ஒன்று :
தமிழ்ப் படம். சுமார் எழுநூற்றுப் பதினொரு மாதங்களுக்கு முன்பு வந்த சூப்பர் ஹிட் படம்.
ந . தி. கள் நடித்தது ஆறெழுத்துப் படம். எது?
இரண்டு :
இங்கே உள்ள படங்களைப் பாருங்கள். இந்தப் படங்கள் மூலம், ஒரு தமிழ்ப் படத்தின் (மூன்று வார்த்தைகள் கொண்ட தமிழ்ப் படம்) பெயரைக் குறிப்பிட்டிருக்கிறோம். படத்தின் பெயர் என்ன?
மூன்று:
கோடிட்ட இடத்தில் இருக்கவேண்டிய ஆங்கில வார்த்தை எது?
-------------------------- , ENGINEERED, DOCTORED.
3) Mastered (pg degree)
பதிலளிநீக்குBachelored (graduate)
first Navarathiri, third I agree with Madhavan! for second, I will think and tell.
பதிலளிநீக்கு1) அமர தீபம் 2) அப்றம் சொல்றேன். 3) LAWYERED
பதிலளிநீக்குநான் ஜிங்குனு போயிட்டு, ஜங்குன்னு வரத்துக்குள்ள மூணு பதில்கள் வந்துள்ளன.
பதிலளிநீக்குமாதவன் முதல் முயற்சியாளர். சிந்தனைக்கு வாழ்த்துகள். வில்லங்க கேள்வி என்பதால் இன்னும் கொஞ்சம் சிந்தனைப் பரப்பை விரிவுப் படுத்துங்கள்.
கீ சா - நவராத்திரி படம் வெளிவந்து இன்னும் அறுநூற்று இருபத்து ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை!!!
மாதவன் செய்த முயற்சியை விட பால கணேஷ் பதில் எங்கள் விடைக்கு அருகே உள்ளது.
பால கணேஷ் சார்! அமர தீபம் படம் வெளிவந்து, இன்றோடு எழுநூற்று இருபத்தொன்று மாதங்கள் ஆகிவிட்டன. மேலும் அந்தப் படத்தில் இரு ந தி களோடு, ஒரு நா பே யும் நடித்துள்ளது! உங்கள் முயற்சி அதிசயிக்க வைத்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால், சரியான பதிலைக் கண்டுபிடிக்கும் முதல் ஆளாக நீங்க இருப்பீங்க.
அப்றம் சொல்றேன் என்று ஒரு படம் வந்துள்ளதா!
மூன்றாவது பதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. மற்ற இரண்டு சொற்களுக்கும் ஒரு மறைவான பொருள் உண்டு. அதை வைத்து, முதல் சொல்லைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். Doctor, engineer, lawyer very good and logical thinking. Very good.
அட ஆண்டவா... ந.தி அப்டின்னு சுருக்குனாக் கூட பரவால்ல புரிஞ்சுது. நா.பே. அப்டின்ற சுருக்கத்த நிறையப் பேர் நாயே பேயேன்னு புரிஞ்சுகிட்டு ஙேன் முழிக்க வாய்ப்பிருக்கு கேஜிஜி ஜி. நாட்டியப் பேரொளின்னு முழுசாவே சொல்லிரலாமே.. ஹி... ஹி.. ஹி...
பதிலளிநீக்குரைட்டு. அமரதீபம் இல்லன்னதுமே எனக்குப் புரிஞ்சிட்டுது கேஜிஜி சார். முதலாவது புதிரின் விடையாது நிச்சயம் வணங்காமுடி என்கிற படம்தான். ஜிவாஜியார் அசத்திருப்பார். (கூரைய தாழ்வா வெச்சா அவன் தலய குனிஞ்சு வணங்கித்தான ஆகணும் என்று ஒரு ஐடியா செய்ய, இவர் கால மொதல்ல வெச்சு அப்பறம் உடம்ப உள்ள கொண்டாருவார். சூப்பரா இருக்கும்.. ஹாஹாஹா...)
பதிலளிநீக்குபால கணேஷ் சூப்பர்! ஒன்று ஓ கே!
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்க பதிலை ஏத்துக்க மாட்டேன்.போங்கு ஆட்டம். நேத்திக்கு முகநூலில் சரினு சொல்லிட்டு இப்போப் பொற்கிழி கொடுக்கணும்னதும் கையை இழுத்துக்கறீங்க! ஒத்துக்க மாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
பதிலளிநீக்குஇரண்டாவதுக்கான பதில், அம்மா, அக்கா, அரண், அரசு, அமுதா, அமுதே, அருள், அல்லி, அவள், அவன், அழகி(அநேகமா இதானோ) அழகு, அன்பு, அன்னை(இதாவும் இருக்கலாம்), ஆத்மா, இந்து, இரவு, இவன், இளமை, இன்று, ஈட்டி, உதயா, உயிர், உரிமை, ஊட்டி, எதிரி, கங்கா, கடமை, கரடி, கர்ணா, கல்கி, கவிதா, கவிதை, கழுகு, களம்,கனவு, கஜினி, காதல், காதலி, காலவா இப்போதைக்கு இது மட்டும். இன்னும் தொடருமே!
பதிலளிநீக்கும்ம்ம்ம், அந்தப் படங்கள் சம்பந்தமான மூன்றெழுத்துப் பெயர் மனதிலே இருக்கு. வரலையே! :(
பதிலளிநீக்குகாலவா, காவல், குத்து, கில்லி, காவேரி, குட்டி, குடிசை, கைராசி, குமாரி, குஸ்தி, கொக்கி, கொலுசு, கோவில், சக்தி, சத்யா, சபரி, சபாஷ், சவால், சாட்சி, சாந்தா, சாந்தி, சாரதா,, சித்தி, சிவன், சின்னா, சிஷ்யா, சீமான், சுதேசி, சுபாஷ், சுஜாதா, சூலம். ஹிஹிஹி,நீங்க சூலத்தை எடுத்துட்டு வரதுக்குள்ளே மீ த எச்கேப்பு! :)
பதிலளிநீக்கு??????
பதிலளிநீக்குKindly note that I strongly object 2/3 reservation for cina in this section. Don't become tamil tv channels' diwali spl. program to cover only cine field attractions. I may stop reading this section.
பதிலளிநீக்குOr you modify the name to'budhan cinema puthir'. I can't challenge, then.
பதிலளிநீக்குபாசமலர்,
பதிலளிநீக்கு2,மூன்றெழுத்து.
3 ,Graduated.
2, நான் கண்ட சொர்க்கம்,
பதிலளிநீக்குபெரிய இடத்துப் பெண்,
நீங்களே சொல்லுங்க.
சற்றே கவனியுங்கள். இரண்டாம் புதிர்க் கேள்வி மூன்று எழுத்துகள் அல்ல -- மூன்று வார்த்தைகள். 3 words. Each picture denotes a word.
பதிலளிநீக்குமாதவன் சினிமா கேள்விகள் இல்லை என்றால், நீங்களும் ஆ வி யும் மட்டும்தான் இங்கே வருவீர்கள். யாருமே இல்லாத கடையில் நான் டீ ஆற்ற வேண்டுமா?
பதிலளிநீக்குWhy 2/3 reservation?
நீக்குவல்லிம்மா இரண்டாவது கேள்வியின் விடைக்கு மிக அருகே சென்றுள்ளார்கள்.
பதிலளிநீக்குகீ சா மேடம்! முகநூலில் நான் சரி என்று சொல்லவில்லை.
பதிலளிநீக்குவேறொரு கண்டிஷன் இருக்கு. நவராத்திரி அதற்கு சரிப்பட்டு வராது என்றுதான் சொல்லியிருக்கேன்.
Geetha Sambasivam அப்பாடா கண்டு பிடிச்சுட்டேனே, நவராத்திரி!
Like · Reply · 17 hrs
Geetha Sambasivam
Geetha Sambasivam செரியா?
Like · Reply · 17 hrs
Geetha Sambasivam
Geetha Sambasivam மூளையைக் கசக்கிக் கொண்டு கண்டு பிடிச்சிருக்கேனாக்கும்! (ஹிஹிஹி, இல்லாத ஒண்ணை இருக்கிறதாச் சொன்னதைக் கண்டுக்காதீங்க) பொற்கிழி எனக்கே எனக்கு!
Like · Reply · 17 hrs
K G Gouthaman
K G Gouthaman நல்ல பதில். ஆனால் அந்தக் கேள்வியில் வேறொரு கண்டிஷன் இருக்கு. அது நாளைக்கு ........... பதிவில் பார்க்கவும்!!!
இரண்டாம் புதிருக்கு பதில் படம் காசே தான் கடவுளடா! சரியா?
பதிலளிநீக்கு1. choiceil vittu vitten
பதிலளிநீக்கு2. Naan Petra Selvam
3. Audited
பானுமதி அவர்கள் ஒன்று சரியான விடை.
பதிலளிநீக்கு1. வணங்காமுடி (ஃபேஸ்புக் உபயத்தில் இந்த பதில்)
பதிலளிநீக்கு2. யோசிச்சிங்
3. Forged (doctored and engineered have the same meaning)
நாசமாப் போச்சு... திருவோடுன்னா பெற்றன்னு அர்த்தமா..? நான் + செல்வம் இடையில பிச்சை, திருவோடு, தானம் தருமம்னு லிங்க்கே வரலையேன்னு யோசிச்சுகிட்ருந்தேன். இது போங்காட்டம் ஜி. செல்லாது, செல்லாது....
பதிலளிநீக்குஅதானே, பால கணேஷைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். திருவோடு தான் என்னையும் குழப்பி விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்கு1. VANANGA MUDI/MAHADEVI
பதிலளிநீக்கு3.LECTURED
யோசித்து விட்டு வந்து பதில் தருவேன்
பதிலளிநீக்குகற்கை நன்றே, கற்கை நன்றே,
பதிலளிநீக்குபிச்சைப் புகினும் கற்கை நன்றே!
கற்றதும், பெற்றதும் ...
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி .....
இந்த மூன்றையும் ஒரு கிராஃப் சீட்டில் பிளாட் செய்தால், பிச்சைப் பாத்திரத்திற்கும், 'பெற்ற' என்ற சொல்லுக்கும் இடையில் உள்ள சம்பந்தம் விளங்கும்!
நிற்க!
மூன்றாவது கேள்விக்கு இன்னும் சரியான பதில்
வரவில்லை.
பெசொவி E க்கு முன்னாடி D வரும் என்பதை மறந்துவிட்டார். F கோவிச்சுக்கிட்டுப் போயிடுச்சு என்பதையும் அவர் கடந்த வாரப் புதிரில் மிஸ் பண்ணிட்டார்.
Bhanumathy Venkateswaran அவ்வ்வ்வ்வ்.... மகாதேவி வாத்யார் நடிச்ச படம்ங்கோ...
பதிலளிநீக்குஎனக்கும் நடுவில் இருப்பது என்னவென்றே தெரியவில்லை. முதல் படம் 'நான்' கடைசி படம் 'செல்வம்' நானில் ஆரம்பித்து செய்வதில் முடிய வேண்டும் என்று யோசித்து குன்ஸாக அடித்து விட்டேன், சரியாக அமைந்து விட்டது போலிருக்கிறது...
பதிலளிநீக்கு//மகாதேவி வாத்யார் நடிச்ச படம்ங்கோ//
பதிலளிநீக்குஅதுமட்டுமா? எண்ணிப்பார்த்தால் நாலு எழுத்துதான் வருது!
நவராத்திரி???
பதிலளிநீக்குநான் பெற்ற செல்வம்
ம்ம்ம்ம்ம் சார்ட்டட்?????
3,
பதிலளிநீக்குTampered ,Engineered ,Doctored
Genetically Modified ,Engineered ,Doctored
Sarithaan. Vikramaathithyan vedhaalam. maaathiri puriyalai. vayasaakittathu KGG.SIR.
பதிலளிநீக்குFortified ,Engineered ,Doctored ..
பதிலளிநீக்குரிவர்ஸில் வாசிச்சா F வருதே அதான் :) F கானாம போயிருந்தா GENETICALLY MODIFIED வரும்
Is it FALCIFIED meaning doctored or engineered etc.
பதிலளிநீக்குe.g. Falcified document.
நல்லது.....
பதிலளிநீக்கு3) cooked
பதிலளிநீக்கு3) cooked
பதிலளிநீக்குMohan! Super! Correct answer.
பதிலளிநீக்குமாதவன் சார், நாம ஏமாந்து போகக் கூடாதுன்னு தான் அதிலும் ஒரு கணக்கை வச்சிருக்கார்.
பதிலளிநீக்குஆனா சத்தியமா சொல்றேன், கடைசி கேள்வி தவிர என் வயசு ஆட்கள் யாரும் இதை யாரும் நெருங்கக் கூட முடியாத நெருப்புடாவாக இருக்கிறது. நதி.க.ள். // நா.பே// நோ வே!
பதிலளிநீக்குஇந்த மூன்றையும் ஒரு கிராஃப் சீட்டில் பிளாட் செய்தால், பிச்சைப் பாத்திரத்திற்கும், 'பெற்ற' என்ற சொல்லுக்கும் இடையில் உள்ள சம்பந்தம் விளங்கும்!
நிற்க!
//
சார், போட்டி முடிஞ்சிடுச்சே, இப்போ உட்காரலாமா? ;)
அப்பாக்களின் உலகில் மகள் | பலம் பொருந்திய பெண் | வினோதமான அப்பா மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் | The hard times of women
பதிலளிநீக்கு