கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
வியாசர் எழுதிய மூல மகாபாரதம்
வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்
ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து - மகாபாரதம்
சோ எழுதிய மகா பாரதம்
பாலகுமாரன் எழுதிய மகாபாரதம்
ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - மகாபாரதம்
இவற்றில் எதையெல்லாம் படித்திருக்கிறீர்கள்? உங்களைக் கவர்ந்தது எது?
# முதலிரண்டு மட்டுமே படித்திருக்கிறேன். இரண்டுமே சிறப்பானவை என்று நினைக்கிறேன். ராஜாஜி சுருக்கம் தெளிவு என்பதால் பிடிக்கும். சோ விளக்கம் பிடிக்கும்.
& முழுவதுமாக நான் படித்தது ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து - மகாபாரதம் மட்டுமே. எனக்குப் பிடித்திருந்தது.
கலங்கரை விளக்கம்' படத்தில் 'பொன்னெழில் பூத்தது புது வானில்....' பாடலில் 'தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு... ' என்று ஒரு வரி வருகிறதே? தென்னை வனம் என்பது சரியா? தென்னந்தோப்பு என்பதுதானே சரி?
# புலவர்களுக்கு இதில் எல்லாம் பூரண சுதந்திரம் உண்டு.
நெல்லைத்தமிழன் :
1. சமீபத்தில் காந்தாரா-பார்ட் 1 தியேட்டரில் பார்த்தேன். எனக்கு படம் சுத்தமாகப் புரியவில்லை, பிரம்மாண்டமான, செலவழித்து எடுக்கப்பட்ட காட்சிகள் தவிர. ஆனால் இந்தப் படம் ஐந்து மடங்குக்கு மேல் சம்பாதித்திருக்கிறது. ஒரு வேளை எனக்குத்தான் கதை புரியவில்லையா?
# நான் பார்க்கவில்லை. கதை என்ன என்று செ.நு சொல்லாதோ ?
& காந்தாரா டீஸர், டிரைலர் எதுவுமே என்னைக் கவரவில்லை. அந்தக் காலத்தில் ' உங்கள் அபிமான தியேட்டர்களில், உங்கள் அபிமான டைரக்டர் B விட்டலாச்சார்யா அளிக்கும், உங்கள் அபிமான நடிகர் காந்தா ராவ் ( + கவர்ச்சி நடிகை நடித்த ) என்று வந்த பல படங்கள் என்னைக் கவர்ந்தன !
2. சமீபத்தில் தியேட்டருக்குப் போய் படம் பார்த்த, அல்லது படம் பார்த்து நொந்துபோன அனுபவம் ப்ளீஸ்
# தியேட்டரில் பார்த்தது பொன்னியின் செல்வன்-1. கல்கி மேலிருக்கும் அபிமானம் காரணமாகப் பிடித்திருந்தது. நம்ம ரா.கி எழுதியது நன்றாகப் போகிறது என்ற சந்தோஷம்.
3. பிடிகருணை என்று சொல்லப்படும் கருணைக்கிழங்கை உபயோகித்து ஏதாவது வித்தியாசமான செய்முறை இருக்கிறதா? - உடனே எல்லோரும் சொல்வதுபோல சேனைக்கிழங்கை, கருணைக் கிழங்கு என்று சொல்லிக் கடுப்பேத்தாதீர்கள்
# பிடிகருணை புளிக்குழம்பு, சுட்ட கறி, மசியல் மட்டும் தெரியும், மசியல் பிடிக்கும்.
4. சிறு கிழங்கு உபயோகித்திருக்கிறீர்களா? அது கேரளாவில் மாத்திரமே விளைகிறது என்று நினைக்கிறேன்
# சிறு கிழங்கு மேட்டுப்பாளையத்தில் பார்த்திருக்கிறேன். சாப்பிட்ட நினைவில்லை.
5. புத்தகம் படிக்கும் வழக்கம் எதனால் குறைந்துவிட்டது? எல்லா தரப்பு மக்களும்-வீட்டு உதவியாளர், செக்யூரிட்டியிலிருந்து பெரிய வேலையில் இருப்பவர்கள் வரை, யூடியூப், செய்திகள் என்று மொபைலிலேயே காலம் தள்ளுகிறார்களே.
# காசு கொடுத்து வாங்காமல் யாரோ சுவாரசியமாக எழுதியதை இலவசமாகப் படிக்கும் வசதியும் பொழுது போக்க சினிமா நாடகம் இலவசமாகப் பார்க்கும் வசதியும் கைக்கெட்டி இருக்கும் இந்தக் காலத்தில், புத்தகங்களும் பத்திரிகைகளும் விலை போகாததில் வியப்பில்லை. புத்தகங்களுக்கு இப்போது எல்லாம் அநியாய விலை வைத்து விற்கிறார்கள். அதற்கான நியாயங்கள் உண்டு என்றாலும் அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு ஒரு தயக்கம் ஏற்படுவதும் உண்மை. வாழ்க்கையை நடத்தத் தேவையான பணத்தைச் சம்பாதிக்கும் வழிகள் போன்ற ஜீவனோபாயங்களைப் பற்றி புத்தகம் வாங்கித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. இப்படி இருக்கும் போது புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி தொடர்ந்து பலமாக இருக்கும் ? இந்தக் காரணங்களினால் நல்ல இலக்கியத்தரமான படைப்புகளை தேடிப் படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது, விரைவில் அழிந்தும் போய்விடலாம் யார் கண்டது ?
கே. சக்ரபாணி சென்னை 28:
1. யாரேனும் நம்பத்தகாததை சொன்னால் அல்வா கொடுக்கறான் பாரு என்போம். அதேபோல் பார்லிமென்ட்டில் பட்ஜட் தாக்கல் செய்யும் முன் அல்வா கிண்டுவது என்ற பழக்கம் ஒன்று உள்ளது. இது எப்படி வந்தது?
# ஏதோ ஒரு சினிமாவில் பெண்ணை மகிழ்வித்து ஏமாற்ற மல்லிகைப்பூ அல்வா வாங்கிச் செல்வதாக காட்சி இருந்தது....அது போலத்தான் இதுவோ?
& மத்திய நிதி அமைச்சகத்தில் (Finance Ministry) பட்ஜெட் தயாரிப்பு காலம் மிகக் கடினமானது. நாளும் இரவும் கணக்குகள், கணிப்புகள், திருத்தங்கள், மந்திரிகளோடு பேச்சுவார்த்தைகள்…இதெல்லாம் நடக்கும். பட்ஜெட் காலத்தில் அதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பட்ஜெட் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் நிதி அமைச்சக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.
இந்த அழுத்தமான வேளையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க, அலுவலகத்தில் இனிப்புகள், குறிப்பாக அல்வா, லட்டு போன்றவை செய்து கொடுக்கப்படும்.2. முன்பெல்லாம். நான்வெஜ் ஹோட்டலை. மில்டரி ஹோட்டல் என்பார்கள். நான்வெஜ்க்கும். மில்டரிக்கும்என்ன சம்பந்தம்?
# மிலிட்டரிக்காரர்கள் பலமாக இருக்க நல்ல அசைவ உணவு முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் இப்படி போர்டு எழுதினார்கள். இப்போதும் கூட எல்லா சைவர்களும் சாக பட்சிணிகள் அல்லவே..
= = = = = = = == = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
மாடுகளுக்கான தீவனப்புற்களையும் இப்படிப்பட்ட அமைப்பில் சேகரித்துவைத்திருந்தார்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்.
வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவது, அரசு வேலைகளுக்கோ இல்லை வங்கி வேலைகளுக்கோ என்ன செய்யவேண்டும், எந்த எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும், ஐஏஎஸ் தேர்வுனா என்ன... இது போன்ற வாழ்க்கைக்கான கல்விமுறை நம்மிடம் இல்லை. பஞ்சர் ஒட்டுவது, காரை பழுது பார்ப்பது, வீட்டுக்கான அடிப்படை எலக்டிரிகல், ப்ளம்பிங் வேலைகள் எனுபயோகமானவற்றை இந்தக் கல்வி கற்றுத்தருவதில்லை. மாங்கு மாங்கென்று, பெர்மாங்கனேட் கரைசல், கந்தக அமிலம் என கெமிஸ்ட்ரி Lலேபில் ஜல்லியடித்து, வெர்னியர் காலிப்பர், சூரிய ஒளியில் ஏழு நிறம் என்றெல்லாம் இயற்பியல் சோதனைக்கூடத்தில் மாங்கு மாங்கெனக் கற்றுக்கொண்டவையால் தொண்ணூற்றைந்து சத மாணவர்களுக்கு நேரம் விரயமாவதுதான் மிச்சம்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... குலக்கல்வி என்று கொண்டு வந்தார்கள். அதையும் மடைமாற்றி அவமானப்படுத்தி விட்டார்கள்! பாரதிதாசன் பாட்டு நினைவுக்கு வருகிறது.
நீக்குநெல்லையின் கருத்து மிகவும் சரியானது.
நீக்குஇது நான் வேலைக்குச் சென்ற புதிதில் (டிரைனியாக) நடந்தது. எப்போதும் மாதச் சம்பளத்தை என் தம்பி எனக்காக என் வங்கிக்கணக்கில் போய்ப் போடுவான். ஒரு முறை அவன் ரொம்ப பிஸியாக இருந்ததால், என்னை வரும்போது வங்கியில் ஃபார்ம் வாங்கி அதனை எழுதிக்கொடுக்கச் சொன்னான். அதை எடுத்துக்கொண்டுபோய் பணத்துடன் அவன் வங்கியில் சேர்ப்பித்துவிடுவதாக. நான் வித்டிராயல் ஸ்லிப்பை முழுவதும் எழுதி, அவனிடம் பணமும் ஸ்லிப்பும் கொடுத்தேன். அன்றிலிருந்து அவன், நீதான் வங்கிக்குப் போகணும், உனக்கு வித்டிராயலுக்கும் டெபாஸிட்டுக்குமே வித்தியாசம் தெரியலை என்று சொல்லிட்டான். ஹாஹாஹா
நீக்குஓ.. வங்கியில் அப்படி இரண்டு வகை ஸ்லிப்கள் உண்டா?
நீக்கு:))))
நீக்குஇதிஹாசங்களில்்சுருக்கமாக, எல்லோருக்கும் புரியும்படி இராஜாஜி அவர்கள் எழுதிய இராமாயணம், மஹாபாரதம் இரண்டும் பிடித்தமானது.
பதிலளிநீக்குஎதுவுமே ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருந்தால் நீர்த்துவிடும், வள வள தவலைக்காட்சி சீரியல்கள் போல
சுருக்கமாக படிப்பது என்பது விளக்கமாக படித்தபிறகு கதைச்சுருக்கம் போல படிப்பது. நான் சிறு வயதில் எங்கே எப்படி இதைப் படித்தேன் என்று நினைவில்லாமல் பெரிய மஹாபாரதம் ஏகப்பட்ட கிளைக்கதைகளுடன் படித்திருக்கிறேன். அது எது என்று இப்போதும் நினைவில்லை. .லைப்ரரியில் படித்திருப்பேனோ என்னவோ.. எங்கள் வீட்டில் இருந்த நினைவு இல்லை. அதே போல பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை.
நீக்குஅரபுக் கதைகள்? !!
நீக்குஅரபுக்கதைகள் நான் படிச்சிருக்கேன், வழக்கம் போல் தாத்தா வீட்டில்.
நீக்குபாடப்புத்தகங்களை இந்த கீதா சாம்பசிவம் மேடம் எங்க படிச்சிருப்பாங்க? இது புதன் கேள்வியல்ல. கத்தாருக்கான கேள்வி. ஹாஹாஹா
நீக்குநான் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சது முதல் முதலாக இரண்டாம் வகுப்புப் படிக்கையில். விகடனில் அப்போது வெளிவந்த சித்திர்த் தொடர்கள், குமுதத்தில் வந்த சித்திரத்தொடர்கள்னு ஆரம்பிச்சுப் பின்னர் பொன்னியின் செல்வனை மூன்றாம், நான்காம் வகுப்புப்படிக்கையிலேயே படித்து விட்டேன். அப்போத் தான் கல்கி இறந்து போனதால் நின்று போயிருந்த அமரதாரா தொடரை ஆனந்தி தொடர்ந்ததின் மூலம் படிச்சுட்டுப் பின்னர் முழுப் புத்தக பைன்டிங்கும் கிடைக்காமல் புத்தகமும் வெளிவராமல் தவித்திருக்கேன். கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பிறந்த பின்னரே அதை முழுதும் படிக்க முடிந்தது.
நீக்குஉண்மைதான் நெல்லை. வீட்டில் அதிகமாய்ப் பாடப் புத்தகங்களைப் படிக்கிறதில்லை என்று அப்பா பள்ளியில் போய்ப் புகாரெல்லாம் கொடுப்பார். முதல் மூன்று இடங்களுக்குக் கீழே போய்விட்டால் அது நான்காம் இடமாக இருந்தால் கூட ப்ரொக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட மாட்டார். பல புத்தகங்களைக் கிழித்துப் போட்டிருக்கார், அக்கம்பக்கத்து இரவல் புத்தகங்கள் உள்பட. :(
நீக்கு1001 அராபிய இரவுகள் என்றொரு புத்தகம் படித்திருக்கிறேன்.
நீக்குஐயோ ஒரே ஆபாசம்!
நீக்குஅடக்கடவுளே... அது சாகசம்.
நீக்குதென்னந் தோப்பு என்பதற்கான அர்த்தம் வேறு. தோப்பில் பல மரங்களும் இருக்கலாம். அதாவது தென்னந்தோப்பில் மா, பலா கொய்யா மரங்கள் இருந்தாலும் அதிகமாக தென்னை இருந்தால் தென்னந்தோப்பு என்று சொல்லலாம்.
பதிலளிநீக்குஇலக்கியத்தில் தென்னஞ்சோலை என்றே குறிப்பிடுவர். (மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ பாடல் நினைவுக்கு வருதா?)
காடு போல அளவுக்கதிகமான தென்னை மரங்கள் மாத்திரம் இருந்தால் தென்னை வனம் என்று சொல்வது சரிதான். புன்னை வனம், கொன்றை வனம் என்ற சொற்களும் வழக்கத்தில் உண்டு.
நான் தென்னந்தோப்பு என்றே சொல்வழக்காகக் கேட்டிருக்கிறேன்.
நீக்கு"தென்னை மரத்தோப்புக்குள்ளே குயிலே குயிலே',
'தென்னந்தோப்பும் தென்றல் காற்றும்'
'தென்னை மரத்தோப்புக்குள் பார்த்த ஞாபகம்'
என்று பாடல்களும் கேட்டிருக்கிறேன்!
அழகிய தென்னஞ்சோலை அமைதியுலாவும் மாலை - கண்ணதாசன் திரைப்பட பாடல் வரி
நீக்குஓ.. தெய்வீக உறவு பாடலைச் சொல்கிறீர்களா? நல்ல பாடல்.
நீக்குநான் எனக்கு சட்டென நினைவுக்கு வந்த பாடல்களை மட்டும் சொல்ன்னேன்.
இதெல்லாம் இலக்கணம் மற்றும் இலக்கியம் தெரிஞ்சவங்களுக்கு
நீக்குஎனக்கு சம்பந்தமில்லை!
@நெல்லைத் தமிழன்: விளக்கத்திற்கு நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுத்துக் குமரா சரணம். வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஓம் சரவணபவ.
நீக்குபல் வளங்களையும் உடையதால் பொழில் என்றொரு சொல்லுடன் தமிழ்...
பதிலளிநீக்குமரம் செடி கொடிகளை எங்கேயடா காணோம் என்றால் என்ன செய்வது!!
// பல் வளங்களையும் உடையதால் //
நீக்குஎனக்கு பல் வளமில்லாததால் நேற்று முதல் சிகிச்சை தொடங்கி இருக்கிறேன்! :))
எப்படி இந்த சிகிச்சையை தைரியமாக தொடங்குகிறீர்கள்? மருத்துவர் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவரா? இல்லை, அடிக்கடிச் சென்று பல்லினால்(பல்லை காட்டியதில் :)).) ஏற்பட்ட தொடர்பில் அறிமுகமானவரா?
நீக்கு// அடிக்கடிச் சென்று பல்லினால்(பல்லை காட்டியதில் :)).) ஏற்பட்ட தொடர்பில் அறிமுகமானவரா?//
நீக்குஹா.. ஹா.. ஹா... என்ன பல்லைக் காட்டினாலும் ஃபீஸைக் குறைக்க மாட்டார் விஜயகாந்த்! அதுதான் அவர் பெயர். பல் மருத்துவக்கல்லூரி ப்ரொபஸர்.
எனக்கு 2014 முதலே அறிமுகம். அவ்வப்போது சென்று வருவேன். இப்போது வீடு மாறி தள்ளி வந்து விட்டாலும் அதனால்தான் அவர் க்ளினிக்ககியே நாடிச் செல்கிறேன்.
எந்த தைரியத்திலா? வேறு வழி? நான் ஒரு சாப்பாட்டு ராமன் என்பது நீங்களனைவரும் அறிந்ததே.... சரியா சாப்பிடணுமே...!!
அப்படியும் நீங்கள் ஒரு நாளுக்கு இரண்டு வேளை மட்டுந்தான் உணவு எடுத்துக் கொள்வதாக சகோதரர் வெங்கட்நாகராஜ் பதிவில் கூறியிருந்தீர்களே ..! இதெல்லாம் எப்படி சாப்பாட்டு ராமன் கணக்கில் சேரும்..!
நீக்குதிருமணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்லும்போதும் அவ்வப்போது உணவகங்களுக்குச் செல்லும்போதும்...?!! மேலும் இரண்டுவேளை சாப்பிட்டாலும் ஓரளவுக்காவது மென்று சாப்பிட வேண்டாமா?
நீக்கு//பல்லை காட்டியதில்// கமலா ஹரிஹரன் மேடம் வார்த்தை விளையாட்டில், ஸ்ரீராம், பெண் மருத்துவரிடம் செல்கிறாரா இல்லை ஆண் மருத்துவரிடம் செல்கிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீராம்தான் விளக்கவேண்டும்.
நீக்குஎன்னை சாய்வாக சயனிக்க வைத்து, மயக்க மருந்து 'தனியாக' கொடுத்து (பல் இருந்த பகுதியில் மட்டும்) நெஞ்சோடு அணைத்து, ஆறுதலாகப் பேசிக்கொண்டே பல் வேலை பார்த்தது...ஹிஹிஹி.. ஒரு அழகிய பெண்தான்! அப்போதுதான் பல்லைக் காட்டினேன்.
நீக்குகொடுத்து வைத்தவர்!
நீக்குஆமாம். ஃபீஸ் அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்!
நீக்கு/ஆமாம். ஃபீஸ் அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்!/. யார் கொடுத்து வைத்தவர்..! :)) ஆகா.. என் கேள்வியில் சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களுக்கு சந்தேகம் வேறு வந்து விட்டதா? ஆனால், என்னிடம் விஜயகாந்த் என்றீர்களே..!! டாக்டர் காட்டிய கரிசனத்தைப் பார்த்தால், விஜயலலிதாவோன்னு நினைக்கிறேன். இப்போதுதான் சந்தேகம் வருகிறது. ஹா ஹா ஹா.
நீக்குஹெட் மருத்துவர் அவர்தான். அவர் மனைவியும் மருத்துவர். எனக்கு பணிவிடை செய்தது ஜூனியர் டாக்டர்ஸ்.... சில வருடங்களாக அங்கே அப்ரசண்டிகளாக இருப்பவர்கள்!!
நீக்குசொல் வளம் மிக்கது தமிழ்..
பதிலளிநீக்குஇன்னிக்கு வாஷ் பன்னி, கட் பன்னி, குக் பன்னி என்று பன்னி விட்டோம்...
:))
நீக்குஸ்மைல் பண்ணி விட்டேன்!! பன்னி விட்டேன் என்று சொள்ளணுமோ !!
:))))
நீக்கு/// காடு போல அளவுக்கதிகமான தென்னை மரங்கள் மாத்திரம் இருந்தால் தென்னை வனம் என்று சொல்வது சரிதான். புன்னை வனம், கொன்றை வனம் என்ற சொற்களும் ///
பதிலளிநீக்குஆகா... தமிழே!..
மன்னிக்கவும். இப்போ எனக்கு "புன்னை வனத்துக் குயிலே" என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
நீக்குஅந்தக் குயில் யார் என்று தெரிந்தால் நாங்களும் சந்தோஷப்படுவோம்.
நீக்குசௌந்தர்யா!
நீக்கு:)))
நீக்குshe is no more! Isn't it?
நீக்குஆமாம். ஹெலிகாப்டர் V10
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... அன்பு வணக்கம். பிரார்திப்போம் இணைந்து...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. ரசித்தேன்.
சிறுகிழங்கு நான் தி. லியில் இருந்தவரை வருடாவருடம் மார்கழி தை மாதங்களில் விளைச்சலாகி, எல்லா மார்கெட், , காய்கறி கடைகளில் தடையில்லாமல் கிடைத்தது. எங்கள் பிறந்த வீட்டில், அதை வேக வைத்து, தேங்காய்ப்பூ சேர்த்து பொரியல் செய்வார்கள். மிகவும் நன்றாக இருக்கும். அதன் சுவை, மணம் இன்னமும் மனதிற்குள் இருக்கிறது. நாங்களும் சென்னையில், மதுரையில்இருந்த போது வாங்கி சாப்பிட்டுள்ளோம். இங்கு வந்த பின் அதை கண்ணிலேயே காணோம். அதைப்போல் பிடி கருணைக்கிழங்கும் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒருவேளை மல்லேஷ்வரத்தில் சென்று தேடினால் கிடைக்குமோ என்னவோ.! நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கிடைக்கலாம்
நீக்குபிடி கருணை நான் கே ஆர் மார்க்கெட்டில் நிறைய தடவை பார்த்திருக்கிறேன். சிறு கிழங்கு வெகு வெகு அபூர்வம், லுலு மார்க்கெட்டில் ஏகப்பட்ட விலைக்குக் கிடைக்கும். நெல்லையில் நான் போத்தீஸில் (ஆமாம். அவங்க பேஸ்மெண்ட்ல சூப்பர் மார்க்கெட் வச்சிருக்காங்க) பிடி கருணை கிலோ 60க்கு வாங்கினேன். கோவில்பட்டியில் கடலைமிட்டாய் வாங்கச் சென்றபோது அங்கிருந்த கடையில் புதிதாக வந்திருந்த சிறுகிழங்கு கிலோ 140ரூ என்று வாங்கினேன்.
நீக்குசிறுகிழங்கு கிடைக்காது என்பதை சென்னைக்குக் குடித்தனம் வந்த புதுசில் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த அளவுக்கு மதுரையில் இருந்தப்போச் சிறுகிழங்கு நிறையச் சாப்பிட்டிருக்கோம். கருணைக்கிழங்கு அதாவது பிடி கருணை மசியல் ரொம்பப் பிடித்தம். என் அம்மா எலுமிச்சைச் சாறு சேர்த்து, புளி சேர்த்து என இரண்டுவிதமாய்ப் பண்ணுவார். மாமியார் அதில் கறி, குழம்பு எல்லாமும் பண்ணிப் பார்த்திருக்கேன். ஸ்ரீரங்கத்தில் இருந்தப்போ வாரம் ஒரு நாள் கருணைக்கிழங்கு மசியல் இருக்கும். இப்போல்லாம் காடரர்கள் கூடக் கொடுக்கிறாங்க.
நீக்குகிழங்கு வகைகள் எதைக் கண்டாலும் எனக்கு வாயு ?) பயம்!
நீக்கு/// ஸ்மைல் பண்ணி விட்டேன்!! பன்னி விட்டேன் என்று சொள்ளணுமோ !!///
பதிலளிநீக்குதொடர் மலையினாள் பல்லி கள்ளூரிகளுக்கு விடுமுரை
எது வேண்டும் சொல் மனமே!..
:))))
நீக்குதொடர் மலையினாள் பல்லி கள்ளூரிகளுக்கு விடுமுரை
பதிலளிநீக்குதொடர் மழையினால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
எது வேண்டும் சொல் மனமே!..
நல்லதை நாடு கேட்கும்!
நீக்குநாமும் கேட்போம்
நீக்குஇந்த துரை செல்வராஜு சாருக்கு ரொம்பவே வயதாகிவிட்டதோ? மழலைச் சொல், கிள்ளை மொழி இதிலெல்லாம் இலக்கணம் இலக்கியம் பார்க்கலாமா? அந்த வார்த்தைகளிலேயே மனம் லயித்துப்போக வேண்டாமோ?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாந்தாரி 1 கூட நான் பார்க்கவில்லை. வீட்டில் அனைவரும் பார்த்தார்கள். மகனும், மருமகளும் இரண்டாவதையும் தியேட்டரிலேயே சென்று பார்த்து வந்தனர். எனக்கும் காந்தாரா என்றதும் பிரபல தெலுங்கு நடிகர் காந்தாராவ், துரியோதனனின் அம்மா காந்தாரி இருவரும் நினைவுக்கு வருவாரகள்.
அல்வா கிண்டுவதற்கு உரிய பதில்களை ரசித்தேன். தெரிந்தும் கொண்டேன்.
சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் படமும் பதிவும் படங்கள் நன்றாக உள்ளது. இதுபோல் இப்போது ஒரு பிராயணத்தில் (கிராமத்தில்) பார்த்தேன். இவ்வளவு சின்ன குடிலாக உள்ளதே.!! எப்படி என யோசித்தும் கொண்டேன். இன்று அதற்குரிய பதில் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காந்தாரியா, கான்தாராவா? எப்படியாயினும் நான் இரண்டையுமே பார்க்கவில்லை. எனக்கும் காந்தாராவ் ஞாபகம் வரும்! நேற்று ஜூஸாஸிக் வேர்ல்டு 2025 பார்த்தேன். அதற்கு முந்தைய நாள் திரைப்பட
நீக்குநேரத்தில் பைசன் பார்த்து நொந்தேன். நெல்லைக்குப் பிடிக்கும்.
நீக்குஓ.. கான்தாராவா.. நான் படத்தின் பெயரும் சரியாக படிக்கவில்லை போலும்..! மேலும் இங்கு புதன் டைட்டிலில் காந்தாரா எனப் போட்டிருந்ததால், அப்படியே அதை காப்பி அடித்து விட்டேன்.
காந்தாரா பழசு, புதுசு இரண்டுமே பார்க்கலை. தற்செயலாக ஒரு தரம் வராஹரூபம் பாடலைக் கேட்க நேர்ந்தது. இனிமை.
நீக்குவராஹ ரூபம் பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல். ஆனால் அதே மெட்டில் ராகத்தில் ஏற்கனவே கேரளத்தில் போட்டதைக் காப்பியடிச்சிருக்காங்க என்று பிரச்சனை வந்தது. தைக்குடம் பிரிட்ஜ் குழு தாங்கள் போட்டிருந்த நவரசம் என்பதைத்தான் காப்பி என்று சொல்லி காப்பிரைட் பிரச்சனை வந்தது. அப்புறம் என்ன ஆச்சு என்று தெரியவில்லை
நீக்குநான் நவரசம் அந்தப் பாட்டையும் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட வராக ரூபம் போலவேதான் இருக்கும். பல இடங்கள்.
கீதா
வராஹ ரூபம் பாடல் வந்த புதிதில் கேட்ட ஞாபகம்.
நீக்குகேளிவியில் உள்ள மிலிட்டரி என்பது ஆர்மி என்ற தரைப்படையை குறிக்கும் வார்த்தை. சண்டை மும்முரத்தில் இருக்கும்போது நான் சைவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பட்டினி கிடந்தது சாகவேண்டியதுதான். ஆகவே கிடைத்ததை சாப்பிட வேண்டும்.
பதிலளிநீக்குகடலூரில் எனது பள்ளி நண்பனது தந்தை நடத்திய ஹோட்டலின் பெயர் மதராஸ் இந்து மிலிட்டரி ஹோட்டல். அசைவம், ஹிந்துக்கள் சமைத்து, தென் இந்திய சமையல் முறை என்று பல விவரங்கள் இந்த பெயரில் அடங்கும்.
தற்போது அசைவ ஹோட்டல்கள் அசைவம் என்பதை தனியாக எழுதி விடுகிறார்கள். மிலிட்டரி என்ற வார்த்தையை உபயோகிப்பதில்லை.
Jayakumar
தகவல்களுக்கு நன்றி
நீக்குபுதிய விளக்கமாக இருக்கிறது. எங்கிருந்து பிடித்தீர்கள்?
நீக்கு@நெல்லை நீங்கள் சொன்ன அடிப்படை எலக்டிரிகல், ப்ளம்பிங் வேலைகள் போன்றவைக்கு சொல்லித்தர ITI, பாலிடெக்னிக், VHSE ஸ்கூல் போன்றவை தாராளமாக உள்ளன. மற்ற கல்லூரிகளின் பெருக்கத்தினால் இவற்றில் சேருவதற்கு மாணவர்கள் கிடைப்பதில்லை என்பதே குறை. சேரும் மாணவர்களும் குறைத்த மதிப்பெண் பெற்றவர்கள்.
பதிலளிநீக்குமேலும் சேருபவர்கள் பலரும் கிடைக்கும் உதவித் தொகையை வாங்கிக்கொண்டு அக்கறையின்றி சென்றுவிடுகிறார்கள்.
காரின் என்ஜினை அக்கக்காக பிரித்து பின்னர் மாட்டிய தொழிற்கல்வி பயின்றவர் தற்போது கரண்டி பிடித்து அல்வா கிண்டி கொண்டிருக்கிறார்.
Sad.
நீக்குசோகம்தான். ஆயினும் ஐ டி கம்பெனிகளையே எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு கணக்கீடு பார்த்தால் எத்தனைபேர் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை பார்க்கிறார்கள் என்று தெரியும்!
நீக்கு//அடிப்படை எலக்டிரிகல், ப்ளம்பிங் வேலைகள் போன்றவைக்கு சொல்லித்தர// வாழ்வின் அடிப்படை வேலைகளை நமக்கு பாகுபாடு இல்லாமல் கல்வியில் சொல்லித்தரணும். வீட்டுல ஒரு லைட்டை மாட்ட ஐ.டி.ஐ ஆட்களையா தேட முடியும்? எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் வரும், Gகீசர் ஆன்ல இருக்கும்போது, பாத்ரூமில் விழும் தண்ணீரில் ஒருவேளை மின்சாரம் பாய்ந்துவிடுமோ என்று. ஹாஹாஹா
நீக்குசிலப்போ வயரிங் பிரச்சனை இருந்தால் ஷாக் தெரியும் நெல்லை. பைப்பைத் தொட்டதுமே ஷாக் தெரியும்.
நீக்குகீதா
மகாபாரதத்தில் நான் முழுமையாக படித்தது வியாசர் விருந்து மட்டுமே. சோவின் மகாபாரதம் முதல் பாகம் மட்டுமே முடித்திருக்கிறேன். அது கதை சுருக்கம் போல இருக்கிறது. இப்போது சுதா சேஷய்யனின் மகா பாரதம் யூ டியூபில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரை கேள்விப்படாத பல தகவல்களை சொல்கிறார்.
பதிலளிநீக்குபுத்தகங்கள் படிக்க ஆரம்பிச்ச புதுசில் ராஜாஜியின் "சக்கரவர்த்தித் திருமகன்" படிச்சுப் பின்னர் "வியாசர் விருந்து" படிக்க ஆரம்பித்தால் வீட்டில் ஒரே எதிர்ப்பு. மஹா பாரதத்தை வீட்டில் வைச்சுப் படிக்கக் கூடாது என்று அனைவரும் ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பின்னாட்களில் அதாவது நான் ஆறாவது படிக்க ஆரம்பிச்சதும் வில்லி பாரதம் பாடமாக வந்திருந்தது.கம்பனையும், வில்லியூராரையும் இளங்கோவடிகளையும் படிச்சுத் தேர்ந்த காலம் அது. இவற்றில் மனப்பாடப் பகுதி எனச் சில பாடல்களைக் குறிப்பிட்டு மனப்பாடம் செய்யச் சொல்லுவார்கள். இப்போல்லாம் இவற்றைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஆசிரியர்களுக்கும் இவற்றில் பழக்கமும் இல்லை. :(
நீக்குசோவின் மஹாபாரதம்" தொலைக்காட்சித் தொடராக வந்ததின் தமிழ் மொழிபெயர்ப்புத் தானே? அது என்னிடம் பைன்டிங்கில் இருந்தது. இப்போ எங்கே இருக்குனு நினைவில் இல்லை.
நீக்குசிறு கிழங்கு என்பதும் கூர்க்கங் கிழங்கு என்பதும் ஒன்றுதானே? அதை தண்ணீரில் ஊற வைத்து. தேய்த்து கழுவி, தேய்த்து,தேய்த்து தோலை நீக்க வேண்டும். ரொம்ப கஷ்டம். வாசனையும் கிடையாது ராசியும் பிரமாதம் இல்லை. மண் வாசனை வேறு அடிக்கும். பெங்களூரில் எங்கள் வீட்டருகில் கிடைக்கிறது, நான் வாங்குவதில்லை.
பதிலளிநீக்குசின்ன வயசுல இந்த கூர்க்கங்கிழங்கை (சிறுகிழங்கு) சாக்கின் இடையில் போட்டுத் தேய்ப்போம். வாசனை மிக மிக அதிகம். அதுதான் இந்தக் கிழங்கின் சிறப்பு. திருநெல்வேலி, கேரளா மக்களிடையே இது மிகப் பிரபலம். ஜனவரி மாதம்தான் இதுவும் சேப்பங்கிழங்கும் சேனையும் நிறைய மார்க்கெட்டுக்கு வரும்.
நீக்குஆமாம் ஊரில் இருந்தப்ப சாக்கில் போட்டு அடி அடின்னு அடிச்சு தேச்சு....அதே திருநெல்வேலி, கேரளா, கன்னியாகுமரி பகுதிகளில் ரொம்ப பிரபலம்.
நீக்குபொங்கல் சமயம் தான் கிடைக்கும். அப்புறம் அவ்வளவாகக் கண்ணில் தென்படாது. திருவனந்தபுரத்தில் சிலப்போ சீசன் அல்லா சமயத்திலும் கிடியக்கும். விலை கூடுதலாக இருக்கும்.
அப்படி ஒரு முறை பெங்களூரில் கண்ணுல படவே மாட்டேங்குதேன் என்று அங்கிருந்து வாங்கிவந்தேன்.
கீதா
வனம் என்பது சமஸ்கிருதச்சொல். காடு, தோப்பு, தோட்டம், சோலை புதன் எல்லாவற்றுக்கும் இந்த சொல் தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளது.புன்னைவனம் கடம்பவனம் முல்லைவனம் சுந்தர வனம் (அழகிய காடு) இப்படி. தமிழ் சொற்களைப்பொறுத்தவரை, ஒரே வகையான நெடிய மரங்கள் உள்ள பகுதி தோப்பு. தென்னந்தோப்பு என்றால் அங்கு தென்னை மரங்கள் மட்டுமே இருக்கும். மாந்தோப்பு என்றால் மாமரங்கள் மட்டுமே இருக்கும். பல விதமான மரங்கள் காணப்பட்டால் அது சோலை. தென்னஞ்சோலை என்றால் பலவிதமான மரங்கள் இருக்கும் ஆனால் பிரதானமாக அதாவது அதிக அளவில் தென்னை மரங்கள் இருக்கும். சோலை என்பது பூஞ்சோலையாகவும் இருக்கலாம் ஆனால் பலவிதமான பூ மரங்கள் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்.
நீக்குJayakumar
"தோப்பு" என்பதன் பொருள் மரங்களின் தொகுப்பு அல்லது சோலை ஆகும். ஒரே வகையான மரங்கள் (எ.கா: மாந்தோப்பு, தென்னந்தோப்பு) அல்லது பல வகையான மரங்கள் அடர்ந்த பகுதியைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக grove என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.
நீக்குஒரே வகையான மரங்கள் இருக்கவேண்டியது கட்டாயமல்ல. அதுபோல, ஓராண்டிற்குள் அழிந்துவிடுமானால் அதனைத் தோட்டம் என்றும், வருடக்கணக்காக இருக்கும் என்றால் தோப்பு என்றும் சொல்லணும். அதன்படி வாழைத்தோப்பு என்பது தவறு, வாழைத் தோட்டம். மாந்தோப்பு என்றும் சொல்லலாம்.
வனம், காடு இரண்டும் தமிழ் என்று நிறுவிய ஒரு பகுதியைப் படித்தேன். கடல் என்ற சொல்லுக்கு செறிவு/அடர்ந்தது என்ற பொருள் உண்டு. நீர்க்கடல் என்பது அடர்த்தியாக நீர் இருக்கப்பெற்றது. அதுவே குறுகி கடல் என்றாயிற்றாம். அதுபோல ஜல சமுத்திரம் என்பது கடலைக்குறிக்கும் வடமொழி. சமுத்திரம் என்பதே கடலாகிவிட்டது என்பது தெரியுமல்லவா? வேறு அடர்த்தியைக் குறிக்க, அதனைச் சேர்ப்பதும் வழக்கமாயிற்று. ஜன சமுத்திரம். அதுபோல மரக்காடு என்பதே குறுகி காடு என்று ஆயிற்றாம். அதுபோல மரவனம் என்பது வனம் என்று குறுகிற்றாம். (வன் - கடுமை, அடர்த்தி/செறிவு) வன்மொழி, வன்சொல், வன்நெஞ்சம் .....)
சொல்வனம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளார்களே.
வரிகள் இரண்டு வகை. நேர் வரி மறைமுக வரி, இதில் மறைமுக வரிகள் பெரும்பாலும் மத்திய அரசு விதிப்பதாக இருக்கும். சுங்கம், கலால் போன்ற வரிகள் இத்தகையவை. பொருட்களின் அடிப்படையில் அவற்றின் உற்பத்தி விலைக்கேற்ப ஒவ்வொரு பொருளுக்கும் சுங்கம், மதிப்பு கூட்டல் வரி, போன்றவை மாறுபடும்.
பதிலளிநீக்குபொருட்களை உற்பத்தி செய்பவர், மற்றும் பல பயனாளிகள் மத்திய அரசுக்கு வரி விகிதங்களை பற்றிய ஆலோசனைகளை கூறி அவற்றின் செய்பலனை எதிர்பார்ப்பர்.
பட்ஜெட் என்ற ஒன்றில் மட்டும் தான் அந்த காலத்தில் வரி விதிப்பின் மாற்றங்கள் அறிவிக்கப்படும். ஆலோசனை கூறியவர்களுக்கு அல்வா கொடுக்கும் விதமாக அது அமையும் என்பது சூசகமாக் அறிவித்தல். அதைத்தான் தத்துவமாக பட்ஜெட் தயாரிப்பு தொடங்கும்போது பட்ஜெட் அல்வா கிண்டல் தொடங்கிவிட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள்.
Jayakumar
நவீன காலத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன், ஜூலை 24, 1860 அன்று இந்தியாவில் முதல் முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்தினார். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போரின் போது (அல்லது சிப்பாய் கலகம்) பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வருவாயை ஈட்ட இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது. இந்த முன்னோடி நடவடிக்கையின் காரணமாக வில்சன் இந்தியாவில் "வருமான வரியின் தந்தை" என்று பரவலாகக் கருதப்படுகிறார்.
நீக்குதமிழ்நாட்டில் (அப்போது மெட்ராஸ் பிரசிடென்சி) பொது வரியின் முதல் நிகழ்வு, 1939 ஆம் ஆண்டு மெட்ராஸ் பொது விற்பனை வரிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விற்பனை வரி ஆகும். இந்தச் சட்டம் சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி என்றும் அழைக்கப்படுகிறது) தலைமையிலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கு (மது மீதான தடை) அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக அரசாங்க வருவாய் இழப்பை ஈடுசெய்ய விற்பனை வரி 1937 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1939 ஆம் ஆண்டு மெட்ராஸ் பொது விற்பனை வரிச் சட்டம் முறையாக இயற்றப்பட்டது, இது இந்தியாவில் பொது விற்பனை வரியை அறிமுகப்படுத்திய முதல் மாகாணமாக மெட்ராஸை மாற்றியது. வரி ஆரம்பத்தில் மிகக் குறைந்த விகிதத்துடன் கூடிய பல-புள்ளி அமைப்பாக இருந்தது, மேலும் சிறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
//4. சிறு கிழங்கு உபயோகித்திருக்கிறீர்களா? அது கேரளாவில் மாத்திரமே விளைகிறது என்று நினைக்கிறேன்
பதிலளிநீக்கு# சிறு கிழங்கு மேட்டுப்பாளையத்தில் பார்த்திருக்கிறேன். சாப்பிட்ட நினைவில்லை.//
சிறு கிழங்குக்கான சந்தை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாவூர் சத்திரம் என்னும் ஊரில் உள்ளது. ஆட்டுக்கறியுடன் சிறு கிழங்கு சேர்த்து செய்யப்படும் ஆணம் (இஸ்லாமியர் வழக்கு, குழம்பு) தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் பிரசித்தம்…
பாவூர் சத்திரம் காய்கறிச் சந்தை : https://www.hindutamil.in/597188-.html
வியாசர், ராஜாஜி எழுதிய ராமாயணம், மஹாபாரதம் வாசித்திருக்கிறேன். சோ எழுதியது ஒரு சில மட்டும் வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
கருணைக் கிழங்கு பொரியல், அரிக்கலைனா ஸ்டஃப்டு சப்பாத்தியும் பண்ணலாம். நன்றாக இருக்கும். நிறைய கொத்தமல்லி போட்டுச்செய்தால்...நல்லா இருக்கும், கிரேவி செய்யலாம்.
பதிலளிநீக்குகீதா
காந்தாரா படம் ட்ரெய்லர் பார்த்தேன் பிடிக்கலை
பதிலளிநீக்குகீதா
சிறு கிழங்கு - கூர்க்கன் கிழங்கு இரண்டுமே கிடைக்கும் போது கண்டிப்பா பயன்படுத்திவிடுவேன். இங்குதான் கண்ண்லில் படவே இல்லை. ரொம்பப் பிடிக்கும். இங்கு வந்து ரெண்டு தடவை பண்ணியிருப்பேம். எலஹங்காவில் இருந்தப்ப சந்தையில் கிடைத்தது.
பதிலளிநீக்குகீதா
நெல்லை, படங்கள் சூப்பர் ரொம்ப அழகாகு கூம்பு வடிவங்கள். வடக்கில் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமுன்னரும் உங்க பதிவில் கொடுத்திருந்தீங்களோ?
ஓரிரிஉ படங்கள் பார்த்த நினைவு இருக்கு
கீதா
மார்ச் 31, 2017 வெள்ளிக்கிழமை பதிவில் நெல்லைத்தமிழன் நம்பினால் நம்புங்கள் மியூசியம் - சில படங்களை பகிர்ந்திருந்தார். இப்போதுதான் தேடிப் பிடித்தேன்.
நீக்குத நா ப ச கமிஷன் பரிட்சை//
பதிலளிநீக்குபலமுறை எழுதியிருக்கிறேன். அது போல மத்திய அரசு LDC, UDC பரீட்சையும். கிடைத்தும் சேரமுடியாமல் போனது.
கீதா
ஓ ! அப்படியா! நான் ஒரே ஒருமுறை எழுதி, பாஸ் செய்து, மதுரையில் போட்ட போஸ்டிங் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். (அப்போ நான் அசோக் லேலண்ட் கம்பெனியில் அப்ரென்டிஸ் ஆக சேர்ந்துவிட்டேன் !)
நீக்குஅந்த அப்பா சரியான விடாக்கண்டனாக இருந்திருக்கிறாரே!
பதிலளிநீக்குஅதுவும் நேர்மையான வழியில்லாமல் இப்படி எல்லாம் செய்தால் அப்ப மகனுக்கும் இது பரிச்சயமாகுமே.
கீதா
அதே, அதே!
நீக்குவியாசர் எழுதிய மகாபாரதம் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகாந்தாரா படம் பார்த்ததில்லை.
நெல்லையின் படங்கள் நன்று. எமது பக்கங்களில் வைக்கோலுக்கு இதூபோல பெரியதாக இருக்கும்.
பிடிகருணை, சிறுகிழங்கு இரண்டுமே இடையிடை கிடைக்கும். பிடிகருணை சிறுகிழங்கை விட நன்றாக இருக்கும்..
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
நீக்குகேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதென்னைமரச்சோலையிலே சிட்டு போல போற பெண்ணே ! என்ற பாடல் உண்டு. மாஞ்சோலை குயில்தானே!
புலவர்களுக்கு இதில் எல்லாம் பூரண சுதந்திரம் உண்டு என்ற பதில் சரிதான்.
நன்றி.
நீக்குமாடுகளுக்கான தீவனப்புற்களை சேமித்து வைத்து இருக்கும் குடில் போன்ற அமைப்பு படங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி
நீக்குகாந்தாரா இரண்டு படங்களையும் பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குஒப்பந்தம் செய்து கொண்டதை மீறுவதுதான் இரண்டு கதைகளும்.
சிறுகிழங்கு பொங்கல் சமயம் கிடைக்கும். மண் வாசனையுடன் இருக்கும் சிறுகிழங்கு சிலருக்கு பிடிக்காது.
//என் அலுவலக நாட்களில், இதே போன்ற விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதை ஒன்று நடந்தது. //
கெளதம் சாரின் விடாக்கண்டன், கொடாக் கண்டன் பகிர்வு அருமை.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களது பக்கமும் சுவாரஸ்யமாக இருந்தது. சொன்னதையே திருப்பி, திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி சிலர். அவர்களை சமாளிப்பதே பெரும் கஷ்டம். அடுத்ததாக விடாகண்டன் பதிவையும் எதிர்நநோக்குகிறேன். .பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி
நீக்கு