திங்கள், 26 மார்ச், 2018

​"திங்க"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


பைனாப்பிள் கேசரி 

என் பெண்ணுக்கு பைனாப்பிள் கேசரி பிடிக்கும்னு சொல்லிக்கிட்டே இருப்பா. என்னவோ அவளுக்கு கடைல பண்ணற பைனாப்பிள் கேசரிதான் ரொம்பப் பிடிக்கும். டிசம்பர்ல இங்க வந்திருந்தபோது, அவங்களோட  இங்க சென்ட்ரல் மார்க்கெட் போய் (உங்க ஊர் கோயம்பேடு மாதிரி) பழங்கள் வாங்கும்போது ஒரு பைனாப்பிளும் வாங்கினேன். அவங்க ஊருக்குக் கிளம்ப இரண்டு நாட்கள் இருக்கும்போது, தில்லையகத்து கீதா ரங்கனின் பாகற்காய் உப்புச்சார் பண்ணினேன். அந்த மெனுவோட பைனாப்பிள் கேசரியையும் பண்ணிடலாம்னு நினைச்சு அன்னைக்கே பைனாப்பிள் கேசரி பண்ணினேன். இதுதான் நான் முதல் தடவையாக பைனாப்பிள் கேசரி பண்ணுவது.

தேவையான பொருட்கள்

பைனாப்பிள் ¼ பழம்
ரவை 2 கப்
தண்ணீர் 4 ½ கப்
சர்க்கரை 4 கப்
நெய் ½ கப்
பைனாப்பிள் எசன்ஸ் 2 ஸ்பூன்
மஞ்சள் கலர் (Food) கொஞ்சம்
முந்திரிப்பருப்பு தேவையான அளவு
கிஸ்மிஸ் பழம் (உலர் திராட்சை) கொஞ்சம்

எப்படிச் செய்வது?

பைனாப்பிள் பழத்தின் தோலை எடுத்துவிட்டு, பொடியாக கட் பண்ணிக்கோங்க. அதோட கொஞ்சம் சர்க்கரை கலந்து 20 நிமிஷம் ஊற வையுங்க. அப்போதான் அன்னாசியின் புளிப்பு தெரியாம ஊறி இனிப்பா இருக்கும். தாய்வானில் நான் ரொம்ப இனிப்பான பைனாப்பிள் சாப்பிட்டுருக்கேன். அதுக்கெல்லாம் இந்த ஜீனி கலக்கவேண்டிய தேவை இருக்காது.



கொஞ்சம் நெய்யில், முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துவச்சுக்கோங்க.



ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவையுங்க.



அதே சமயம் ஒரு கடாயில் நெய்யை விட்டு, ரவையை நன்கு வறுத்துக்கோங்க.  ரவை நன்கு வறுபட்டதும், ஒரு கையால் கிளறிக்கொண்டு, இன்னொரு கையால் இடுக்கியை உபயோகப்படுத்தி கொதிக்கின்ற தண்ணீரை ரவை வறுபட்டுக்கொண்டிருக்கும் கடாயில் விடுங்க. இந்த ஸ்டெப்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாச் செய்யணும். ரவை சூடான தண்ணீரோடு நம்ம கையைப் பதம் பார்த்துவிடக்கூடாது.  எதுக்காக ரவையைக் கிளறிக்கொண்டே தண்ணீர் ஊற்றுகிறோம்னா, ரவை கட்டி தட்டிடக்கூடாது.



அடுப்பைத் தணித்துவைத்து, கொஞ்சம் கிளறுங்க. ரவை ஓரளவு தளிகையாகிவிடும் (வெந்துவிடும்).



இப்போ ஜீனியை கடாயில் போடவும். ஜீனி உருகும். நல்லாக் கிளறுங்க. கொஞ்சம் கிளறினபின்பு, கெட்டியாகும் சமயம், பைனாப்பிளைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதோட, மஞ்சள் நிறத்தையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகும் சமயம் எசன்ஸ் சேருங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த முந்திரியைக் கலந்து பாத்திரத்தில் எடுத்துவைத்து விடலாம்.



இந்த உணவு நிறமி கலப்பது எனக்குத் தோணுது, நம்ம மனசோட சம்பந்தப்பட்டதுன்னு. சில இடங்கள்ல அபூர்வமா பச்சை நிற கேசரி பார்த்திருக்கேன். பார்க்கும்போதே சாப்பிடப் பிடிக்காது. பழ கேசரி, நிறமில்லாமலேயே நல்லாத்தான் இருக்கும். செக்கச் சிவந்த கேசரியும் (சரவணபவனில் போடுவாங்க) அவ்வளவு நல்லா இருக்காது (பார்வைக்கு). கேசரின்னாலே ஆரஞ்சு நிறமும், பைனாப்பிள் கேசரின்னாலே மஞ்சள் நிறமும்தான் நம்ம மனசுக்குத் தோணும்னு நினைக்கறேன்.



இதே முறைல, பைனாப்பிளுக்குப் பதிலாக, சிறியதாக கட் பண்ணின ஆப்பிள் (சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் அல்ல), சிறிது பேரீச்சை, விதை இல்லாத கறுப்பு திராட்சை கட் பண்ணினது, செர்ரி போன்றவை கலந்தால், அசத்தலான பழ கேசரி தயாராயிடும். ஒருவேளை பைனாப்பிள் எசன்ஸ் இல்லைனா, கொஞ்சம் பைனாப்பிளை அரைத்து அந்த விழுதையும் எசன்ஸுக்குப் பதிலாகச் சேர்க்கலாம்.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொண்ணு, சாப்பிட்டுப் பார்த்துட்டு ரொம்ப தித்திப்புப்பா என்று சொல்லிட்டா. அவளுக்கு குறைவா இனிப்பு இருக்கணும் என்பது எனக்கு மறந்துபோச்சு.

நீங்களும் செய்துபாருங்கள்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

62 கருத்துகள்:

  1. காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அடடே... காலை வணக்கம் வெங்கட். நலம்தானே?

    பதிலளிநீக்கு
  3. துரை அண்ணாவைக் காணவைல்லை அந்த வாழ்க நலம் எனும் முதல் கருத்து ரொம்பவெ பாசிட்டிவாக இருக்கும்...

    ஆஹா நெல்லையின் கேசரி...அதுவும் பைனாப்பிள் கேசரி....படம் எல்லாம் மிரட்டுது!! ஹா ஹா ஸ்ரீராம் அண்ட் நெல்லை அப்பால வரேன்...கொஞ்சம் பிஸி....மதியம் ஆகிவிடும் கேசரி ஆறிவிடும்...பரவாயில்லை...எனக்கு ஆறினாலும் பிடிக்கும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பச்சைக் கேசரி பத்தி என் பக்கத்துல ஒரு பதிவு இருக்கு நெல்லைத் தமிழன்.....

    https://venkatnagaraj.blogspot.com/2015/01/blog-post_28.html

    பைனாப்பிள் கேசரி - நல்லாவே இருக்கு. இங்கேயும் கொஞ்சம் புளிப்பாதான் கிடைக்கும். செய்து பார்க்கலாம்! ஃபுட் கலர் இல்லை என்பதால் சேர்க்காமல் தான் செய்து பார்க்க வேண்டும்.!

    பதிலளிநீக்கு
  5. துரை செல்வராஜூ ஸார் இட்லி தேசம் செல்லப் போவதாகச் சொல்லி இருந்தார் கீதா...

    பதிலளிநீக்கு
  6. கடந்த மாதத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டிக்கு இதைத்தான் செய்துவிட்டு போயிருந்தேன்... எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள் நீங்கள் சொன்ன முறைதான் ஆனால் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே பைனாப்பிள் போடும் முறை நான் பைனாப்பிள் கட் செய்து சிறிது நேரம் சுகர் போட்டு வைத்துவிட்டு அதன் பின் மைரோவேனில் 2 நிமிடங்கள் வேக வைத்துவிட்டு அதன் பின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதன் பின் கேசரியில் கலப்பேன் அபோதுதான் பைனாப்பிள் துண்டு துண்டாக இருக்காது கெசரியில் நன்கு கலந்து இருக்கும்

    பதிலளிநீக்கு
  7. கேசரி எங்க அம்மா நல்லா செய்வாங்க... இதை செய்ய சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  8. பைனாப்பிள் கேசரி குறிப்பு அருமை! சர்க்கரை மட்டும் அதிகம். நான் நிறைய தடவை செய்திருக்கிறேன். அன்னாசியுடன் ஆப்பிள், மாம்பழம் கலந்தும் செய்யலாம். நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பைனாப்பிள் கேசரி செய்முறை படங்களுடன் மிகவும் நன்றாக இருந்தது. இந்த மாதிரி செய்ததில்லை குறித்துக் கொண்டேன் இனி செய்து பார்க்கிறேன். இதை செய்து காண்பித்த நெல்லைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். இதை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான ரெசிபி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. வழக்கமாக வருபவர்கள் ஏஞ்செலின், அதிரா, கீதா சாம்பசிவம் ஆகியோரை காணவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. வெளியிட்டமைக்கு நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். அப்புறம் வருகிறேன்.

    இது எப்போ நான் பண்ணினேன் என்று யோசிக்கும் அளவு ஆகிவிட்டது. இது, போன முறை என் மனைவி, பசங்க இங்க இருந்தபோது (டிசம்பர்) செய்தது. இப்போ மனைவி இரண்டு வாரம் இங்க இருக்கா. பிறகு மீண்டும் அடுத்த மாத இறுதியில் வருவா ( நாங்க திரும்ப நிரந்தரமாக இங்கிருந்து கிளம்புவதற்கு).

    இதைச் செய்தபோது நான் இனிப்புகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இப்போ இனிப்புகளை நிறுத்தி இரண்டு மாதங்களாகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  13. ரவாகேசரி அடிக்கடி செய்வதுண்டு பைன் ஆப்பிள் கிடைக்கும் போதுசெய்துபார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. நெல்லை செம ரெசிப்பி..படங்கள் விளக்காம் எல்லாமே செம. ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க...பாராட்டுகள்!

    எனக்கு ரொம்பப் பிடிக்கும்....செய்ததும் உண்டு...என்ன அதிகம் சாப்பிட முடியாது...

    சர்க்கரை இவ்வளவு போட மாட்டேன். அப்புறம் பைனாப்பிள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போடுவேன்....துண்டுகளாகப் போடுவது கொஞ்சம் ஆனால் அரைத்துச் சேர்ப்பேன்...அதற்கு ஏற்றாற்போல் ரவைக்குத் தண்ணீர்...மற்றபடி இதே செய்முறைதான்....சர்க்கரையில் ஊற வைப்பது எல்லாமே....ஆப்பிள் கேசரி, டேட்ஸ், மாம்பழக் கேசரி, ட்ரை ஃப்ரூட்ஸ் கேசரி, ஊட்டி/டெல்லி கேரட் கேசரி என்று என் பையனுக்குக் கேசரி ரொம்பப் பிடிக்கும் என்று சிறு வயதிலிருந்தே அவன் வாரம் ஒரு முறை கேட்ப்பான் எனவே கொஞ்சமே கொஞ்சமாக இப்படி ஏதேனும் ஒரு வகை செய்து பழகியதுதான்...இதைச் சாப்பிட்டால் அவன் வேறு எதுவும் சாப்பிட மாட்டான். இப்போது செய்வதில்லை என்பதால் செய்து படம் எடுத்து திங்கவுக்கு அனுப்ப முடியலை....பார்ப்போம் வாய்ப்பு கிடைக்கிறதா என்று..

    உப்புச்சார் செய்து சுவைத்தமைக்கு மிக்க நன்றி நெல்லை....

    உங்கள் பெண் விரும்பிச் சாப்பிட்டாரா?

    கீதா

    பதிலளிநீக்கு
  15. சக்கரைதான் அதிகம். அழகாகவும் பதமாகவும் வந்திருக்கு. விடும் நெய்யை முதலிலேயே வைத்து,ரவையை வறுத்து,கொதிக்கும் தண்ணீரை விட்டுக் கிளறுவதுதான்,கேஸரியின் பதத்திற்கே முக்கியமானது. விசேஷம் பழக்கலவை. ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்தியது நல்லதுதான். ஆரோக்கியம்தான் முக்கியம். நல்ல நெய்யாக இருந்தால் வாஸனை மூக்கைத் துளைக்கும். நல்லபதிவு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. ஆஹா இன்று நெல்லைத்தமிழன் குறிப்போ.. நெல்லிக்காய்க் குறிப்புப் போடுவார் என எதிர்பார்த்துப் பார்த்து ஏமாந்திட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ////இதுதான் நான் முதல் தடவையாக பைனாப்பிள் கேசரி பண்ணுவது.
    //
    ஓஓஓஒ அப்போ இது கன்னிக் கேசரீஈஈஈஈஈஈ:)).. நாங்கள் எல்லோரும் லாப் எலிகள்:)) நல்லவேளை நான் வரும்போது எல்லோருமே சாப்பிட்டு முடிச்சிட்டினம்:))..

    சூப்பரா இருக்கு.. எங்களுக்கு பைன் அப்பிள் பெரிசா பிடிக்காது ஆனா இதே முறையில் மங்கோ பல்ப் பேச்ர்த்துச் செய்யலாம் என நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு அன்ரி கனடாவில் செய்து அனுப்பி விட்டவ, அப்படியே மாம்பழ வாசனை அடிச்சுது ஆனா கேட்கோணும் என நினைச்சு செ..சே.. கேசரியில் பழங்கள் போடுவார்களோ என எண்ணி கேட்காமல் விட்டு விட்டேன்... இப்போ செய்ய ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  17. செய்முறை படங்கள், எல்லாம் அழகு.

    //பொண்ணு, சாப்பிட்டுப் பார்த்துட்டு ரொம்ப தித்திப்புப்பா என்று சொல்லிட்டா. அவளுக்கு குறைவா இனிப்பு இருக்கணும் என்பது எனக்கு மறந்துபோச்சு.//

    அடுத்தமுறை பொண்ணுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. //அடுத்த மாத இறுதியில் வருவா ( நாங்க திரும்ப நிரந்தரமாக இங்கிருந்து கிளம்புவதற்கு).//

    இனி எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கவா?
    மகிழ்ச்சி , வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. //jk22384 said...
    வழக்கமாக வருபவர்கள் ஏஞ்செலின், அதிரா, கீதா சாம்பசிவம் ஆகியோரை காணவில்லை.
    Jayakumar///

    அவ்வ்வ்வ்வ்வ் கேசரியை விட்டு விட்டு எங்களைத் தேடியிருக்கிறார்.. நன்றி நன்றி.

    ஏஞ்சலின் வரும் ஞாயிறு ஈஸ்டர் வரை பிஸியாக இருப்பா, அதன் பின்பு வருவா.

    கீசாக்காவுக்குப் பட்டுக் குஞ்சு வந்திருப்பதாகக் கேள்வி ச்சோ அவவும் பிஸியாகிடுவா:)..

    நேக்குத்தான் கை எங்க வைகிறேன் கால் எங்க வைக்கிறேன் எனப் புரியுதில்லை:).. இப்போ விண்டர் முடிஞ்சு வெயில் தொடங்கி விட்டதால.. வெளியே ஓடச்சொல்லுது மனம்:).. கொம்பியூட்டர் பக்கம் வருவது இன்றஸ்ட் குறையுது.. ஆனாலும் விட மாட்டேன் வருவேன்:)..

    பதிலளிநீக்கு
  20. திங்கள் கேசரிக்கு செவ்வாய் வந்தாச்சு. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    நெல்லை ஸ்பெஷல் கேட்கணுமா.

    இங்கயும், ஆப்பிள்,பைன் ஆப்பிள் இரண்டும் செய்வது உண்டு.
    கலர் போடாமல் எது செய்தாலும் ரசிக்காது.
    இப்போ குங்குமப்பூ போட்டு விடுகிறேன்.

    ரவையை வறுத்து வென்னீர் சேர்த்தால்
    கட்டி தட்டாது.
    அருமையான படங்கள். சர்க்கரை குறைத்துப் போட்டால்தான் எல்லாமே சுவைக்கும்.

    நம் ஊருக்கு வருகிறீர்களா. நல் வரவு நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  21. நான் அன்னாசிப் பழத்தை துருவி போட்டு விடுவேன். அதனால் பழம் கேசரியோடு சேர்ந்து நன்றாக வெந்து விடும்.

    தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறினால் கட்டி தட்டாது.

    பதிலளிநீக்கு
  22. ம்ம்ம்ம் பைனாப்பிள் கேசரி செய்முறை நான் பண்ணுவது வழக்கம் போல் வித்தியாசமானது! ஹிஹிஹி, கேசரிக்கு நெ.த. சொல்லி இருக்கும் அளவு தான் சர்க்கரை நானும் போடுவேன். எனக்கெல்லாம் இது தித்திப்பே இல்லை! வெல்லம், சர்க்கரையே தித்திக்கலைனு சொல்லும் ரகம் நான்! ஆனால் காஃபி, டீ, பால், ஹார்லிக்ஸில் நோ சர்க்கரை! :)

    பதிலளிநீக்கு
  23. அன்னாசிப் பழம் அஸ்ஸாம் மாநிலத்தில் நன்றாக இருக்கும். புளிப்பு இருக்காது. நாம் வாங்கறது அஸ்ஸாம் மாநிலத்துப் பைனாப்பிள் தானானு எப்படித் தெரிஞ்சுக்கறது! கஷ்டம் தான். பைனாப்பிள் கேசரிக்குப் பைனாப்பிளைத் தோல் சீவிச் சின்னச் சின்னத் துண்டங்களாகச் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணம் துண்டங்களுக்கு அரைக்கிண்ணம் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் நீரைக் கொதிக்கவைத்து சர்க்கரை சேர்க்கவும். சரக்கரை கரைந்ததும் பைனாப்பிள் துண்டங்களைப் போட்டுக் கொதிக்கவிடவும். இரண்டும் சேர்ந்து கூட்டுப் போல் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    பதிலளிநீக்கு
  24. நெ.த. இரண்டு கிண்ணம் ரவை சொல்லி இருக்கார். கிண்ணம் அளவு தெரியலை! ஒரு வேளை 200 கிராம் கொள்ளளவு எனில் இரண்டு கிண்ணம் ரவைக்குக் கேசரி பத்துப் பேருக்குக் கொடுக்கும் அளவில் வந்துடும். ஹிஹிஹி. ஆகவே நிதானமாகச் சின்னக் கிண்ணமாக இரண்டு கிண்ணம் எடுத்துக்கவும். கேசரிக்குத் தேவையான நெய்யைக் காய வைத்து முந்திரி, திராக்ஷைகளை வறுத்து எடுத்துக் கொண்டு தனியே வைக்கவும். காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் ரவையைப் போட்டு வறுக்கவும். பக்கத்தில் இன்னொரு அடுப்பில் வெந்நீர் கொதிநிலையில் இருக்கட்டும். ரவை வறுபடும்போதே தேவையான சர்க்கரையைச் சேர்க்கவும். பயப்படாமல் கலக்கவும். ரவையும், சர்க்கரையும் நன்கு கலந்ததும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும். தளபுள, தளபுள எனக் கொதிக்கும். கையில் எல்லாம் தெறிக்கும். ஆகவே பத்திரமாகத் தூரமாக நின்று கொண்டு கிளறிக்கொண்டே அதே சமயம் வெந்நீரையும் ஊற்றிக் கொண்டே இருக்கணும். ஹிஹிஹி! கவலையே இல்லாமல் சுமார் நாலு கிண்ணம் நீரைக் கொதிக்கவைத்துச் சேர்க்கலாம். பைனாப்பிளில் சர்க்கரை இருப்பதால் இங்கே ரவையோடு சர்க்கரை சேர்க்கும்போது அரைக்கிண்ணம் குறைச்சுக்கலாம். வெந்நீரை ஊற்றியதும் கைவிடாமல் கிளறவும். நீர்க்கப் பாயசம் மாதிரி முதலில் இருந்தாலும் பயப்படாமல் கிளறவும். விரைவில் நன்கு இறுக ஆரம்பிக்கும். சேர்ந்து வரும் சமயம் சர்க்கரைப் பாகில் வேக வைத்த பைனாப்பிள் துண்டங்களைச் சேர்த்துப் பைனாப்பிள் எஸ்ஸென்ஸும் சேர்த்து, மஞ்சள் வண்ண உணவு நிறக்கலவையைச் சேர்க்கவும். நன்கு கிளறவும் சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு முந்திரி, திராக்ஷை சேர்க்கவும். இதுக்கு நோ ஏலக்காய்! நன்றாக இருக்காது.

    மற்றப் பழங்கள் சேர்ப்பதெனில் சர்க்கரையை முழு அளவில் போட்டுக் கேசரியைக் கிளறிய பின்னர் பழத்துண்டங்களைக் கொஞ்சம் நெய்யில் வதக்கிச் சேர்க்கவும். பேரீச்சையைக் கிளறும்போதே சேர்க்கலாம். மற்றப் பருப்பு வகைகளை பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை நெய்யில் வறுத்துக் கீழே இறக்கும்போது சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  25. எல்லாம் இன்ப மயம்..
    அருமை... அருமை...

    அன்னாசிப் பழ கேசரிக்கு ஜே!...

    தாயகத்திற்குத் திரும்பிய பின்
    முதல் கருத்து இது... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  26. நேற்றைக்கே பதில் சொல்லலை எல்லோருக்கும். மன்னிக்கவும். எனக்கு பலவித பிரச்சனைகள் (உடல் நலன், பேக்கிங் மற்றும் பலவித வேலைகள், அதையொட்டிய பிரச்சனைகள்). இப்போதான் எல்லோருக்கும் பின்னூட்டமிடணும்.

    பதிலளிநீக்கு
  27. வாங்க துரை செல்வராஜு சார். தாயகத்திலிருந்து பின்னூட்டமா? வாழ்க. எல்லாம் நலம்தானே.

    பதிலளிநீக்கு
  28. வருக கீதா சாம்பசிவம் மேடம். நெடிய பின்னூட்டங்களிற்கும் செய்முறைக்கும் நன்றி. எனக்கும் எவ்வளவு இனிப்பு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோன்னுதான் தோன்றும். (இதற்காகவே வெல்லப் பாயசத்தில் பால் ரொம்ப சேர்க்கமாட்டேன்). நம்மைப்போலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று உங்கள் பின்னூட்டம் படித்துத் தெரிந்துகொண்டேன்.

    இப்போதெல்லாம் இனிப்பைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவுதூரம் இது செல்லும் என்று பார்க்கவேண்டும்.

    நான் சாப்பிட்டதிலேயே தாய்பேயில் (தாய்வான்) சாப்பிட்ட பைனாப்பிளுக்குப் பக்கத்தில் எதுவும் நெருங்கமுடியாது. அவ்வளவு சுவை, அவ்வளவு இனிப்பு. ஒரு வேளை உணவுக்குப் பதில் பைனாப்பிள் ஒன்று சாப்பிட்டுவிடுவேன்.

    மிக்க நன்னி ஹை கீசா மேடம்.

    பதிலளிநீக்கு
  29. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.

    பதிலளிநீக்கு
  30. வாங்க வல்லிசிம்ஹன் அம்மா. உங்கள் கருத்துக்கு நன்றி. ஆமாம்... சர்க்கரையைக் குறைத்தால்தான் ருசி அதிகமாகும்.

    கொஞ்சம் யோசித்துப்பார்க்கிறேன். எப்படி நம்ம ஊரில் மீண்டும் ஒட்டப்போகிறேன் என்பது யோசனையாகத்தான் இருக்கு. கடந்துவந்துவிட்ட சாலையில் மீண்டும் பயணம் செய்யமுடியுமா? பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  31. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம். நான் இப்போல்லாம் இடுகைகளைப் படிக்கிறேன், ஆனால் எல்லாவற்றிலும் கருத்திடுவதில்லை.

    பல சமயம், போகிற போக்கில் பையனோ பெண்ணோ ஏதேனும் சொன்னால் (இதைச் செய்ங்கோ அப்பா, அதை வாங்கி வாங்கோ போன்று), அப்படியே மனதில் இருத்தி அதைச் செய்துமுடித்தால்தான் ஒரு நிம்மதி வரும். நம் பசங்க நம்மீது செலுத்தும் தாக்கம் அப்படி (எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும்).

    எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கவா? - 'காலமகள்' அப்படி ஒரு காலத்தை எங்களுக்கு வைத்திருப்பாள், குறைந்தபட்சம் ஒரு சில வருடங்களாவது, என்று நம்புகிறேன். பார்ப்போம். அப்புறம் இருக்கவே இருக்கு, அவரவர் மேல்படிப்பு, பயணம், வாழ்க்கை என்று பிரிவது.

    பதிலளிநீக்கு
  32. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. என் பெண் ஆசைப்பட்டதால் (அவள் ஆசைப்பட்டது கடையில் சாப்பிட), நானே செய்யணும் என்று பைனாப்பிள் கேசரி செய்தேன். எனக்கு இனிப்புகளின்மீதான ஆசை வர வரக் குறைந்துகொண்டே வருகிறது.

    இப்போ சில வாரங்களாக, சீர் பட்சணம் சாப்பிடணும் (மைசூர்பாக், அதிரசம், லட்டு) என்ற ஆசை மனதில் இருக்கு. என் மாமனாரிடம் சொல்லிவிட்டேன். (சீர்பட்சணம்னா என்னன்னு தெரியுமோ? எங்கள் கல்யாணத்தில் பெரிய அளவில், சொன்ன எண்ணிக்கையில் பையன் வீட்டிற்கு கல்யாணத்தின்போது தருவார்கள். மைசூர்பாக், ஒரு பீஸ், கையளவு இருக்கும். அதிரசம், ஊத்தாப்பம் சைசுக்கு இருக்கும்)

    ஏன் கம்ப்யூட்டர் பக்கம் வர போரடிக்குதுன்னு எழுதியிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  33. காமாட்சியம்மாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 'நெய் வாசனை மூக்கைத் துளைக்கும்' - உண்மைதான். நெய் காய்ச்சியிருக்குன்னு தெரிஞ்சாலே தோசைக்கு அம்மாவிடம் கசண்டு கேட்டு தொட்டுக்கொண்டு சாப்பிட்டது நினைவுக்கு வந்துவிட்டது. பலசமயம் நாம் நினைவிலேயே வாழவேண்டியிருக்கிறதல்லவா?

    பதிலளிநீக்கு
  34. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். உங்கள் கருத்துக்கு நன்றி.

    //என்ன அதிகம் சாப்பிட முடியாது// - பண்ணறவங்க அதிகம் சாப்பிட்டா பின்பு என்னைப் போன்ற விருந்தினர்களுக்கு என்ன மிஞ்சும்?

    கேரட் கேசரி, டிரை ஃப்ரூட்ஸ் கேசரி - ஆஹா படிக்கும்போதே சுவைக்கத் தோணுதே...

    பதிலளிநீக்கு
  35. வாங்க ஜி.எம்.பி சார்... உங்கள் உடல் நலன் மிகுந்த முன்னேற்றம் கண்டுவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.. பூரண நலன் பெற்றபின்பு, உங்கள் திருமதியே பைனாப்பிள் கேசரி செய்துவிடுவார் பாருங்களேன். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வருகைக்கு நன்றி ஜெயக்குமார். வந்தவர்களைவிட வர தாமதமானவர்களைப் பற்றிக் கவலையா?

    பதிலளிநீக்கு
  37. வாங்க நாகேந்திர பாரதி. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வருகைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்.

    பதிலளிநீக்கு
  39. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  40. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  41. வாங்க வாங்க திண்டுக்கல் தனபாலன். இடுகை வெளியிட்டு ரொம்ப நாளானமாதிரி தோணுதே.

    பதிலளிநீக்கு
  42. வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்..

    பதிலளிநீக்கு
  43. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ சாமினாதன் மேடம்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க கில்லர்ஜி... அம்மாட்ட சொல்லி செய்யச் சொன்னீர்களா?

    பதிலளிநீக்கு
  45. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன். உங்கள் மெதட்டும் நல்லா இருக்கும். பார்டிக்கெல்லாம் நீங்களே செய்து எடுத்துப்போகிறீர்களா? அது கொடுக்கும் மன மகிழ்ச்சியே தனிதான்.

    பதிலளிநீக்கு
  46. வாங்க 'தில்லி' அகத்து வெங்கட். கருத்துக்கு நன்றி. அன்றைக்கு உங்கள் இடுகையையும் போய்ப்பார்த்தேன். எப்படி நான் பின்னூட்டமிடாமல் இருந்திருக்கிறேன் என்று யோசித்தேன். நான் மனதில் நினைத்திருந்தது இன்னும் கரும் பச்சைக் கலரில். ஆனால் அந்த அந்த உணவு, நாம் எப்போதும் சாப்பிடும் வடிவு, நிறத்தில் இருந்தால்தான் ரசித்துச் சாப்பிடமுடியும். உங்கள் இடுகையில் போட்டுள்ள இளம் பச்சை நிறக் கேசரி, சொல்லக்கூடாது... ரொம்ப வித்தியாசமாக இருக்கு. இனி அவங்க வீட்டிலிருந்து உணவுப் பொருள் வந்தால், 'சாரி..இன்னும் ஒரு வாரம் நாங்கள் உண்ணாவிரதம்' என்று சொல்லும்படி இருக்கும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. செம கலர். ஒரே ஜொள்ஸ். எனக்கு ஒரு கப் :)

    பதிலளிநீக்கு
  48. பதில்களுக்கு நன்றி நெ.த.

    இன்று விடுமுறைக்கு இந்த கேசரியை மங்கோ பல்ப்பில் செய்யலாம் என வாங்கியிருக்கிறேன்... நீங்க அளவு சொல்லவில்லை ஒழுங்கா அதனால நானே என் எக்ஸ்பீரியன்ஸ்:) ஐ வச்சுச் செய்யப்போறேன்:).

    உடம்பு சரியில்லை என என் பக்கத்திலும் சொல்லியிருக்கிறீங்க.. அங்கு இன்னும் பதில் குடுக்க மனம் - நேரம் சரியா அமையவில்லை.. ஊருக்குப் போவதால் எல்லாம் சரியாகிடும்.. இப்போ காலநிலை மாற்றம்தானே எங்கும் அதனால எல்லோருக்கும் இப்படி ஆகுது போலும்.

    பதிலளிநீக்கு
  49. நல்ல பகிர்வு. நானும் செய்வதுண்டு. உங்கள் மகள் குறிப்பிட்டதைப் போல இனிப்பு அளவு சற்று கூடுதலே. அவரவர் விருப்பம்தான்:).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!