தவலடை
என்றதும், நிறையபேர், ஆமவடையையும் (ஆமாம். தவலடைன்னு போர்டுல பேர் போட்டு,
ஒரு ஹோட்டலில் ஆமவடையைக் கொண்டுவந்து போட்டான்), தவலை போன்ற உருளியில்
அடைபோல் தட்டி
எடுப்பதையும் தவலடை என்று சொல்கின்றனர். கேட்டால், தவலை அடை என்று
பரிமேலழகர் உரை எழுதுகின்றனர்.
திருநவேலி
ஜங்க்ஷனில், என் அம்மாவின் பிறந்த வீடு இருந்தது. 1970கள்ல, தெருவுக்கு
இரண்டு வீட்டில் இந்தமாதிரி, நொறுக்குத் தீனிகள் மாலை 3 மணிக்கு
ரெடியாகறமாதிரி, செய்வார்கள்.
அதில், மிக்சர், காராசேவு, தவலடை போன்றவை அடக்கம். அதுக்கு அப்புறம்தான்,
நொறுக்குத்தீனிக் கடைகள் (நெல்லையில் லாலாக் கடைகள் என்று சொல்வோம்) நிறைய
முளைக்க ஆரம்பித்தன. அதில், நெல்லை ஸ்பெஷலான அல்வாவும் விற்க ஆரம்பித்தது.
எங்க அம்மா வீடு கொஞ்சம் லிபரல்கள் நிறைந்தது.
அதாவது, ஹோட்டலில் எப்பவாவது (மாதம் ஒரு தடவை. அதுவும் பூரி மசால், நெய்
ரோஸ்ட், ரவா தோசை) சாப்பிடுவதோ அல்லது இந்த மாதிரி மிக்சர், தவலடை,
காராச்சேவு வாங்கிச் சாப்பிடுவதோ நடக்கும். வீடுகளில் வெங்காயம், பூண்டு,
சோம்பு, முருங்கை இன்னபிற எப்போதும் கிடையாது. எங்கள்
அப்பா சைடு வீடு, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 5-6 கிலோமீட்டர்கள்தான்.
ஆனால் அவர்கள் ரொம்ப கன்சர்வேடிவ். அடுத்த வீடுகளில் தண்ணீர் குடிப்பதே
சுத்தமாகத் தவிர்க்கவேண்டும் என்ற அளவு ஸ்ட்ரிக்ட். காய்களிலும் ஆங்கிலக்
கறிகாய்களுக்குத் தடா (தக்காளி, உருளை, கோஸ் முதற்கொண்டு).
ஜங்க்ஷனில் பாட்டி வீட்டில் இருக்கும்போது (லீவு சமயங்களில்தான்)
எங்கம்மா, என்னை காராசேவு, தவலைடை முதலியவற்றை இந்த வீடுகளிலிருந்து
வாங்கிவரச் சொல்லுவார்கள், இப்போ அதையெல்லாம் நினைத்தால், ‘எப்படி இருந்த
நான்… இப்டியாயிட்டேன்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அன்று
ஜங்க்ஷனில் தவலடை என்று எதைச் சாப்பிட்டேனோ, அதைத்தான் நான் தவலடை என்று
ஒப்புக்கொள்வேன். அதைத்தான் இங்கு செய்முறையாகக் கொடுத்திருக்கிறேன்.
தவலடை
செய்வதற்கு, புழுங்கரிசி அரை கப், உளுத்தம்பருப்பு ¼ கப், துவரம் பருப்பு ¼
கப், கடலைப் பருப்பு ¼ கப், பாசிப்பருப்பு (தொலி இல்லாதது) ¼ கப், 3-5
சிவப்பு மிளகாய்,
இஞ்சி ஒரு கணு (கட்டை விரல் அளவு) இவைதான் முக்கியப் பொருட்கள். அரிசியைத்
தனியா ஊறவைக்கவும். பாசிப்பருப்பு நீங்கலாக மற்ற பருப்புவகைகளை ஒன்றாக
ஊறவைக்கவும். பாசிப்பருப்பைத் தனியா ஊறவைக்கவும். ஒரு மணிநேரமாவது ஊறணும்.
நான் பொதுவா அரிசியோட, மிளகாய் வற்றலையும் சேர்த்து
ஊறவைத்துவிடுவேன்.
சில்லுத் தேங்காயை, கொஞ்சம் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தவலடையில் தேங்காய் தெரியவேண்டும். (திருவியிருக்கக்கூடாது).
ஊறவைத்த
பருப்புகளையும், அரிசியையும் சேர்த்து (பாசிப்பருப்பைத் தவிர),
மிக்சியில், வற்றல் மிளகாய், இஞ்சியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கர
கரன்னு மாவு இருக்கணும்.
ஊறின பாசிப்பருப்பைத், தண்ணீரை இரத்துவிட்டு, மிக்சியில் தனியாக ஒரு
சுத்து சுத்திக்கொள்ளவும். பாசிப்பருப்பு அரைகுறையாக உடைந்திருந்தால்
போதும்.
பொரிக்கும்போது,
கோபு சாரின் ‘எண்ணெய் தொப்புளில் தெரித்த அனுபவம்’ என் மனதிலேயே
இருப்பதால், வாணலிக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளிவிட்டு
ஜாக்கிரதையாகத்தான் தவலடை
தட்டி எண்ணெய்க்குள் போட்டேன்.
பின் குறிப்பு:
·
நான்
கருவேப்பிலையை, கத்தரி கொண்டு ஒன்றிரண்டாகக் கட் பண்ணிக்கொள்வேன்.
அப்பத்தான் ஒரு தவலடைக்கு சிறிது சிறிதாக 4-5 கருவேப்பிலையாவது அகப்படும்.
·
வடைபோல் தட்டாமல், குணுக்குபோல் கிள்ளிப்போட்டுப் பொரித்தும் எடுக்கலாம். ஆனால் அதனைத் தவலடை என்று சொல்லமுடியாது.
·
மாவு ஜாஸ்தியாகிவிட்டதென்றால், உப்பையும், தேங்காயையும் போடுவதற்கு முன்பு, கொஞ்சம் குளிர்சாதனப் பெட்டியில் எடுத்துவைத்துவிடவும்.
·
மாவு
ரெடி, ஆனால், தவலடை அப்புறம்தான் பண்ணப்போகிறீர்கள் என்றால், உப்பைச்
சேர்க்காதீர்கள். வடை தட்டும்போது சேர்த்தால் போதும். இல்லைனா, மாவு
நீர்த்துவிடும்.
·
இதை எழுதும்போதே என் ஹஸ்பண்ட் மேல் ஆத்திரமா (J)
இருக்கு. நாங்கள்லாம், எங்கள் வீட்டில், அதாவது அம்மாவுடன் இருந்தபோது,
உளுந்தை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுப்பதைத்தான்
குணுக்கு என்பார். என் ஹஸ்பெண்டோ, அடைமாவு மாதிரி, ஆனால் கெட்டியாக அரைத்து
அதைச் சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்தெடுப்பதைக்
குணுக்கு என்று சொல்லிவிட்டார்.. (நாங்களும் இதைத்தான் குணுக்கு என்போம். தித்திப்பாகச் செய்ய
மாட்டோம். ஆனால் ஒன்று, மாவை உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கும் எதுவுமே
குணுக்குத்தான்!!!) இப்படி, கிச்சடி, குணுக்கு எல்லாம் என்
ஹஸ்பண்ட் வந்தபின் அடையாளம் மாறிவிட்டன. அவங்கதான் அப்படின்னா…. கீதா
சாம்பசிவம் போன்ற ஜாம்பவான்களும், அடை மிக்ஸை பொரித்தெடுப்பதைக் குணுக்கு
என்று சொல்கிறார்கள். பார்க்கலாம் எங்க ஊர் கீதா ரங்கன்
என்ன சொல்கிறார் என்று)
அன்புடன்,
(நான் இதுவரை இது முயற்சித்ததோ, சாப்பிட்டதோ இல்லை)




