சனி, 9 மே, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) சென்ற வாரம் 'தாதா'.  இந்த வாரம் சச்சின்!
 

 
2) நம்மை நாம் பாராட்டிக் கொள்ளா விட்டால் வேறு யார் பாராட்டுவார்கள்?  சபாஷ் இந்தியா (ராணுவம்).  அமெரிக்காவும் 'இந்தியாவின் தலைமைப் பண்பு பாராட்டுக்குரியது' என்று சொல்லியிருப்பது இதற்குமுன் வந்த செய்தி.
 

 
3) நம்மால் (என்னால்) செய்ய முடியா விட்டாலும் செய்பவர்களைப் பாராட்ட வேண்டும். பி ஈ படித்திருந்தாலும் இயற்கை விவசாயம் செய்யும் சிவகுமார்.
 

 
4) வாழ்வைத் தெளிவாக பயமில்லாமல் எதிர்கொள்ளும் ஐந்து சாமான்யப் பெண்கள் பற்றி பிருந்தா சீனிவாசன் கட்டுரை.
 


 
5)  லோட்டஸ் டிவிக்குப் பாராட்டுகள்.  அதன் எம்டி செல்வகுமார் அவர்களுக்குப் பாராட்டுகள்.  11 வயது   ஸ்ரீராமானுஜத்தின் தன்னம்பிக்கைப் பாராட்டுகள்.
 

 
6) சித்தார்த்தின் நம்பிக்கையும், முயற்சியும் அவரைக் காக்கட்டும்.  வாழ்க அவரின் உதவும் மனம்.
 

 
7) 10 மில்லியன் மரங்கள் நட்ட இவரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கும் நினைவும் இருக்கிறது.  எனினும் இங்கு படித்தபோது மறுபடிச் சொன்னாலும் தப்பில்லை என்று பகிர்கிறேன்.  இது போன்ற மனிதர்களைப் பற்றி எத்தனை முறைப் படித்தாலும் தகும்.
 

 
8) அரசுப்பள்ளியில் படித்துச் சாதனை.  அரசுப்பள்ளியில் படித்தால் இப்படி வரமுடியுமா என்ற நிலை சற்றே கவலையாக இல்லை?  கஷ்டம் தெரிந்தவர்கள்தான், அதை உணர்ந்தவர்கள்தான் முன்னேறுகிறார்கள் என்பதற்கு நாகேந்திரன் நல்ல உதாரணம்.
 

 
9) முயற்சியைப் பாராட்டுவோம்.  சினிமாப் பார்த்துத் தீயதைப் பயிலும் மாணவர்களுக்கிடையே இது போல முயற்சிப்பவர்களைப் பாராட்டலாம்.
 

 
10) நம் மூத்தோர் செய்ததுதான்.  காலத்துக்கு ஏற்றபடி டெக்னிகலாக மாற்றியுள்ளார் டாக்டர் ராஜ்வன்ஷி.  ஒரு சொட்டு  வீணாகாமல் சூரிய ஒளியில் குடி நீர்.
 


 
11) 'ரமணா' பட ஸ்டைல்! இதுவும் சினிமா விளைவுதான்.  ஆனால் வரவேற்கத் தகுந்தது.  முதலில் கொடுத்துப் பழக்கியவர்களும் இவர்கள்தான்!  ஆனால் இனி அதிரடி நடவடிக்கைதான் சரி.  இதுபோல ஒவ்வொரு துறையுமல்ல, ஒவ்வொருவருமே செய்யலாம்.
 


12) நந்த்லால் மாஸ்டரின் சாதனை.


14 கருத்துகள்:

  1. 10 மில்லியன் மர மனிதர் + இயற்கை விவசாய சிவகுமார் அவர்கள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. பாராட்டிற்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்
    போற்றுவோம்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

  3. தகவல் களஞ்சியம் அனைத்தும் அருமை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜீ சொல்வது போல வாரம்தோறும் தாங்கள் பதிவு
    தகவல் களஞ்சியம் தான்!ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
  5. பாசிடிவ் எனர்ஜி தரும் பதிவு. அனைவருக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு முத்துக்களும் அருமையாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான செய்திகள்! நம்பிக்கை ஊட்டுவதோடு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்றது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அனைத்துமே அருமையான செய்திகள். இவர்களை பாராட்டுவதுடன் போற்றுவதுடன் நில்லாது ஒவ்வொருத்தரிடமிருந்தும் ஒரு சிறப்பான விஷயத்தைக்கற்றுக்கொள்கிற. பின்பற்றுகிற வாய்ப்பை தொடர்ந்து 'பாஸிடிவ் செய்திகள்' மூலமாகத்தரும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! இனிய பாராட்டுக்கள் உங்களுக்கும்!

    பதிலளிநீக்கு
  9. சிவக்குமார் அவர்களைப் போய் பார்த்து வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. 1.சச்சின் செய்கை பாராட்டிற்குரியது .
    2.நம் இந்திய ராணுவத்திற்கு ஒரு சல்யுட் .
    3.விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிவக்குமார்.
    4.ஐந்து பெண்கள் மற்றும் ஸ்ரீராமானுஜன் இவர்களின் தன்னம்பிக்கை பாராட்ட வேண்டிய ஒன்று.
    இது போன்ற தன்னம்பிக்கை செய்திகளைப் படிக்கும் போது கண்டிப்பாக மனதில் நம்பிக்கைத் துளிர் விடுகிறது.
    பாசிடிவ் செய்தியாளர்களுக்கு என் பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  11. எல்லா செய்திகளும் அருமை.
    சச்சினிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே.

    அனைவரின் சேவைகளும் செயல்களும், ஒவ்வொரு விதத்தில் பாராட்டுக்குரியவை. தன்னம்பிக்கையுடன் செயல்படும் அனைவரையும் மனதார பாராட்டுவோம்.வாழ்த்துவோம்.இவர்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய தங்களுக்கு வாழ்த்துக்களுடன நன்றிகளும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. நேர்மறைச் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியைத் தந்தன.நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. இயற்கை விவசாயம் செய்யும் திரு சிவக்குமார் மிகவும் பாராட்டிற்குரியவர்.

    அனைத்து தகவல்களும் தன்னம்பிக்கை ஊட்டும் தகவல்கள் நாம் கற்க நிறையவே இருக்கின்றது...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!