15.11.25

உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து அவசர காலத்தில் உயிர்க் காக்க உதவிடும் தொழில்நுட்பமும், அதற்கான செயலியும் - மற்றும் நான் படிச்ச கதை

 

பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த ஐபிஎஸ் அதிகாரி: குவிகிறது பாராட்டு

புதுடில்லி: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தை துவக்கிய விசாரணை தான், வெடிமருந்து பறிமுதல் செய்து பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த விசாரணைக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் சக்கரவர்த்தி என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானதாக இருந்தது. இருப்பினும், இந்த முறை இந்த விவகாரத்தை 2014ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சக்கரவர்த்தி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொன்ற ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்கு தலைமை ஏற்ற இவர், போஸ்டர் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.  இதில் போஸ்டரை ஒட்டிய 3 பேர் சிக்க அவர்கள் அளித்த வாக்குமூலம் தான் பயங்கரவாத நெட்வொர்க்கின் பின்னணியை அம்பலப்படுத்தியது. விசாரணை டில்லி, ஹரியானா, உ.பி., வரை நீண்டு 2900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் பின்னணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய வைத்தது.   யார் இவர்?    சந்தீப் சக்கரவர்த்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராம கோபால் ராவ் ஆந்திர அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரங்கம்மாவும் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.    சந்தீப் சக்கரவர்த்தி கர்னூல் மாவட்டத்தில் உள்ள மான்டசரி பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்தார். பிறகு 2010 ல் கர்னூல் மருத்துவ கல்லூரியில் டாக்டர் பெற்றார். 2010 - 2011 வரை பயிற்சி மருத்துவராக இருந்தார். பிறகு 2014 ல் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.   காஷ்மீரில் பணி:  காஷ்மீரில் சந்தீப் சக்கரவர்த்தி கேந்திர முக்கியம் வாய்ந்த இடங்களிலும், முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றி உள்ளார்.  உரி மற்றும் சோபோரில் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த இடங்களில் பணியாற்றியுள்ளார். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பாரமுல்லாவில் நடவடிக்கை குழு எஸ்பி ஆகவும் பாதுகாப்பு சவால்கள் நிறைந்த ஸ்ரீநகர் தெற்கு, ஹன்ட்வாரா, குப்வாரா, குல்காம், ஆனந்த்நாக் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியாற்றி உள்ள இவர், கடந்த ஏப்.,21 முதல் ஸ்ரீநகர் மூத்த எஸ்பி(SSP) ஆகவும் பணியாற்றி வருகிறார்.  ஆனந்த்நாக், குப்வாரா, குல்காமில் பதவி வகித்த போது பல முக்கிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளித்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடித்தார். போலீஸ் மற்றும் அப்பாவி மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றார்.  ' ஆப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' என்ற பெயர் சந்தீப் சக்கரவர்த்திக்கு உண்டு. திட்டமிடுதல், உடனடியாக, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது இவரது பாணி. இதற்கு உதாரணம் தான் போஸ்டர் விவகாரம் என்கின்றனர் போலீசார். சிறிய அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட இந்த விவகாரம் விசாரணைக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் சதி, வெடிமருந்து பறிமுதல் வரை சென்றுள்ளது.  விருதுகள் :  பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக வீரதீர செயல்களுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கத்தை ஆறு முறையும், ஜம்மு காஷ்மீரில் போலீசின் பதக்கம் நான்கு முறையும் இந்திய ராணுவத்தின் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.


=========================================================================================



நல்ல மனம்; நல்ல செயல்.  ஆனால் அறிவுடைமையா என்று சொல்ல முடியவில்லை.  அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இவர் செய்ய வேண்டியதில்லை.  இதையே இவர் அரசாங்கத்துடன் போராடி இவற்றை வாங்கியிருந்தால் நூறு மார்க்!

விழுப்புரம் அடுத்த மரகதபுரம் துவக்கப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை, தான் பணிபுரியும் பள்ளிக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெஞ்சுகளை வழங்கியுள்ளார்.  விழுப்புரம் அடுத்த மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அரசி. தற்போது பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.  இவர் வரும் மே மாதம் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பள்ளிக்கு தேவையானதைச் செய்ய வேண்டும் என விரும்பினார்.  மழைக்காலங்களில் பள்ளி சிமென்ட் தரை அதிக ஈரப்பதம் ஏற்படுவதால், தரையில் அமர்ந்து பயிலும் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதை அவர் கவனித்துள்ளார்.  இதற்கு தீர்வாக இவரது பேத்தி ஷிவாணி மற்றும் நண்பர்களுடன் இணைந்து 1 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார்.  தலைமை ஆசிரியை அரசி தனது பங்காக 1 லட்சம் ரூபாய் செலுத்தி மொத்தம் 2 லட்சம் ரூபாய் செலவில் 60 மாணவர்கள் அமரக்கூடிய 30 புதிய பெஞ்சுகளை வாங்கி, பள்ளிக்கு வழங்கியுள்ளார்.  தலைமை ஆசிரியரின் இந்தச் சீரிய முயற்சியால், அந்த பள்ளி மாணவர்கள், பெஞ்சுகளில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.  தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு, தனது ஓய்வுக்கு முன்பாக, ஒரு முக்கிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திய தலைமை ஆசிரியை அரசி மற்றும் உறுதுணையாக கை கொடுத்த அவரது பேத்தி ஷிவாணியின் சேவைக்கு, கிராம மக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

=========================================================================================



சென்னை: சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சித்தார்த், மிகக்குறைந்த நேரத்தில், 'கியூப்' சுழற்றி, மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சென்னை அண்ணா நகர் பப்ளிக் ஸ்கூலில், 10ம் வகுப்பு படிக்கும் சித்தார்த், அகில இந்திய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாட்டு கழக கியூபிங் பயிற்சியாளர் ஆனந்த் ராஜேந்திரனிடம், கடந்த மூன்றாண்டுகளாக பயிற்சி பெறுகிறார். இவர் கடந்த 2023ல், கண்களைக் கட்டியபடி, மரத்தால் ஆன 4 - 4 ஸ்னேக் கியூபை, 8.59 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டார். இந்த சாதனையை, இன்ஜினியஸ் சார்ம் வேல்டு ரெக்காட்ஸ், ஆசிய புக் ஆப்ரெக்கார்ட்ஸ், இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில், உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதற்காக, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றார். கடந்தாண்டு நடந்த சாதனை நிகழ்வில், 3 - 3 எனும் அனகோண்டா கியூபை, 8.5 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டு, அடுத்த உலக சாதனையை படைத்தார். இந்தாண்டு, பல்வேறு உலக சாதனை நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்ட கியூபிக் போட்டியில் பங்கேற்றார். அப்போது, 13 திருக்குறள்களை சொல்லியபடி, வலது கையால் பட்டாம்பூச்சி சீப்பை சுழற்றியபடியே, இடது கையால் ஐந்து 2 - 2 கியூப்களை, 1 நிமிடம் 14 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டு, புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், மூ ன்று உலக சாதனைகளை படைத்துள்ள சித்தார்த்தை, பல்வேறு விளையாட்டு அமைப்புகள் பாராட்டியுள்ளன. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தமிழக கவர்னர் ரவி உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.

=======================================================================================

உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து உயிர் காப்பாற்றும் தொழில்நுட்பம்; கண்டுபிடித்தார் ராஜபாளையம் மாணவர் தயா விஷ்ணு குமரன்

ராஜபாளையம் மாணவர்தயா விஷ்ணு குமரன் 15 வயதிலே இளம் விஞ்ஞானியாக வலம் வருகிறார். இவர் மத்திய அரசின் அடல் இனோவேஷன் மிஷனில் இந்தியாவின் முதல் நுாறு மாணவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.தேசிய வணிக யோசனை போட்டியில் தேசிய அளவில் 2ம் இடம், தற்போது ஹரியானாவில் நடந்த சி.பி.எஸ்.இ., தேசிய அறிவியல் கண்காட்சியில் வெற்றி என எட்டுத்திக்கும் அறிவாற்றலால் சாதிக்கிறார். வயதானோர், கிராமப்புற மக்களின் உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து அவசர காலத்தில் உயிர்க் காக்க உதவிடும் தொழில்நுட்பமும், அதற்கான செயலியையும் கண்டுபிடித்துள்ளார் என்பது இவரது சமீபத்திய சாதனை.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்ஸ்ரீரமணா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் இவர் கூறியதாவது...  
தந்தை முத்துக்குமரன், தாய் வைதேகி. 10ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. அப்போது எல்லோருக்கும் தரமான, தேவையான நேரத்தில் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதி இல்லை என்பதை செய்திகள் மூலம் தெரிந்துக் கொண்டேன். அதனால் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பு செய்ய விரும்பினேன்.  
கிராமப்புறங்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களின் மருத்துவமனை துாரம், இணைய இணைப்பு பற்றாக்குறை, போக்குவரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. இதே நேரம், மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் ஒரே தீர்வாக 'ஸ்மார்ட் சிஸ்டம் பார் அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர்' எனும் புதுமையான சுகாதார அமைப்பை உருவாக்கினேன். இது ஒரு ஹார்டுவேர். இது செயல்பட, மக்கள் எளிதில் பயன்படுத்தசெயலியும் தேவை. இதன் நோக்கம் நேரடி உடல்நிலை கண்காணிப்பு, அவசரநிலை உதவி, மனநல பராமரிப்பு. இதனோடு உருவாக்கப்பட்ட செயலி தான் 'Varrummun Kaappom' என்ற செயலி.  இதயத் துடிப்பு சென்சார் மூலம் இதயத்துடிப்பு சரியான வரம்பில் உள்ளதா என கண்காணிக்கிறது. டி.எச்.டி., 11 வெப்பநிலை சென்சார் மூலம் உடல் வெப்பநிலையை அளந்து, காய்ச்சல் அல்லது வெப்ப அழுத்தத்தை கண்டறிகிறது.ஏ.டி.எக்ஸ்.எல்.,345 ஆக்சிலரோமீட்டர் மூலம் திடீரென தவறி விழுதல் போன்ற இயக்கத்தை உடனே கண்டறிகிறது. ஜி.எஸ்.ஆர்., சென்சார் மூலம் தோல் மின்தடிப்பு மாற்றங்கள் மூலம் மனஅழுத்தம், உணர்ச்சி நிலைகளை அளக்கிறது.  சென்சார்களிருந்து தரவு சாதாரண அளவை மீறினால், துல்லியமான இருப்பிடத்தை கண்டறிந்து, குடும்பத்தினர், அருகிலுள்ள மருத்துவமனை அல்லது ஆம்புலன்சுக்கு குறுந்தகவல், அழைப்பு விடுக்கிறது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால்புளூடூத் அல்லது வைபை வசதி இல்லாத கிராமப்புறங்களிலும் இது தடையின்றி செயல்படும்.  இந்த அமைப்பின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது வரும்முன் காப்போம் என்ற மொபைல் செயலி. இதில் உடற்பயிற்சி கண்காணிப்பு, அவசர இரத்த தேவை எச்சரிக்கை, இரத்த தானம் செய்வோர் பட்டியல், ஆடியோ, வீடியோ மூலமாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதிகள் உள்ளன. இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் அருகிலுள்ள மருத்துவரை கண்டுபிடிக்கக்கூடிய சிறப்பும் இதில் உள்ளது. இதனுடன், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் மூலம் உடல் தரவுகளை பகுப்பாய்வு செய்து, முன்கூட்டியே எச்சரிக்கை வழங்குவதோடு, மன அழுத்த அறிகுறிகளையும் கண்டறிந்து, தற்கொலை முயற்சிகளை தடுக்கும் விதமாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது  
இதை பள்ளியில் மத்திய அரசின் நிடி அயோக் திட்டத்தின் கீழ் செயல்படும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் உதவியோடு உருவாக்கினேன். பெற்றோர், முதல்வர் கல்யாணி, ஆலோசகர் டாக்டர் கு.கணேசன், வழிகாட்டு அலுவலர் பிரசன்னா உறுதுணையாக இருந்தனர்.தற்போது பிரான்ஸ்சின் டெசால்ட் நிறுவனம் எனக்கு இன்டெர்ன்ஷிப் வழங்கியுள்ளது,என்றார்.
================================================================================================


 

நான் வாசித்த கதை - மீட்டாத வீணை - சாரதா ஸ்ரீநிவாசன்

என் பார்வை - கீதா ஆர்

நவம்பர் மாத 'லேடீஸ் ஸ்பெஷல்' இதழில் வெளிவந்திருக்கும் 'மீட்டாத வீணை' எனும் சிறுகதையை எழுதியிருக்கும் கதாசிரியர் சாரதா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகளும்.

சென்ற வருடம் திரு ராய செல்லப்பா சார் நடத்திய ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்ற அவரது கதை 'சிங்கிள் பேரன்ட்' அழகான உளவியல் ரீதியான கருவைக் கொண்ட கதை. நன்றாக எழுதியிருந்தார். எங்கள் தளத்தில் அதைப் பற்றிச் சொல்லியும் இருந்தேன். ஒரு சிறு பரிந்துரையும் கொடுத்திருந்தேன்.

ஆசிரியரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், சாரதா ஸ்ரீநிவாசன் அவர்கள் (62. சென்ற வருடம் 61 என்று இருந்ததால் இந்த வருடம் நானாகவே ஒரு வருடம் கூட்டிக் கொண்டுவிட்டேன்!!) பிறந்தது திருநெல்வேலியில். சாரா டக்கர் கல்லூரியில் படிப்பு. கல்லூரி நாட்களில் கையெழுத்துப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அந்த எழுத்தார்வத்தில், வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கதைகள் எழுதத் தொடங்கி இது வரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

1. "மனதில் ஒரு மத்தாப்பு", 2. "என் கண்ணின் ஒளி நீங்கள் அன்றோ", 3. "ஒரு சத்தியவான் இரு சாவித்திரி" (தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதல்லவா!!! வாசிக்கும் ஆர்வமும் எழுகிறது) மற்றும் 4. "அன்னியோன்யம் அதுதான் தாம்பத்தியம்"

இவரது முதல் புத்தகம் 'பேக்கி டெர்ம்' பதிப்பகம் மூலமாகவும், மற்றவை புஸ்தகா மூலமாகவும் வெளியாகியுள்ளன.

------ மேற்கண்ட ஆசிரியர் குறிப்பு - சென்ற வருடம் போட்டியில் வென்ற கதைகளை திரு இராயசெல்லப்பா சார் வெளியிட்ட புத்தகத்தில் இருந்து.

கதைச் சுருக்கம்

சுமா வீணை விதுஷி. வயதில் சிறியவள் ஆனால் மிகவும் பிரபலமானவள். அவள் கணவன் ரங்கனின் மரணத்தில் தொடங்குகிறது கதை. ரங்கன் ஏன் 'டக்'கென்று மரணம் அடைகிறான்? கதை சொல்ல வருவது என்ன? அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் கதையை வாசிக்க வேண்டும்.

கதையை வாசித்த பின் என் பார்வையை வாசிக்கலாம் இல்லை, என் பார்வையை வாசித்த பிறகு கதையை வாசிக்கலாம். உங்கள் விருப்பம்!

கீழே நான் ட்ரைவ் லிங்குகள் கொடுத்துள்ளேன். அதில் சென்று கதையை வாசிக்கலாம். முதலில் டாக்குமென்ட் சுட்டிகள் இரண்டு. ஏதேனும் ஒன்றில் வாசிக்கலாம். அடுத்தாப்ல பிடிஃப் லிங்



பிடிஎஃப் லிங்           

ஒரு சிறு முயற்சியாகக் கதையை ஸ்க்ரோலபிள் டாக்குமெண்டாகவும், ஸ்க்ரோலபிள் பிடிஎஃப் ஆகவும் ப்ளாகரில் கொடுக்க முயற்சித்து....இதோ முதலில் டாக்குமென்ட். 

ஸ்க்ரோலபிள் பிடிஎஃப்

கதை என் பார்வையில் 

"மீட்டாத வீணை" என்ற தலைப்பே பெண் சார்ந்த கதை என்று சொல்கிறது.  அக்காலம் தொட்டே வீணையை பெண்ணிற்கு ஒப்பிடுவதால் இருக்கலாம்.

'மீட்டாத வீணை' சற்று பெரிய சிறுகதைக்கான அழகான, ஆழமான, அற்புதமான கரு. அந்த ஆழத்திற்குள் அதிகம் செல்லாமல் உணர்வுகள் சார்ந்த சிறுகதையாக அமைத்திருக்கிறார், கதாசிரியர்.

ரங்கன், தன் காதலை தெய்வீகக் காதல், புனிதமான காதல் என்று நினைப்பது, குணா படத்தில் வரும் கமலின் கதாபாத்திரத்தையும், வசனம், 'இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது' என்பதையும் நினைவூட்டியது. 

//திருமணமான ஒரு வாரத்திலிருந்தே தனிமை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவன் அவளை வீணை வாசிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தான். திருமணத்திற்குப் பின் அவன் அவளையும் அவளது வீணை வாசிப்பபையும் பலமடங்கு காதலிக்க தொடங்கி இருந்தான். //

// அவன் ஒருமுறை நேயர் விருப்பத்தில் தமிழிசைப் பாடல்கள் கேட்க அவள் அந்த வகையில் மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கி அவைகளையும் தனது நிரவல்களில் சேர்த்துக் கொண்டாள்.//

தமிழிசைப் பாடல்களை அவளிடம் நேயர் விருப்பமாகக் கேட்கத் தெரிந்தவனுக்கு, "வீணையடி நீ எனக்கு" என்று காதலித்தவனுக்கு "மேவும் விரல் நானுனக்கு" என்று அவளை மீட்டாமல், அவள் மேன்மேலும் தன் திறமையை மெருகேற்ற மட்டுமே காரணமாக இருக்கிறான்.

அவளுக்கு, அவன் தன்னை மீட்டவில்லையே என்ற குறை இருந்து கொண்டிருக்க, மூன்றாவது வருடத்தில்தான் அவள் ஒரு ஸ்டேஜில் மனம் திறந்து சொல்கிறாள்.

கதையை இக்காலகட்டத்திற்கு - அதாவது சமீப காலங்களுக்குப் பொருத்திப் பார்த்தால், அவள் அதற்கு முன் ஏன் கேட்கவில்லை, எவ்வளவுதான் கச்சேரிகளில் பிசியாக இருந்திருந்தாலும் தனிமையில் அவன் அவளிடம் வாசிக்கக் கேட்கும் போதும் கூட ஏன் அவள் கேட்கவில்லை, ஒரு வருடத்திலேயே அவளுக்கு மனம் திறந்து சொல்ல ஏன் தோன்றாமல் போனது அவனை ஏன் தெரிந்து கொள்ள முடியாமல் போனது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவள் மூன்றாவது வருடத்தில் கேட்கும் போது அதற்கு அவன், அவளை சரஸ்வதி தேவியாகவே பார்ப்பதாகவும், தன் காதல் புனிதமானது தெய்வீகக் காதல், தான் அதை முன்னரே சொல்லாமல் போனது தவறு என்று "நீங்கள்" என்று மரியாதையுடன் சொல்லும் போது அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

அதற்கு முன்னும் அவன் அவளை 'நீங்கள்' என்று மரியாதையுடன் பேசியிருந்தால் (பொதுவாக நம் சமூகத்தில்  இல்லாத ஒன்றாயிற்றே அதனால்!) ஏன் சுமாவுக்கு அப்போது தோன்றாமல் போனது என்பதும் கேள்வியாக மனதில் எழுகிறது. ஆனால், அதற்கு முன்னும் அவன் அப்படித்தான் பேசுவானா என்பதற்கான உரையாடல்கள், சம்பவங்கள் கதையில் இல்லாததால் யோசிக்க வைக்கிறது. 

ரங்கன் கதாபாத்திரம் பற்றி விவரங்கள் இன்னும் சற்று கூடுதலாக ஆசிரியர் சொல்லியிருக்கலாமோ? Flash Back பகுதியின் முதலில் உரையாடல்கள் சம்பவங்கள் என்று சொல்லியிருக்கலாமோ என்றும் இன்னும் அந்தக் கதாபாத்திரம் அழுத்தம் பெற்றிருக்கும் என்ற எண்ணமும் எழுந்தது. கூடவே சுமாவின் கதாபாத்திரமும் இன்னும் அழுத்தம் பெற்றிருக்கும்.

முடிவும் கொஞ்சம் ட்ரமாட்டிக்காக இருப்பது போல் தோன்றுகிறது..

அக்காலகட்டத்துப் பெண்கள்தான் பயப்படுவார்கள், தயங்குவார்கள் தங்களுக்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டு மருகுவார்கள்.

இப்போதைய காலகட்டத்திற்குப் பொருத்திப் பார்த்தால் கண்டிப்பாக முதல் 3 மாதங்களுக்குள்ளாகவே பிரிதலுக்குச் சென்றிருக்கக் கூடும் அல்லது அட்லீஸ்ட் ஃபேமிலி கவுன்சலிங்க் என்று வந்திருக்கக் கூடும் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. (குழந்தை பெற்றுக் கொள்ளுதல் பற்றிய சிந்தனைக்கும் அப்பாற்பட்டு)

ஆசிரியர் கதையை ஒரு specific, complex narrative ஆகக் கொண்டு சென்றிருக்கிறாரோ என்று பட்டது. Platonic காதல்? அது அவனுக்கு. ஆனால், சுமாவிற்கு அவன் கணவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே க்ளைமாக்ஸிற்கு முன் வரை.

ரங்கனின் பதிலை ஏற்க முடியாமல் தன் சோகத்திலிருந்து வெளிவர தன் அறைக்குச் சென்று வீணை வாசிக்க முற்படும் போது அவள், அவனது பதிலை யோசிக்கையில், ரங்கன் எனும் பக்தனால்தான், தன் திறமை இன்னும் மெருகேறி தனக்கு நிகர் யாருமில்லை என்ற இடத்திற்கு வந்திருக்கிறோம் என்பது அளுக்குப் புரிகிறது. ஆனாலும், அவளால் அவன் பதிலை ஏற்க முடியாமல் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" என்று அவள் வாசிக்க வாசிக்க, அந்த இசை அவனை எங்கேயோ கொண்டு செல்கிறது. என்னவோ செய்கிறது.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" என்ற பாரதியின் பாடலில்" "சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ?" என்ற வரி நினைவுக்கு வந்தது. தன்னால் சுமாவுக்கு அவள் எதிர்பார்ப்பதைக் கொடுக்கமுடியாமல் ஓர் சுமையாக ஆகிவிட்டோமோ என்ற எண்ணம் ரங்கனுக்குள் வந்திருக்குமோ? "அப்படிச் செயல்படக் கூடிய மனம் கேட்கிறேன்.  அதற்கு உயிரும் உடலும் வேண்டும்" என்றும் அவன் மனம் இரைஞ்சியிருக்குமோ? அதனால்தான் அவளின் வாசிப்பு அவனை என்னவோ செய்து, மூச்சை வெளியே தள்ளுகிறதோ? - இது என் யூகங்கள். தான் சுமாவிடம் இப்பொழுதேனும் அவள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று 'யாழெடுத்து மீட்க' முனைகையில் கடைசி மூச்சாகிவிடுகிறது. 

முடிவில் அவன் சுமாவிடம் வாங்கும் சத்தியத்தை அவள் காப்பாற்றுவது போலேனும் முடித்திருக்கலாமோ என்று மனம் விரும்புவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு சில லாஜிக்கல் கேள்விகள், கொஞ்சம் ட்ரமாட்டிக்கான முடிவு இவற்றைத் தவிர்த்து, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழுவதுமாக, அக்காலகட்டத்துக்கான கதையை வாசித்த உணர்வைத் தந்தது.

(இக்கதையில் சங்கீதம் பற்றி வருவதால், பானுக்காவும், நானும் சேர்ந்து, யார் எழுதுகிறார்கள் என்று சொல்லாமல்,  சஸ்பென்சாக எழுதிய கதை எபியில் தொடர்கதையாக வந்தது நினைவுக்கு வந்தது)

https://engalblog.blogspot.com/2019/03/blog-post_28.html


90 கருத்துகள்:

  1. சந்தீப் சக்ரவர்த்தி போன்ற அதிகாராகள், இராணுவ வீர்ர்கள், நன்கு செயல்படும் போலிஸ் படை போன்றவை இல்லையென்றால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலை யார் சமாளிக்க முடியும்? அவர்களின் உழைப்பால்தான் சமூகம் ஓரளவாவது நிம்மதியாக இருக்கமுடிகிறது.

    வெறும்ன சட்டம், நீதி, வழிமுறைகள், சிறை போன்றவற்றை இத்தகைய பயங்கரவாதகளிடம் செலுத்துவதற்குப் பதில் அவர்களது வீடுகளைத் தரைமட்டமாக்குவது, சொத்துப் பறிமுதல், நெருங்கிய உறவினர்களை வளையத்துக்குள் கொண்டுவரும் யோகிஜியின் பாணிதான் சரிப்படும்.

    சந்தீப் போன்றவர்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   உண்மை.  ஆனால் தமிழக அரசியல்வாதிகள் அவர்களை மதிக்காதது மட்டுமல்ல, தவறாகவும் பேசுவது தொடர்கிறது.  இதற்கெல்லாம் ஒரு முடிவு வரவேண்டும்.

      நீக்கு
    2. ​//வெறும்ன சட்டம், நீதி, வழிமுறைகள், சிறை போன்றவற்றை இத்தகைய பயங்கரவாதகளிடம் செலுத்துவதற்குப் பதில் அவர்களது வீடுகளைத் தரைமட்டமாக்குவது,//
      ​DONE

      Jayakumar​

      நீக்கு
    3. ஆம், நானும் படித்தேன்.

      நீக்கு
  2. கீதா ஆர் - யார்? கதையை சாவகாசமாகப் படித்துவிட்டு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பொறுப்பு தலைமை ஆசிரியரின் செயலைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும். அரசாங்கம் செய்யாது. காரணம் ஐம்பது சதப் பள்ளிகளுக்கு மேல் இதுதான் நிலைமை. முக்கியஸ்தர்களுடன் தொடர்பு இருந்து அவர்களுக்கும் ஏதேனும் செய்து பெயர் வாங்கவேண்டும் எனத் தோன்றினால் (மா.சு போல) அவர்கள் சொந்தச் செலவில் நடக்குமே தவிர அரசாங்கச் செலவில் அல்ல.

    தன் சொந்தப் பணத்தைக் கொடுக்க எத்தகைய மனம் அந்த ஆசிரியைக்கு இருக்க வேண்டும். இதற்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்துட்டா போச்சு!

      நீக்கு
    2. மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களை ரேஷன் மூலம் கொடுக்கும் மாநில அரசுகள் பள்ளிகளுக்கா இம்மாதிரி சௌகரியங்கள் எல்லாம் செய்யப் போகிறார்கள்? தமிழகத்தில் அத்தகைய கனவெல்லாம் காண்பதே தப்பு.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. செய்ய வைக்கும் நிலை எப்போதுதான் வரும் என்பதே வருத்தம்.  வாங்க கீதா அக்கா.

      நீக்கு

    5. மத்திய அரசால் வழங்கப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு ரேஷன் மூலம் விநியோகம் செய்யும் மாநில அரசு தாங்கள் தங்கள் கையிலிருந்து சொந்தச் செலவில் மக்களுக்குக் கொடுப்பது போல் செயல்படும் மாநில அரசுகளிடம் இம்மாதிரிச் செயல்களை எதிர்பார்க்க முடியுமா?

      நீக்கு
    6. கீதா சாம்பசிவம் மேடம் பிஸினெஸ் பண்ணியதில்லை என்பதால் அவர் கருத்து தவறாகிவிட்டது. ஒரு ஹோட்டல் வைத்திருப்பவன், பக்கத்தில் உள்ள இன்னொரு ஹோட்டல், கையேந்திபவனுக்கு, அதை நடத்துபவர்களுக்கு துரும்பையாவது கிள்ளிப் கோடுவார்களா? அவனவன் சொந்த பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி என வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறான். இதில் அரசாங்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் அதிக மாணவர்கள் சேருவாங்க, ஆசிரியர்களை நியமிக்கணும்... எவனாவது தன் பிஸினெஸுக்கு ஆப்பு வைத்துக்கொள்வானா?

      நீக்கு
  4. கீதா ரங்கனின் விமரிசனத்தைப் படிச்சேன். மிக ஆழமாகச் சிந்தித்து எழுதி இருக்கார். கதையை இன்னமும் படிக்கவில்லை. ஆனாலும் இந்தக்கதையை அதாவது இம்மாதிரியான ஒரு கதையை முன்னரே படிச்சிருக்கேனோ என்னும் சந்தேகமும் ஏற்படுகிறது. யாரோ பிரபல எழுத்தாளர் எழுதிப் படிச்சேனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ பழைய திரைப்படம்?  கலைக்கோவில்?

      நீக்கு
    2. அட? ஆமா இல்ல? படம் ஓடவே இல்லை ஆனாலும் சித்ராலயா படம் என்பதால் நான் இதைப் பார்த்திருக்கேன். ஆனால் படத்தில் முக்கோணக் காதல் இல்லையோ?

      நீக்கு
    3. பாவம் எம் எஸ் விஸ்வநாதனின் சொந்த தயாரிப்பு.  கையைச் சுட்டுக் கொண்டார்.  ஆனால் நான் படம் பார்க்கவில்லை.  எனக்கு கதை தெரியாது!  மியூசிகல் சப்ஜெக்ட் என்பதால் குறிப்பிட்டேன்!

      நீக்கு
    4. நன்றி கீதாக்கா.

      இன்னொரு படமும் ஸ்ரீராம் சொல்லியிருந்தாரே எனக்கு. மறுபிறவி. அதிலும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் ஆனால் அதில் மருத்துவரைச் சந்தித்து அதற்குத் தீர்வு காண்பதாகச் செல்லும் கதை.

      கீதா

      நீக்கு
  5. கதையைப் படிச்சுட்டேன். கொஞ்சமும் யதார்த்தம் இல்லாத ஒரு கதையாகத் தோன்றுகிறதே! என்னால் தவிர்க்க முடியலை. ஆனாலும் பலரும் ரசித்திருக்கிறார்கள். ஆகவே இதைக் குறித்து அதிகம் எதுவும் சொல்வது சரியாய் இருக்காது. எழுத்தாளர் மிகவும் உயரே சஞ்சாரம் செய்து இருக்கார். என் போன்ற சாதாரணப் பாமரர்களுக்கான கதை இது அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் பலவீனங்களை கீதா ரெங்கனே பட்டியலிட்டுள்ளார்.    வேறு மாதிரி கொண்டு சென்றிருக்கலாமோ என்றும் கீதா ரெங்கன் யோசித்திருக்கிறார். மேவாத விரல் கணவனுடன் வாழ முற்பட்ட பெண்ணின் கதையை வேறு கோணத்தில் அலசி இருக்கலாம் என்று சொல்ல  முயன்றிருக்கிறார்.

      நீக்கு
    2. Yes, I also read them and already noted them in my comments.

      நீக்கு
    3. இந்த மாதிரி ஆங்கிலத்தில் கருத்தை எழுதும்போதுதான், மதுரை மீனாட்சி, திருவரங்கம் கீதா சாம்பசிவம் இந்தியாவில் இல்லை என்பது நினைவுக்கு வருது. ஹிஹி

      நீக்கு
    4. // மதுரை மீனாட்சி, திருவரங்கம் கீதா சாம்பசிவம் இந்தியாவில் இல்லை //

      அப்படியா சொல்கிறீர்கள்?

      நீக்கு
  6. இப்போ அதிகமாய்ப் படிப்பது இந்தப் போலீஸ் அதிகாரி பற்றித் தான். இம்மாதிர்யான அறிவு சார்ந்த சந்தேகங்கள் இவருக்கு அடிக்கடி வரப் பிரார்த்திப்போம். எல்லா நலனும் பெற்று அவர் சந்தோஷமாக வாழவும் வாழ்த்துகள். இப்படிப் பட்ட தேசப் பற்றாளர்கள் நிறையத் தோன்றவும் பிரார்த்தனைகள். இளைஞர்களின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. முன்னரே படிச்சது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​புத்திசாலி மற்றும் கடமையும் தேசப்பற்றும் இருக்கும் அதிகாரிகளே நாட்டுக்குத் தேவை. வாழ்த்துவோம்/

      நீக்கு
  7. ​ஆசிரியர் சாரதா ஸ்ரீனிவாசனின் கதை வாசித்ததில்லை. இதுதான் முதல். கதை பாலச்சந்தர் இயக்கிய திரைக்காவியம் போல் இருக்கிறது.

    இந்த காதல் என்ற உணர்வு தான் எத்தனை எத்தனை வகை. ஆண், பெண் கண்ணோட்டங்கள் தான் எத்தனை!

    சங்கீதக்காதல் மூலம் அச்சங்கீதத்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்க மணம் புரிந்த ரங்கன், சங்கீதத்தை மட்டுமே காதலித்த சுமா, மணம் புரிந்தபின் கணவன் ரங்கனை காதலிக்க தொடங்குகிறாள். ஆனால் இந்தக் காதல் பெண்கள் எப்போதும் விரும்பி ஏற்கும் 'தாய்மை' சுகத்திற்க்காக ஏங்குகிறது. அது கணவன் இறந்த பின் தியாகம் ஆக மாறிவிடுகிறது. உடல் இருந்தால் தானே உயிர். உடலை விட்டு நீங்கி அவ்வுயிர் கணவனின் உயிருடன் கலந்தது...... அப்படியாவது ஆசைகள் நிறைவேறட்டும் என!

    இக்கதையின் முடிவு இப்பகுதியில் வெளி வந்த சூடாமணியின் 'இணைப்பறவைகள்' என்ற கதையை நினைவூட்டியது, தாத்தாவும் பாட்டியின் இறப்பிற்கு பின் இறந்து போவது.

    ஆசிரியர் உளவியல் பட்டம் பெற்றவர் என்று தோன்றுகிறது.

    மொத்தத்தில் கதை இக்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. தாத்தா பாட்டிகள் மட்டுமே ரசிக்கக் கூடியது.

    பரிசு கதையின் கருத்துக்கல்ல, கருத்தை லாகவமாக கையாண்டு சொற்சித்திரமாய் வடிவமைத்த ஆசிரியரின் திறமைக்கு! மனதில் நிற்கும் வடிவமைப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறந்த கமெண்ட். நல்ல பார்வை.

      நீக்கு
    2. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

      நீக்கு
    3. வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.

      நீக்கு
    4. ஜெ கே அண்ணா, சூப்பர். உங்கள் கருத்து.

      சாரதா ஸ்ரீநிவாசன் அவங்க ரிட்டையர் ஆனபிறகுதான் எழுதறாங்க. பொதுவெளியில் புத்தகங்கள் இருக்கின்றன எனக்கு அவங்க எழுத்து சென்ற முறை செல்லபா சார் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற கதையை விமர்சித்ததால் பரிச்சய,

      அதனால் இக்கதையை செல்லபா சார் குழுவில் பகிர்ந்ததும் எடுத்துக் கொண்டேன்.

      அவங்க எழுதிய எழுத்து நன்றாக இருக்கு ஆனால் அது அக்காலகட்டத்தது அதைத்தான் கடைசியில் சொல்லியிருக்கிறேன்.

      அவங்க போட்டிக்கு எழுதிய கதையும் உளவியல் சார்ந்த ஒன்று.

      இக்கதையும் அதே போன்ற ஒரு கதைதான். ஆனால் அவங்க அதற்குள் செல்லாமல், மேலோட்டாமாக எழுதிவிட்டாங்களே, ஜஸ்ட் காதல் மரணம் என்று எழுதி முடித்துவிட்டாங்களேன்னு, நல்ல எழுதக் கூடியவங்க என்ற ஒரு சிறு ஆதங்கம்.

      இது நல்ல ஆழமான கரு. அது அவங்களால இன்னும் நல்லா கையாண்டிருக்க முடியுமே என்றுதான்.

      கீதா

      நீக்கு
    5. சங்கீதத்தை மட்டுமே காதலித்த சுமா, மணம் புரிந்தபின் கணவன் ரங்கனை காதலிக்க தொடங்குகிறாள்.//

      அண்ணா சங்கீதத்தை மட்டுமே காதலித்த சுமா இல்லை. அவள் ரங்கனை முதல் சந்திப்பிலிருந்தே அவளுக்கு அவன் தோற்றமும் வசீகரமும் ஈர்ப்பதால் (இது இங்கு முக்கியம்! அவள் சாதாரணப் பெண்ணாக!) அதன் பின்னர் அவன் சங்கீத அறிவும் தெரிந்திட ஈர்ப்பு கூடி காதலிக்கிறாள், அவனைக் கணவனாகத்தான் நினைக்கிறாள் என்பது கதையில் இருக்கிறதே. திருமணம் ஆன நாள் முதலே அவள் அவனிடம்தன் எதிர்பார்ப்பைச் சொல்லி, கணவனாக நினைபப்தாகவும் சொலல் நினைக்கிறாள் என்பதும் கதையில் அப்படியே உள்ளது.

      அதனால் தான் என் பார்வையில் கருத்து அப்படிச் சென்றது.

      நான் எழுதும் முன் கதையை வாசித்து வாசித்து என் பார்வை எழுதும் போது கூடச் சந்தேகம் வந்தது....மீண்டும் அப்பகுதிகளை வாசித்து உள்வாங்கிக் கொண்டுதான் பல ரீதியாகச் சிந்தித்து எழுதினேன்.

      இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருந்தேன்....பதிவு பெரியதானதால் தட்டிக் கொட்டியும் எடுத்தும் விட்டேன்.

      அப்புறம் வாசிப்பவர்களின் கருத்தும் வரவேண்டும் என்றும் நினைத்தேன்.

      எனக்கு இக்கரு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால்தான் இக்கதையை எடுத்துக் கொண்டேன் அதைப் பற்றி எழுத.

      சாரதா ஸ்ரீநிவாசன் அவங்க போன முறை வெற்றி பெற்ற கதையையும் நல்லா எழுதியிருந்தாங்க.

      கீதா

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம்.

      நீக்கு
    2. ஒருவேளை கமலா ஹரிஹரன் மேடம் ஏதேனும் மருத்துவமனை குழுமத்துக்குத் தலைவராக இருந்தால், கடவுளே... இன்று நோயாளிகள் யாரும் எங்கள் மருத்துவமனைகளுக்கு வரக்கூடாது என்று ப்ரார்த்திப்பாரோ?

      நீக்கு
    3. :)) பிரார்த்தனைகளும் ஒரு கருவிதானே ..! மற்ற செயல்பாடுகள் இறைவனால் வகுக்கப்படுபவை. அல்லவா.!!

      நீக்கு
  9. பாஸிடிவ் செய்திகள் அருமை. அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    கடமை உணர்வுடன், நல்லவிதமாக செயல்படும் போலீஸ் அதிகாரியைப்பற்றி அறிந்து கொண்டேன். வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம். குழந்தைகளின் முயற்சிகள், சாதனைகள் அனைத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். தலைமை ஆசிரியரின் செயல் பாராட்டுக்குரியது. நல்லவர்கள் அவர்கள் வாழ்வில் என்றுமே நல்லதை மட்டுமே செய்து சிறப்புறுகிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. கதையை நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார் கீதா ரங்கன்.
    கதையை படித்தேன். இசை ரசிகன் ரசித்து கொண்டே இருந்து இருக்கலாம். இசை வாழ்ந்து இருக்கும், அவர்களும் வாழ்ந்து இருப்பார்கள்.

    ஸூக மத்யே ஸ்திதம் துக்கம்!
    துக்கமத்யே ஸ்திதம் ஸூகம்
    இன்று வந்த வாட்சப் செய்தி இந்த கதைக்கு பொறுந்துவது போல இருந்தது.
    இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம் சொன்னார் நம்ம வாழ்க்கையில் எதை எல்லாம் சந்தோஷம் என்று நினைக்கிறோமோ அதுவெல்லாம் துக்கம் என்றார். எது நமக்கு அதீத சந்தோஷத்தை கொடுக்கிறதோ அது நமக்கு பிற்காலத்தில் துக்கத்தை கொடுக்க போகிறது என்ற தெளிவு வேண்டும் என்றார்.
    சேற்றில் தாமரை சேர்ந்தோ இருக்கிறதோ அது போல இன்பமும் துன்பமும் இருக்கும். நாம் விஷயங்களை தள்ளி வைத்து பார்த்தால் நம்மை இன்ப துன்பம் பாதிக்காது தாமரை இலை தண்ணீர் போல இருக்க பழக வேண்டும் என்றார்.

    இந்த கதையின் கதாநாயகன் சேற்றில் மலர்ந்த தாமரையை ரசித்து கொண்டு இருந்து இருக்கலாம்.

    சேற்றிலிருந்து எடுத்த தாமரை வாடி விடுவதை போல தன்னகபடுத்தி ரசிக்க நினைத்த சுமாவின் வாழ்வை கருக வைத்து அவரும் மறைந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை இலை தண்ணீர் நல்ல விளக்கம் சகோதரி. ரசித்தேன்.

      நீக்கு
    2. நன்றி வாழ்க வளமுடன் கமலா ஹரிஹரன்

      நீக்கு
    3. நன்றி கோமதிக்கா...

      //சேற்றிலிருந்து எடுத்த தாமரை வாடி விடுவதை போல தன்னகபடுத்தி ரசிக்க நினைத்த சுமாவின் வாழ்வை கருக வைத்து அவரும் மறைந்து விட்டார்.//

      ஆமாம் அதைத்தான் ரங்கன் கதாபாத்திரம் கடைசியில் நினைக்கிறது. ஆசிரியர் அதைச் சொல்லியிருக்கிறார் அழகாக அதனால்தான் அவனுக்கு மூச்சுத் திணறுகிறது.

      ஸ்லோகமும் அதன் கருத்தும் நன்றாக இருக்கு கோமதிக்கா

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. கீதா உங்கள் கதையும் (பானுவும், நீங்களும் எழுதிய கதை) நினைவுக்கு வந்தது . உங்கள் சுட்டியில் சென்று பார்க்கவும் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா.

      அக்கதையிலும் இருவருமே சங்கீதத் துறையில் வெவ்வேறு விதத்தில் செயல்படுபவர்கள்...அதனால் எழும் பிரச்சனைகள் என்று போகும்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  13. கணவனின் கடைசி ஆசைப்படி சத்தியம் செய்து கொடுத்தது போல இறுதி மூச்சுவரை பாடி கணவனுடன் சென்று விட்டார்.

    அவருக்காக நான் "என் இறுதி மூச்சுவரை வாசிப்பேன்" என்று சபதம் செய்து வாசித்து கொண்டே இருப்பது போல் கதை ஆசிரியர் முடித்து இருக்கலாம் ஆனால் தலைப்புக்கு பொருத்தமாக இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் பொருந்தும்!

      நீக்கு
    2. "என் இறுதி மூச்சுவரை வாசிப்பேன்" என்று சபதம் செய்து வாசித்து கொண்டே இருப்பது போல் கதை ஆசிரியர் முடித்து இருக்கலாம்//

      ஆமாம் அக்கா அதைத்தான் நான் விமர்சனத்திலும் சொல்லியிருக்கிறேன்.

      நான் மீட்டாத வீணை என்ற தலைப்பை, சுமாவுக்கு எடுத்துக் கொண்டேன் அவள் மீட்டப்பட வில்லை அவள் விரும்பியதும் அதுதானே! அந்த அர்த்தத்தில். ஏனென்றால் அவள் வீணையை மீட்டிக் கொண்டுதானே இருக்கிறாள் அதுவும் ரங்கனுக்காகத் தனிமையிலும், கச்சேரியிலும் என்ற கோணத்தில் சிந்தித்தேன் அக்கா.

      கீதா

      நீக்கு
  14. பாசிட்டிவ் செய்திகள் பார்த்துவிட்டு, பதிவைப் பற்றிய கருத்துகளுக்குப் பதில் கொடுக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    நீங்கள் பகிர்ந்த கதை நன்றாக உள்ளது. இறுதி முடிவு மனதை கனக்க வைத்தது. கதையில் நீங்கள் தந்த சந்தேகங்களும் நியாயமே..! ஆனாலும், இசையுடன் ஒன்றி இசைக்காகவே வாழ்ந்து இருப்பவர்கள் இவ்விருவரும். அதனால் வருடங்கள் மூன்றை கடந்து ஓடினாலும் அவர்கள் இருவரின் மனதில் வேறு விதமான சிந்தனைகள் எழவில்லை. இறுதியில் ஒருவர் பின் ஒருவராக உணரும் போது, வீணையுடன் சேர்ந்த நாதம் போல் இருவரின் வாழ்வும் ஒரு முற்றுப்புள்ளியில் சேர்ந்து விட்டன.

    நேற்று ஒரு செய்தி வெள்ளி பாடல் பகிர்வில் படித்தோமே..( தன் கணவருக்கு இழைத்த ஒரு குற்ற உணர்வில் ஒரு நடிகை தனிமையில் வாழ்ந்து மறைந்தாக) அது போல் கணவரின் பிரிவுக்கு தன் கேள்வி பாதகமாக அமைந்து விட்டதே என எண்ணி, குற்ற உணர்வில் அவள் தவிக்க வேண்டாமென இறைவன் அளித்த முடிவு.. மரணத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் இருவரும் மறுபிறவியில் இணைவார்கள் என நம்புவோம். அப்போது மீட்டாத வீணை ஆயிரம் ஸ்வரங்கள் பாடும். அருமையாக எழுதியிருக்கும் கதாசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நேற்று ஒரு செய்தி வெள்ளி பாடல் பகிர்வில் படித்தோமே..( தன் கணவருக்கு இழைத்த ஒரு குற்ற உணர்வில் ஒரு நடிகை தனிமையில் வாழ்ந்து மறைந்தாக) //

      அட...   கமலா அக்கா..  சட்டென உங்களுக்கு அது நினைவுக்கு வந்திருக்கே...  Great.

      நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர்...

      நீக்கு
    2. கமலாக்கா சூப்பர்.!!!! ஆமாம் நேற்றைய அந்தப் பகுதியை சரியாக இணைத்து விட்டீர்கள். சூப்பர் அக்கா.

      கதையிலும் ஆசிரியர் அதைச் சொல்லியிருக்கிறார். மறைமுகமாக

      //எனக்கு என் சங்கிதமும் நீங்களும் நான் உயிர், இந்த பாழாய்ப் போன உடலுக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்று எனக்கு புரிய வைத்து விட்டீர்கள், தயவு செய்து என்னை விட்டுப் போய் விடாதீர்கள்"//

      மிக்க நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
    3. //குற்ற உணர்வில் அவள் தவிக்க வேண்டாமென இறைவன் அளித்த முடிவு.. மரணத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் இருவரும் மறுபிறவியில் இணைவார்கள் என நம்புவோம்.//

      கமலாக்கா, எனக்கு இப்படியான சிந்தனைகள் எழுவதில்லை அக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!

      ஏனென்றால் "இப்ப என்ன? இந்த நிமிடங்களில் என்ன " என்று பெரும்பாலும் என்று யோசிப்பதால்......அதனால்தான் இந்த வியூவில் என் மனம் செல்லவே இல்லை!!!!!

      உண்மையாகவே இக்கதையை வாசித்த போது உங்கள் பாணி நினைவுக்கு வந்தது. இதை ஸ்ரீராமிடமும் சொன்னேன். கமலாக்கா நினைவுக்கு வந்தாங்க என்று.

      கீதா

      நீக்கு
    4. /ஏனென்றால் "இப்ப என்ன? இந்த நிமிடங்களில் என்ன " என்று பெரும்பாலும் என்று யோசிப்பதால்......அதனால்தான் இந்த வியூவில் என் மனம் செல்லவே இல்லை!!!!!/

      சூப்பர் சகோதரி. இப்படித்தான் சிந்திக்க வேண்டுமென அந்த காலத்திலிருந்தே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில், கடந்தவை நம்முடன் வரப்போவதில்லை. எதிர்காலம் ஒரு மாயை. நிகழ்பவைதான் உறுதி.

      மனித மனங்களில் பல அலசல்கள். ஒன்று நியாயமென படும் போது, மற்றொன்றையும் கவனிக்கும் இயல்புடையது. "இரண்டு மனம் வேண்டுமென" கவிஞர் குறிப்பிட்ட மன உளைச்சல் நினைவுக்கு வருகிறது. உங்கள் எண்ணங்களின்படி ஒன்றையே, அதுவும் இன்றைய தை மட்டுமே நினைத்து வாழ்ந்தால், வாழ்வில் "நிம்மதி எங்கே" என தேட வேண்டாம். உங்களது சிந்தனைகளுக்கு பாராட்டுக்கள்.

      நீக்கு
    5. கமலாக்கா, நன்றி கமலாக்கா. இதெல்லாம் என் அனுபவங்களில், மனதை ரொம்ப பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சூழல் கற்றுக் கொடுத்தது என்றாலும் கூட சில சமயங்களில் அப்படியும் இப்படியும் தோன்றத்தான் செய்யும். அப்ப மீண்டும் பயிற்சி!!!!ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  16. சந்தீப் சக்கரவர்த்தி அவர்களைப் பற்றிய செய்தி நானும் வாசித்தேன். நிஜமாகவே ராயல் சல்யூட் அடித்துப் பாராட்டப்பட வேண்டியவர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு நாம் மேற்கொண்ட ஆப்பரேஷன் சிந்துரிலேயே கூட பயங்கரவாதிகளின் வீட்டையும் அமைப்பு இருக்கும் இடங்களைத் தாக்கி தரைமட்டமாக்கினார்கள் நம் வீரர்கள்.

    சந்தீப் சக்கரவர்த்தியை எவ்வள்வு பாராட்டினாலும் வார்த்தைகள் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தார்த் மற்றும் தயா விஷ்ணு குமரன் பற்றிய செய்திகள் மிக நன்று. இருவருக்குமே வாழ்த்துகள். இப்போதைய மாணவர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். தொடர்ந்து சாதனைகள் புரியவும் வாழ்த்துகள்.

      கீதா

      நீக்கு
  17. //ஆனால் அறிவுடைமையா என்று சொல்ல முடியவில்லை. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இவர் செய்ய வேண்டியதில்லை. இதையே இவர் அரசாங்கத்துடன் போராடி இவற்றை வாங்கியிருந்தால் நூறு மார்க்!//

    ஆசிரியைப் பாராட்டினாலும்....ஸ்ரீராம் உங்கள் வரிகளை டிட்டோ! இதைத்தான் அண்ணாமலை மாணவர்க கேட்ட கேள்விகளுக்கு அளிக்கும் பதிலில் சொல்லியிருந்தார். மிகவும் யதார்த்தமான பதில்கள்.

    இன்னொன்றும் அவர் தன் அனுபவமாகவும் அதில் அவர் பார்வையயும் சொல்லியிருன்டார். இங்கு சொல்லலாமா என்று தெரியலை. அரசியல் என்று ஆகிவிடுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இன்றைய ஸ்க்ரோலபிள் பிடிஃப் முயற்சிக்கு, நானும் ஸ்ரீராமும் பேசிய போது, நான் ஸ்ரீராமிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் கதை, அதன் பின் என் பார்வை என்று வரும் போது ரொம்பப் பெரிதாவது போல் உள்ளது. பாசிட்டிவ் செய்திகள் வேறு கொடுக்க வேண்டுமே என்று....

    அப்போது அவர் சொன்னார் ஸ்க்ரோலபிள் பிடிஎஃப் ஆக அப்பாதுரை ஜி அவர் தளத்தில் கொடுத்திருந்தார் முன்பு அப்படிச் செய்யலாமா என்று முயற்சி செய்யலாம். என்று உடனே எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது.

    ஏனென்றால் எனக்கும் இது முன்னர் எங்கள் பதிவில் செய்ய ஆசை இருந்தது ஆனால் அப்படியே விட்டுவிட்டேன். ஸ்ரீராம் சொன்னதும் உத்வேகம் கிளம்பி உடனே அதைச் செய்வது எப்படி என்று பார்த்து கடைசியில் வேலை செய்கிறது.

    ஸ்ரீராம், உங்களுக்கு நன்றி. நான் புதிய ஒரு நுட்பத்தைக் கற்றுக் கொண்டதற்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது மற்றும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களது சிந்தித்த முயற்சி காரணமாக இன்று வந்த தொழிற்நுட்ப பாணியில் கதையை படித்தது நன்றாக உள்ளது. இதையும் என் கருத்தில் குறிப்பிட நினைத்தேன். ஆனால், கருத்தே ஒரு கதையாக மாறி விடும் என்றும் தோன்றியதில் மறந்து விட்டேன். உங்களின் இந்த பாணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நன்றி கமலாக்கா......ஸ்ரீராமின் சார்பிலும் இப்ப. அவரும் பார்த்துவிட்டு வருவார்!!

      கீதா

      நீக்கு
  19. இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவி சாரதா தேவியை காளியாக பாவித்து வணங்கினார், அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அவர் உலக மக்கள் அனைவருக்கும் அன்னையாக இருந்தார்.

    அது போல எல்லா பெண்களும் தன் ஆசாபாசங்களை மறைத்து கொண்டு கணவரின் அன்பை பெறாமல் வாழ முடியுமா? சரஸ்வதி தேவியாக ஆராதிக்க நினைத்தவர் முன்பே சொல்லி இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா, எனக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதா தேவி நினைவுக்கு வந்தாங்க. (முன்பு நான் எழுதிய புரியாத புதிர் கதையில் இதைச் சொல்லியிருப்பேன்!)

      ஆமாம் உங்கள் கருத்தைதான் கதையில் சொல்லியிருந்தேன். முன்னரே சொல்லியிருக்கலாமே என்று. அவளும் தன் ஆசையைச் சொல்லியிருக்கலாமே என்று.

      கதையை இன்னும் பல கோணத்தில் சிந்தித்து எழுதியிருந்தேன் ரொம்பப் பெரிதாகி, அது கடுமையாக இருந்திடக் கூடாதே என்று ஸ்ரீராமிடமும் சொன்னேன். கட் செய்து தருகிறேன் என்று

      கடைசியில் அனுப்பி இந்த வெர்ஷன் கடுமையாக இல்லைதானே என்று அவரிடம் சொல்லி...கேட்டு...அவர் இல்லை என்றதும் சமாதானம்

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  20. கணவரின் பிரிவுக்கு தன் கேள்வி பாதகமாக அமைந்து விட்டதே என எண்ணி, குற்ற உணர்வில் அவள் தவிக்க வேண்டாமென இறைவன் அளித்த முடிவு.. மரணத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் இருவரும் மறுபிறவியில் இணைவார்கள் என நம்புவோம்.//

    ஆமாம், குற்ற உணர்வு தினம் தினம் கொல்லும் அதற்கு இணைந்து சென்றது நல்லதுதான். மறுபிறவியிம் இணையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்காவுக்குக் கொடுத் கருத்துதான் அக்கா இங்கும்

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  21. //அப்படியும் பொருந்தும்!//

    ஆமாம், அப்புடியும் பொருந்தும் தான். சுமா மீட்டதவீணைதானே!

    பதிலளிநீக்கு
  22. கதைச் சுட்டிக்குச் சென்றுபடித்தேன். மற்றவர்கள் கருத்துகளைப் படிக்கவுல்லை இன்னும்.

    கதை சுத்தப் பேத்தல். வீணை மீட்டுவதைக் கேட்க திருமணம் பண்ணிக்கொண்டானாம், சரஸ்வதியாம், தெய்வீகமாம். சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

    இவளுக்கு அவன் மேல் வசீகரம், பின் காதல். அவனுக்கு அவளின் திறமை மீது காதல்.அதுசரி.. முதல் நாளிலேயே விஷயம் புரிந்து கதையைச் சாவடிக்காமல் மூன்றாம் வருடத்தில்.. என நீட்டி முழக்கியிருக்கிறார் கதையாசிரியர்.

    ரங்கன் (கதாநாயகன்) ரசனையில் தீயைத்தான் வைக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை எனக்கும் தோன்றிய கருத்து இதேதான். ஆனால் இந்தக் கரு ஆழமான கரு நெல்லை. மன ரீதியாக. இப்ப என் உறவினர்கள் இருவர் மனரீதியான பிரச்சனைகளுக்கான கவுன்சிலர்ஸாக இருப்பதால் அப்படியான ஒரு விஷயம் இது. அப்ஸர்ட் என்று சொன்னாலும் இப்பிரச்சனையை ஆசிரியர் அதில் சொல்லியிருந்தால் கதைப் போக்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

      அவனே சொல்கிறானே சுயநலம் என்றெல்லாம்...கதையில் லாஜிக்ஸ் உதைத்தது.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  23. எந்தத் திறமையாளனும் திறமை, தொழில் வேறு, வாழ்க்கை வேறு என்றுதான் வாழ்வார்கள். கேசட்டை வாங்கி வேறு எந்த வேலையும் பார்க்காமல் கேட்பதை விட்டுவிட்டு திருமணம் பண்ணிக்கொண்டானாம். உது தெய்வீக்க் காதலாம். உண்மை அறிந்து, கேள்வியைக் கேட்டோமே எனத் துக்கித்தாளாம். என்னவிதமான கற்பனைக் கதை இது?

    பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அருமையாக, கேட்பவர் மனதை உருக்கும்படி பஜனைப் பாடல்கள் பாடுபவர், தன் வீட்டுக்கு வந்தபோது, வெங்காயம் நிறையப் போட்டு அடை வார்த்துத் தரச் சொல்லி நிறையச் சாப்பிட்டார் என என்னுடன் வேலை பார்த்த நண்பன் ஆச்சர்யப்பட்டுச் சொன்னான். பஜனை வேறு, நாக்கு ரசனை வேறு. கோயில் உலாக்கள் தொடர்ந்து நான் எழுதுவதால், இவர் ஏகாதசி விரதம் இருப்பார், எப்போதும் மடியாக பஞ்சகச்சம் திருமண்ணுடன்தான் இருப்பார், சாத்வீகமாக எளிய உணவு, கஞ்சியையே உண்டு, தரையில் சிறிய விரிப்பில் படுத்துக்கொள்வார், மென்மையாகப் பேசுவார், பெரியவர்களைக் கண்டதும் காலில் விழுவார் என்றெல்லாம் என்னைப்பற்றி நினைக்காமல் இருந்தால் சரிதான்.

    கதை சுத்த கற்பனை, நடக்க வாய்ப்பே இல்லை, நடந்தால் திருமணம் சில வாரங்கள்கூடத் தாண்ட வாய்ப்பில்லை, வெட்டு குத்து நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் ஏகாதசி விரதம் இருப்பார், எப்போதும் மடியாக பஞ்சகச்சம் திருமண்ணுடன்தான் இருப்பார், சாத்வீகமாக எளிய உணவு, கஞ்சியையே உண்டு, தரையில் சிறிய விரிப்பில் படுத்துக்கொள்வார், மென்மையாகப் பேசுவார், பெரியவர்களைக் கண்டதும் காலில் விழுவார் என்றெல்லாம் என்னைப்பற்றி நினைக்காமல் இருந்தால் சரிதான்.//

      ஹாஹாஹாஹா நாங்க நினைக்க மாட்டோமே!!!!!!!!!!!!! நெல்லைய தெரியாதாக்கும்!!!

      ஆனால், நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது நெல்லை.

      நடக்கிறது. கேஸஸ் வருகின்றன. ஒன்று தெய்வீகம், இல்லைனா தாம்பத்தியத்தில் ஆர்வமில்லை. இல்லை ஒரு கற்பனை உலகில் நினைத்திருப்பது....என்று இன்னும் பல ரீதியில்

      ஆனால் நான் பதிவில் சொல்லியிருப்பது போல ஒன்று பிரிதல் இல்லைனா கவுன்சலிங்

      நெல்லை ஆசிரியர் கதையில் அவன் மனதை அப்புறம் தான் சொல்கிறார்....ஆனால் பெண் விரும்புகிறாள் அதை அவள் முன்னரே சொல்லியிருக்கலாம் போன்ற உரையாடல்கள் எதுவும் இல்லை என்பதே குறை. அதுவும் இக்காலகட்டத்துக்கு

      ஆசிரியர் அதைக் கையாளமல் விட்டுவிட்டாரே அதுவும் சென்ற வருடம் போட்டியில் அழகான உளவியல் ரீதியாக எழுதிய கதை போன்று இதை கையாளாமல் விட்டுவிட்டாரே என்பதுதான் என் குறை.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. //கேஸஸ் வருகின்றன. // இருக்கலாம். நான் அத்தகைய நிகழ்வுகள், வாழ்க்கை பற்றி அறியவில்லை என்பதால் அவை இருக்காது என்று சொல்ல இயலாது. தெய்வீகம்,ஆர்வமின்மை, கற்பனை உலகு... நீங்கள் சொல்லும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.

      நீக்கு
  24. சந்தீப் சக்ரவர்த்தியின் சாதனைக்கு தலை வணங்குகிறேன். அவரைப் போன்றவர்கள் இருப்பதால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது.
    குழந்தைகளுக்கு பெஞ்ச் வாங்கித் தந்த ஆசிரியை வாழ்த்தலாம்.
    மாணவர்களின் சாதனை பிரமிப்பும், ந்ம்பிக்கையும், சந்தோஷமும் தருகிறது.

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப சாதாரணமான ஒரு கதைக்கு இவ்வளவு மெனகெட்டு விமர்சனம் எழுதியிருக்க வேண்டுமா? என்று தோன்றுகிறது. வேறு நல்ல கதைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்க கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா, ஏன் அப்படிச் சொல்றீங்க.

      இக்கதையின் கரு எனக்கு ரொம்பப் பிடித்தது. விமர்சனம் என்பதை விட இக்கருவை அதை எப்படி எல்லாம் கையாண்டிருக்கலாம் என்ற ரீதியில்தான் என் பதிவு.

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  26. வணக்கம் சகோதரி

    இன்றைய கதை பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. கதையின் முடிவு பற்றி, அனைவரது மன எண்ணங்களின்படி வெவ்வேறு கோணங்களில் சென்று பயணிக்கிறது. கதை எழுதிய ஆசிரியரின் மனதின் எண்ணங்களின்படி கதை நன்றாகத்தான் உள்ளது. தங்களது விமர்சனமும் நன்றாக உள்ளது.

    கதையை ஒட்டி "கலைக்கோவில்" படத்தை சகோதரர் ஸ்ரீராம் சொன்னதில்தான் அந்தப்படத்தை பற்றி விக்கி மூலமாக அறிந்து வந்தேன். அதில் இடம் பெறும் "தங்க ரதம் வந்தது" பாடலை நீண்ட நாட்களுக்குப் பின் கேட்டு ரசித்தும் வந்தேன். கானடா ராகத்தில் அமைந்த இந்தப்பாடல் எனக்கு முன்பு மிகப் பிடித்த பாடல். அதுபோல்" கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினால்," என்ற பாடலும் மிகவும் பிடிக்கும். இதுவும் கானடாதான். (இதற்கு முன் வெள்ளி பாடலில் இதைப் பகிர்ந்ததில்லையென்றால், இனி முடிந்தால் பகிருங்கள் என ஸ்ரீராம் சகோதரரிடம் கேட்டுக் கொள்கிறேன்.) "கலை வாழ்க்கையின் திசை மாற்றுமென" இன்றைய கதையை படிக்கும் போது தோன்றுகிறது. நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தங்க ரதம் வந்தது" பாடலை நீண்ட நாட்களுக்குப் பின் கேட்டு ரசித்தும் வந்தேன். கானடா ராகத்தில் அமைந்த இந்தப்பாடல் எனக்கு முன்பு மிகப் பிடித்த பாடல்.//

      அக்கா 'தங்க ரதம் வந்தது வீதியிலே' பாடல் ஆபோகி.

      கலை வாழ்க்கையை திசை மாற்றவில்லை வாழ்க்கையையே முடித்துவிட்டதே!!!!!

      கீதா

      நீக்கு
    2. தங்கரதம் வந்தது வீடியிலே பாடல் சஹானா ராகம் இல்லையா?

      நீக்கு
    3. ஆகா.. பாடலின் ராகமும் குழப்பந்தானா? நான் கானடா என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன்.

      நீக்கு
    4. /கலை வாழ்க்கையை திசை மாற்றவில்லை வாழ்க்கையையே முடித்துவிட்டதே!!!!!/

      ஆம். திக்கு திசை தெரியாத ஒரு முடிவு.

      நீக்கு
    5. இந்தப்பாடல்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ராகமாக சொல்லியுள்ளார்கள் ."தங்கரதம்"பாடலின் படத்தின் பெயரே ஒரு இடத்தில் மாறி விட்டது. மோகனமும், கனடாவின் குடும்பமோ ?

      நீக்கு
    6. தங்கரதம் வந்தது, காலை நேரப்பூங்குயில், வணக்கம் பலமுறை சொன்னேன் , இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ பாடல்கள் யாவுமே ஆபோகிதான்.

      நீக்கு
    7. விளக்கமான பதிலுக்கு நன்றி

      நீக்கு
    8. கமலா அக்கா, மோகனமும் கனடாவும் ஒரே குடும்பம் அல்ல

      கீதா

      நீக்கு
    9. ஓ.. அப்படியா..! நன்றி. நான் அவ்வளவாக இசை ஞானம் இல்லாதவள். சில/ பல ராகங்களின் பெயர்களை அறிவேன். உருக்கமான இசையை, மனதை மயக்கும் இசையை அதுவும் கானடா, மோகனம் ராகங்களில் வரும் பாடல்கள் மிகப் பிடித்தமானது. பொதுவாக அந்த காலத்தில் திரையிசைகளில் மோகன ராகத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என எங்கோ படித்திருக்கிறேன்.

      நீக்கு
  27. இன்றைய சனி எனக்கு கொஞ்சம் ஃப்ரீ என்பதால் இங்கு வர முடிகிறது. நம்மவீட்டவருக்கு இன்று ஆஃபீஸ் உண்டு என்பதால் இல்லைனா இன்றும் வேலைகள் நிறைய வந்திருக்கும். மாற்றி வைக்கப்பட்டுவிட்டன எல்லாம்.

    ஒரு வேளை அடுத்த சனி என்று நான் ஸ்ரீராமிற்கு அனுப்பியிருந்திருந்தால் நிச்சயமாக முடிந்திருக்காது இப்படி பதில் கொடுக்க, ஸ்ரீராமும் இந்த சனிக்கிழமைக்கே அனுப்பிடுங்களேன் என்று சொன்னதும் நல்லதாயிற்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அசத்தும் சித்தார்த் , இளம் விஞ்ஞானி தயா விஷ்ணு குமரன் திறமைகளை சொல்ல வார்த்தைகள் இல்லை பாராட்டுக்கள்.

    மாணவர்களுக்கு மேசை உதவிய ஆசிரியையையும் வாழ்த்துவோம்.

    கதை இனித்தான் படிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!