சமீபத்தில்
வெளியாகியுள்ள விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் இதழோடு இதழ்
பதித்து ஒரு முத்தக்காட்சி இடம் பெறுகிறதாம். முகநூலில் மற்றும் விமர்சனங்களில் பார்த்தேன்.
இது ஒன்றும் புதிதல்ல. புன்னகை மன்னன் முத்தக் காட்சியும், இன்னும் சில ஹிந்திப் பட முத்தக் காட்சிகளும் ரசிகர்கள் நினைவுக்கு வரலாம். புன்னகை மன்னன் பட முத்தக் காட்சிக்குப் பிறகு கமல் படங்களில் கொஞ்ச காலம் முத்தக் காட்சி கட்டாயக் காட்சியாக இருந்தது! அவருடன் நடித்த கதாநாயகிகள் எல்லாம் இதற்காக பயந்த காலம் இருந்தது! அல்லது பயந்தது போல பேட்டி கொடுத்த காலம் இருந்தது!
1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் பேசும் படம் 'மேனகா'. புராணங்களை விட்டு வெளிவந்து தமிழில் எடுக்கப்பட்ட முதல் சமூகப் படமாம் அது. இதே படத்துக்கு இன்னொரு 'முதல்' சிறப்பும் உண்டு. அது கடைசியில்!
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நாயகன் நாயகியை ஒரு கையால் அணைத்து, இன்னொரு கையால் அவள் வலது கையைப் பற்றி உள்ளங்கையிலிருந்து தொடங்கி தோள்பட்டை வரை முத்தமிட்டுக் கொண்டே செல்வாராம்.
அந்நாளில் இந்தக் காட்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. தீரர் சத்யமூர்த்தி கூட (அவரும் அந்தக் காலத்தில் நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளார்) இது பற்றி பத்திரிகையில் பேட்டி கொடுத்த அவர், 'தவறில்லை, ஆனால் இது மாதிரி முத்தக் காட்சியை ரொம்ப நீட்டக் கூடாது' என்ற வகையில் கருத்துத் தெரிவித்திருந்திக்கிறார்! டி கே சண்முகமும் இந்தக் காட்சியின் ஒத்திகை முதல் ரியல் ஷாட் வரை நடிக்கும்போது வரை ரொம்ப வெட்கப்பட்டதாய் ஒரு பேட்டியில் அப்போது தெரிவித்திருக்கிறார்.
பின்னாட்களில் ஒவ்வொரு படத்திலும் பாரதியார் பாடல்கள் இடம் பிடித்தன.
ஆனால் மஹாகவி பாரதியார் பாடல் ஒன்று இடம்பெற்ற முதல் திரைப்படம் 'மேனகா'தான். அதில்தான் தீரர் சத்யமூர்த்தி நெகிழ்ந்து போனாராம்.
'வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய, வாழியவே" என்ற பாரதியாரின் பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றதாம்.
முத்தத்தில் ச்சே.. மொத்தத்தில் என்ன சொல்ல வர்றீங்க? ;-)
பதிலளிநீக்குஅடேங்கப்பா...! இத்தனை கவனிப்பா...? (எங்கே தொகுத்தீர்கள்...?)
பதிலளிநீக்குகடைசியில் பாரதியை இணைத்தது சரிதான்.
பதிலளிநீக்குகன்னத்தில் முத்தமிட்டால் .. உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி... என முத்ததத்தை சிலாகித்தவன் அன்றோ அவன்.
நல்ல தொகுப்பு.
முத்தத்தை வைத்து முத்தான பகிர்வு...
பதிலளிநீக்குமேனகான்னு படம் வந்ததே உங்கள் பதிவு மூலம்தான் அறிய முடிந்தது.
பாரதி பாடல் பற்றியும் தெரிந்து கொண்டேன்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
நிச்சயம் இநு ஒரு முத்தின ஆராய்ச்சிதான். எது முத்துச்சு என்பதுதான் பிரச்சினை?
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்ம்ம். முத்துக்களான ஆராய்ச்சி.
பதிலளிநீக்குபாகவதர் படத்து ப்ளையிங் கிஸ் பற்றி முன்பு குமுதம் ஜங்ஷனில் படித்த நினைவு. மேனகா பற்றிய தகவல்கள் முற்றிலும் புதுசுதான் எனக்கு. டிவிடி கிடைக்குதான்னு தேடிப் பாக்கறேன். கிடைச்சா உங்களுக்கு...
பதிலளிநீக்குஎல்லாவற்றின் வரலாறும் உங்களுக்கு தெரிந்துள்ளது சார் :-)
பதிலளிநீக்குமுத்த வரலாறு சுவையாக இருந்தது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதமிழ் சினிமாவில் முத்த ஆராய்ச்சி என்று வேண்டுமானாலும் கூறலாம் எத்தனை நேரம் உதடுகள் இணைந்து முத்தத்தில் லயிக்க முடியும் என்பதற்கெல்லாம் ரெகார்ட் வைத்திருக்கிறார்கள் தெரியுமா. ?
பதிலளிநீக்குஅடுத்தவங்க முத்தத்தில் அப்படி என்னங்க கிக் இருக்கு ?
பதிலளிநீக்குஆ! எங்கள் ப்ளாக்ல முத்தக் காட்சியா?
பதிலளிநீக்குஅம்மாவின் முத்தம் தவிர முதலில் வாங்கிய அடுத்த முத்தம் நான்
பதிலளிநீக்கு7வயதிஸ் ஆசிரியை இடம் வாங்கி ய அனுபவம் வெப்பத்துடன் (வெக்கத்துடன் ) நினைவுக்கு வருகிறது .
அப்பாதுரையை வழிமொழிகிறேன். :)))))
பதிலளிநீக்குஇதுக்காக எவ்வளவு மெனக்கெட்டு ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்கீங்க! :P :P :P :P
நல்ல ஆராய்ச்சி.... :)))))
பதிலளிநீக்கு