக்குத் தேவையான குட்டிச்சுவர்கள் நம் நாட்டில இருக்குதா?

    பதிலளிநீக்கு
  3. ஹூம், ஆதார் அட்டை என்பது இந்தியன் என்பதற்கான அடையாளம்னு தான் சொல்லப்பட்டது. இப்போ வேறே மாதிரி. மொத்தத்தில் மக்களை ஏழை என்பதிலிருந்து மிக ஏழையாகவும், நடுத்தர வர்க்கம் என்பதிலிருந்து பின் தங்கிய வர்க்கமாகவும் மாற்ற முனையும் காங்கிரஸுக்கு ஒரு ஜே! வரும் லோக்சபா தேர்தலிலும் வெட்கமில்லாமல் ஓட்டுக்களைப் போட்டு இவங்களையே வர விடுவோம்.

    வந்தேமாதரம்!

    பதிலளிநீக்கு
  4. வர எரிச்சல்லே கடைசி வரி அடைப்புக்குள் இருந்தது கண்ணில் படலை. சந்தேகம் கேட்கச் சொல்லி இருக்கீங்க!

    எனக்கு உள்ள மாபெரும் சந்தேகம். ஏற்கெனவே ஆதார் அட்டை வாங்கியாச்சு. சென்னை விலாசத்தில். ஆனால் இங்கே அது செல்லாது என்றும் திரும்ப வாங்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். விலாசம் மட்டும் மாற்றிக் கொடுக்க மாட்டார்களா? ஏற்கெனவே காசு சோபனாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு அவங்க அப்புறமாப் பதிவே போட்டதாய்த் தெரியலை. நீங்களும் காணாமல் போயிடப் போறீங்க! :))))))

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் பதில் தெரியலை. அதனால்தான் ஒன்றும் சொல்லவில்லை. மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  6. ஆதார் கார்டு பற்றிய குழப்பங்கள் நிறைய . ஆனால் எங்களுக்கெல்லாம் இன்னும் வரவில்லை .யாரை கேட்பது? புரியவில்லை.....

    பதிலளிநீக்கு
  7. மிக மோசமாக ஏமாற்றப் பட இருக்கிறோம்... இருந்து ஏமாறத் தயாராய்த் தானே இருக்கிறோம், தற்போது விழிப்புடன் தட்டிக் கேட்கும் தகுதி இருப்பது பத்திரிக்கை, பிளாக் மற்றும் சமுக வலை தளங்கள் மூலமே, வெறும் அடையாள அட்டை என்றளவில் இருந்தால் சரி, மானியம் கீனியம் என்றால் இந்தியாவுக்கு பிடித்தது சூனியம் ( அட தலைப்பு நல்லா இருக்கே, அடுத்த பதிவு ரெடி பண்ணிறவா ) :-)

    பதிலளிநீக்கு
  8. @rajalakshmi paramasivam

    உங்க ஆதார் கார்டு பற்றிய விபரங்களை அறிய..
    https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink

    ஆதாரின் முழு விபரஙகளை அறிய..

    http://www.vinavu.com/2012/01/19/who-is-collecting-your-aadhar-data/
    http://www.vinavu.com/2013/05/22/your-data-on-sale/

    நன்றி,
    வினோத் குமார்

    பதிலளிநீக்கு
  9. திரு விநோத்குமார் அளித்திருக்கும் சுட்டியின் விபரங்கள் ஏற்கெனவே அறிந்தவையே. ஆனால் என்னோட மாபெரும் சந்தேகத்துக்கான பதில் எங்குமே இல்லை. :((((

    பதிலளிநீக்கு
  10. ஆன்லைனிலும் அப்ளை செய்யலாமா? புதுத் தகவல்.

    மேல் விவரங்கள் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. //ஏற்கெனவே வாங்கியவர்கள் 'அதுதான் வாங்கி விட்டோமே' என்று சும்மா இருப்பதா, இல்லை இப்போது புதிதாக ஒன்று வாங்க வேண்டுமா என்ற சந்தேகங்கள்... //

    ஸ்ரீராம்! ஆதார சந்தேகம் தீர்ந்தது.

    உங்கள் ஆதார் பற்றிய முந்தைய பதிவில் திரு.வெங்கட் நாகராஜின் சமீபத்திய பின்னூட்டத்தினால் 'இரண்டு ஆதாரா?' என்கிற சந்தேகம் தீர்ந்தது.

    //ஆனால் என்னோட மாபெரும் சந்தேகத்துக்கான பதில் எங்குமே இல்லை. :((((//

    கீதாம்மா, நீங்களும் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  12. வெங்கட் பின்னூட்டம் எங்கே?? எனக்கு எதுவும் தெரியவில்லையே. அவர் ஏற்கெனவே நேரில் சொன்னபோதும் விசாரித்துச் சொல்வதாகவே சொல்லி இருந்தார். அப்புறமா அவரிடம் கேட்கவே இல்லை. இப்போ அவரின் பின்னூட்டம் எங்கே வந்திருக்கு???

    பதிலளிநீக்கு
  13. கீதாம்மா,

    'எங்கள் பிலாக்'கின் 'ஆதாரம் என்றும் நீ தானே'-- ஜூலை,1-ம் தேதி பதிவில்.

    பதிலளிநீக்கு
  14. ஆதார் எனும் அரக்கன்

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24015:2013-05-31-06-27-04&catid=1:articles&Itemid=264

    பதிலளிநீக்கு
  15. http://www.gnani.net/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  16. பொதுமக்களை முட்டாள் ஆக்கிவிட்டது அரசு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. ஆதார் அட்டை வாங்குவதற்கே வங்கி எண் இருக்க வேண்டும் என்ற தகவல் தவறு.

    வங்கி எண் கொடுக்காமலும் ஆதார் அட்டை வாங்க முடியும்.

    உங்களுக்கு மானியம் கிடைக்க் வேண்டிய பட்சத்தில் தான் வங்கி எண் அவசியம். தில்லியில் இன்னும் கேஸ் சிலிண்டர் மானியம் வங்கியில் தான் செலுத்துவோம் என்பது போன்ற கட்டாயங்களை அமுல்படுத்தவில்லை.

    பதிலளிநீக்கு
  18. இந்த மானிய விஷயம் வரும் அக்டோபர் மாதத்திலிருந்துதான் அமுலுக்கு வருகிறது வெங்கட். மானியம் நம் கணக்குக்கு வருவதற்குத்தான் வங்கி எண் தேவை,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!