1) இருப்பவர்களுக்கு அருமை தெரியாது.
இல்லாதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். இல்லாத அந்த விஷயம், அந்த
இல்லாதவர்களுக்காகக் கிடைக்கச் செய்ய ஒருவர் இருந்தால்? அந்த ஒருவர்தான்
கடந்த இருபது ஆண்டுகளில் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றுத் தந்து 1546
பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் செல்வராஜ். இவர் திருச்சி பெல்
நிறுவனத்தில் மாஸ்டர் டெக்னீஷியன். மகத்தான இந்த சாதனையை கடந்த 20
ஆண்டுகளாக செய்துவருகிறார்.
2) அரசாங்க மின்சாரத்தை நம்பாமல், சூரிய ஒளியில் ஒளி தேடும் கிராமம்.
3) தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது அனைத்தையும் சேவைக்காக செலவிட்டு வருகிறார். வேலை செய்யும் இடம் அவருக்குக் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம் இது.
செய்வது மயான உதவியாளர் வேலை. மதுரை தத்தனேரி மயானத்தில் வேலை செய்யும் ஹரி.
4) கல்விச் செல்வத்தின் அருமையை உணர்ந்து வசதியில்லா வெளிமாநிலக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் நிகழ்ச்சி ஒரு நல்ல காரியம். அதுவும் அங்கே வேலை செய்யும் (கொஞ்சம் படித்த) ஒரு தொழிலாளியையே கல்வி கற்றுத் தர வைத்திருப்பது அவருக்கும் பூஸ்ட்!
5) மரம் வளர்ப்பதின் அருமை தெரிந்திருக்கும் உங்களுக்கு. அதே போல மகிழ மரம் பற்றியும் தெரிய வேண்டுமா? மரம் வளர்ப்பதில் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி பூமிக்குச் சேவை செய்து வரும் மாறன் பற்றி....
6) குறைந்த மார்க் எடுத்து 'இந்த மார்க்கை வைத்து உன்னால் எதுவும் செய்ய முடியாது' என்று பேச்சு வாங்கிய இருளன் அதையே சவாலாக எடுத்து தனது ஊரான மீனாட்சிப்பட்டி கிராமத்தையே கல்வியறிவினால் ஒளிரச் செய்துள்ள கதை.
7) கண்தான் இல்லை. நம்பிக்கை நிறைய இருக்கு கண்ணப்பனுக்கு
8) 'நானே ஏழை, முடியாதவன். என்னால் எப்படி பொதுச் சேவை செய்ய முடியும்?' என்று பேசுபவர்கள் கூட இருக்கிறார்கள். தெய்வராஜ் வித்தியாசமானவர், பாராட்டப்படவேண்டியவர்.







