ஞாயிறு, 10 மே, 2015

ஞாயிறு 305 :: பரிசுப்போட்டி.

                   
படத்தில் நீங்கள் காணும் பொருட்களில் ஏதேனும் ஐந்தை இணைத்து, ஒரு சிறுகதை அல்லது கவிதை அல்லது நகைச்சுவையாக பத்து வரிகள் எழுதுங்கள். 

பின்னூட்டமாக அல்லது kggouthaman@gmail.com  என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! 

பின்னூட்டங்கள்  எங்கள் பார்வைக்கு வந்து, பிறகு வெளியாகும்.  

வித்தியாசமான கோணத்தில், சுவைபட  எழுதுபவர்களுக்கு, பரிசு கிடைக்க வாய்ப்பு  உண்டு!!  

(பரிசு என்னவா?  இப்போ சொல்லமாட்டோம்! ) 
                

                   

18 கருத்துகள்:

  1. // (பரிசு என்னவா? இப்போ சொல்லமாட்டோம்! ) //


    oh! no need to tell. It will be several 'points'.

    பதிலளிநீக்கு
  2. முப்பது பர்சென்ட் தள்ளுபடியா !!
    வேண்டாம்.
    நூறு பர்சென்டும் தள்ளுபடி என
    நீ
    என்று சொல்வாய் என
    எதிர்பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  3. அடியே கோமளம் இந்த தோட்டத்தில் உள்ள குப்பையை எல்லாம் சுத்தப்படுத்தி செடி, கொடி எல்லாம் அகற்றி விட்டு இடத்தை சமப்படுத்தி விற்று விட்டால் பணத்தை வைத்து நகை வாங்கலாம் 30 சதவீதம் தள்ளுபடியாம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே.

    நல்ல பரிசு பெறும் வாய்ப்புடன் ௬டிய புகைப்படம். இதில் வெற்றி பெறுபவவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரின் திறமையை ஊக்குவிப்பதற்கு தங்களுக்கு என் நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே.

    நல்ல வாய்ப்புடன் ௬டிய பரிசு போட்டோ.

    விரிவாக எழுதி போட்ட ரெண்டு கருத்துரைகளும் இப்படி காணாது போய் விட்டதே.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. படம் பார் பாடம் படி என்று
    சின்ன வகுப்பில படிப்பிச்சாங்க
    படம் பார் படைத்துத் தா என்று
    எங்கள் Blog ஆளுங்க கேட்கிறாங்க
    எழுதுறேன் முடிஞ்சாக் கீழே பாருங்க...

    அடைத்து வைத்திருக்கிற வேலிக்கப்பால்
    அடுக்கி இருப்பதோ உந்துருளிகள்...
    அடைத்து வைத்திருக்கிற வேலிக்கிப்பால்
    அடுக்காமல் குவிகிறது குப்பை...
    குப்பையை வீசுவோர் பார்வைக்கு
    வேலி மேலே அடுக்கி இருப்பதோ
    தலைக் காப்பு தொப்பிகள் தானே...
    தலைக்கு மேலே விளம்பரப் பலகை - அதில்
    கணினி வடிவைப்புக்கு 100 புள்ளி - அதன்
    அழகைக் கீழிருக்கும் குப்பை கெடுக்கிறதே!

    பதிலளிநீக்கு
  8. போட்டி முடிவுகள் எப்போது?

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் பபங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. தரம் சொல்லி விற்பதில்லை - இங்கு
    தள்ளுபடி சொல்லி விற்கின்றார்
    பொருளைக் காண்பித்து விற்பதில்லை
    பொம்மையாய் பெண்மையைக் காண்பிக்கிறார்
    வீதியில் மட்டுமா குப்பை
    வீண்மனத்திலும் அல்லவோ குப்பை?
    காசு வங்கியில் சேர்ந்தால்
    பணம் பெருகும்
    மாசு நிறைய சேர்ந்தால்
    மனம் அழுகும்
    வண்டியில் செல்கையில்
    காக்குமே தலைக்கவசம்
    வாழ்க்கையில் நிதானம்
    வந்தால் உலகே உன்வசம்
    எத்தனை செய்திகள்
    சொல்லுது இப்படம்
    எங்கள் ப்ளாகுக்கு
    இக்கவிதை(?) சமர்ப்பணம்

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. போட்டியா வைச்சிருந்தீங்க? யாரு அது பெசொவி? சொ.வினைதீர்த்தான் அப்படினு ஒரு நண்பர் இருக்கார். ஆனால் அவர் கவிதை எழுதிப் பார்க்கலை! :)

    பதிலளிநீக்கு
  13. கருத்து எழுதினேன், போகலையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!