3.11.25

"திங்க"க்கிழமை  :  பனீர் பட்டர்ஸ்காட்ச் பர்ஃபி   - மதுரவர்ஷினி ரெஸிப்பி

 பனீர் பட்டர் ஸ்காட்ச் பர்ஃபி 

மதுரவர்ஷினி


தேவையான பொருட்கள்  

காய்ச்சிய பால் -   250 மி லி 

பனீர் -   200 கிராம் 
  
பால் பௌடர்   -  150 கிராம் முதல் 200 கிராம் முதல் 

சர்க்கரை   நான்கு ஸ்பூன் 

ஏலக்காய் பௌடர்   -  ரெண்டு டீஸ்பூன் 

பாதாம் பிஸ்தா முந்திரி   -  ஒவ்வொன்றும் எட்டு பருப்புகள்

பட்டர் ஸ்காட்ச் அல்லது வெனிலா எஸ்ஸென்ஸ் - உங்கள் தெரிவில் 


ஜஸ்ட் இருபது நிமிடங்களில் செய்து விடக்கூடிய இனிப்பு இது.  இந்த தீபாவளிக்கு மருமகள் வீட்டில் செய்தது.  

​முதலில் பனீரை சிறிய துகள்களாய்  துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.  பாதாம், முந்திரி பிஸ்தாவை ட்ரையாகவே அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.   தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி இறக்கிய பாலில் பனீரை சேர்க்கவேண்டும்.  

பிறகு எடுத்துக் கொண்டிருக்கும் பால் பவுடரில் முக்கால் அளவு பௌடரை  இதில் சேர்க்க வேண்டும்.  கட்டி இல்லாமல் கிளறி விட்டு விட்டு அடுப்பில் ஏற்றலாம். 
அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.  ஒருநிலையில் அது திக்காக வர ஆரம்பிக்கும்.  சிறிய சிறிய குமிழ்கள் வரும். இந்த நிலையில் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து விடவும்.  கிளறிக்கொண்டே இருக்கவும்.  அது திரண்டு செமி சாலிட் பதத்துக்கு வரும்போது கொஞ்சம் சுவைத்துப் பார்க்கவும்.  இங்கு தேவைப்பட்டால், திக்காக வரவில்லை என்றால் பாக்கி வைத்திருக்கும் பால் பௌடரை சேர்த்து விடவும்.  ஏலக்காய் பொடியை மற்றும் அந்த முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புப்பொடியை அடுப்பை அணைத்துவிட்டு அதில் சேர்க்கவும்.  உடன் பட்டர்ஸ்காட்ச் அல்லது வெனிலா எஸ்ஸென்ஸை சேர்க்கவும்.  
ஏற்கனவே  நெய்யோ, வெண்ணெயோ தடவி வைத்திருக்கும் தட்டில் இதைக் கொட்டி பரப்பி விடவும்.  அது கொஞ்சம் நீர்ப்பதமாகவே இருக்கும் என்பதால் அதை அப்படியே ஃபிரிஜ்ஜில் வைத்து விடவும்.  பின் வெளியில் எடுத்து வில்லைகள் போடவும்.  தேவைப்பட்டால் அதன்மேல் பூவாகத்துருவிய தேங்காய்ப்பூ தூவி விடலாம்..


38 கருத்துகள்:

  1. குறைந்த இனிப்புடன், சுலபமான செய்முறை.

    பார்க்கவும் அழகா இருக்கு. ஜில்லுனும் இருக்கும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  சாப்பிடவும் நன்றாகவே இருந்தது..

      நீக்கு
  2. பனீரை திருவாமல் அரைத்தால் ஸ்மூத்தாக இருக்குமா? வில்லைகள் பிரிந்து வராதா? புதனுக்கு இந்தச் சந்தேகங்களைத் தள்ளிவிடாமல் ஶ்ரீராம் பதிலளிப்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... கேட்டுச் சொல்கிறேன்!

      நீக்கு
    2. நெல்லை பனீரை துருவாமல் கையால் உதிர்த்து அல்லது ஸ்மாஷரால் உதிர்த்து கரண்டியாலேயே மசித்து மழுமழுன்னு ஆக்கி விட்டும் சேர்க்கலாம். மழு மழுன்னு ஸ்வீட் வரும். இது கொஞ்சம் ஈசி ஸ்வீட்.

      செய்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன்.

      இதை டக்குன்னு செய்யணும்னா....அடுப்பில் வைக்காமலேயே, பனீரை நன்றாக மழுமழுன்னு ஆக்கிக் கொண்டு அதில் பால் பௌடர் சேர்த்து நன்றாகக் கலந்து, சர்க்கரையைப் பொடித்துக் கொண்டு கொஞ்சமாகச் சேர்த்து (பால் பவுடரில் ஸ்வீட் இருக்கும்) அதில் பட்டர் ஸ்காட்ச் (கீழே சொன்ன ப்ராஸஸ்) தூவிக் கொண்டு, வெனிலா, பட்டர் ஸ்காட்ச் எஸன்ஸ் சேர்த்துக் கொண்டு தட்டில் தட்டி நன்றாகப் ப்ரெஸ்க் செய்து வில்லைகள் போட்டுவிடலாம்.

      அப்பலாம் மகன் பால் கிரேஸ் உண்டு என்பதால் டக்டக்குனு ஏதாச்சும் செய்வதுண்டு. அவனும் இப்ப ஸ்வீட் பாய். அதனால் நான் யோசிப்பது கூட இல்லை!!!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. இதற்கு மருமகள் சொன்ன பதில் ஒன்று எனக்கு சரியாய் நினைவில்லை.  மறுபடி கேட்டு எழுதுகிறேன்.  மருமகள் வேலையில் இருப்பதால் பின்னர் கேட்டு எழுதுகிறேன்.

      நீக்கு
  3. பால் பவுடர்னு போட்டிருக்கீங்க. டெய்ரி ஒயிட்னர் பாக்கெட் போட்டிருக்கீங்க. இரண்டும் ஒன்றா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுச் சொல்கிறேன்!

      நீக்கு
    2. நெல்லை, டெய்ரி ஒயிட்னர் என்பதும் பால் பௌடர் தான்.

      கீதா

      நீக்கு
    3. அது ஏன் dairy whitener என்று சொல்கிறார்கள் என்றால் பால் இல்லா சமயத்தில் இந்தப் பௌடரை சூடு நீரில் கரைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால்
      நெஸ்ட்லே, ப்ரிட்டானியா பௌடர் போலதான்.

      கீதா

      நீக்கு
    4. விளக்கத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
    5. முன்னர் எல்லாம் பிரயாணம் செய்தப்ப, அதுவும் நீண்ட தூரப் பிரயாணம்....அப்ப பால் பௌடர், ப்ரூ இன்ஸ்டன்ட், சர்க்கரை எல்லாம் அளவாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு விடுவதுண்டு. ஃப்ளாஸ்கில் வெந்நீர். அதில் கரைத்துக் கொண்டால் காஃபி!!

      கீதா

      நீக்கு
  4. சூப்பர் ஸ்வீட்!!! வரிஷினிக்குப் பாராட்டுகள் பொக்கேயுடன்!!!!

    சூப்பரா செஞ்சிருக்காங்க.

    நான் மகனுக்காக இப்படிப் பால் பௌடர், பனீர் வைத்துதான் (அவனுக்குப் பால் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும் என்பதால்) செய்திருக்கிறேன்.

    ஸ்வீட் சூப்பரா வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   நன்றி.  பின்னர் மெதுவாக வந்து படித்துப் பார்ப்பார். 
      'ஏன் என் பெயரை எல்லாம் போடறீங்கப்பா' என்று முதலில் ஆட்சேபித்தாள்.

      நீக்கு
    2. 'ஏன் என் பெயரை எல்லாம் போடறீங்கப்பா' //

      ஹைஃபைவ் வித் வர்ஷினி!!!! அட! நம்ம கேஸு!!!

      கீதா

      நீக்கு
  5. ஒரு சின்ன பரிந்துரை. பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்ப்பதோடு ரியல் பட்டர் ஸ்காட்ச் செய்ய,

    சர்க்கரை /வெள்ளை அல்லது ப்ரௌன், இதை கொஞ்சம் வெண்ணையை அடிகனமான வாணலியில் போட்டு உருகியதும் சர்க்கரையை அதில் போட்டு அது நுரைத்துவரும். அதில் கொஞ்சம் பொடித்த முந்திரியை சேர்த்து ஒரு தட்டில் கொட்டிவிட்டால் கெட்டியாகிவிடும் பின்னர் அதை மிக்ஸியில் பொடித்துக்கொண்டால் ஸ்வீட், ஐஸ்க்ரீம் எதிலும் சேர்க்கலாம்.

    பட்டர் ஸ்காட்ச் சாஸிர்க்கு மேலே சொன்னதோடு நுரைத்து வரும் போது நல்ல க்ரீம், சேர்த்துக் கிளறிவிட்டால் இறக்கியதும் வெனிலா எசன்ஸ் சேர்த்து வைத்தால் ஸாஸ் அதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஸ்வீட், ஐஸ்க்ரீம் மேல் ஊற்ற, என்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லி விடுகிறேன். அல்லது படிக்க விட்டு விடுகிறேன்!

      நீக்கு
  6. இன்று ரெவியூ செல்ல வேண்டும்.  என்ன பாடு படுத்துவார்களோ...   பீதியுடன் சென்று விட்டு வந்து தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒண்ணும் பிரச்சனை இருக்காது ஸ்ரீராம்

      நீக்கு
    2. நல்லபடியாக எல்லாம் நடக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. நன்றி, நன்றி. ஆனால் நமக்கு அந்த லக் எல்லாம் கிடையாது...  கொஞ்சம் பிரச்னைதான்..  அப்புறம் சொல்கிறேன்!  நானும் எழுத வேண்டும் என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்...

      நீக்கு
    4. இந்த பதிவாளர்கள் கிட்டயே இதுதான் பிரச்சனை. ஸ்ரீராமுக்கு எழுதணும் என்ற எண்ணம் இருந்தாலும், ஒரு வியாழன் கண்டெண்டைத் தவற விடுவானேன் என்று நினைக்கிறார் போலிருக்கு

      நீக்கு
    5. அபுரி!  

      ஏன் நெல்லை...   அதுவும் வியாழன் கண்டெண்ட்டா உபயோகிக்கலாமே...   நல்லா ரெண்டு மூணு வாரம் ஓட்டலாமே..!

      நீக்கு
    6. இல்லை ஸ்ரீராம். நான் நினைத்தேன், பிரச்சனையுடன், அங்கு நடந்த கூத்துக்களையும் சேர்த்து வியாழனில் பகிர்ந்துவிடுவோமே என்று நினைக்கிறீர்களோ என்று எழுதினேன்.

      நீக்கு
    7. ஆம் நெல்லை... அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது. எழுத கை வரவில்லை!!!

      நீக்கு
  7. மாமனார் மெச்சிய மருமகள். பனீரை பர்பி ஆகும் வித்தை (செய்முறை) படங்களுடன் நன்றாக உள்ளது. பனீர் (சைவ எறா) தொக்கு, பனீர் பர்பி, அடுத்து பனீர் மசால் தோசையா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC சார்..    அப்படி ஏதாவது கிடைத்தால் போட்டு விடலாம்.  ஆனால் அதெல்லாம் கொஞ்சம் சாதாரண ஐட்டங்கள்தானே,,,  ஏற்கனவே கூட வந்திருக்கும்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
    இன்றைய திங்கள் பதிவில், தங்கள் மருமகள் செய்த பனீர் பர்ஃபி நன்றாக உள்ளது. செய்முறைகள் படங்களை ரசித்தேன். செய்முறைகளை விளக்கமாக சொன்னதற்கு மிக்க நன்றி. உங்கள் மருமகளுக்கு என் வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..   உங்கள அனைவரின் கருத்தையும் சொல்லி விட்டேன் 

      நீக்கு
  9. மாமனார் மெச்சிய மருமகள். அடுத்து பாஸின் சமையல் குறிப்பா? இத்தனை வருஷங்களாகியும் பாஸின் ஸ்பெஷாலிடி எதையுமே நீங்க பகிரலை. உங்களோட செய்முறைகளைத் தான் நிறையப் போடுவீங்க. அப்பாடா! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இத்தனை வருஷங்களாகியும் பாஸின் ஸ்பெஷாலிடி எதையுமே நீங்க பகிரலை. //

      ஒன்றிரண்டு பகிர்ந்திருக்கிறேன்.  உங்களுக்கு நினைவில்லை போல...   எனக்கே நினைவில்லை!  ஆனால் பகிர்ந்திருக்கிறேன்.  கூடிய விரைவில் ஒன்று பகிரும் எண்ணம் உள்ளது.  ஆனால் கீதா அக்கா, பாஸின் ஸ்பெஷல்கள் என்பது அவியல், பிட்லே, கேரட் பச்சடி வெண்டைக்காய் சாம்பார் என்று சொல்லலாம்.  அவை எல்லோரும் செய்வதுதானே என்று போட்டதில்லை.  ஒரு கூட்டுக்குழம்பு பதிவிட்டிருக்கிறேன் என்று நினைவு.  உருளையும் முட்டை கோஸும் போட்டு...

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. மருமகள் செய்த பனீர் பட்டர்ஸ்காட்ச் பர்ஃபி பார்க்க தேங்காய் பர்பி போல அழகாய் இருக்கிறது. பனீரை துருவி செய்ததால் இந்த தோற்றம் அருமை.
    செய்முறை, படங்கள் எல்லாம் அருமை.

    என் வாழ்த்துக்களை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு இந்த பால் பெளடர் எப்போதும் இருக்கும் வீட்டில் மாயவரத்தில் இருக்கும் போது பால்காரர் லேட்டாக வருவார். காலை 5 மணிக்கு காப்பி குடிக்க பெளடர் வாங்கி வைத்து இருப்போம்.
    குளிர்சாதன பெட்டி வீட்டுக்கு வருமுன் இப்படி இருந்தது. அப்புறம் பால் பாக்கெட் எப்போதும் இருக்கும் அதனால் வாங்குவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இப்போதெல்லாம் பால் பௌடர் தேவை குறைந்து வருகிறது.  பால் நினைத்த நேரத்தில் கிடைத்து விடுகிறது.  ஆர்டர் போட்டு வீட்டுக்கே கூட வரவழைக்கலாம் என்னும் நிலை.

      உங்கள் அனைவரின் கருத்துகளையும் மருமகளுக்கே லிங்க் கொடுத்து படிக்கச் செய்தேன்.

      நீக்கு
  12. மதுர வர்ஷிணி செய்த மதுரம் சிறப்பு! பாராட்டுகள்! கொஞ்சம் திரட்டுப் பால் டேஸ்ட் வருமோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!