திங்கள், 7 ஏப்ரல், 2014

திங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு இருநூறு கிராம்.

நெய் இருநூறு மிலி

சர்க்கரை நானூறு கிராம்.

பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, பருப்புகளை மிக்சியில் இட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலியில் தேவையான அளவு (நூற்றைம்பது மி லி) தண்ணீர் விட்டு, காய்ச்சி, அதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, பாகாகக் காய்ச்ச வேண்டும்.

பாகு இளம் கம்பிப் பதமாக வந்ததும், (எச்சரிக்கை - பாகு முறிந்துவிடக் கூடாது, பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்கவேண்டியது அவசியம். பாகு முற்றிவிட்டால், பர்பியை உடைக்க ஸ்லெட்ஜ் ஹாமர் தேவைப்படும்!)  அரைத்த பாதாம் பருப்பை பாகுடன் கலந்து, கிளற வேண்டும்.

பாகும் பருப்பும் நன்றாகக் கலந்ததும், நெய்யை விட்டுக் கிளறவேண்டும்.

கலவை கெட்டியானதும், ஏலக்காய் மற்றும் பாதாம் எசென்ஸ் நான்கு துளிகள் விட்டுக் கிளற வேண்டும்.

ஒரு எவர்சில்வர் தட்டில், நெய் தடவி, அதன் மீது இந்தக் கலவையைக் கொட்டிப் பரத்த வேண்டும். சூடாக இருக்கும்பொழுதே, ஒரு கத்தியால், துண்டு துண்டாக வெட்ட வேண்டும்.

ஆறிய பிறகு, பாதாம் பர்பி சுவைத்து சாப்பிடலாம். ரொம்ப கெட்டியாகி விட்டால், அடிக்கடி வருகின்ற விருந்தாளிகளுக்குக் கொடுக்கலாம்!
     




12 கருத்துகள்:

  1. செஞ்சுப் பார்த்துட்டு நல்லா வந்தால் நான் சாப்பிடுறேன். சரியா வரலைன்னா உங்களுக்கு பார்சல் பண்ணிடுறேன் சகோ!

    பதிலளிநீக்கு
  2. //. பாகு முற்றிவிட்டால், பர்பியை உடைக்க ஸ்லெட்ஜ் ஹாமர் தேவைப்படும்!)//

    ஹஹஹா..

    பதிலளிநீக்கு
  3. கெட்டியாகாமல் பார்த்துக் கொள்கிறோம்:)!

    குறிப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  4. இங்கே ஒரு பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

    பதிலளிநீக்கு
  5. சமையலையும் ஜாலியாக சொல்லித்தருகிறீர்கள்! பாதாம் பர்பி சூப்பர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. எப்போதாவது ஒரு தடவையாவது வரலாம் என்றுள்ளேன்... மறந்து விடாதீர்கள்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  7. அருமையான குறிப்பு அண்ணா...
    ஊருக்கு வரும்போது செய்து பார்க்கலாம்... அப்பத்தான் நீங்க சொன்ன மாதிரி அடிக்கடி வர்ற உறவுகளுக்கு கொடுக்க முடியும்...

    பதிலளிநீக்கு
  8. பாதம்பர்பி புகைப்படம் எங்கே? வரவர திங்க என்று சொல்லி படத்தைக்கூடக் காண்பிக்க மாட்டேன் என்கிறீர்களே, எப்படி திங்கறது? இது தகுமோ, இது முறையோ?

    பதிலளிநீக்கு
  9. நீங்க லேட்டா வந்தா? எப்படிக் கிடைக்கும்?? நாங்கல்லாம் சாப்பிட்டுட்டோம் ரஞ்சனி! :))))))

    பதிலளிநீக்கு
  10. ஹை! இது நல்லாருக்கே! அடுத்த தடவை சீக்கிரம் வரேன். வந்து எல்லாவற்றையும் நானே 'திங்க'றேன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!