14.11.25

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

 

மிகச்சமீபத்தில் வெளிவந்த தனுஷ் படம் இட்லி கடை.  அதிலிருந்து ஒரு பாடல்..

இந்தப் பாடலை மகன்கள் வைத்துக் கேட்கும்போது ஒன்றிரண்டு பழைய பாடல்கள் நினைவுக்கு வந்தன.  எனினும் ஏதோ ஒன்று பாடல் கேட்கும்போது மனதை ஈர்க்கவே, அதை இங்கு பகிர்கிறேன்.

இசை G V பிரகாஷ்.  பாடலை எழுதியவர் தனுஷ் என்று சில ஸோர்ஸ் சொல்கின்றன.

பாடலைப் பாடி இருப்பவர் தனுஷ்.  "ஏட்ட வச்சான் எழுத வச்சான்" இடங்கள் ரசனை.

நட்டு வெச்ச நாத்தை எல்லாம் உத்து உத்து பாக்குதும்மா
கட்டி வெச்ச காள மாடு…..மூ…மூ…

பச்சரிசி பொங்க வெச்சு  பக்குவமா கொழம்பு வெச்சு
கூப்பிடுது சொந்த ஊர்  ஓய்….ஓய்….ஓய்….ஓய்…. ஓய்….ஓய்….

என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே எல்லாமே ஒனக்கும் தந்தானே

ஏ என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே காத்தாற தின்னையும் தந்தானே

 நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு சொன்னது யாருன்னு கூறு புள்ள
சாமிக்கு நீ வேறு நான் வேறில்லை பூமிக்கு யாருமே பாரமில்லை

ஏட்ட வச்சான் எழுத வச்சான் பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் வெளைய வச்சானே  [2]

ஏ ஹே என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே எல்லாமே ஒனக்கும் தந்தானே

ஏ என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே காத்தாற தின்னையும் தந்தானே

எட்டூரு எட்டூர்ரு கொட்டும் மோளம் அப்பாரும் முப்பாரும் கொண்ட வனம்
எட்டூர் எட்டூர் கொட்டும் மொழி அப்பாரும் முப்பாரும் கொண்ட வனம்

நட்டு வெச்ச நாத்தை எல்லாம் உத்து உத்து பாக்குதும்மா
கட்டி வெச்ச காள மாடு….மூ…மூ…

பச்சரிசி பொங்க வெச்சு பக்குவமா கொழம்பு வெச்சு
கூப்பிடுது சொந்த ஊர்….ஊ….ஊ….

ஏ கள்ளம் கபடம் இல்லா நெஞ்சு இருக்கு
என் கண்ணுக்குட்டிக்கும் சோறு தண்ணி பங்கு இருக்கு

யே தன்னந்தனியா ஏங்க என்ன இருக்கு
என் சொந்த பந்தமா ஊரே இங்கு இருக்கு

தாரை தப்பட்ட தட்டுங்கடி நம்மூர் கும்மிய கொட்டுங்கடி
மஞ்ச குங்குமம் பூசிகிட்டு மல்லி பூவோடு சுத்துங்கடி

 நான் சொல்லுற சங்கதிய கேட்டுகைய்யா
உன் காதுல வாங்கி நீ போட்டுகைய்யா
சொந்த மண்ணையும் பெண்ணையும் கும்பிடனும்
நம்ம பாட்டனும் பூட்டானும் சொன்னதைய்யா

என்ஜாமி ஏ என்ஜாமி எது வந்தாலும் போனாலும்
இந்த மண் தானே என்ஜாமி….

ஏட்ட வச்சான் எழுத வச்சான் பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் வெளைய வச்சானே

ஏட்ட வச்சான் எழுத வச்சான் பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் வெளைய வச்சானே

குழுவினர் :
ஏ என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே எல்லாமே ஒனக்கும் தந்தானே

குழு :
ஏ என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே காத்தாற தின்னையும் தந்தானே

 குழு :
நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு சொன்னது யாருன்னு கூறு புள்ள
சாமிக்கு நீ வேறு நான் வேறில்லை பூமிக்கு யாருமே பாரமில்லை


==============================================================================================

36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை

'படையப்பா' படத்தில் தன் காதலை உதாசீனப்படுத்திய ரஜினியை வெறுத்து ரம்யா கிருஷ்ணன் பல ஆண்டுகள் இருட்டு அறையில் தனியாக வசித்து தன்னைதானே தண்டித்ததை கதையாக தெரியும். ஆனால் அது நிஜத்திலும் நடந்துள்ளது.

பிரபலமான பெங்காலி நடிகை சுசித்ரா சென், இயற்பெயர் ரோமா தாஸ்குப்தா. 1931ம் ஆண்டு பங்களாதேஷில் உள்ள பப்னா என்ற இடத்தில் பிறந்தார். இந்தியா பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் கோல்கட்டாவிற்கு குடியேறியது. பின்னர் பிரபல தொழிலதிபர் ஆதிநாத் சென்னின் மகன் திபநாத் சென் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகுதான் அவர் நடிகை ஆனார். 1952ம் ஆண்டு 'சேஷ் கோத்தாய்' என்ற பெங்காலி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் வெளிவரவில்லை. இதன்பிறகு நடித்த 'ஷாரே சுவத்தோர்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகனாக நடித்த உத்தம் குமாருடன் இணைந்து 30 படங்களில் ஜோடியாக நடித்தார்.

பெங்காலி படம் அல்லாது தேவதாஸ் உள்ளிட்ட பல இந்திப் படங்களிலும் நடித்தார். 'சாத் பாகே பந்தா' படத்திற்காக மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.


சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் அவரால் தனது கணவரோடு அதிகநேரம் செலவிடமுடியவில்லை. இதன் காரணமாக மதுவுக்கு அடிமையான கணவர் மனைவியை பிரிந்து அமெரிக்கா சென்றவர் அங்கேயே மரணம் அடைந்தார்.
கணவரின் சாவுக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் தவித்த சுசித்ரா சென், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனி அறையில் வாழத் தொடங்கினார். சுமார் 36 வருடங்கள், அவர் தனது வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் தனிமையில் வாழ்ந்தார். நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை. தனது 83 வது வயதில், அதே தனிமை அறையில் மரணம் அடைந்தார்.

" Respecting her fierce desire for complete privacy, her last rites were performed at Kolkata's Kaioratola crematorium, barely five and half hours after she died, with her coffin reaching the crematorium in a flower-decked hearse with dark-tinted windows. Despite being Bengal's greatest star, referred to as "Mahanayika", she had consciously chosen to step into oblivion and she remained an enigma till her last, although thousands of fans had converged at the crematorium to catch one last glimpse of their idol. Her entire medical treatment had also been done in seclusion and secrecy."

தினமலரிலிருந்து....

=============================================================================================

நேயர் விருப்பம் 
ஜீவி ஸார் இந்தப் பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டிருக்கிறார்.  இதற்கு முன்னதாக அவர் கொடுத்திருந்த பாடல் வரிகள் மட்டும் இந்தப் பாடல் என்று தெரியவில்லை.  அதை விட்டு, இப்போது கேட்டிருக்கும் இந்தப் பாடலைப் பகிர்கிறேன்.
1994 ல் பாரதிராஜா இயக்கத்தில் ராஜா, ராஜஸ்ரீ மகேஸ்வரி நடிப்பில் ஏ அட் ரஹ்மான் இசையில் வெளியான படம். உன்னி கிருஷ்ணன் - சித்ரா பாடிய இந்தப் பாடலை எழுதி இருப்பவர் வைரமுத்து. சித்ரா பாடி இருக்கிறார் என்று விக்கி விக்கினாலும், குரலைக் கேட்டால் சந்தேகமாக இருக்கிறது.
மகேஸ்வரி பாத்திரத்துக்கு முதலில் பாரதிராஜா விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியர் மகள் அனிதாவைத்தான் கேட்டாராம்.  மகள் மருத்துவம் படிக்க விரும்புவதாகச் சொல்லி அவர்கள் மறுத்து விட்டார்களாம்.  கருத்தம்மா என்பது பாரதிராஜாவின் அம்மா பெயர்.
சித்ரா : தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

உன்னி : தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

சித்ரா : தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
உன்னி : வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

சித்ரா : தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

உன்னி : மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

சித்ரா : மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

சித்ரா தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

உன்னி தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
சித்ரா : நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆண் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

உன்னி காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

சித்ரா வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

=================================================================================================

ஃபேஸ்புக்கில் சிவாஜியின் தீவிர ரசிகர் செந்தில்வேல் சிவராஜ் பற்றி ஏற்கனவே ஒரு முறை பார்த்திருக்கிறோம்.  அவரது உணர்ச்சி வெளிப்பாட்டிலிருந்து மீண்டும் வேறொரு படம்..


புனர் ஜென்மம்

இந்தப் படத்துக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் படம் பாவமன்னிப்பு.
புனர் ஜென்மம் படத்தை அடுத்து நடிகர் திலகம் நடித்து வெளியான படம் பாசமலர்.
 .
பாவமன்னிப்பு ,பாசமலர் இரண்டுக்கும் இடையில் வெளியான படம் தான் புனர்ஜென்மம்.

இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் உலகின் மகோன்னத நடிகராக இருந்தார் நடிகர்திலகம்.

உலகத்தின் பாதியைக் கொண்ட ஆசிய ஐரோப்பா கண்டங்களின் மிகச் சிறந்த விருதை பெற்றிருந்தார் அந்த உலக மகா நடிகன்.
.
இதற்கடுத்த காலகட்டங்களில் தான் நடிகர்திலகத்திடம் சொல்லப்பட்ட கதை புனர்ஜென்மம்.  எந்த தைரியத்தில் நடிகர் திலகத்திடம் கதை சொல்லி இருப்பார்கள்?  கதாசிரியர் நடிகர்திலகத்திடம் கதை சொன்ன விதத்தை சற்று ஊகித்து பார்க்கலாம் .

கதை விவாதம்:

நடிகர்திலகம், கதாசிரியர்
(புனர்ஜென்மம் குழு)

நடிகர்திலகம் :என்ன புதுசா ஒரு கதை இருக்குன்னீங்களே! கதையை சொல்லுங்க.
கதாசிரியர்:  படம் ஆரம்பிக்குது.மழை கொட்டி தள்ளுது.அப்ப ஒரு தெருவை காட்டறோம்.அந்த தெருவுல ,மழைத்தண்ணியில ஒரு உருவம் படுத்திருக்குது.அளவுக்கு அதிகமான. குடி .போதை.  எழுந்திருக்கவே முடியல.மழை வேற கொட்டித் தள்ளுது.அந்த மழையிலும் தெளியாத குடி போதை.அந்த இடம் கூட சுத்தமில்ல.ஒரே அசுத்தம். குப்பைத்தொட்டி பக்கத்துல தான் அந்த உருவம் படுத்துருக்குது.அந்த கேரக்டர்தான் படத்தோட ஹீரோ.  படத்தோட ஓபனிங் சீனே இது தான்.

நடிகர்திலகம் :(புருவம் ஏத்தி)  ஹீரோ..அதாவது நான்..  மேல சொல்லுங்க..

இந்த காட்சியை கேட்ட பிறகும் எந்த உச்ச நடிகனாவது அடுத்த காட்சியையோ கதையையோ கேட்பானா? அப்போதே கதாசிரியர் 'கெட் அவுட்தான் '.  அதுவும் நடிகர்திலகம் அப்போது இருந்த நிலை என்ன? புகழ் என்ன? யார் செய்வார்கள் இந்த பாத்திரத்தை? யாரும் செய்ய முடியாததை தானே செய்வார் நடிகர்திலகம்.  நடிகர்திலகத்தால் மட்டுமே துணிந்து செய்யப்பட்ட, அவரின் அதி அற்புத நடிப்பில்உருவானது தான் 'புனர் ஜென்மம்'.
மதுவுக்கு அடிமையான நாயகன் அதிலிருந்து மீண்டு காதலியை கரம் பிடிக்கும் ஒரு சாதாரண ஒரு வரிக் கதைதான் புனர்ஜென்மம்.
நடிகர்திலகத்தின் நடிப்பு ..நடிப்பு..நடிப்பு..

குடிகாரனாக மட்டும் எத்தனை படங்களில் நடித்துள்ளார் .இதுவா பெரிய விஷயம்.அல்ல ..அல்ல..

எத்தனை விதமான குடிகாரர்கள் நாட்டில் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை தன்னில் பிரதியெடுத்து நடிப்பென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ,அது நடிப்பா ,அசலா என்று தோற்றம் காண்பித்த அந்த வகை நடிப்பு நம்மை மிரட்சி அடையச் செய்ததுதான் அற்புத விஷயம்.. உத்தமபுத்திரனின் போதை தந்த நடிப்பு ஒரு பாணி,நவராத்திரியில் ஆட்டம் போட்ட குடிகார வேடம் அது ஒரு பாணி, நீதியில் டிரைவரின் குடிகார பாணி,வசந்தமாளிகை ஜமீன்தார் குடிகார பாணி நடிப்பு என்று வெவ்வேறு வகை நடிப்பு வித்தியாசங்கள் தான் எத்தனையெத்தனை?
புனர் ஜென்மத்திலோ படு லோக்கல் குடிகார பாணி நடிப்பில் தெருவோர குடிகாரர்களையேஅசலாக காண்பித்திருப்பார்.அவர் செய்தது இருக்கட்டும்.உச்ச நடிகன் எவராவது செய்ய முயல்வார்களா?
ஈன்றாள் முகத்தேயும் ஒளியிழப்பர்  எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்.
பட துவக்கத்தில் காண்பிக்கப்படும் இந்த வரிகளும்,பின் தொடர்ந்து ஒலிக்கும் நடிகர்திலகத்தின் குரலும் படக் கதையை சுருக்கமாக சொல்லிவிடும். இலக்கிய நயம்பட அருமையாக காட்டப்படிருக்கும் இந்த காட்சி .
உலக மகா நடிகனை, கலையின் அரசனை, நடிப்பின் பீஷ்மரை குப்பை கூளங்களுக்கு மத்தியில் குடித்த நிலையில் மதி மயங்கி கிடக்கும் படியான அறிமுக காட்சியை வைக்க, காட்ட துணிவு வேண்டும்.  புனர் ஜென்மத்தில் பூர்த்தியானது அந்த விதி.செய்தவர் திலகமான அந்த நதி.

திரைப்படங்களில் காட்டப்பட்ட கதாநாயகனின் துணிச்சலான அறிமுக காட்சி என்றால் அது இதுவாகத்தானிருக்கும்.  
படத்தின் முதல் பாடல்.பத்மினி ஆடுவார். பாடுவார்.நன்றாகத்தானிருக்கும்.கூட்டத்தோடு கூட்டமாக இருப்பார் நடிகர்திலகம்.அத்தனை லயிப்பும் அவரிடத்திலே போய்விடும்.பாருங்கள் அந்த காட்சியை.நடிகர்திலகத்தின் கோமாளி வேஷமும், அந்த குத்தாட்டமும் ,அடடா! நடிப்பு மகாராஜா போட்ட ஆட்டமா அது ..பின்னியிருப்பார் பின்னி.
அழகான சிலை படைப்பிற்கு விலை பேசுபவர்களிடம், ஒரு வரி சொல்வார்.
காசுக்காக கலையை விற்பதா? என்று! இந்த வசனத்தை நடிகர்திலகத்திற்காக எழுதியிருப்பார் வசனகர்த்தா. இப்படித்தான் பார்ப்பவர்களுக்கு எண்ணம் வரும்.அது தானே அவரின் நிலை...
சிலை விற்ற பணம் செல்லாது என்று தெரியவர ,அதைத் தொடர்ந்த காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பானது

குமுறும் எரிமலை  :  கொதிக்கும் சூரியன்   ;  ஆர்ப்பரிக்கும் கடல்
என்பது போல்தான்.
அழகாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகள்.தரமான ஒளிப்பதிவு.
ரசிக்க வைக்கும் சின்ன சின்ன நேர்த்தியான ஷாட்கள்.கண் கவரும் பிண்ணனி காட்சிகள். இவையெல்லாம் நிறைந்த நிறைவு தான் 'என்றும் துன்பமில்லை 'பாடல் காட்சி.
களிமண்ணால் ஆன சிலை -அது கற்பனையில் சுடர்விட்ட கலை.  செல்லாத நோட்டு இதன் விலை.  இது சீரழிந்த கலைஞனின் நிலை
நடிகர்திலகம் சிலைகளை பார்த்து ஏமாற்றத்தால் பேசப்படும் வசனம் இது.நடிகர்திலகம் பேசுவதும் , அந்த வசன உச்சரிப்பும் , போதையான நடிப்பும்...  நடிப்பு அவருடையது...  போதை நமக்கு ...
குடிப்பதால் ஏற்படும் பாதங்களை சொல்லவும் ஒரு படம் வேண்டுமல்லவா .அது புனர் ஜென்மம் பார்த்தால் தெரியும்.
- செச்தில்வேல் சிவராஜ்...

படம் பார்க்க விரும்புவோருக்கு படத்தின் சுட்டி இங்கே...

==============================================================================================

அடுத்த பாடல் ஒரு வேற்று மொழிப்பாடல்.  இசைக்கு மொழி அவசியமில்லை என்று புரிய வைக்கும் பாடல்.  மராத்திப் பாடல்.  இசை நம்ம இசைஞானி.

Gondhal is a Marathi movie scheduled for release on November 14, 2025. The film is directed by Santosh Davakhar and stars Kishore Kadam, Ishitaa Deshmukh, Nishad Bhoir, and Yogesh Sohoni. The story is described as a drama and thriller about a young bride who uses her lover's obsession with the "Gondhal" ritual for her own purposes, as seen on BookMyShow and Times of India.
Release Date: November 14, 2025   :  Director: Santosh Davakhar
82 வயதிலும் எவ்வளவு ஜீவனுடன் இருக்கிறார் இளையராஜா.  சமீபத்தில் விடுதலை படத்தில் 'வழிநெடுக' பாடலை சுருதி மாறாமல் பாடி அசத்தினார்.  இப்போது இந்த மராத்திப் படத்துக்கு இசை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.  இவர் திறமை உணர்ந்து அங்கிருந்து வந்து இவர் இசையை வாங்கிப் போனார் இயக்குனர்/தயாரிப்பாளர் என்று ஒரு காணொளி பார்த்திருக்கிறேன்.

நிறைய வீடியோக்கள் இளையராஜாவின் இசை பற்றி இவர் வெளியிட்டுள்ளார்.  இந்தப் பாடல் அப்ற்றி இவர் சொல்வதை இங்கே கேளுங்கள்.  

47 கருத்துகள்:

  1. யாரும் செய்ய முடியாததை தானே செய்வார் ..

    அவர் தான் நடிகர்திலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே...   ரசிகர் விருப்பத்தையும், இயக்குனர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்தவர்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. உள்ளூறக் கள்ளூறுதே...

    அதுதான் ஊருக்கெல்லாம் தெரியுமே...

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் முதல் பாடல் படப்பாடல்கள் மேடையில் தனுஷே பாடி? கேட்டேன் அப்புறம் இதன் முழுப்பாடலும் கேட்கலைனாலும் கொஞ்சம் கேட்டேன்...அப்போழுதே இப்பாட்டு ஈர்த்தது.

    அதன் பின் தான் தெரிந்ததுஇது வைரல்னு

    இப்ப முழுப்பாடலும் கேட்டேன்.

    எனக்குப் பிடிச்சது கொஞ்சம் ஈர்க்கிறது.

    இருங்க ஒரு பாட்டு, உங்களைப் போல எனக்கும் நினைவுக்கு வருது மெட்டு....இதே போல இல்லைனாலும் இதோடு ஒத்துப் போகும்...

    வார்த்தைகள் கிட்டலையே ட்யூன் மட்டும்....அந்தப் பாட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஒரு பாடல் அல்ல, இரண்டு மூன்று பாடல்கள் நினைவுக்கு வரும்!

      நீக்கு
  5. ஏ என்ஜாமி தந்தானே எல்லாமே என்ஜாமி தந்தானே
    தென்னையும் தந்தானே காத்தாற தின்னையும் தந்தானே//

    திண்ணையும் தந்தானேன்னு இருக்கணும் என்று நினைக்கிறேன், ஸ்ரீராம்.

    ஸ்ரீராம் அந்தப் பாட்டு எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது
    கருத்த மச்சான் பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், திண்ணை என்றுதான் இருக்கவேண்டும். 
      கருத்த மச்சான் பாடல் போல மாமனுக்கு மைலாப்பூருதான் பாடலும் இன்னும் ஒரு நினைவுக்கு வராத பாடலும்!

      நீக்கு
  6. சிசித்ரா சென் பெயர் பரிச்சயம் ஆனால் தகவல்கள் புதியது எனக்கு

    சிலர் இப்படி தங்களுக்கே தண்டனை கொடுத்துக் கொள்கிறார்கள் குற்ற உணர்வினால். தன்னைத்தானே அடித்துக் கொள்ளுதல், காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றநிகழ்வுகளும் உண்டுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாத்துக்குமே நம்ம மனசுதாங்க ஆட்டிப் படைக்குது!!

      கீதா

      நீக்கு
    2. மனசுல என்னென்ன ஆட்டிப் படைக்குதோ...   கனாக்காணும் கண்கள் மெல்ல பாடல் சரிதா போல...!

      நீக்கு
  7. ஸ்ரீராம், தென்மேற்குப் பருவக்காற்று, சித்ராதான், இடையில் கொஞ்சம் கிமிக்ஸ் எல்லாம் கொண்டு வருகிறார்.

    இந்தப் பாட்டும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  ஏனோ கேட்கும்போது கொஞ்சம் வித்யாசமாக இருந்தது.

      நீக்கு
    2. நேயர் விருப்பம் என்று கேட்டார். ஆளையே காணோம்!

      நீக்கு
  8. சிவாஜி ரசிகரின் விவரிப்பு நல்லாருக்குன்னாலும் ரொம்ப தீவிர ரகிசர் போல!!!! எல்லாமே ரொம்பத் தூக்கி வைத்து நடனம் உட்பட!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இட்லிக் கடை தனுஸ் பாடல் இப்பொழுதுதான் கேட்டேன் இந்தப் பாடல் பற்றி தெரிந்திருக்கவில்லை..இப்போது வித்தியாசமான புதிய படங்கள் வந்தால் ஒழிய மற்றையவை பார்ப்பதில்லை.

    இரண்டாவது பாடல் அருமையானது கேட்டு இருக்கிறேன்.
    மூன்றாவது உங்கள் பகிர்வில் மூலம்தான் கண்டேன். கேட்டேன்மொழி புரியாவிட்டாலும் கேட்க நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. முதல் பாடல் நன்றாக இருந்ததா? நன்றி.

      நீக்கு
  10. அட! மராத்திப் படத்துக்கும் ராஜாவின் இசையா!! ராஜா இப்பவும் ரொம்பவே ஆக்டிவ், ஸ்ரீராம். இசையிலேயே இருப்பதால் இருக்குமோ?

    சொல்வாங்களே பொதுவாக இசை, நடனம், இப்படி எந்தக் கலைகளிலும் ஊறினால் அவங்க ரொம்ப ஆக்டிவாக இளமையாகவே இருப்பாங்கன்னு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கொஞ்ச நாட்கள் முன்பு இந்தத் தயாரிப்பு பற்றி காணொளியெல்லாம் வந்தது.

      நீக்கு
  11. பாட்டு சீனுக்கு ஏற்றாற்போல மெதுவான மெட்டாக கூட்டம் நகருவதற்கு ஏற்ப போட்டாப்ல அவ்வளவு அழகா போட்டிருக்கிறார்.

    மெட்டு ரிதம், என் ஜாமி தந்தானே யும் ஒத்துப் போவது போல இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஞ்சாமி பாடலும் இதுவும் ஒத்துப்போகிறதா?  எனக்கு அப்படித் தோன்றவில்லை.

      நீக்கு
  12. ஃபேஸ்புக் பகிர்வையும் கேட்டேன் ஸ்ரீராம். உண்மைதான்,...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆரம்ப இசை சூப்பரா இருக்குல்ல, ஸ்ரீராம்....சீனுக்கு ரொம்ப ஒன்றி இருக்கு. அது போல கடைசி வரை....

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. //நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு சொன்னது யாருன்னு கூறு புள்ள
    சாமிக்கு நீ வேறு நான் வேறில்லை பூமிக்கு யாருமே பாரமில்லை//

    முதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன். பாடல் வரிகள் அருமை. பாடல் இசையும் காட்சி அமைத்தவிதமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனுஷே எழுதிய வரிகள்.  எனக்கும் பிடித்திருந்தது.

      நீக்கு
  16. சுசித்ரா சென் பற்றிய செய்தி எனக்கு புதுசு படித்தேன்.
    ஜீவி சார் கேட்ட பாடலும் அருமை அந்த பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. புனர்ஜென்மம் படம் பார்த்து இருக்கிறேன், தொலைக்காட்சியில் பழைய படம் அடிக்கடி வைப்பார்கள் ராஜ் டிவியில்.அதன் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும். அதனால் தொலைக்காட்சியில் வைக்கும் போது எல்லாம் பார்ப்பேன்.

    கடைசி மாரத்திப் பாடல் இனிமை அருமையான பகிர்வு கேட்டு மகிழ்ந்தேன், மகனுக்கும் கேட்க அனுப்பினேன்.
    வழி நெடுக காட்டுமல்லி பாடலும் பிடிக்கும் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனர்ஜென்மம் பார்க்கும் பொறுமை இப்போது இருக்குமா, தெரியவில்லை.  நான் கூட அது மறுஜென்மம் பற்றிய கதை என்று நினைத்தேன்.  அபப்டி இல்லை.

      நீக்கு
  18. மது அருந்தும் நடிப்பில் கௌரவம் பாரிஸ்டரை மறந்து விட்டாரோ கட்டுரையாளர்!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு தனி அத்தியாயம் வைத்திருப்பார்.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன். பாடல் வரிகளும், இசையமைப்பும் நன்றாக உள்ளது. தனுஷின் குரல் நன்றாக இருக்கிறது இவர்கள் கூட்டணி பாடல்கள் கொஞ்சம் பிரபலமாகும்.

    36 ஆண்டுகள் குற்ற உணர்வில் தனிமையில் வாழ்ந்த நடிகை ஆச்சரியம். அவரின் மனது எப்படி பாடுபட்டிருக்குமென உணர முடிந்தது.

    புனர் ஜென்ம படம் பற்றிய தகவல்களுக்கும், மராத்திய பாடல் பற்றிய விளக்கத்துற்கும் நன்றி.

    நன்றியுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  20. காணோமே என்று தேடியிருக்கிறீர்கள். உங்களுக்கு பகலானால் எங்களுக்கு இரவு என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கு.

    நான் கேட்ட மாதிரி போடாதது ஏமாற்றம், ஸ்ரீராம்! பிரசுர விஷயங்களில் ஒரே மாதிரி அப்படி அப்படியே ரிபீட் ஆகிக்கொண்டிருந்தால் சலித்துப் போகும். அட! இது புது மாதிரி இருக்கே என்று வியக்கிற மாதிரி என்னவானும் மாற்றங்களைப் புகுத்திக் கொண்டே இருக்கணும்.
    ஆசான், 'குமுதம்' மாதிரி.

    அந்த மாதிரி கற்பனையில் நான் ரசித்ததைத் தான் உங்களுக்கு அனுப்பி
    வைத்திருந்தேன். அப்படியே அந்த வரிகளை மட்டும் screen shot எடுத்துப் போட்டு முழுப் பாடலை யூட்யூப் காட்சியாய் போட்டிருந்தால் பிரமாதப்பட்டிருக்கும்.

    போதாக்குறைக்கு என் P.C-யிலும் Mobile--லிலும் ----
    Video unavailable
    The uploader has not made this video available in your country
    -- என்ற எழுத்துக்கள் பளிச்சிடுகிறதா-- ஹூம்.. வெறுத்துப் போய் விட்டது!

    இன்னொரு நேயர் விருப்பம் அனுப்புகிறேன். அதை நான் சொல்கிற மாதிரி போடுங்கள். தூக்கலாக இருக்கும் பாருங்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உங்களுக்கு பகலானால் எங்களுக்கு இரவு என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கு //

      நன்றாக நினைவிருக்கிறது.  சாதாரணமாக நீங்கள் உங்கள் ஊர் நேரப்படி படுக்கப்போகும் முன்பு வந்து பார்த்து விடுவீர்கள்.  பதிவு போட்டதுமே படித்து விடுவீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்!

      நீங்கள் சொல்வது போல போடுவது என்பது அந்த சரணம் மட்டுமே வந்திருக்கிறது அதில்.  அது அவர் தனியாக வெட்டி தயாரித்திருப்பது.  அந்த அளவு நேரம் செலவிட சிரமமாயிருக்கிறது.  நான் முழுப்பாட்டையும் அவூட்டி எழுத்துகளால் நிரப்பி, பின்னணியில் பாடலை ஓடவிட வேண்டும்.  சற்றே சிரமம் என்பதால்தானோ என்னவோ அவர் ஒரு சரணம் மட்டும் தந்திருக்கிறார்!

      ஆனால் அதே சமயம் வரிகளும் திரையில் ஓடக்கூடிய பாடலை நான் பகிர்ந்திருக்கிறேன்.  

      வீடியோ அனவைலபில் என்று எங்களுக்கு இந்தியாவில் வரவில்லை.  இப்போதும் காட்சியை ஓட்டிப் பார்க்க முடிகிறது.  நான் அதை ஒவ்வொரு முறையும் சோதித்துப் பார்த்தே இணைக்கிறேன்.

      நீக்கு
    2. ஒரு குறிப்புக்குத் தானே? பாடலின் சில வரிகளைப் போட்டால் போதும். ழுழுப்பாடலும் ராகத்தோடு காட்சி அமைப்பாய் யூட்யூபில் பார்த்து விடுகிறோமில்லையா? நீங்க எடுத்துக் கொள்ளும் மெனக்கிடல் யாரும் வரிக்கு வரி படிப்பதில்லை என்பதே என் எண்ணம்.

      நீக்கு
  21. சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' மறு வாசிப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏதோ சொல்லத் தோன்றியது. இது உங்களில் என்ன ஞாபகத்தைக் கிளறுமோ, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதோ படித்தது.  எனக்கு சுஜாதா, இளையராஜா, கிடார், பிரதாப் எல்லோரும் நினைவுக்கு வருகிறார்கள்!

      நீக்கு
  22. மறு வாசிப்பில் அங்கங்கே நாட்டுப்புற பாடல்களோடு இன்னும் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!