1) இருப்பவர்களுக்கு அருமை தெரியாது.
இல்லாதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். இல்லாத அந்த விஷயம், அந்த
இல்லாதவர்களுக்காகக் கிடைக்கச் செய்ய ஒருவர் இருந்தால்? அந்த ஒருவர்தான்
கடந்த இருபது ஆண்டுகளில் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றுத் தந்து 1546
பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் செல்வராஜ். இவர் திருச்சி பெல்
நிறுவனத்தில் மாஸ்டர் டெக்னீஷியன். மகத்தான இந்த சாதனையை கடந்த 20
ஆண்டுகளாக செய்துவருகிறார்.
2) அரசாங்க மின்சாரத்தை நம்பாமல், சூரிய ஒளியில் ஒளி தேடும் கிராமம்.
3) தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது அனைத்தையும் சேவைக்காக செலவிட்டு வருகிறார். வேலை செய்யும் இடம் அவருக்குக் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம் இது.
செய்வது மயான உதவியாளர் வேலை. மதுரை தத்தனேரி மயானத்தில் வேலை செய்யும் ஹரி.
4) கல்விச் செல்வத்தின் அருமையை உணர்ந்து வசதியில்லா வெளிமாநிலக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் நிகழ்ச்சி ஒரு நல்ல காரியம். அதுவும் அங்கே வேலை செய்யும் (கொஞ்சம் படித்த) ஒரு தொழிலாளியையே கல்வி கற்றுத் தர வைத்திருப்பது அவருக்கும் பூஸ்ட்!
5) மரம் வளர்ப்பதின் அருமை தெரிந்திருக்கும் உங்களுக்கு. அதே போல மகிழ மரம் பற்றியும் தெரிய வேண்டுமா? மரம் வளர்ப்பதில் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி பூமிக்குச் சேவை செய்து வரும் மாறன் பற்றி....
6) குறைந்த மார்க் எடுத்து 'இந்த மார்க்கை வைத்து உன்னால் எதுவும் செய்ய முடியாது' என்று பேச்சு வாங்கிய இருளன் அதையே சவாலாக எடுத்து தனது ஊரான மீனாட்சிப்பட்டி கிராமத்தையே கல்வியறிவினால் ஒளிரச் செய்துள்ள கதை.
7) கண்தான் இல்லை. நம்பிக்கை நிறைய இருக்கு கண்ணப்பனுக்கு
8) 'நானே ஏழை, முடியாதவன். என்னால் எப்படி பொதுச் சேவை செய்ய முடியும்?' என்று பேசுபவர்கள் கூட இருக்கிறார்கள். தெய்வராஜ் வித்தியாசமானவர், பாராட்டப்படவேண்டியவர்.
முதலிரண்டைத் தவிர மற்றவை அறியாத செய்திகள். அனைத்துமே அருமையான செய்திகள்.
பதிலளிநீக்குதேடி எடுத்த நல் முத்துக்கள் போலநல்ல தகவல்கள். ஸ்மாசன வேலை செய்தும் தெளிவில்லாமல் இருப்பவர்கள் இருக்கும் இடத்தில் இவர் ஒரு தனிப்பிறவி. அதே போல மற்றவர்களுக்கு உதவி செய்யும் செல்வராஜ் எல்லோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒரு செய்தி தவிர அனைத்தும்
பதிலளிநீக்குஎனக்குத் தெரியாதவை
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கொடுக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டால் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணமே வராது.
பதிலளிநீக்குகொடுப்பதற்கு தன்னிடம் என்னென்ன எல்லாம் இருக்கிறது என்பது அப்போது தான் தெரியவரும்.
ஹயுமன் ரிலேஷன்ன்ஸ் வகுப்பிலே எடுத்த ஒரு பாடம்
1994 லே நான் இருந்த பயிற்சிக் கல்லூரியிலே (guest lecture series)
https://sites.google.com/site/meenasury/
இங்கே ஆங்கிலத்தில். ஒரு பத்து அத்தியாயம் இருக்கிறது.
நேரம் கிடைத்தால் படிக்கவும்.
சுப்பு தாத்தா.
//கடந்த இருபது ஆண்டுகளில் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றுத் தந்து 1546 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் செல்வராஜ். இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் மாஸ்டர் டெக்னீஷியன். மகத்தான இந்த சாதனையை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறார்.//
பதிலளிநீக்குஇவரை எனக்கு நன்றாகத் தெரியும். BHEL SEAMLESS STEEL TUBE PROJECTS [SSTP] என்ற தனிப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
மகத்தான சேவை செய்து வருகிறார்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அனைத்து விபரங்களும் அருமை தான் என்றாலும் செல்வராஜ், தெய்வராஜ் இவர்களது தொண்டைப்பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. அசாதாரண மனித நேயம், கருணை இருந்தால் மட்டுமே இவர்களின் வழித்தடத்தை யாரும் பின்பற்ற முடியும். இவர்களுக்கு ஒரு சல்யூட்!!
பதிலளிநீக்குசெல்வராஜ் போன்றவர்கள் வடிவத்தில் கடவுளைக் காண முடிகிறது.நம்மை சுற்றி எவ்வளவு நல்ல உள்ளங்கள் வாழ்கின்றன. இவர்களைப் போன்றவர்கள்தான் இந்த உலகை வாழ்வித்துக் கொண்டிருக்கிறார்கள்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
உங்கள் வலைப பக்கத்த்தில் தமிழ்மணம் வேலை செய்வதில்லையே!
பதிலளிநீக்குபல நல்ல விஷயங்கள்.. சிலவற்றை உங்கள் முகநூலில் படித்துள்ளேன்
பதிலளிநீக்குஇவைதான் ரொம்ப நல்ல தகவல்கள். சிலவற்றை இப்போதுதான் பார்க்கிறேன். என்றாலும், அடாவடியம், சுயநலமே வாழ்வாகவும் பெரும்பாலோர் வாழும் உலகில் இதுபோலும் -
பதிலளிநீக்கு“தனக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே,
உண்டால் அம்ம இவ்வுலகம்” என்னும் புறநானூறு பாடலின் பொருள் இதுதான். நன்றி நண்பர்களே! (ஆமா, உங்க நண்பர்கள் வட்டத்துல அதாவது நீங்க “அடிக்கடி மேயுற காட்டுல” என் வலையையும் சேர்த்துக்கொள்ளக் கூடாதா நண்பர்களே? நானும் உங்க மாதிரி “பாஸிட்டிவ்”தான்!)
அனைத்தும் அருமையான பெருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குமனித நேயம் மிக்க மனிதர்கள் செயல்கள் அருமை. கண் இல்லை என்றாலும், செவியால் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தும் கண்ணப்பர் தன் நிலையை கண்டு மகிழ தாய் இல்லை என்று வருத்தபடுவது கஷ்டமாய் இருக்கிறது. அவருக்கு தாயின் ஆசிகள் எப்போதும் இருக்கும்.
பதிலளிநீக்குதெய்வராஜ ,அவர் நண்பர்கள், அவர் மனைவி எல்லோரும் அருமையான மனிதநேயம் மிக்க மனிதர்கள்.
நல்லமனிதர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இந்தியா வந்து என் தந்தை வழி பெரிய குடும்பத்தில் எதாவது கல்யாண சாப்பாடு சாப்பிட நினைத்த எனக்கு இந்த மூன்று மாதத்தில் அருளப்பட்டது என் அத்தை வழி மாப்பிள்ளையின் பதிமூன்றாம் நாள் க்ரேக்கிய சாப்பாடு ஆகும் போலிருக்கு. நான்கு நாள் முன்பு பெங்களூரில் தீடிரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என் அத்தை பெண்ணின் கணவர்.
பதிலளிநீக்குஆஸ்பத்திரியில் நல்லவர் ஒருவர் சொல்ல, என் அத்தை பெண் உடலுறுப்பு தானம் முன்பே செய்யாமல் இருந்தாலும் கண்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல.
மூன்று நாட்களாய் இரண்டு சிறு குழந்தைகள் இந்த உலகை காணமுடிகின்றது. ↚
நான் இங்கே பெங்களூரில் வாகன லைசென்ஸ் வாங்கும் இடத்திலயே கேட்க்கிறார்கள் - நீங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய தயாரா என்று. இருக்கும் வியாதிகள் போக எதாவது ஒன்று இரண்டு வேலை செய்யும் என்ற நம்பிக்கையில் "தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று எழுதி கொடுத்துவிட்டேன். ↮
←
எப்படி கல்வி வழங்குவது நல்லதோ அதைப்போல் நெருப்புக்கோ / மண்ணுக்கோ வீணாக போகும் உடல் உறுப்புக்களை மற்றவருக்கு வழங்குவது எவ்வளவு நல்லது.
அனைத்தும் பெருமையான... பெருமைப்பட வேண்டிய செய்திகள் அண்ணா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அனைத்தும் நன்று. முதல், கடைசி செய்திகளில் மனிதம் வாழ்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅத்தனையும் அருமையான செய்திகள்.... தேடித்தேடி நல்ல செய்திகளைத் தரும் உங்கள் தேடல் தொடரட்டும்.....
பதிலளிநீக்கு