செவ்வாய், 12 மே, 2015

விதியை வெல்ல இயலவில்லை என்றால் என்ன பயன்?


விதி வழியே வாழ்க்கை அமைகிறது என்றால் பூஜைகளும், பரிகாரங்களும் எதற்கு?  விதியை வெல்ல இயலவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்?
          

                                                                                                                                                                          
                                                                                   Image result for ramanar images
 
நாம் விதி வழியே அனுபவிக்க வேண்டியவற்றை பிராரப்த கர்மா ஒட்டியே, இறைவன் நமது வாழ்க்கையை  நிர்ணயிக்கிறான்.  இது அமைவது நமது முந்தைய பிறவியில் செய்த நன்மை - தீமைகளைப் பொறுத்தது.  இதை மீறி எதுவும் நடப்பதில்லை.

ஏனென்றால் இது ஒரு திட்டமிட்ட கணக்கு.  இந்த 'பாலன்ஸ் ஷீட்' டை மாற்றினால் கணக்கு சரிப்பட்டு வராது! எது நடக்க முடியாதோ, அதற்கு நாம் பிரயாசை எடுத்துக் கொண்டாலும் நடைபெறாது.  எது நடக்க வேண்டுமோ, அது நாம் எவ்வளவு தூரம் தடுத்தாலும் நடந்தே தீரும்.

ஓர் இயந்திரத்தை நிறுவும்போதே அது இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அமைத்து விடுகிறோம்.  அதை மாற்றிச் செய்ய இயந்திரத்துக்கு அதிகாரம் இல்லை.  அதைப்போல நாம் வந்து பிறக்கும்போதே நம்மால் இன்னின்ன நடக்கவேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானித்து விடுகிறான்.  அதிலிருந்து நாம் மாறுபட முடியாது.

மனிதன் பக்தியினால் இன்ன செய்கை பிராரப்தம், இன்ன செய்கை அப்படி அல்ல என்பதை உணரும் பக்குவம் பெறுகிறான்.  அதன் மூலம் அவன் மேலும் தீயனவற்றில் ஈடுபட்டு, அடுத்த பிறவிக்கும் சுமைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.  அப்படி மனப்பக்குவம் பெற, இது உதவும்.  விளைவுகளின் சுகமும் துக்கமும் அப்படிப்பட்டவனைப் பாதிப்பதும் இல்லை. 
 
                                                                                                              (Teachings of Ramana என்ற புத்தகத்திலிருந்து)
 
 
 
நைவேத்தியம் செய்தால் பகவான் சாப்பிடுகிறாரா?  பின் உணவையும் உண்பனவற்றையும் நைவேத்தியம் செய்வது எதற்கு?


                                                                                    Image result for swami ramakrishna images
 
நிவேதனம் என்றால் சுவாமியைச் சாப்பிடச் செய்வது என்பது பொருளல்ல.  'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்று பொருள். 

"பகவானே, இந்த வேளைக்கு உன் கருணையால் எனக்கு இந்த உணவு கிடைத்திருக்கிறது.  அதற்கு என்னுடைய நன்றி!" என்று அறிவித்து விட்டு, கடவுளின் நினைவுடன், நன்றி உணர்வுடன் உண்ண வேண்டும்.  நமக்குக் கிடைப்பது எல்லாமே பகவான் கொடுத்தது.  அதை அவரிடமே காட்டி, நன்றி சொல்லி அனுபவிப்பதில் தவறு என்ன?
 
 
                                                                                                                                              (பகவான் ராமகிருஷ்ணர்)

17 கருத்துகள்:

  1. அழகான பதிவு. அடிக்கடி வந்து போகும் சிந்தனைகள். நிவேதனம் தினசரி செய்யும் தாங்க்ஸ் கிவிங்க்.

    பதிலளிநீக்கு

  2. நல்ல சிந்தனைக்குறிய விடயங்கள் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. பரிகார யாகம் என்று நடத்துவதால் யாருக்கு லாபம் என்பதை ரமணரின் வாக்கைப் படித்த பிறகாவது ,நம்புபவர்கள் சிந்திக்க வேண்டும் !

    பதிலளிநீக்கு

  4. "பகவானே, இந்த வேளைக்கு உன் கருணையால் எனக்கு இந்த உணவு கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுடைய நன்றி!" என்று அறிவித்து விட்டு, கடவுளின் நினைவுடன், நன்றி உணர்வுடன் உண்ண வேண்டும். நமக்குக் கிடைப்பது எல்லாமே பகவான் கொடுத்தது. அதை அவரிடமே காட்டி, நன்றி சொல்லி அனுபவிப்பதில் தவறு என்ன?//

    உண்மை தான். நல்ல் பதிவு.

    பதிலளிநீக்கு
  5. பரிகாரங்கள், பூஜைகள், வழிபாடுகள், இறை நம்பிக்கை போன்றவை குறித்தே இப்போது பேச்சு. கடவுளை நம்புபவர்கள் கடவுளையும் சேர்த்து அயோக்கியர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் பார்த்தும், கேட்டும் அவர் சிரிச்சுட்டு இருக்கார். :))))

    பதிலளிநீக்கு
  6. நற்சிந்தனைகளை வளர்க்க உதவும் பதிவு நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  7. சென்ற பிறவியில் மனிதன் தவறு செய்தமைக்கான, இப்பிறவியல் தண்டிக்கப் படுகிறான் என்றால்,
    சென்ற பிறவியில் செய்த தவறுக்குக் காரணம், இறைவன் வகுத்த விதிதானே

    நண்பரே Word verification and select the picture என ஒவ்வொன்றாய் வருகின்றது, கருத்துரை வழங்கும்போது, தயவு செய்து இவற்றை நீக்கவும்

    பதிலளிநீக்கு
  8. அருமை...2

    கிடைக்கும் அனுபவம் பொறுத்து மனப்பக்குவம்...

    பதிலளிநீக்கு
  9. Nivedhayaami
    Ethai nin arlaal adaintheno athaiye unakku arppikkiren endru soundarya lahari kadaisi stanza vile aadhi sankarar kporukiraar.
    Athanaal nivedhanam or naivedhyam oru saappidum vasthuvaakaththaan irukka vendum enbathillai.
    Aathma nivedhanam is surrendering oneself
    Is also an extreme kind of naivedyam.
    Whaever i eat drink is of You by You and in fact
    Aham cha brumma annam cha brumma bhoktha cha brimma enbathuve realised knowledge.
    Quotes are apt .
    Subbu thatha
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. நைவேத்தியத்தின் பொருள் உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. ஒரு சிறுகதை பகிர்கிறேன் “இரு நண்பர்கள் . ஒருவன் எல்லாம் விதிப்படி என்பவன் இன்னொருவன் விதி என்பதே நம் கையில் என்பவன் இருவரும் தெருவில் போகும் போது ஒரு விபத்து நேர்கிறது. விபத்துக் குள்ளானவன் உயிருக்குப் போராடுகிறான் விதிப்படி என நினைப்பவான் பேசாமல் பார்த்து கொண்டிருக்கிறான் மற்றவன் உடன் உதவி செய்து அவனை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துகிறான் அவனும் பிழைத்து விடுகிறான் விதி நம் கையில் என்பவன் ’ நான் உதவி இருக்காவிட்டால் அவன் பிழைத்திருக்க மாட்டான் ‘என்றான். விதியை நம்புபவன் விதிப்படி அவ்னுக்கு விபத்து நேர்ந்திருக்கிறது. விதிப்படி நீ அவனை சிகிச்சைக்கு உட்படுத்தினாய் விதிப்படி அவன் பிழைத்துக் கொண்டான்; என்றான்
    யார் எப்படி என்பது அவரவர் புத்திக்கு எட்டியதே. வாழ்த்துக்கள்
    இன்னொரு கதை. ஒரு சிறுவன் ஒரு தட்டானைப் பிடித்து அதன் சிறகைப் பிய்த்து விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு முதியவர் அடுத்த ஜன்மத்தில் நீ தட்டானாகப் பிறந்து இந்த தட்டான் சிறுவனாக உன்னைத் துன்புறுத்தும் என்றார் அதற்கு அந்தச் சிறுவன் போன ஜன்மத்தில் நான் தட்டானாக இருந்து இந்த தட்டான் சிறுவனாக இருந்து என்னைத் துன்புறுத்தி இருக்கும் என்றானாம் . இது எப்படி இருக்கு.?

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. நிவேதனம் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரின் வார்த்தைகள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. நன்றி வல்லிம்மா.

    நன்றி கில்லர்ஜி.

    நன்றி பகவான்ஜி.

    நன்றி உமையாள் காயத்ரி.

    நன்றி கீதா மேடம்.


    நன்றி இனியா.

    நன்றி கரந்தை ஜெயக்குமார். வர்ட் வெரிபிகேஷன் பற்றி எல்லாம் கவலைப் படாமல் கருத்துரைக்கு பப்ளிஷ் க்ளிக் செய்யுங்கள் நண்பரே. அவை நாங்கள் வைத்தது அல்ல. தானாகவே நிறைய ப்ளாக்குகளில் காணப் படுவதுதான். நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் கமெண்ட் எழுதி பப்ளிஷ் க்ளிக் செய்து விடுகிறேன்!

    நன்றி DD.

    நன்றி சுப்பு தாத்தா.

    நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நல்ல சிறுகதை. நன்றி ஜிஎம்பி ஸார்.

    நன்றி யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.

    நன்றி துளசிஜி.

    பதிலளிநீக்கு
  15. நல்ல கருத்துக்கள்! எதும் அவரவர் பனநிலைக்கு எற்ப அமையும்!

    பதிலளிநீக்கு
  16. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.
    கடன் கொடுத்தால் திரும்ப பெறப்படவேண்டும்.

    கடன் வாங்கியவர் அதை ஒழுங்காக திருப்பி தர வேண்டும்.

    ஆனால் பணத்தை தானமாக அளித்தால்
    திரும்ப கேட்கவேண்டிய அவசியமில்லை.

    வாங்குபவரும் திருப்பி தர வேண்டிய அவசியமில்லை.

    அதைபோல்தான் ஒவ்வொரு செயலும்.

    செய்யும் நோக்கத்தைப் பொறுத்து
    அது நம்மை சிக்கலில் மாட்டிவிடுகிறது அல்லது பந்தத்தில் தள்ளுகிறது.

    தான் ஒரு செயலை செய்கிறோம் என்ற அகந்தையின்றி
    ஒரு செயலை செய்தால் /இறைவன் கையில் நாம் கருவியாய் செயல்படுகிறோம்
    என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் அந்த செயல் நம்மை பாதிக்காது.
    நாம் கர்ம வலையில் சிக்கமாட்டோம்.

    கர்ம வலையில் சிக்கி நாம் துன்புறுவதர்க்கு
    காரணம் நாம்தான் என்பதை உணரவேண்டும்.

    இறைவனை குறை கூறுவதில் பயன் இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!