திங்கள், 25 மே, 2015

'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.


தேவையான பொருட்கள்:

     1. கருப்பு எள்ளு 100 கிராம்.
     2. தேங்காய் 1/2 மூடி
     3. பூண்டு 4 பற்கள்.
  1. காய்ந்த மிளகாய் 7
  2. புளி நெல்லிக்காய் அளவு.
  1. கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு.
  2. உப்பு : தேவையான அளவு.

ஒரு வாணலியில், எள்ளை இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

நான்கு பற்கள் உரித்த பூண்டு, புளி, உப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல்  ஆகியவற்றை மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் விட்டு, நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பிறகு இந்தக் கலவையில் வறுத்த எள்ளை சேர்த்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்


எள்ளுத் துவையல் தயார்.  
  
     

13 கருத்துகள்:

  1. அம்மா செய்து தருவார்கள் எள்ளுத்துவையல்... அருமையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  2. பூண்டு, தேங்காய், கருகப்பிலை சேர்த்ததில்லை. எள்ளுப் பொடியாகப் பண்ணிச் சாப்பிடுவோம்.:)

    பதிலளிநீக்கு
  3. அருமை. தேங்காய் சேர்க்காமல் செய்வது வழக்கம்.

    பதிலளிநீக்கு

  4. சத்தானது எனக்குப்பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  5. குழம்பு வைக்க முடியாத நாட்களில் சோற்றோடு பிசந்து சாப்பிடலாம்

    பதிலளிநீக்கு
  6. எள்ளுப் பொடி போட்டு சாதம் சாப்பிட்டதுண்டு.

    எள்ளு துவையல் - சாப்பிட்டதில்லை. செய்து பார்த்துட வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. எள்ளுப் பொடி போட்டு சாதம் சாப்பிட்டதுண்டு.

    எள்ளு துவையல் - சாப்பிட்டதில்லை. செய்து பார்த்துட வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  9. எள்ளுத் தொகையல் சுவையாக இருக்கும்னு
    நினைக்கிறேன். எள்ளுப்பொடி செய்வதுண்டு. பூண்டு போட்ட துகையலை இப்பொதுதாகன் பார்க்கிறேன். நன்றி எபி

    பதிலளிநீக்கு
  10. செய்வதுண்டு.....மிகவும் பிடிக்கும்....

    பதிலளிநீக்கு
  11. தயார் பண்ணி ருசி பார்தேன் அமிர்தம் போல் இருந்தது

    பதிலளிநீக்கு
  12. மேற்சொன்ன விதத்தில் அரைத்து எள்ளுக் குழம்பாக சிலர் வைப்பதாக சமீபத்தில் படித்தேன். :) முயற்சிப்போம். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!