தவலடை
என்றதும், நிறையபேர், ஆமவடையையும் (ஆமாம். தவலடைன்னு போர்டுல பேர் போட்டு,
ஒரு ஹோட்டலில் ஆமவடையைக் கொண்டுவந்து போட்டான்), தவலை போன்ற உருளியில்
அடைபோல் தட்டி
எடுப்பதையும் தவலடை என்று சொல்கின்றனர். கேட்டால், தவலை அடை என்று
பரிமேலழகர் உரை எழுதுகின்றனர்.
திருநவேலி
ஜங்க்ஷனில், என் அம்மாவின் பிறந்த வீடு இருந்தது. 1970கள்ல, தெருவுக்கு
இரண்டு வீட்டில் இந்தமாதிரி, நொறுக்குத் தீனிகள் மாலை 3 மணிக்கு
ரெடியாகறமாதிரி, செய்வார்கள்.
அதில், மிக்சர், காராசேவு, தவலடை போன்றவை அடக்கம். அதுக்கு அப்புறம்தான்,
நொறுக்குத்தீனிக் கடைகள் (நெல்லையில் லாலாக் கடைகள் என்று சொல்வோம்) நிறைய
முளைக்க ஆரம்பித்தன. அதில், நெல்லை ஸ்பெஷலான அல்வாவும் விற்க ஆரம்பித்தது.
எங்க அம்மா வீடு கொஞ்சம் லிபரல்கள் நிறைந்தது.
அதாவது, ஹோட்டலில் எப்பவாவது (மாதம் ஒரு தடவை. அதுவும் பூரி மசால், நெய்
ரோஸ்ட், ரவா தோசை) சாப்பிடுவதோ அல்லது இந்த மாதிரி மிக்சர், தவலடை,
காராச்சேவு வாங்கிச் சாப்பிடுவதோ நடக்கும். வீடுகளில் வெங்காயம், பூண்டு,
சோம்பு, முருங்கை இன்னபிற எப்போதும் கிடையாது. எங்கள்
அப்பா சைடு வீடு, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 5-6 கிலோமீட்டர்கள்தான்.
ஆனால் அவர்கள் ரொம்ப கன்சர்வேடிவ். அடுத்த வீடுகளில் தண்ணீர் குடிப்பதே
சுத்தமாகத் தவிர்க்கவேண்டும் என்ற அளவு ஸ்ட்ரிக்ட். காய்களிலும் ஆங்கிலக்
கறிகாய்களுக்குத் தடா (தக்காளி, உருளை, கோஸ் முதற்கொண்டு).
ஜங்க்ஷனில் பாட்டி வீட்டில் இருக்கும்போது (லீவு சமயங்களில்தான்)
எங்கம்மா, என்னை காராசேவு, தவலைடை முதலியவற்றை இந்த வீடுகளிலிருந்து
வாங்கிவரச் சொல்லுவார்கள், இப்போ அதையெல்லாம் நினைத்தால், ‘எப்படி இருந்த
நான்… இப்டியாயிட்டேன்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அன்று
ஜங்க்ஷனில் தவலடை என்று எதைச் சாப்பிட்டேனோ, அதைத்தான் நான் தவலடை என்று
ஒப்புக்கொள்வேன். அதைத்தான் இங்கு செய்முறையாகக் கொடுத்திருக்கிறேன்.
தவலடை
செய்வதற்கு, புழுங்கரிசி அரை கப், உளுத்தம்பருப்பு ¼ கப், துவரம் பருப்பு ¼
கப், கடலைப் பருப்பு ¼ கப், பாசிப்பருப்பு (தொலி இல்லாதது) ¼ கப், 3-5
சிவப்பு மிளகாய்,
இஞ்சி ஒரு கணு (கட்டை விரல் அளவு) இவைதான் முக்கியப் பொருட்கள். அரிசியைத்
தனியா ஊறவைக்கவும். பாசிப்பருப்பு நீங்கலாக மற்ற பருப்புவகைகளை ஒன்றாக
ஊறவைக்கவும். பாசிப்பருப்பைத் தனியா ஊறவைக்கவும். ஒரு மணிநேரமாவது ஊறணும்.
நான் பொதுவா அரிசியோட, மிளகாய் வற்றலையும் சேர்த்து
ஊறவைத்துவிடுவேன்.
சில்லுத் தேங்காயை, கொஞ்சம் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தவலடையில் தேங்காய் தெரியவேண்டும். (திருவியிருக்கக்கூடாது).
ஊறவைத்த
பருப்புகளையும், அரிசியையும் சேர்த்து (பாசிப்பருப்பைத் தவிர),
மிக்சியில், வற்றல் மிளகாய், இஞ்சியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கர
கரன்னு மாவு இருக்கணும்.
ஊறின பாசிப்பருப்பைத், தண்ணீரை இரத்துவிட்டு, மிக்சியில் தனியாக ஒரு
சுத்து சுத்திக்கொள்ளவும். பாசிப்பருப்பு அரைகுறையாக உடைந்திருந்தால்
போதும்.
பொரிக்கும்போது,
கோபு சாரின் ‘எண்ணெய் தொப்புளில் தெரித்த அனுபவம்’ என் மனதிலேயே
இருப்பதால், வாணலிக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளிவிட்டு
ஜாக்கிரதையாகத்தான் தவலடை
தட்டி எண்ணெய்க்குள் போட்டேன்.
பின் குறிப்பு:
·
நான்
கருவேப்பிலையை, கத்தரி கொண்டு ஒன்றிரண்டாகக் கட் பண்ணிக்கொள்வேன்.
அப்பத்தான் ஒரு தவலடைக்கு சிறிது சிறிதாக 4-5 கருவேப்பிலையாவது அகப்படும்.
·
வடைபோல் தட்டாமல், குணுக்குபோல் கிள்ளிப்போட்டுப் பொரித்தும் எடுக்கலாம். ஆனால் அதனைத் தவலடை என்று சொல்லமுடியாது.
·
மாவு ஜாஸ்தியாகிவிட்டதென்றால், உப்பையும், தேங்காயையும் போடுவதற்கு முன்பு, கொஞ்சம் குளிர்சாதனப் பெட்டியில் எடுத்துவைத்துவிடவும்.
·
மாவு
ரெடி, ஆனால், தவலடை அப்புறம்தான் பண்ணப்போகிறீர்கள் என்றால், உப்பைச்
சேர்க்காதீர்கள். வடை தட்டும்போது சேர்த்தால் போதும். இல்லைனா, மாவு
நீர்த்துவிடும்.
·
இதை எழுதும்போதே என் ஹஸ்பண்ட் மேல் ஆத்திரமா (J)
இருக்கு. நாங்கள்லாம், எங்கள் வீட்டில், அதாவது அம்மாவுடன் இருந்தபோது,
உளுந்தை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுப்பதைத்தான்
குணுக்கு என்பார். என் ஹஸ்பெண்டோ, அடைமாவு மாதிரி, ஆனால் கெட்டியாக அரைத்து
அதைச் சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்தெடுப்பதைக்
குணுக்கு என்று சொல்லிவிட்டார்.. (நாங்களும் இதைத்தான் குணுக்கு என்போம். தித்திப்பாகச் செய்ய
மாட்டோம். ஆனால் ஒன்று, மாவை உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கும் எதுவுமே
குணுக்குத்தான்!!!) இப்படி, கிச்சடி, குணுக்கு எல்லாம் என்
ஹஸ்பண்ட் வந்தபின் அடையாளம் மாறிவிட்டன. அவங்கதான் அப்படின்னா…. கீதா
சாம்பசிவம் போன்ற ஜாம்பவான்களும், அடை மிக்ஸை பொரித்தெடுப்பதைக் குணுக்கு
என்று சொல்கிறார்கள். பார்க்கலாம் எங்க ஊர் கீதா ரங்கன்
என்ன சொல்கிறார் என்று)
அன்புடன்,
(நான் இதுவரை இது முயற்சித்ததோ, சாப்பிட்டதோ இல்லை)
குணுக்கு - இப்போது தான் கேள்விப்படுகிறேன்...!
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் அப்புறமா வரேன்.:)
பதிலளிநீக்குசுவைக்கத் தூண்டுகிறது நண்பரே
பதிலளிநீக்குதம +1
//(நான் இதுவரை இது முயற்சித்ததோ, சாப்பிட்டதோ இல்லை)//ன்னு கடைசியில் ஓர் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகடைசி படத்தில் காட்டியுள்ளது மஸால் வடையோ அல்லது ஆமவடையோ சமோஸா ஷேப்பில் செய்யப்பட்டுள்ளதாக உள்ளன.
>>>>>
அட! நெல்லைத் தமிழன் என்னையும் இங்கு சொல்லிவிட்டீர்களா ஹிஹீ...சரி ஆனால் பாருங்கள் இன்று இந்த நெல்லை ரெசிப்பி எங்கள் வீட்டில் கொஞ்சம் வித்தியாசமாக....பானையில் அல்லது தவலையில் தட்டிப் போட்டு மூடி போட்டு வேக வைத்து....ஒரு டம்ப்ளர் பச்சரிசி, பெரும் கைப்பிடி துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, அதைவிடக் கொஞ்சம் குறைவாக கடலைப்பருப்பு, மிளகு இத்தனையையும் நன்றாகக் கழுவிவிட்டு வடிதட்டில் போட்டு நீரை வடிய விட்ட், கொஞ்சம் உலர்ந்து ரொம்ப லைட்டாக ஈரப்பதம் இருக்கும் போது மிக்சியில் கர கர வென்று சுற்றி எடுத்து, வாணலியில், சிறிது எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை, மிளகாய்வற்றலைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொட்டி, எடுக்கப்படும் தவலைஅடை ரவைக்கு அளவாய் தண்ணீர் உப்பும் சேர்த்து கொதிக்கும் போது இந்த ரவையைப் போட்டுக் கிளறி, தேங்காய் கீரல்கள் விருப்பப்பட்டால்போட்டு இலையில் வடை போன்று தட்டையாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு, தோசைக்கல்லிலோ, தவலையிலோ போட்டு எண்ணை விட்டு, மூடி போட்டு வேக வைத்து மீண்டும் திருப்பிப் போட்டு...செய்வார்கள்...இந்தப் பொடியை நிழலில் நன்றாக உலர்த்தி நாம் செய்தும் வைத்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமோ அப்போது செய்து கொள்ளலாம். வெளியில் மொறு மொறுவென்று உள்ளே மென்மையாக இருக்கும்.
பதிலளிநீக்குஉங்கள் ரெசிப்பியை வேறு ஒரு உறவினர் வீட்டில் (நம்மூர் அல்ல... கணவர் சைட்...கரூர் சைட்) சாப்பிட்டதுண்டு. குறிப்புகள் இதே போன்றுதான் ஆனால் செய்யவில்லை. இனி செய்து பார்த்துட்டா போச்சு. குனுக்கு ஆம் வெல்லம் சேர்த்துச் செய்வதைத் தித்திப்புக் குனுக்கு என்றும் சொல்வார்கள். உப்புக் குனுக்கு நீங்கள் உங்கள் ஹஸ்பென்ட் சொன்னதைப் போலத்தான் செய்வார்கள். கிள்ளிப் போட்டது, கிள்ளிப்போட்ட குனுக்கு என்றும் சொல்வது வழக்கம்....குனுக்கு என்று சொல்லப்படுவது ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமான ரெசிப்பிக்களுடன் உருவமும் வித்தியாசமாக இருக்கிறது.
ஒவ்வொரு ஊரிலும் பெயர்தான் மாறுபடுகிறது அல்லது பெயர் ஒன்றானாலும் போடும் பொருட்கள் வித்தியாசம். கடைசியில் பார்க்கப் போனால், அஞ்சறைப்பெட்டியும், பருப்புகளும், பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷனில் உருவாவதுதானே இந்தப் பதார்த்தங்கள்..மிக்க நன்றி நெல்லை மற்றும் எங்கள் ப்ளாக் இந்த ரெசிப்பிக்கு...செய்து பார்க்கிறேன்..
கீதா
நான் செய்திருக்கிறேன் தட்டையாக அல்ல . குண்டு குண்டாக .. குணுக்கு என்று சொல்வோம் டேஸ்ட் நல்லாருக்கும்
பதிலளிநீக்குநானும் இதனைக் கேள்விப்பட்டுள்ளேன். பார்த்தும் உள்ளேன். நான் சாப்பிட்டதோ சாப்பிட விரும்பியதோ இல்லை.
பதிலளிநீக்குஅதனை ஒரேயொரு முறை எப்படி என் கண்களால் பார்த்தேன் என்பதே ஓர் சுவையான தனி கதையாகும்.
>>>>>
அருமை
பதிலளிநீக்குஒருமுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்கு காஞ்சீபுரம் சென்றுவிட்டு, திரும்ப திருச்சிக்கு பயணம் செய்ய எண்ணி, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அருகே ஓர் மிகப்பெரிய வீட்டுத் திண்டுவைத்த திண்ணையில், பஸ் வரும் வரை நான், என் ஆத்துக்காரி, என் தாயார் மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தேன். அப்போது மாலை சுமார் 6 மணி இருக்கும்.
பதிலளிநீக்குவாலாஜா பேட்டையைச் சேர்ந்த திருவாளர். சுந்தரமூர்த்தி என்ற மிகவும் ஆச்சாரமான பெரியவர் எங்களை அங்கு பார்த்து விட்டார். அவருடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. மிகவும் நல்ல மனிதர். எங்களுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா தரிஸனத்திற்காக பண்டரீபுரம் யாத்திரைக்கும் வந்திருந்தவர்.
காஞ்சீபுரத்தில் உள்ள தன் பிள்ளை வீட்டுக்கு எங்களைக் கூட்டிப் போவதாகவும் அங்கு இரவு பலகாரம் சாப்பிட்டு விட்டுப் புறப்படலாம் என்று சொன்னார்.
நான் அவருக்கு நன்றி சொன்னேன். ஆனால் அவருடன் அவர் பிள்ளையின் வீட்டுக்குச் செல்ல விரும்பாமல், மறுத்து விட்டேன்.
தன் பிள்ளை வீட்டில் இன்று ‘அடை’ பலகாரம் செய்ய இருப்பதாகவும், அதை அப்படியே சுடச்சுட பார்ஸலாகக் கட்டி பிள்ளை மூலம் டூ வீலரில், உடனடியாக அனுப்பி வைப்பதாகவும், ஒரு அரை மணி நேரம் மட்டும் அங்கேயே காத்துக்கொண்டு இருங்கோ எனச் சொல்லிவிட்டு அவர் புறப்பட்டு தன் பிள்ளை வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.
‘அடை’ என்று கேள்விப்பட்டதும் எனக்குள் ஓர் ஆசை.
காரசாரமாக நம் ஆத்து ‘அடை’ போல இதோ http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html இந்த என் பதிவினில் நான் காட்டியுள்ளது போல இருக்குமாக்கும் என நினைத்துக்கொண்டு ஆவலுடன் நானும் (நாங்களும்) ஒரு முக்கால் மணி நேரம் காத்திருந்தேன் / காத்திருந்தோம்.
ஒருவழியாக வந்து சேர்ந்தது. கொடுத்தவருக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டோம். பிறகு குடிக்கக் குடிநீர் பிடித்துக்கொண்டு அதே பெரிய வீட்டுத் திண்ணையில் பொட்டலங்களைப் பிரித்தோம்.
ஆனால் அவர்கள் சொன்ன ’அடை’ என்ற திருநாமத்துடன் உள்ளே இருந்தது தவலடை மட்டுமே. காரசாரமே இல்லாமல், சுத்த வழுவட்டையாக, இலப்பைச்சட்டியில் தோசை மாவை ஊற்றிச் செய்த சாதாரண ஊத்தப்பம் போலவே இருந்தது. என் வீட்டினர் மட்டுமே அன்புடன் அனுப்பப்பட்டுள்ள அதனை ஏதோ வாயில் பிரஸாதம் போலப் புட்டுப் போட்டுக்கொண்டனர்.
எனக்கு அப்போது பயங்கரமானதோர் ஏமாற்றம் ஆகிவிட்டது. என்னைப் பார்த்த என் மனைவிக்கும் தாயாருக்கும் ஒரே சிரிப்போ சிரிப்பு. இதற்காகவா இவ்வளவு நேரம் அங்கு வெட்டியாகக் காத்திருந்தோம் என நினைத்துக்கொண்டேன்.
உடனடியாக நான் ஓரு வெஜிடேரியன் ஹோட்டலைக் கண்டுபிடித்து, சுடச்சுட முறுகலாக ஓர் வெங்காய ஊத்தப்பமும் + ஓர் மஸால் தோசையும், சாம்பார் + சட்னியுடன் கலந்தடித்துவிட்டு, சூடாக நுரையுடன் ஓர் டிகிரி காஃபியும் சாப்பிட்டுவிட்டு, ஓர் பெரிய ஏப்பம் விட்டபிறகே, என் அன்றைய பொழுதின் ஏமாற்றம் மறைய ஆரம்பித்து, எனக்குள் ஓர் பேரெழுச்சி ஏற்பட்டது.
அடை, தவலடை போன்றவை ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு உருவங்களில், வெவ்வேறு டேஸ்ட்களில் செய்வார்கள் போலிருக்குது என நான், எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
இப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்புதான். இந்தப்பதிவினைப் படித்ததும் அதே ஞாபகம் எனக்கு வந்து என்னை ஹிம்சித்தது.
தாங்கள் காட்டியுள்ள சமோஸா ஷேப்பில் உள்ள மஸால் வடையோ ஆமவடையோ கூட கொஞ்சம் காரசாரமாக, மொறுமொறுப்பாக இருக்கும் போலத் தெரிகிறது. அன்று அவர்கள் கொடுத்தனுப்பியது அது போலவும் இல்லை. வெறும் தோசை மாவில் செய்த ஊத்தப்பம் மட்டுமே. :)
மாசி பங்குனி கூடும் நாளில் காரடையான் நோன்பு என்ற பூஜை ஒன்று செய்வது வழக்கம்.
பதிலளிநீக்குஅன்று வெல்லக்கொழுக்கட்டை, உப்புக்கொழுக்கட்டை என்ற திருநாமங்களில் சின்னச்சின்னதாக பேப்பர் வெயிட் ஷேப்பில் ஓர் பலகாரம் செய்து, வெண்ணெயுடன் சேர்த்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வது வழக்கம்.
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html இதோ இந்த என் பதிவினில் 112 பின்னூட்டங்களுடன், மிகுந்த நகைச்சுவையாக அது காட்சியளிக்கிறது ..... பாருங்கோ.
மழை நாட்களில், காரசாரமான அடை மாவில் சுடச்சுட ‘குணுக்கு’ போட்டு சாப்பிட்டால் போதும் ..... தேவலோக சுகம் சுலபமாக இங்கு பூலோகத்திலேயே கிடைத்து, நம்மை அப்படியே சொக்க வைத்துவிடும். :)
பதிலளிநீக்குகடைசி அடைப்புக் குறிக்குள் நானும் :)
பதிலளிநீக்கு//என் ஹஸ்பெண்டோ, அடைமாவு மாதிரி, ஆனால் கெட்டியாக அரைத்து அதைச் சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்தெடுப்பதைக் குணுக்கு என்று சொல்லிவிட்டார்..//
பதிலளிநீக்குதங்களின் மனைவி செய்வதுதான் + சொல்வதுதான், அசல் 100% I.S.I. Certified குணுக்கு. [இதில் வெல்லமெல்லாம் போடவே கூடாது.] காரசாரமான பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், கருவேப்பிலை முதலியவற்றின் பிட்டுகள் நன்கு பொறிந்து ஒவ்வொரு சின்ன சின்னக் குணுக்குகளின் இடுக்குகளிலும் நம் வாய்க்குக் கடிபடணும். அந்தக் காரத்தினால் நம் கண்களில் கொஞ்சமாவது ஜலமும் வரணும். அதுவே அச்சா ... பஹூத் அச்சா ... அசல் நம்பர் ஒன் குணுக்காகும். :)
வைகோ ஸார்.. சுவையான பின்னூட்டம் என்றால் இதுதானா!!!
நீக்குபதிவின் இடையிடையே நீல நிறத்தில் இருப்பது என் கமென்ட்!!!!!
காஞ்சிபுரத்தில் நண்பர் கொடுத்ததாய் நீங்கள் சொல்லும் பண்டத்தில் அதன் சுவையை விட, நட்பின் சுவை தூக்கலாய்த் தெரிகிறது. நாவின் எழுச்சியை உடனடியாக அருகாமை ஹோட்டலில் தணித்துக் கொண்ட உங்கள் ரசனை ரசிக்கத் தக்கது.
குணுக்கு பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை கை தட்டி ஆமோதிக்கிறேன்.
//வைகோ ஸார்.. சுவையான பின்னூட்டம் என்றால் இதுதானா!!!//
பதிலளிநீக்குயெஸ் ..... சுவையான பின்னூட்டம் என்றால் என்னுடைய இது மட்டுமேவாக்கும். மற்றவை அனைத்தும் அந்தக் காஞ்சீபுரம் பெரியவர் ஒருவர் கொடுத்தனுப்பிய வழுவட்டையான தவலடை போன்றவைகளே. :)
//பதிவின் இடையிடையே நீல நிறத்தில் இருப்பது என் கமென்ட்!!!!!//
ஓஹோ, அப்படியா? இவ்வளவு வக்கணையாக எழுதும் நம் நெல்லைத்தமிழன் எப்படி அந்தக் கடைசி நீல நிற எழுத்துக்களை எழுதியிருக்கமுடியும் என எனக்கும் ஓர் சந்தேகம் ஏற்படத்தான் செய்தது.
உங்கள் கமெண்ட்ஸ் அருகில் ’xxxxxxxxxxxxx - ஸ்ரீராம்’ என இனிமேல் போட்டு விடுங்கோ. படிப்பவர்களுக்குக் குழப்பமில்லாமல் இருக்கக்கூடும்.
//காஞ்சிபுரத்தில் நண்பர் கொடுத்ததாய் நீங்கள் சொல்லும் பண்டத்தில் அதன் சுவையை விட, நட்பின் சுவை தூக்கலாய்த் தெரிகிறது.//
ஆம். அவர் என்னைவிட வயதில் மிகவும் பெரியவர். வாலாஜா பேட்டையில் ஏதோவொரு பள்ளியில் ஆசிரியராக இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். தங்கமானவர். மிகவும் நல்லவர். எங்கள் குடும்பத்தின் மேல் மிகவும் ஆத்மார்த்தமான பாசமுள்ளவர். என்மீது மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகியவர். அவர் இப்போது எங்கு இருக்கிறாரோ? எப்படி இருக்கிறாரோ? அவர் விலாசம், தொலைபேசி எண் போன்ற எதுவுமே என்னிடம் இல்லை. இப்போது நிச்சயமாக அவருக்கு வயது 90+ அல்லது 95 கூட இருக்கலாம். அவரை நான் பார்த்தே ஒரு 35 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.
//நாவின் எழுச்சியை உடனடியாக அருகாமை ஹோட்டலில் தணித்துக் கொண்ட உங்கள் ரசனை ரசிக்கத் தக்கது.//
ஆமாம் ஸ்ரீராம். நான் சும்மா இருந்தாலும் ‘காரசாரமான செந்நிறமான அடையோ’ என கற்பனை செய்துகொண்டிருந்த என் நாக்கு சும்மா இருக்குமா என்ன ? :)
//குணுக்கு பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை கை தட்டி ஆமோதிக்கிறேன்.//
உடனடியாக இன்று சாயங்காலத்திற்குள் எனக்குக் ’குணுக்கு’ வந்தாகணும் என என் மேலிடத்துக்கு உத்தரவு போட்டுள்ளேன். இருப்பினும் அதனைப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டு, செயல்வடிவம் கொடுத்து, என் பார்வைக்குக் குணுக்குகள் வரும் வரை சந்தேகமே.
வரவர அவளுக்கும் என்னைப்போலவே வயசாச்சே ..... ஓரளவுக்கு மேல் நானும் வற்புருத்துவதோ,
பாடாய்ப் ப-டு-த்-து-வ-தோ இப்போதெல்லாம் கிடையாது.
அந்த தேவலோக சுகம் பூலோகத்திலேயே இன்று கிடைக்க எனக்கும் பிராப்தம் இருக்கணும். :)
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
//பொரிக்கும்போது, கோபு சாரின் ‘எண்ணெய் தொப்புளில் தெரித்த அனுபவம்’ என் மனதிலேயே இருப்பதால், வாணலிக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஜாக்கிரதையாகத்தான் தவலடை தட்டி எண்ணெய்க்குள் போட்டேன்.//
பதிலளிநீக்குஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இதோ அந்த என் பதிவின் இணைப்பு:
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக் - வெளியிட்டமைக்கு. உங்கள் கருத்தையும் (இன்னும் எழுதியிருக்கலாம்) பதிவில் சேர்க்கும்போதுதான் முழுமை பெறுகிறது என்பது என்னுடைய எண்ணம்.
பதிலளிநீக்குபிறகு நான் வருகிறேன்.. கோபு சார் சொல்லிய கருத்தில் ஒன்றுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறேன். தவலடை வட்டமாகத்தான் இருக்கவேண்டும். கடைசியில் கொஞ்சம் பெரியதாகத் (பொறுமை இல்லாததால்) தட்டினது கொஞ்சம் சதுரமாக வந்துவிட்டது. தவறுகள், சமையலில் சகஜம் என்பதால், அப்படியே படம் எடுத்துவிட்டேன். தேவலோக சுகம் இன்று உங்களுக்கு வாய்க்கவில்லையானால் (குணுக்கு), இருக்கவே இருக்கிறது அருகில் இருக்கும் பஜ்ஜி கடை. குணுக்கு இரண்டொரு நாளில் கிடைத்துவிட்டுப்போகிறது. மற்றவற்றிற்குப் பின்னர் பதிலளிக்கிறேன்.
பதிலளிநீக்குஇங்கு பெங்களூரில் கோமுட்டிச் செட்டிமார்கள் செய்யும் வடையின்(குட்டி குட்டியாய் இருக்கும்) வாசனைதெருமுனை வரை இருக்கும் என் மாமனாருக்கு இவை மிகவும் பிடிக்கும் தினமும் ராச்சாப்பாட்டின் போதுஇதையும் சேர்த்துப்பார் மற்றவர்களுக்கும் கொடுப்பார்
பதிலளிநீக்குபெயரே புதுவிதமா இருக்கே தவளை வடை ஏதோ சைனீஸ் ரெசிப்பியோ என எண்ணி, நானே ஒரு கணம் வெலவெலத்துப்:) போயிட்டேன் எண்டால் பாருங்கோவன்... இருப்பினும் அருமையான ரெசிப்பி.. இந்தக் குளிருக்கு சுடச்சுடச் சுட்டெடுத்து சீனி நிறையப்போட்ட ஒரு பிளேன் ரீ யுடன் குடிச்சால் சூப்பரோ சூப்பர்தான்... வாழ்த்துக்கள் ரெசிப்பி தந்தமைக்கு.
பதிலளிநீக்குதவளை வடை! ஹா.... ஹா.... ஹா... நல்லவேளை... (வெந்நீர் தவலை சைஸுக்கு)வடை என்று நினைக்காமல் போனீர்களே...!!!!
நீக்குஅதிரா வந்தாச்சு..இனி அரட்டை அதகளம்தான்!
////(நான் இதுவரை இது முயற்சித்ததோ, சாப்பிட்டதோ இல்லை)//// அப்போ இங்கும் கோபு அண்ணந்தான் லாப் எலியோ?:) ஹா..ஹா..ஹா... நீங்க சாப்பிடாமல் நம்மைச் செய்து சாப்பிட வைத்து, நாம் நாளைக்கு உயிரோடு இருந்தால்:) நீங்களும் செய்து சாப்பிடலாம் எனும் தைரியத்தில போட்டிருக்கிறீங்க:) நான் சிக்க மாட்டேன் இந்த வலையில...
பதிலளிநீக்குஆனா பாருங்கோ.. ச்ச்ச்ச்சும்மா இருந்த கோபு அண்ணனை ஊதிக்கெடுத்திட்டீங்க நெல்லைத் தமிழன்:)... பாருங்கோ போஸ்ட்டா கொமெண்ட்டா எனத் தெரியாமல் பழைய நினைவலைகள் எல்லாம் ஊற்றெடுக்குது அவருக்கு..இனி தவலவடை சாப்பிட்டபின்புதான் அவர் அமைதியாவார்ர்:).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்:)..
/////ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குவைகோ ஸார்.. சுவையான பின்னூட்டம் என்றால் இதுதானா!!!
பதிவின் இடையிடையே நீல நிறத்தில் இருப்பது என் கமென்ட்!!!!!///// அச்சச்சோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது என்ன பின்னூட்டத்தில் போய் இப்பூடிச் சொல்லிட்டீங்க.. நல்லவேளை நான் இப்போதான் படிச்சு புரிஞ்சுகொண்டேன்ன்.. இது ரொம்பத் தப்பு, அநியாயம் இப்பூடிச் செய்யக்குடா:) அதுவும் நெல்லைத்தமிழனின் எழுத்து என நினைச்செல்லோ பின்னூட்டம் போட்டிட்டேன், இப்போ கல்லெடுத்துக் கலைக்கப்போகிறார் என்னை.. அஞ்சூஊஊஊ பீஸ்ஸ்ஸ் யெல்ப் மீ:) ஹையோ அந்தர அவசரத்துக்கு அஞ்சுவை வேற காணல்ல:) எங்கின ஊர்சுத்தப்போயிட்டாவோ:) ஹையோ வாயில வந்ததை எழுதிட்டேன்ன் படிச்சாவோ மீ யை தேம்ஸ்ல தள்ளிடுவா.. பிளீஸ்ஸ் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)
அதிரா அரைவ்ட், அஞ்சு காணோம்...
நீக்குஹா ஹா ஹா அஞ்சூட வெயிட் 124 கிலோ:) அவ அசைஞ்சஞ்சு வாறதுக்குள் நான் ஓடித் தப்பிடுவேன்ன்ன் :)
நீக்கு///வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு///பதிவின் இடையிடையே நீல நிறத்தில் இருப்பது என் கமென்ட்!!!!!//
ஓஹோ, அப்படியா? இவ்வளவு வக்கணையாக எழுதும் நம் நெல்லைத்தமிழன் எப்படி அந்தக் கடைசி நீல நிற எழுத்துக்களை எழுதியிருக்கமுடியும் என எனக்கும் ஓர் சந்தேகம் ஏற்படத்தான் செய்தது.
உங்கள் கமெண்ட்ஸ் அருகில் ’xxxxxxxxxxxxx - ஸ்ரீராம்’ என இனிமேல் போட்டு விடுங்கோ. படிப்பவர்களுக்குக் குழப்பமில்லாமல் இருக்கக்கூடும்.///// இக்கருத்தை படுபயங்கரமாக:) நானும் வழிமொழிகின்றேன்:)..
அதிரா.... நீங்கள் வழிமொழிகிறீர்கள். நான் (தவறுக்கு) வழிகிறேன்!!!! அப்படியே செய்துட்டாப் போச்சு...
நீக்கு///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅதிரா.... நீங்கள் வழிமொழிகிறீர்கள். நான் (தவறுக்கு) வழிகிறேன்!!!! அப்படியே செய்துட்டாப் போச்சு../// உண்மையில் நீங்க அப்படி இடையிடை கொமெண்ட்ஸ் கொடுப்பது நல்லாயிருக்கு.. கீப் இட் மேலே:), ஆனா உங்கள் பெயரைச் சொல்லிப் போட்டால்தான் எங்களுக்கு கலாய்க்க ஈசியா இருக்குமெல்லோ:) ஹையோ அஞ்சுவை இன்னமும் காணல்லியே நேக்கு இங்கின தனியா நிக்கப் பயம்ம்ம்ம்மாவெல்லோ இருக்கு:)
ஆஹா !!பார்க்கும்போதே சாப்பிட தோணுது ..வாராவாரம் அசத்தறீங்க நெல்லை தமிழன் சகோ ....திருனெல்வேலிக்காரங்கதான் எங்க ஏரியாவில் சென்னைல 4 ஸ்வீட் கார கடை போட்டிருந்தாங்க ..இப்போ இருக்கானு தெரில 3 மணிக்கு சுட சுட தையல் இலை சுற்றி சணல் கட்டி தருவாங்க ..தொலி என்பது தோல் எனும் தின்னெவெலி வழக்கு என்பது பள்ளி நாளிலேயே தெரியும் ..எங்க ஸ்கூல் பி.டி டீச்சர்ஸ் தொலிய உரிச்சு போடுவேன் என்றே அவங்க திட்டு புராணத்தை துவங்குவாங்க ஒழுங்கா மார்ச் பாஸ்ட் செயலன்னா :)
பதிலளிநீக்குதிருநெல்வேலியும் நாகர்கோவில் ஒரே மாதிரி அக்ஸ்ண்டா ? .எங்கம்மா அடிக்கடி தான் கரண்டி ,பிட்ல ,வார்த்து போன்றவற்றை பயன்படுத்துவாங்க ..நிறையநேரம் அம்மாவை நினைவூட்டுகிறது உங்கள் மொழி நடை ..
ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கேன் டயட்டிங்கில் ..அப்பப்போ உங்கள் ரெசிப்பீஸ் பார்க்கும்போது டயட்லாம் தூக்கி போட்டு அத்தனையும் சமைச்சி பார்க்க ஆசை வருது :)
@athira gundu cat ..//athira said...
பதிலளிநீக்குஹா ஹா ஹா அஞ்சூட வெயிட் 124 கிலோ:) அவ அசைஞ்சஞ்சு வாறதுக்குள் நான் ஓடித் தப்பிடுவேன்ன்ன்//
மறந்து உங்க வெயிட்டை சொல்லிட்டீங்க பாருங்க :)
நாங்கல்லாம் பேலியோ வீகன் புரட்சியாளர்கள் தெரியுமா ..ஒளிச்சு வச்சி கொண்ட கடலை சாப்பிட மாட்டோம்
உங்களுக்கு 1 லிட்டர் வீகன் ஸ்மூத்தி இப்போவே அனுப்பி வைக்கப்படுகிறது
கோபு அண்ணா ஸ்ரீராம் எல்லார் மைன்ட் வாய்ஸும் எனக்கு கேக்குது ..எவ்ளோ (அமைதியான அமைத்த்தியான அடக்கமே உருவான) ....அடைப்பு குறிக்குள் இருப்பதை 100 டைம்ஸ் வாசிக்கவும் அதிரா ..
பதிலளிநீக்குஏஞ்சலுக்கு இவ்ளோ அதிரடி பூனை ப்ரண்டான்னு யோசிக்கறாங்க :)
@nellai thamizhan ..கல்லெல்லாம் வேண்டாம் ..ஒரு கோணிப்பை போதும் இந்த பூனையை பிடிச்சி கொடுங்க .கூண்டில அடைச்சிடறேன்
பதிலளிநீக்குஅஞ்சூஊஊஊஊஊஉ இதுக்குத்தான் வெயிட்டைக் குறைங்க.. வெயிட்டைக் குறைங்க எண்டால்ல்ல் என் பேச்சை ஆரு கேக்கிறா?:) ஒரு பூஸ்குட்டிகூடக் கேட்காது.. மீன் குஞ்சா கேக்கப்போகுது:).. பாருங்க பிரித்தானியால இருந்து “எங்கள் புளொக்” வந்து சேர 5 மணி நேரம் எடுத்திருக்குதே அஞ்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இண்டைக்குக் காலையிலயே யோசியர் சொன்னார்.. பிள்ளை வாயை அடக்கிக்கொண்டிரு:) வம்பாகிடும் என:) என்னால முடியல்லியே... முருகா மீ எஸ்கேப்ப்ப்:)
பதிலளிநீக்குதவலை வடை குறிப்பு நன்றாக இருக்கிறது. ஆனாலும் அதன் சுவையை விட இங்கிருக்கும் பின்னூட்டங்களின் சுவை அதிகம்!
பதிலளிநீக்குதவலை வடையை தவளை வடை என்று படித்துவிட்டேன் அதுக்கு அப்புறம் ஆமவடை என்று படித்துவிட்டு துணுக்குற்றேன் என்னடா ஸ்ரீராம் பளாக்கில் நான்வெஜ் ரிசிப்பி எல்லாம் வருகிறது என்று அதுக்கு அப்புறம்தான் புரிந்தது இதெல்லாம் வெஜ் வடைகள் என்று..
பதிலளிநீக்குஒரு நாள் எங்க ஆத்து மாமி உங்களுக்கு ஸ்நாக் பண்ணி தருகிறேன் என்று சொன்னாள் நானும் ஆவலோட காத்திருந்த போது கொஞ்சம் காரமாக ஏதோ சாப்பிட தந்தார் சாப்பிட்டு கொண்டே கிச்சன் சென்ற போதுதான் தெரிந்தது நான் அரைத்து வைச்ச அடைமாவு காலி என்று... துணுக்கு பிராமண வீடுகளில் மட்டும் செய்யப்படும் ஒரு ஸ்நாக் வேறு எங்கும் அதை செய்து நான் சப்பிட்டதாக அனுபவம் இல்லை..
நெல்லை தமிழன் நீங்க திருநெல்வேலி ஆள்தானே முடிந்தால் லாலாமிட்டாய் எப்படி செய்வது என்பது பற்றி ரிசிப்பி போடுங்கள் அல்லது அதையாவது வாங்கி அனுப்புங்கள்
நன்றி திண்டுக்கல் தனபாலன். குளிர் காலத்துக்கு சூடான குணுக்கு நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி கீதா சாம்பசிவம் மேடம்.. அப்புறமா ஆளைக் காங்கலியே....
நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.
பதிலளிநீக்குநன்றி தில்லையகத்து கீதா ரெங்கன். நீங்கள் கொடுத்துள்ள தவலை அடை செய்முறைக்கு நன்றி. நிச்சயம் செய்துபார்க்கிறேன். நெல்லையில் சிறுவயதில் சாப்பிட்டதனால், தவலடை நெல்லையைச் சேர்ந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் நெடிய பின்னூட்டத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன் ஹஸ்பண்டுக்கு ரொம்ப சந்தோஷம். எல்லோரும், எண்ணெயில் கிள்ளிப்போட்டுப் பொறிப்பது எல்லாமே குணுக்குதான் என்று சொன்னதில்.
நன்றி அபயா அருணா.
பதிலளிநீக்குநன்றி நரேந்திர பாரதி. (இரண்டு யுக புருஷர்கள் உங்கள் பெயரில்)
கோபு சார்.. உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குபெரியவர் சுந்தரமூர்த்தி அவர்களுக்குத்தான் என்ன நல்ல மனது. ஆனால் அவருக்குத்தான் தெரியவில்லை.. கோபு சார், பசிக்கு மட்டுமல்ல, ருசிக்குத்தான் முதல் ரசிகர் என்று. காரசாரமான அடையை எதிர்பார்த்த உங்களின் ஏமாற்றம் ரசிக்கவைத்தது. நானும் நிறைய தடவை, 'ஆஹா ஓஹோ' என்று புகழப்படும் சில ஹோட்டல் உணவு நினைத்தமாதிரி இல்லாமல் ஏமாற்றம் தந்ததை அனுபவித்திருக்கிறேன். இதுல பிரச்சனை என்னன்னா, நான் முதலில் டெஸ்ட் பண்ணிப்பார்க்காமல், என் குழந்தைகளையும் ஹஸ்பண்டையும் கூட்டிக்கொண்டுபோய், அவங்க, 'அட சே.. இவ்வளவுதானா' என்று சொல்லும்போது ஏற்படும் ஏமாற்றம் இன்னும் அதிகம். திருவானைக்கா நெய் தோசையும், மைலாப்பூர் ராயர் கஃபேயும் இதில் அடங்கும்.
கோபு சார்... உங்கள் மீள் வருகைகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குகாரடையான் நோன்புக் குழக்கட்டைப் பதிவைப் படித்தேன். செய்முறை இல்லாததால் நீங்கள் சொல்லியிருந்தபடி பதிவர் ராதா பாலு அவர்களின் பதிவையும் படித்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு செய்து கொஞ்சம் பேஸ்ட் மாதிரி வந்துவிட்டது. மீண்டும் செய்துபார்க்கிறேன்.
மழை நாளில், நல்ல புத்தகத்துடன், யாராவது கார சாரமாக குணுக்கோ, பஜ்ஜியோ செய்துகொடுத்தால் நமக்கு என்ன குறை.. புத்தகப் பக்கங்கள் போவதும் தெரியாது. தட்டில் வைத்தவை காலியாவதும் தெரியாது.
நன்றி பகவான்ஜி.
பதிலளிநீக்குநன்றி கோபு சார். என் ஹஸ்பண்டுக்கு 'குணுக்கு பற்றிய' உங்கள் பின்னூட்டம் படித்ததில் ரொம்ப சந்தோஷம். என்னைக் கலாய்க்கிறாள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.. உங்கள் பின்னூட்டத்திற்கு. உளுந்தில் பண்ணும் இனிப்பு குணுக்கு (என் அம்மா அந்தக் காலத்தில் செய்துகொடுத்தது) நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது. செய்து சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். ரொம்ப எண்ணெய்.. உடம்புக்கு ஆகாது என்று என் ஹஸ்பண்ட் தடை போடுகிறாள்.
பதிலளிநீக்குநன்றி ஜி.எம்.பி ஐயா. எனக்கு பெங்களூரில் எங்கு அந்த வடை கிடைக்கும் என்று எழுதக்கூடாதா? சாப்பாட்டு ஐட்டம் யார் எழுதியிருந்தாலும், எங்கு கிடைக்கும் என்பது என் மனதில் பதிந்துவிடும். வாய்ப்பு கிடைக்கும்போது அந்த ஊரில் இருக்கும்போது வாங்கிச் சுவைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். இப்படித்தான் வெங்கட் அவர்கள் எழுதியிருந்த, ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் கோவிலுக்கு முன் உள்ள 'வடை' கடை மனதில் பதிந்துள்ளது.
பதிலளிநீக்கு'நன்றி ஆதிரா. உங்கள் தமிழைப் படிப்பதற்கே ரொம்ப சுவையாக இருக்கு. ஆரம்பகாலத்தில் 'ரீ' என்று ஆரம்பிக்கும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்ற குழப்பம் இருந்தது. அப்புறம் 'T' என்ற எழுத்தில் ஆரம்பிப்பவைகளுக்கு 'ரீ' என்று ஈழத்தில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குதமிழில் வழக்கொழிந்த 'உவன்' 'உவள்' போன்று பல அருமையான வார்த்தைகளை ஈழத் தமிழர் உபயோகப்படுத்துவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுடைய வருகைக்குப் பிறகுதான் நிறைய தமிழ்ச்சொற்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர் (பரப்புரை, கதைக்கின்றனர் போன்று பல சொற்கள்).
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
'நன்றி ஏஞ்சலின் உங்கள் பின்னூட்டங்களுக்கு. திருனெவேலி, நாகர்கோவில் accent ஒரேமாதிரி இருந்தாலும், நாகர்கோவில்காரங்க பேசும்போது கொஞ்சம் மலையாள accent தெரியும். திருனெவேலி வழக்கு மொழி ரொம்ப வட்டாரச் சொற்களைக் கொண்டது.(ஏலே, ஏம்லே, சவத்து மூதி இதெல்லாம் அன்பாக விளிக்கும் சொற்கள்) அதனால்தான் கமல் நடித்த பாபனாசம் படம் வசனம் எல்லோருக்கும் புரிவது கொஞ்சம் கஷ்டம்.
பதிலளிநீக்குநன்றி மனோ சாமினாதன். வலையுலகம் முழுவதும் ரெசிப்பிக்கள்தான். ஆனால் எல்லோரும் விரும்புவது, பதிவர்களின் பின்னூட்டங்கள், அவர்களது அனுபவச் சிதறல்கள். அதுதான் இனிமை சேர்க்கிறது. நட்பை வளர்க்கிறது.
பதிலளிநீக்குநன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். உங்கள் பின்னூட்டத்திலிருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். அப்போ அப்போ உங்கள் மனைவியும் உங்களுக்கு ஏதாகிலும் செய்து தருகிறார் என்று. ஆமாம்.. பருப்பு வடைக்கு ஏன் 'ஆமவடை' என்று பேர் வந்தது?
பதிலளிநீக்குலாலா மிட்டாய் என்று நீங்கள் சொல்வது, ஜீனியிலோ அல்லது கருப்பட்டியிலோ பெரிய சைஸ் முருக்குபோல் நெல்லை, கோவில்பட்டி கடைகளில் அடுக்கிவைத்திருக்கும் ஸ்வீட்டைப் பற்றி என்று நினைக்கிறேன். நானும் சிறுவயது நினைப்பில் சமீபத்தில் வாங்கிச் சாப்பிட்டேன். இப்போ அது அவ்வளவு அருமையா இருப்பதுபோல் தெரியவில்லை. கல்லு போன்ற வெள்ளை ஜிலேபிபோல்தான் தெரிகிறது.
நன்றி ஆதிரா. 'பூஸ்குட்டி' என்பது பூனைக்குட்டி என்று நினைக்கிறேன். சரியான தமிழ் 'பூச்சை'. தமிழ்'நாட்டில் இப்போது 'பூனை'. கேரளாவில் 'பூசை'. 'ஜோசியருக்கு' யோசியர் என்று எழுதியிருப்பது அருமை. பிள்ளை-பெண் குழந்தைகளைக் கூப்பிடும் முறை. இங்கு நிறைய மாவட்டங்களில் இப்படி உபயோகப்படுத்துவதில்லை. பேச்சுத் தமிழை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகோபு >>>>> நெல்லைத் தமிழன் (1)
பதிலளிநீக்குதிருச்சியில் தில்லைநகர் 7-வது கிராஸின் கிழக்குப்பக்கமாக ஓர் ஹோட்டல் உள்ளது. அதன் பெயர் ’ஹோட்டல் கெளரி கிருஷ்ணா’ என்பதாகும். அதன் அடுத்த கட்டடத்தில் எங்கள் BHEL Hospital இன் கிளை அமைந்திருப்பதாலும், அங்கு மாதம் ஒருமுறையாவது நாங்கள் சுகர் செக்-அப்க்கு கட்டாயமாகச் சென்று வர வேண்டிய நிர்பந்தங்கள் இருப்பதாலும், அதுபோன்ற நாட்களில் அங்கு காலை டிஃபன் சாப்பிட நாங்கள் விரும்பிச்செல்வது உண்டு.
இங்கு டிஃபன் சாப்பிடுவதற்காக மட்டுமே சென்று, அப்படியே அங்குள்ள எங்கள் BHEL Hospital இல், கும்பல் இல்லாமல் இருந்தால், ஏதேனும் டாக்டரை சந்தித்து, உடலின் ஏதேனும் உறுப்புக்களைப்பற்றி எடுத்துச் சொல்லி மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதும் உண்டு. :)
காலையில் மினி டிஃபன் என்ற பெயரில் ஒரு ப்ளேட்டில் தருவார்கள். விலை ஒரு நபருக்கு ரூ. 55 மட்டுமே. அவை எல்லாமே சுடச்சுட சுவையாக இருப்பது உண்டு.
ஒரு ரெளண்ட் ஷேப் பல்லாங்குழித்தட்டு - அதில் அரைப்பகுதிக்கு மட்டும் கட் செய்து போடப்படும் ஒரு சின்ன வாழையிலை இருக்கும். அவற்றில் முதலில் ஒரேயொரு இட்லி, ஒரேயொரு நிதான சைஸ் (உளுந்து) மெதுவடை, ஒரேயொரு உப்பலான சூடான பூரி, இரண்டு ஸ்பூன் மஸால், ஒவ்வொன்றிலும் இரண்டு ஸ்பூன் வீதம் இரண்டு வித சட்னிகள், ஒரு சின்ன கப் சாம்பார் எனத் தருவார்கள். நாம் கேட்டால் மட்டும் எண்ணெயில் குழைத்த மிளகாய்ப்பொடியும் தருவார்கள்.
இவற்றை நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் சுடச்சுட ஓர் சாதா மாவு தோசை வந்து சேர்ந்து விடும். தோசைக்கு மட்டும் நாம் கேட்டால் இன்னொரு கப் சாம்பார் / சட்னி முதலியன தருவார்கள். பிறகு சுமார் 2 அங்குல உயரத்தில் ஓர் எவர்சில்வர் டம்ளரில் காஃபி அல்லது டீ நம் விரும்பம் போல சர்க்கரை போட்டோ அல்லது போடாமலோ, ஆற்றிக்கொள்ள ஒரு சின்ன காலி டவராவுடன் தருவார்கள். சிறிதளவு மட்டும் சர்க்கரை நாமே போட்டுக்கொள்வதாக இருந்தாலும், ஓக்கே. ஒரு சின்ன ஸ்பூன் போட்ட ஜீனி கப் நம்மிடம் வைத்து விடுவார்கள்.
சர்வர் டிப்ஸ் சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 60 இருந்தால் போதும். இருவருக்கும் சேர்த்து என்றால் 55+55+5=115 கொடுத்தாலும்கூடப் போதும்.
இந்த ஹோட்டல் அமைந்துள்ளது மிகப்பெரிய இடமாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், நல்ல வெளிச்சமாகவும், கார் பார்க்கிங் வசதிகளுடன் அமர்க்களமாகவே உள்ளது.
>>>>>
கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)
பதிலளிநீக்குஇந்த மினி டிஃபன் ஓரளவுக்கு நல்ல சூடாகவும், டேஸ்ட் ஆகவும், போதுமானதாகவும் உள்ளது. இதைச் சாப்பிட்டதும் அடுத்த 2 மணி நேரங்களில் மீண்டும் சுகர் டெஸ்ட்க்குப் போய் விட்டு, பிறகு டாக்டரை சந்திக்க வேண்டியிருப்பதால், இந்த மினி டிஃபனே ஜாஸ்தி என நினைத்து, சில சமயங்களில் மட்டும், நானும் என் மனைவியும் அதில் உள்ள 1+1=2 இட்லிகளை மட்டும் எடுத்து தனியாக நாங்கள் அன்று வழக்கமாக எங்களுடன் எடுத்துச்செல்லும் ஒரு சின்ன டிஃபன் பாக்ஸில் போட்டு அதன் தலையில் எண்ணெய் குழைத்த மிளகாய்ப் பொடியை மட்டும் அபிஷேகம் செய்து எங்களிடம் தனியாக, பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதும் உண்டு. :)
நியாயமாகப் பார்த்தால் இதில் எண்ணெயே சேராத பதார்த்தமாகிய இட்லியை மட்டும் ஆளுக்கு இரண்டோ அல்லது மூன்றோ வாங்கிக்கொண்டு, அதில் தேங்காய் சட்னி இல்லாமல் சாம்பார் மட்டும் தோய்த்து சாப்பிட வேண்டும். ஆனால் ஏனோ மனசு கேட்பது இல்லை. மனசு கேட்டாலும் எங்களின் நாக்கு அதற்கு ஒத்துழைப்பது இல்லை. :)
திரும்பிப்பார்த்தால் இட்லி, தோசைதான் வீட்டினில் அடிக்கடி இருக்கவே இருக்கே .... இங்கு வந்த இடத்திலும் அதுவேவா .... என நினைக்கத் தோன்றுகிறது.
>>>>>
கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)
பதிலளிநீக்குஇந்த மினி டிஃபனில் அவர்கள் தரும் ஒரேயொரு மெதுவடை சுடச்சுட மொறுமொறுன்னு சும்மா சூப்பரோ சூப்பராக உள்ளது. அதிலேயே ஒரு ஒருடஜன் வடைகளாக வாங்கிச் சாப்பிட மாட்டோமா என நினைக்கவும் தோன்றுகிறது.
இதனை இங்கு ஏன் உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் தாங்கள் இந்த ஹோட்டலுக்கு ஒருமுறை காலை வேளையில் 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் போய் இந்த மினி டிஃபனையும், குறிப்பாக அதில் தரப்படும் சூடான சுவையான பூரி + மெதுவடை போன்றவற்றை ஒருமுறை டேஸ்ட் செய்து பார்க்கணும். பிறகு சொல்லணும்.
மினி டிபன் மட்டுமல்லாமல் அங்கு இன்னும் என்னென்ன உங்களுக்கு வேண்டுமோ எல்லாமே சுடச்சுட கிடைக்கும்.
>>>>>
கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)
பதிலளிநீக்குமேற்படி ஹோட்டலுக்குச் செல்லும் வழி:
திருச்சி மெயின்கார்ட் கேட் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்குப் பின் புறமாக உறையூர் செல்லும் சாலை ரோட்டில் முதலில் போகணும்.
கோட்டை இரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம் ஏறி இறங்கியவுடன், சிக்னலில் நான்கு ரோடு (நாம் செல்லும் ரோட்டைத்தவிர மூன்று ரோடுகள்) பிரியும்.
அதில் இடது பக்கம் சாஸ்திரி ரோடு என்று மிக அகலமானதொரு ரோடு திரும்பும். அதில் திரும்பி நேராகப் போய்க்கொண்டே இருக்கணும்.
முதல் 6 கிராஸ் தாண்டி 7 வது கிராஸில், சிக்னல் வரும். இதில் வலதுபுறம் திரும்பணும்.
[அதே இடத்தில் சிக்னல் தாண்டிய உடனே, இடதுபுறம் மெயின் ரோட்டின் மேலேயே மேற்கு பார்த்து ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற ஹோட்டல் வரும். அதுவும் பிரபலமானதொரு ஹோட்டல் எனச் சொல்லுவார்கள். ஆனால் நான் அங்கு இதுவரை போனது இல்லை]
7-வது கிராஸில் வலதுபுறம் திரும்பியதும், இம்மீடியட் ஆக இடதுபுறமாக வரும் 2-வது சந்தினில் நுழையணும். நுழைந்ததும் வலது பக்கத்தில் பத்தடியில் இந்த நான் சொல்லும் ‘ஹோட்டல் கெளரி கிருஷ்ணா’ உங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.
தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸிலிருந்து பொடி நடையாகப் போனால் ஒரு 40 நிமிட நேரத்திற்குள் இந்த ஹோட்டலை அடைந்து விடலாம்.
ஆட்டோவில் போனால், இன்றைய தேதியில் ரூ. 60 அல்லது 70 கேட்பார்கள். ஆட்டோவில் ஒரு 10 நிமிடத்திற்குள் நாம் அங்கு போய்ச் சேர்ந்து விடலாம்.
நான் என் வீட்டிலிருந்து புறப்பட்டு மாதாமாதம், என் ஆஸ்தான ஆட்டோக்காரருடன், அங்கு சுகர் டெஸ்ட் செய்துகொள்ள சென்று வருவதால், ஆட்டோவுக்கு போக ரூ 75, திரும்பி வர ரூ 75 ஆகமொத்தம் ரூ 150 கொடுத்து வருகிறேன்.
[என் வீட்டிலிருந்து தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்கு மட்டும் நான் போகவே ரூ. 40 தர வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்].
இதெல்லாம் உங்களின் தகவலுக்காகவும், தங்கள் டைரியில் குறித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே இங்கு எழுதி அனுப்பியுள்ளேன்.
அன்புடன் கோபு
ஆஹா !!சகோதரர் நெல்லை தமிழன் பாராட்டிணத்தில் குண்டு பூனைக்கு சந்தோசம் தாங்கலை :)
பதிலளிநீக்குஎன்னமா ஆடுது எங்கள் பிளாக் வலைத்தளம் ..
சகோ அந்த பூனைக்கு ழ ,ள வித்யாசமே தெரியாது :) தற்சமயம் நானேதான் தமிழ் டியூஷன் எடுக்கறேன்
வைகோ சார் சொல்லி இருக்கும் அந்த அடையார் ஆனந்த பவனில் எங்களுக்கு மோசமானதொரு அனுபவம். தோசையோ ஊத்தப்பமோ வேண்டும் என்று சொல்லி இருந்தோம். நான் சாம்பார் இட்லி கேட்டிருந்தேன். தட்டிலே இட்லிகளை வைத்து சாம்பாரை ஊற்றும்போது அதிலே ஏதோ இருந்தது. அதைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கொண்டு வந்துட்டாங்க. நான் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். :( அப்புறமா அங்கே சாப்பிடவே பிடிக்கலை!
பதிலளிநீக்குநன்றி கோபு சார். ஒரு இடத்துக்குச் செல்வதற்கு சரியான முறையில் வழி சொல்லியிருக்கிறீர்கள். நானெல்லாம் தில்லை நகர் போக வாய்ப்பே இல்லை.
பதிலளிநீக்குகீதா மேடம்... தூக்கிப் போட்டதை ஏன் தவறாக நினைக்கிறீர்கள். அது 'புளி'யாகவும் இருக்கலாமில்லையா? சமீபத்தில் திருப்பதியில் (அங்கு பஃப்ஃபே முறையில்) கொடுத்த சாம்பார் சாதத்தில், ரெண்டு முழுப்புளியோட தோல் சேர்ந்தே இருந்தது. ஆனா ஒண்ணு. மனசுல, அதில் இருந்தது வேறு ஏதோ ஒன்று என்று தோன்றிவிட்டால், பிறகு சாப்பிடமுடியாது.
சுவையான குறிப்பு.....
பதிலளிநீக்குநன்றி....
நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குஇதுக்கு நான் கருத்துச் சொல்லாமலே விட்டிருக்கேன் என்பதால் நினைவிலேயே இல்லாத பதிவு. என்னோட தவலை வடை அல்லது தவலடை செய்முறையே வேறே! :)))))
பதிலளிநீக்கு