வெகு நாட்களுக்குப் பிறகு எழுதியுள்ள பதிவு...
காராசேவு
தேவையான பொருட்கள்:-
கடலை மாவு 250 gr
அரிசி மாவு 50 gr
மிளகுத்தூள் அல்லது ஓமம்
ஒரு tsp
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்புத்தூள் தேவைக்கு
வெண்ணெய் ஒரு Tbsp
பூண்டு மூன்று பற்கள்
கடலெண்ணெய் தேவையான அளவு
கடலைப் பருப்பை வாங்கி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து அரைத்து மாவு தயாரித்துக் கொள்வது சிறந்தது..
அரிசியையும் நாமே அரைத்து மாவு தயாரித்துக் கொள்வது நல்லது..
வெளியில் வாங்குகின்ற மாவு வகைகளில் சுத்தம் என்பது சந்தேகத்திற்குரியது..
இருப்பினும்,
வீட்டிலேயே மாவு தயாரித்துக் கொள்வது சிரமம் என்றால் வெளியில் தான் மாவு வாங்கிக் கொள்ள வேண்டும்
செய்முறை:
பூண்டு பற்களை சுத்தம் செய்து பசை போல அரைத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரம் ஒன்றில் மேற்கூறிய பொருட்களைச் சேர்த்து. நன்றாக கலந்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அவற்றில் தேவையான அளவு கடலெண்ணெய் ஊற்றி, பிசைந்த மாவினை முறுக்கு உரலில் (சேவை பிழிவதற்கான ஒற்றைத் துளை அச்சில்) வைத்து எண்ணெயில் பிழிந்து பக்குவமாக பொரித்து எடுத்தால் சுவையான மிளகு காராசேவு..
இந்த மாவை இதே பக்குவத்தில் (முறுக்கு உரலின் பட்டைத் துளை அச்சினைப் போட்டு) ஓலை முறுக்கு ஆகவும் பிழிந்தெடுக்கலாம்..
இதெல்லாம் உங்களது சாமர்த்தியம்..
இதில் ஆப்பச் சோடா, அந்தச் சோடா இந்தச் சோடா - என்று எவ்வித இரசாயனக் கலப்பும் இல்லாதது சொல்லத்தக்கது..
சுத்தமான கலனில் வைத்து பாதுகாத்துக் கொண்டால் ஐந்து நாட்களுக்குக் கெடாது..
நமது நலம் நமது கையில்..

காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கமும் பிரார்த்தனையும்.
நீக்குமுருகா சரணம்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் காராசேவு பக்குவம், படமும், செய்முறையும் நன்றாக வந்துள்ளது. நாங்கள் வீட்டில் செய்யும் போது இதில் பூண்டு சேர்த்ததில்லை. மற்றபடி இதே பக்குவமுள்ள மாவினால் ரிப்பன் பகோடா போன்று செய்துள்ளோம் .
/வெகு நாட்களுக்குப் பிறகு எழுதியுள்ள பதிவு.../
ஆம் அவர் சமையல் பதிவுகள் எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. அதைப்போல் செவ்வாய் கதைகளும். விரைவில் அவர் நல்ல ஆரோக்கியம் பெற்று, கதை பகுதிக்கு நல்ல கருத்துள்ள கதைகளை எழுதித் தர வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவ்வண்ணமே கோரும்....
நீக்கு+1
நீக்குகீதா
இந்தப் பதிவை மறந்தே விட்டேன்...
நீக்குஇந்த வட்டாரத்திலும் இணையம் இழுவையே
காராசேவு என்ற தலைப்பைப் பார்த்ததும் சாத்தூர் நினைவுக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்குசென்றவாரம் மதுரை பிரேமா விலாசில் 100 கிராம் மாத்திரம் வாங்கினேன்.
உங்கள் செய்முறை நன்று. பூண்டு வாசனையுடன் காராச்சேவு சாப்பிட்டு எத்தனை நாட்களாகிவிட்டன.
வாங்க நெல்லை... நான் பூண்டு வாசனையுடன் நல்ல காராபூந்தி சாப்பிட்டு ரொம்ப நாட்களாகி விட்டது!
நீக்குகாராசேவு வேறு காரா பூந்தி வேறு. எனக்கு காராபூந்தி ரெய்த்தா மிகவும் பிடிக்கும்
நீக்கு// காராசேவு வேறு காரா பூந்தி வேறு //
நீக்குஅப்படியா?!
// காராசேவு வேறு காரா பூந்தி வேறு //
நீக்குஆமாம்... காராபூந்தி ரெய்த்தா அவ்வளவு அருமையாய் இருக்கும்
வாங்கினேன்னு மட்டும் சொல்லிருக்கீங்க நெல்லை, எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லை...போங்க...
நீக்குகீதா
நெல்லை காராபூந்தியோடும் பூண்டு வறுத்துப் போட்டு விக்கறாங்களே! அதைச் சொல்லியிருக்கிறார், ஸ்ரீராம் என்று நினைக்கிறேன்.
நீக்குஸ்ரீராமிற்குத் தெரியாதா....காராபூந்தினா என்ன? காரச்சேவ் என்றல என்ன என்று...வீட்டில் அம்மாவுக்கும் சின்ன வயசிலேயே உதவியர். அப்புறம் பல வெளியிடங்களில் சாப்பிட்டிருக்கிறாரே...கல்யாணங்கள்...விசேஷங்கள்....என்ன ஸ்ரீராம்? கரீக்டுதானே!!!
கீதா
பிரேமா விலாஸில் எல்லாமே நல்லா இருந்தது. கிலோ 400 ரூபாய். அதிலும் அல்வா, ஜாங்கிரி-சிறியது சூப்பர். ஆனா பாருங்க, எதைச் சாப்பிட்டாலும் எடை போட்டுவிடுகிறது. அதனால் வாங்கினாலும் சாப்பிட முடிவதில்லை
நீக்குமுன்பெல்லாம் காராசேவை அச்சில் பிழிவதில்லை. ஓட்டையுள்ள தட்டில் மாவை கையால் தேய்த்துத்தான் செய்வார்கள். அச்சில் பிழிந்தால், பெயர் மாத்திரமே மிஞ்சுகிறது. அதிலும் கடைகளில் பாக்கெட்டில் இஷ்டப்படி ஒல்லியாக, சிறிது தடிமனாக என்றெல்லாம் பிழிந்து காராச்சேவு என்றல்ல, சாத்தூர் காராச்சேவு என்ற பெயரிட்டு விற்கிறாங்க.
பதிலளிநீக்குநீங்க எழுதியிருப்பதுபோல், வீட்டில் தயாரித்துக்கொள்வதே சிறப்பு.
ஓம்ம் உபயோகித்துப் பார்த்ததில்லை. கரகர மிளகு, பூண்டுதான்.
நான் சாத்தூரில் கொஞ்ச காலம் வேலை செய்திருக்கிறேன். பஸ் ஸ்டாண்டைத் தாண்டி அந்த மெயிட்னரோடிலேயே அலுவலகம் அமைந்திருந்தது. பபஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இவ்வகை சேவுகள் இனிப்புகள் அடுக்கடுக்காய் உயரமாய் வைத்திருப்பார்கள்!
நீக்குஏன் இப்போதெல்லாம் கடலை எண்ணெயில் பொரிப்பதை விட்டுவிட்டு, ரிபைன்ட் ஆயில் எனப்படும் பெட்ரோல் எண்ணெயில் பொரித்துத் தள்ளுகிறார்கள். உடலுக்கு என்னெல்லாம் கெடுதியோ. பெங்களூர், கர்நாடகாவில் பாமாயிலிலும் பொரிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஒரு ? மிஸ்ஸிங்.. இல்லை?
நீக்குதுரை அண்ணா, சூப்பர் செய்முறை. எனக்கு ரொம்பப் பிடிக்கும் காரச்சேவு அதுவும் பூண்டு மிளகு போட்டதுதான் என் முதல் சாய்ஸ். அதன் பின் தான் வெறும் மிளகு போட்டு செய்வது நம்ம வீட்டுல பூண்டு எல்லாம் சேர்க்க மாட்டாங்களே வீட்டிலும் சரி விசேஷங்களிலும்.
பதிலளிநீக்குமுன்ன ஊரில் இருந்தப்ப இது தேய்ப்பதற்கு என்று ஒரு பெரிய கரண்டி ஓட்டைகளும் பெரிசா இருக்கும் நீளமான கரண்டி அதில்தான் தேய்ப்பாங்க.
நானும் வைத்திருந்தேன் முன்ன. இப்ப இல்லை.
கீதா
வாங்க கீதா... நீங்கள் சொல்லும் கரண்டியில் தேய்த்தால் காராபூந்திதானே கிடைக்கும்?!
நீக்குஇல்லை ஸ்ரீராம், சின்ன சின்னதாக நீட்டமாக விழும். நாம இப்ப கூட பட்சணங்கள் பொரிக்கும் கரண்டி வீட்டில் கொஞ்சம் பெரிசா ஒட்டையோடு இருக்குமே அதில் கூட செய்யலாம். மாவு பிசையும் முறையில் - பதம் - அது நன்றாக வரும் ஸ்ரீராம்...
நீக்குகீதா
ஆம். கார பூந்திக்கு தேய்த்துக் போடும் ஜல்லி கரண்டியிலேயே, மாவை கெட்டியாக பிசைந்து கொண்டு எண்ணெயில் விழும்படியாக தேய்த்துக் போட்டால் காராசேவு செய்யலாம். நீங்கள் சொல்வது போல் மாவின் பதந்தான் கவனத்தில் கொள்ள வேண்டும் சகோதரி.
நீக்குசமீபத்தில் காரச்சேவு சில மாதங்களுக்கு முன் உறவினர்களுக்காகச் செய்தேன். கரண்டி இல்லையே....அப்ப முழுவதும் பிழியாமல் கொஞ்சம் பெரிய ஓட்டை உள்ள (மனோஹரம்) செய்யும் அச்சில் போட்டு கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து சின்ன சின்னதாக வரும்படி பிழிந்தேன். உறவினர்களுக்கு ரொம்பப் பிடித்தது. என் தங்கை வீட்டில் ஹை நம்ம ஊரு தின்னவேலி சேவு என்று சொல்லிச் சாப்பிட்டாங்க.
பதிலளிநீக்குகீதா
சென்னையிலிருந்து திருநெல்வேலி/நாகர்கோவில் அலல்து இங்கிருந்து அங்கு போறப்ப ரயிலில் கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் விப்பாங்க. அப்படி முன்ன வாங்கியதுண்டு. ஆனால் இப்பலாம் வாங்குவதில்லை.
பதிலளிநீக்குதெனாலி போன்று எண்ணை பயம்....மாவு பயம், உப்பு பயம்....சுத்தம் பயம் என்று!!! ஹாஹாஹா
கீதா
இப்படி எந்த பயமும் இல்லாத காலத்தில் நமக்கு ஒரு பிரச்சனையும் வரலை. இப்போ சுத்தம் சுகாதாரம் உடல்நலம் என்று ஜல்லியடித்து ஒண்ணும் சாப்பிடறதில்லை. உடல்நலனுக்கு guarantee யும் இல்லை warranty ம் இல்லை என்ன பிரயோசனம்?
நீக்குஎல்லாம் வெளிநாட்டினர் சதி!
நீக்குஅல்லது அப்போ உடல் கோளாறுகளைக் காட்டும் கருவிகள் இல்லை!
அல்லது அப்போ உடல் கோளாறுகளைக் காட்டும் கருவிகள் இல்லை!//
நீக்குஇதுவும் ஒரு பாயின்ட் ஸ்ரீராம். உண்மையிலேயே பல வியாதிகள் வெளியில் தெரியவில்லை என்பதே உண்மை.
கீதா
அதனால் பயமில்லாமல் சாப்பிட்டோம்!!!!!!!!!!!!!!!!! இரண்டாவது இப்ப மாதிரி சோசியல் மீடியாவஆ? இல்லை மருத்துவர்கள் இப்படி வீடியோ வீடியோவா போட்டாங்களா? நீங்க சொல்லிருப்பது போல இப்ப கண்டுப்பிடிக்க பல விஞ்ஞானக் கருவிகள்...ஆராய்ச்சிகள், வளர்ச்சிகள், தீர்வுகள்....என்று பல நோய்களுக்குத் தீர்வுகள்...
நீக்குஇப்ப சொல்லப்படும் நோய்கள் முன்பு இருந்தன அதற்கான தமிழ்ப்பெயர்களும் இருக்கு நமக்குத்தான் தெரியலை. கதைகளில் புராணங்களில் கூட வருமே. இல்லைனா என்னவென்று தெரியாத வியாதின்னு சொல்லிட்டுப் போய்டுவாங்க.
அப்பவும் நாடி பிடிச்சு சொல்லும் வைத்தியர்கள் இருந்தாங்க ஆனால் போறவங்க ரொம்பக் குறைச்சல்தானே.
கீதா
நெல்லை இன்னொன்னும் நோட் பண்ணனும் நாம. இப்ப இருக்கறது போல வகை வகையான இனிப்புகள், கார வகைகள் அப்ப இல்லையே. எல்லாருக்கும் தெரிஞ்ச பொதுவாக வீடுகளில் செய்யக் கூடியவைதான் வெளியிலும் வித்தாங்க. இப்ப உலகமயாதலால் வகை வகையான ஸ்வீட்டுகள்... நீங்களே கூட இங்க ஒரு பதிவு எழுதியிருந்தீங்களே உங்கள் திருமண நாளுக்கு உங்க பெண் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டதை. வாயில
நீக்குகீதா
என்னதான் வகை வகையாக புதிது புதிதாக இனிப்புகள் வந்தாலும், எனக்குப் பிடித்தது நிமிஷாம்பாள் கோயிலில் கிடைக்கும் லட்டுதான். (ஸ்ரீரங்கபட்டினம்). திருப்பதி லட்டும் போரடிக்குது.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
பதிலளிநீக்குகாரா சேவு செய்முறை நன்று. பூண்டு சேர்த்து செய்வது எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.... ஆனாலும் பூண்டு சேர்ப்பது உடல்நலனுக்கு நல்லது என்பதால் சேர்த்துக் கொள்ளலாம்.....
வாங்க வெங்கட்... பூண்டு நல்ல ஆன்ட்டி ஆக்சிடன்ட்.
நீக்குபூண்டு வாசனையுடன் நல்ல காராபூந்தி சாப்பிடுவதே நல்லது...
பதிலளிநீக்குவயிற்றில் மந்தம் ஏற்படாது இருக்கும்..
சேவை தேய்ப்பதற்கு என்று ஒரு பெரிய கரண்டி ஓட்டைகளும் பெரிசா இருக்கும்
பதிலளிநீக்குஓட்டல்களுக்கு இது சரி...
வீடுகளுக்கு அவரவர் கைக்குத் வசதிப்பட்டவை தான்...
வருகை தந்து கருத்து வழங்கிய அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஉடனுக்குடன் மறுமொழி வழங்கிகிருக்கும் ஸ்ரீராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
பதிலளிநீக்குகாராபூந்திக்குத் தான் கரண்டியில் தேய்மானம்...
பதிலளிநீக்குகறசேவுக்கு நான் கண்டதில்லை...
காராசேவுக்கு, பஜ்ஜி போடுகிற கட்டையில் இருக்கும், ஓட்டையுடன் கூடிய பகுதியில் தேய்ப்பதைப் பார்த்திருக்கிறேன். அல்லது அதற்கென இருக்கும் கரண்டியில் தேய்ப்பதையும் பார்த்திருக்கிறேன்.
நீக்குகாராச்சேவுத் தட்டு உண்டு. என்னிடம் ஒன்றுக்கு இரண்டாக இருந்தது. ஒன்று பெரிய துவாரங்களுடன் இருக்கும். இன்னொன்று சின்ன துவாரங்கள் கொண்டது. வடக்கே இருக்கையில் வாங்கினது. தேய்த்து வைத்தால் பளிச்சென இருக்கும்.
நீக்குபூண்டு நல்ல ஆன்ட்டி ஆக்சிடன்ட்..
பதிலளிநீக்குசிறப்பு
////ரிபைன்ட் ஆயில் எனப்படும் பெட்ரோல் எண்ணெயில் பொரித்துத் தள்ளுகிறார்கள்///
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி
///அப்போ உடல் கோளாறுகளைக் காட்டும் கருவிகள் இல்லை!...///
பதிலளிநீக்குஉடல் கோளாறுகளைக் காட்டும் கருவிகள் காட்டுவது எல்லாமே உண்மையா?..
தினசரி எல்லா டெஸ்ட்களை எடுத்தும் நோயாளியைக் காப்பாற்ற முடிய வில்லையே...
இதைத்தான் நான் கேட்கணும் என்று நினைத்தேன். உடல் கோளாறுகளை அறிந்து என்ன செய்யப்போகிறோம்? பயந்துகொண்டு மருத்துவர்களுக்கும் மருத்துவமனைக்கும் பண சேவை செய்வோம். உடல்நிலையோ குணமாகாது. கேட்டால், சாரி சார்... வயதும் ஆகிட்டுப் போகுதுல்ல, அதனால உடனடி குணம் தெரியாது சார். இதே பிரச்சனையோடு 18 வயதில் வந்தீர்களென்றால் உடனே குணப்படுத்தியிருப்போம். ஏதோ நம்பிக்கைல நிறைய செலவழிச்சுட்டீங்க. அடுத்த Block கட்டும்போது உங்களை நினைச்சுக்கறோம்னு சொல்லிடுவாங்க
நீக்குஅதே ... அதே...
நீக்கு///தெனாலி போன்று எண்ணை பயம்....மாவு பயம், உப்பு பயம்....சுத்தம் பயம் என்று!...///
பதிலளிநீக்குஅது இருக்கட்டும்...
வணிக ரீதியில் சுகாதாரம் அற்ற உணவகங்கள் உகந்தவையா?..
துரை அண்ணா, அதைத்தான் சொன்னேன்...வெளியில் சாப்பிடுவது குறித்து
நீக்குகீதா
பக்குவமற்ற தயாரிப்புகளை மறந்து விட்டீர்களா ...
பதிலளிநீக்குஉணவுச் சுகாதாரம் அவசியம்...
ஸ்வீட் எடு
பதிலளிநீக்குகொண்டாடு... ன்றான்
அவன் காட்டுற பண்டம் ஆரோக்கியமானதா...
ஒரு கூந்தல் இழைக்கு ஈடாகுமா...!!?
பாரம்பரிய உணவுக்குப் போராட வேண்டிய காலம் வர இருக்கின்றது
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க நலம்
நீக்குகாராசேவு செய்முறை அருமை.
பதிலளிநீக்குசாத்தூர் காராசேவு மிளகு மட்டும் போட்டு நன்றாக இருக்கும்
என் அம்மா காராசேவு செய்யும் கட்டை வைத்து இருந்தார்கள் அதில் வைத்து எண்ணெய்சட்டி மேல் வைத்து கையால்அ ழுத்தி தேய்பார்கள் நீட்ட நீட்டமாக அழாகாய் எண்ணெயில் விழுவதை வேடிக்கைப்பார்த்து விட்டு அம்மா உனக்கு கைசுடவில்லையா என்று கேட்போம்.
நான் காராசேவு செய்ய துணிந்தது இல்லை சிறுவயது அனுபவத்தால்.
உலக்கில் பிழியலாம் தான்.
///சிறுவயது அனுபவத்தால்.
நீக்குஉழக்கில் பிழியலாம்.. ///
உண்மை தான்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி
///சிறுவயது அனுபவத்தால்.
நீக்குஉழக்கில் பிழியலாம்.. ///
உண்மை தான்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி
என்னோட காராச்சேவுத் தட்டை, பூந்திக்கரண்டி எல்லாவற்றையும் இப்போத் தான் ஆகஸ்டில் இங்கே தோஹாவுக்கு வரும் முன்னர் வேலைக்காரப் பெண்மணியிடம் கொடுத்தேன்.
நீக்குகாராசேவ் சுவைக்கேற்ப. அருமையான செய்முறை..
பதிலளிநீக்குசுவைக்கேற்ப தவறு. சுவைக்கிறது என வரவேண்டும்.
நீக்குசுவையோ சுவை...
நீக்குவாழ்க நலம்
மாதேவி தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குகருத்திற்கு நன்றி
காராசேவ் என்றாலே மதுரை நாட்கள், மேலாவணி மூலவீதி வீட்டில் வசித்த நினைவுகள். அம்மாவால் சமைக்க முடியாமல் போகும் நாட்களில் அப்பா தரும் ஓரணாவில் அரை அணாவுக்குத் தெரு முக்கில் மேலக் கோபுரவாசல் திரும்புமிடத்தில் இருந்த பக்ஷணக்கடை தான் நினைவு வருது. தெலுங்கு பிராமணர் கடை. அங்கே இனிப்புச் சேவு, காரச் சேவு இரண்டும் கிடைக்கும். காரப் பொடி போட்ட காராச்சேவு, பூண்டு போட்ட காராச்சேவு, மிளகு மட்டும் போட்ட காராச்சேவு எனக் கிடைக்கும். மறுநால் இன்னொரு அணா கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் ஓரணாவுக்கும் காராச்சேவு அரையணா, இனிப்புச் சேவு அரையணானு வாங்கிச் சாப்பிடுவோம். இல்லை எனில் மறுநாளைக்கு அரையணாவைக் காப்பாற்றி வைப்போம். அப்போல்லாம் சாப்பிடுபோது என்னமோ ஸ்டார் ஓட்டலில் போய்ச் சாப்பிடுகிற ரேஞ்சுக்கு அலட்டிப்போம். இத்தனைக்கும் அப்போல்லாம் எங்களுக்குத் தெரிந்த பெரிய ஓட்டல் மதுரை காலேஜ் ஹாவுஸ் ஓட்டல் தான். சொந்தக்காரர் தான் நடத்தி வந்தார்.
பதிலளிநீக்கு